07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 20, 2011

புதுசு புதுசா சொல்றாங்கயா..

வாங்க நண்பர்களே... வணக்கம்..
இன்று புதிய... சில நான் பார்த்த பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகிறேன். இவர்கள் தங்கள் படைப்புகள் மூலம் பல்வேறு தகவல்களை தருகிறார்கள்... இவர்கள் வேலும் வளர என்வாழ்த்துக்கள்... நீங்களும் சென்று அவர்களை வாழ்த்துங்கள்....




ஆச்சி ஆச்சி நல்படியாக விடிந்த இன்றைய பொழுதில், நல்ல எண்ணங்களுடன், நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும் அப்படின்னு நல்ல நல்ல விஷயங்கள் தற்றாங்க... இயற்கை இதய வடிவ அதிசியங்கள் அப்படின்னு ஒரு பதிவு படிச்சித்தான் பாருங்களேன்..


இருதயதுடிப்பின் ஓசை! அப்படின்னு ஒரு பதிவர் பதிவர்களுக்கு தேவையான கணினி சார்ந்த நிறை டிப்ஸ் கெர்டுக்கிறாறு.. புதுப்புது பதிவர்கள் இதுபோன்ற பதிவுகளை படித்து பயன் பெறலாம். அதில் எனக்கு பிடித்தது.. மடிகணினி (Laptop) - யை பாதுகாப்பது எப்படி?


அலசல்கள்1000 அப்பிடின்னு இன்னும்ஒரு தளம் கணினி சார்ந்த சின்னசின்ன விஷயங்களைக்கூட அருமையா சொல்லியிருக்காரு.. தங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு அறிவுறுத்தலை வழங்குவதற்கு....
அதுல இது சூப்பரு..


நட்சத்திர பூக்கள்  அப்புடின்னு ஒருத்தர், தலைப்பே ரொம்ப அ‌ழகா இருக்கில்ல அதில் கவிதை, பழையபாட்டு, அரசியல்-ன்னு அம்புட்டும் போட்டு கலக்குறாறு.. காலத்தால் அழியாத பாடல்கள் பார்த்து அசந்துப்போனேன்.. நீங்களும் பார்க்கலாம் தப்பில்லிங்க...


கீதமஞ்சரி அப்புடின்னு ஒருத்தங்க எம்புட்டு நல்லா கவிதை கட்டுரை கதை சொல்றாங்க தெரியுமா. என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே! என் எழுது‌கோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே- அப்படின்னு கொள்கையா வச்சிருக்காங்க... கவிதை என்றும் பெயரிடலாம். அந்த கவிதையை படிச்சிட்டு நீங்க ஏதாவது சொல்லிட்டுப் போங்க..

மன நதி அப்படின்னு ஒரு தளம் பார்க்க ரொம்ப நல்லாயிருக்கு... எல்லா நதிகளிலும் என் ஓடம் என்று அலசியதுபோல் இவரும் மனநதியில் உலகை வலம் வர வா‌‌‌ழ்த்துவோம்...  அதில் ஓய்வில் இருக்கின்றன வீதிகள். அப்படின்னு ஒரு கவிதை என்னை கவர்ந்தது..

தமிழில் செய்திகளை உடக்குடன் தரும் ஒருதளம் இருக்குங்க செய்திகள்
‌IBC Tamil News  அப்படி என்னன்ன செய்தி போடறாங்கன்னு உடனுக்குடன் செய்திகளை பார்க்கனுமா அங்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வாங்க... 
 

மூன்றாம் கண்.,  பார்வையால் தன் காணும் செய்திகளை உடனுக்குடன் தருகிறார். இதில் ஒரு சீனா மற்றும் இந்தியா மாணவர்களுடன் போட்டியிட வேண்டும். அதிபர் பராக் ஒபா


எழுத்து பூங்கா இந்தபூங்காவில் பல்வேறு பூக்கள் பூத்திருக்கிறது.  இதில் அரசியல் சார்ந்த பதிவுகள் அதிகம் தந்திருக்கிறார் ஜெ- கண்டணத்துடன் கழட்டிவிடப்பட்ட முதல் கூட்டணி கட்சி.. பற்றி படித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...


நுனிபுல்லில் ஓர் பனித்துளி !! அப்படின்னு ஒரு வலைப்பூ  வித்தியாசமான முறையில் தன்னுடைய  கட்டுரையாக வெளிப்படுத்துகிறார்... இவருடைய படைப்புகள் நல்ல பயனுள்ள தகவல்களை தருகிறது.. நல்லபடியா வசிக்க வாசிங்க அப்படின்னு ஒரு பதிவு... போய் வாசிச்சிப்பாருங்க...

நாளை சந்திப்போம்...


மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கை பதிவுசெய்யுங்கள்...
நன்றி வணக்கம்.


27 comments:

  1. அன்பின் சௌந்தர் - அருமையான அறிமுகங்கள் - சென்று படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள்....புதியவர்களை தேடித்தேடி அறிமுகம் செய்துள்ளீர்கள்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எனக்கு கிடைத்த முதல் அங்கிகாரம் ...நன்றி நண்பரே ...
    நல்ல எழுத்துக்கள் மூலம் நட்பு என்றும் தொடர விரும்புகிறேன் ..நன்றி நண்பரே

    ReplyDelete
  5. "என் ராஜபாட்டை"- ராஜா said...

    All blog are super and useful

    /////
    நன்றி ராஜா

    ReplyDelete
  6. ///
    cheena (சீனா) said...

    அன்பின் சௌந்தர் - அருமையான அறிமுகங்கள் - சென்று படிக்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா////


    வணக்கம் ஐயா..

    ReplyDelete
  7. ////////
    ரஹீம் கஸாலி said...

    அருமையான அறிமுகங்கள்....புதியவர்களை தேடித்தேடி அறிமுகம் செய்துள்ளீர்கள்.////////

    வாங்க நண்பரே..

    ReplyDelete
  8. ////
    ரியாஸ் அஹமது said...

    எனக்கு கிடைத்த முதல் அங்கிகாரம் ...நன்றி நண்பரே ...
    நல்ல எழுத்துக்கள் மூலம் நட்பு என்றும் தொடர விரும்புகிறேன் ..நன்றி நண்பரே////


    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  9. என்னையும் ஒரு பதிவரா மதிச்சு உங்களின் வலைச்சாரலில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி சௌந்தர் .. தேர்தல் நேரத்தில் எழுத ஆரம்பித்ததால் அரசியல் பதிவு அதிகமா போச்சு.. இன்னும் சில நாட்களில் வேறு விதமான பூக்கள் இந்த பூங்காவில் வரும்.. :)

    ReplyDelete
  10. புதியவர்கள் அறிமுகம்.நன்றி சௌந்தர் !

    ReplyDelete
  11. அறிமுகஙளுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அன்பின் சௌந்தர் - அத்தனை சுட்டிகளுக்கும் சென்று படித்து, இரசித்து மகிழ்ந்தேன். உபரியாக சிலவற்றில் சிலவற்றையும் படித்தேன். நலல் அறிமுகங்கள் - அத்தனையும் புதுமுகங்கள் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் சௌந்தர். நட்புடன் சீனா

    ReplyDelete
  13. மிக்க மிக்க நன்றி தோழரே.......
    எனது பதிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விருப்புப் பதிவாக தங்கள் தளத்தில் இணைத்தமைக்கு நன்றிகள்....

    ReplyDelete
  14. பல புதிய அறிமுகங்கள். நன்றி

    ReplyDelete
  15. ஒரு சிறிய தவறு நண்பரே! நட்சத்திர பூக்கள் தொழில்நுட்பம் சம்மந்தமா எழுதுறார். திருத்திக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  16. வாழ்த்துகள் அனைவருக்கும்...

    ReplyDelete
  17. மிக நன்றிங்க.அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. அறிமுகம் அருமை நண்பா......

    ReplyDelete
  19. நல்ல அறிமுகங்கள். கண்டிப்பாய் எல்லோர் பதிவையும் வலம் வருகிறேன். வாழ்த்துக்கள். பணியை சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் செய்துட்டு வருகிறீர்கள்.

    ReplyDelete
  20. உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்
    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  21. என்னையும் ஒரு பதிவராக மதித்து என்னை அறிமுகபடுத்தியதற்கு மிக்க நன்றி..

    செளந்தர் அண்ணா..

    ReplyDelete
  22. பதிவர் அறிமுகத்துக்கு என் மனமார்ந்த நன்றி செளந்தர். மற்ற அறிமுகப் பதிவர்களுக்கு என் வாழ்த்துகள். குறிப்பிட்டுள்ள பதிவுகளை விரைவில் பார்வையிடுவேன். என் போன்று வலையுலகில் புதிதாய்க் காலடி எடுத்துவைத்தவர்களுக்கு இது ஒரு உற்சாக டானிக். மிக மிக நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது