07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 1, 2011

அப்பாவி தங்கமணி ஓ.வ.நாராயணனிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஓட்டை வடை நாராயணன், தான் ஏற்ற பொறுப்பினை வித்தியாசமான முறையில் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் ஏறத்தாழ நூறு பதிவர்களை அறிமுகப் படுத்தி, அவர்களின் இடுகைகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். பெற்ற மறுமொழிகளோ முன்னூறை நெருங்குகின்றன. கடைசி இடுகையில் அவரது நண்பர்கள் பத்துப் பேரை அறிமுகம் செய்திருக்கிறார். அவர்களது பதிவினில் இவருக்குப் பிடித்த இடுகைகளையும் அறிமுகம் செய்திருக்கலாம். நேரமின்மை காரணமாக செய்ய இயலவில்லை என நினைக்கிறேன்.

நம்மிடமிருந்து, கடமையினை முழுமையாகச் செய்த மன நிறைவுடன் விடை பெறுகிறார். நண்பரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அப்பாவி தங்கமணி. இவர் கோவையைச் சார்ந்தவர். தற்போது கணவருடன் கனடாவில் வசிக்கிறார். அங்கு ஒரு பொது சுகாதார நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இயந்திரத் தனமான வாழ்வினில் ஒரு சிறு மாற்றம் வேண்டுமென இப்பதிவினைத் துவங்கி எழுதி வருகிறார். இவரது படைப்புகள் சில விக்டன் மற்றும் திண்ணையில் வெளி வந்துள்ளது. கற்றது கைம்மண்ணளவு - கல்லாதது உலகளவு என்ற சிந்தனை எப்பொழுதும் இவருக்குண்டு.

அப்பாவி தங்கமணியினை வருக வருக ! ஏற்ற பொறுப்பினை முழு மனதுடனும் மகிழ்வுடனும் நிறைவேற்றுக என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஓட்ட வட நாராயணன்
நல்வாழ்த்துகள் அப்பாவி தங்க மணீ
நட்புடன் சீனா

12 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. Well done....ஓ.வ.நாராயணன்
  All the best.....அப்பாவி தங்கமணி

  ReplyDelete
 3. Well done....ஓ.வ.நாராயணன்
  All the best.....அப்பாவி தங்கமணி

  ReplyDelete
 4. அப்பாவி தங்கமணியினை வருக வருக என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி

  ReplyDelete
 5. வணக்கம் சீனா ஐயா!  தங்களது பணி சிறக்க வாழ்த்துகிறேன்! நீங்கள் என்னைப் பற்றி சரியாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்! அதற்கு எனது நன்றிகள்! உண்மையில் வேலைப்பளு அதிகம் என்பதால், ஒரு சில விஷயங்களை என்னால் எழுத முடியாமல் போய் விட்டது!  இப்போது புதிதாக வந்திருக்கும் அப்பாவித் தங்கமணி அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்! சிறப்பாக செய்யுங்கள்! உங்களுக்கும், வலைச்சரத்துக்கும் பெருமை கிடைக்கட்டும்!!

  ReplyDelete
 6. ஆஹா... இங்கயும் தொடர்கதை எழுதாம இருந்தா சரி.. ஹெ ஹெ ஹே.... :)))

  வாழ்த்துக்கள் அப்பாவி... சீனா சார் நல்லாதான் ஓப்பனிங் பண்ணியிருக்கார். நீங்க வந்தபின் தான் யார் அப்பாவின்னு தெரியும்.... ஹெ ஹெ ஹே...
  மீண்டும் வாழ்த்துக்கள் :))

  ReplyDelete
 7. அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றிங்க சீனா ஐயா... வாழ்த்தி வரவேற்ற கலாநேசன், r.v.சரவணன், ஓ.வ.நாராயணன், மற்றும் அன்னுவுக்கும் மிக்க நன்றி... என்னால் இயன்ற அளவில் சிறப்பாய் இந்த வார அறிமுகங்களை செய்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 8. //அன்னு said - நீங்க வந்தபின் தான் யார் அப்பாவின்னு தெரியும்.... ஹெ ஹெ ஹே...//

  அன்னு, நீங்களும் என்னை போலவே அப்பாவினு சொல்றேன்... இப்ப டீல் ஒகேவா?....:))))

  ReplyDelete
 9. வாழ்த்துகள் - அப்பாவி தங்கமணி. தொடங்கட்டும் உங்கள் ஆசிரியப் பணி!.

  ReplyDelete
 10. பாராட்டுக்கள் ஓ.வ.நா அவர்களுக்கு!
  வாழ்த்துக்கள் அப்பாவி தங்கமணி அவர்களுக்கு!

  ReplyDelete
 11. //அன்னு, நீங்களும் என்னை போலவே அப்பாவினு சொல்றேன்... இப்ப டீல் ஒகேவா?....:))))//

  மக்களே கவனிச்சுக்குங்க....


  நான் 49-ஓ போட்டுர்றேன். நோ ஓட்டு!

  ReplyDelete
 12. @ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்

  @ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க

  @ அன்னு - :))))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது