07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 24, 2011

சொல்லித் தெரிவதில்லை ஒளிப்படக்கலை..!!

ஆம்..பார்த்தால்தான் தெரியும் ஒளிப்படங்களின் அருமை."மனிதனுக்கு மனிதனைப் பற்றிய விளக்கமளிக்கக்கூடிய மாபெரும் சக்தி ஒளிப்படக்கலை" - எட்வர்டு ஸ்டிச்மென்.
"கற்பனைத்திறன் ஓர் ஒளிப்படக்கலைஞனுக்கு 'ஆடம்பரத்'தேவையில்லை..!!மாறாக,அவசியம் தேவையாகும்..!! - ஜீன் ஹியூஸ்டன்.
"ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு முழுமையான ஒளிப்படம் சொல்லும்..!!" - நெப்போலியன்.
"ஒளிப்படம் எடுத்தலும்,ஓவியக்கலைபோல் ஓர் அரியகலையாகும். காரணம்,இரண்டும் அழகினை தேடுவதையே நோக்கமாக கொண்டது..!!" - ஜீலியா மார்கரெட்


                                      

மேலேயுள்ள பொன்மொழிகள் எல்லாம் நான் சார்ந்துள்ள புகைப்படத்தொழில் குறித்தவை.படங்கள் எல்லாம் நான் எடுத்தவை,(ஒரு வௌம்பரம்...)இன்று நான் படிக்கும் சில ஒளிப்படங்கள் பற்றிய தளங்களை தருகிறேன்.வலைச்சரத்தில் இருக்கும் ஒளிப்பட ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எளிய தமிழில் ஒளிப்படங்கள் எடுப்பது,கேமராக்களை தேர்ந்தெடுப்பது,எடுத்த படங்களை அலசி ஆராய்வது,உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்,நிபுணர்களின் ஒளிஓவியங்கள்,ஒளிப்படபோட்டிகள் நடத்துவது என தமிழின் முழுமையான ஒரு ஒளிப்படத்தளம் இது என்றால் மிகையாகாது.

சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து கொண்டு தான் கற்ற கலையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு கலைஞர்.தொழில்நுட்பங்கள்,புதிய கருவிகள் பற்றிய விளக்கங்கள்,உலகத்திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் என இவருடைய தளமும் ஒளிப்பட ஆர்வலர்களுக்கு பயனுள்ளது.

ஆனந்த் விஜய் என்பவரின் தளத்தில் வித்தியாசமான ஒளிப்படங்கள் கொட்டிக் கிடக்கிறது.வித்தியாசமான கோணங்களில் அசத்தியிருப்பார்.

சர்வேசன் அவர்களின் படங்களும் பாடங்களும் சுவாரஸ்யமானவை.

ராமலக்ஷ்மி அவர்களின் படங்கள் குறித்த ஆர்வம் வியப்புக்குரியது. வாழ்க்கையை சுவாரஸ்யமாக பார்க்கும் பெண்மணி.

பறவைகள் பலவிதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்.இவருடைய கேமராக்கண்களில் மாட்டிய பறவைகளின் அழகை பாருங்கள்..!!

இவருடைய தளத்திலும் பறவைகளின் படங்கள் நன்றாக இருக்கும்.

நேர்த்தியான தொழில்முறை ஒளிப்படங்கள் இந்த தளத்தில் உள்ளது.

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் தளம் இது.

இவர்களுடைய வரிசையில் முன்ணனி ஒளிப்படகலைஞர் விடுபட்டுள்ளார்.அவர் எப்போதும் விளம்பரங்களை விரும்புவதில்லை என்பதாலும்,மல்லிகைப்பூவுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதாலும் இங்கு அவரைப்பற்றி எழுதவில்லை.கண்டிப்பாக நீங்கள் அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் இங்கு போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தெரிந்த ஒளிப்படகலைஞர்களின் இணைப்பை கொடுத்தால் அனைவரும் பயனடைவோம்.நன்றி.

                                          

    12 comments:

 1. அனைவருமே கவனிக்கப்பட வேண்டியவர்கள்... அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அன்பின் தேவா - கலக்கீட்டீங்க போல - ஒளிப்படக் கலை என்பது கற்றுத் தெளிந்து பட்டறிவிலினால் திறமை சாலியாவது. அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. அருமையான அறிமுகங்கள்..
  எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு..

  ( அதுல இருக்குற படங்களை
  எல்லாம் சுட்டு., நம்ம பிளாக்ல
  நாம எடுத்ததுன்னு சொல்லி பதிவு
  போட்டுட வேண்டியதுதான்.. )

  பின்ன நான் தானே அந்த தளங்களில
  இருந்து அதையெல்லாம் காப்பி
  பண்ணி எடுத்தேன்..ஹி., ஹி., ஹி..!

  ReplyDelete
 4. புகைப்படங்களும், அறிமுகங்களும் அருமை. குறிப்பாக அந்த ஒரு ஜோடி வான்கோழிகள்? வெகு ஜோர்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வித்தியாசமான அறிமுகங்கள் யாரும் ஒளிப்படங்களை வைத்து அறிமுக படுத்தியதில்லை. மிக்க நன்றி தேவா.

  ReplyDelete
 6. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 7. வித்தியாசமான தொகுப்பு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 9. அத்தனைப் படங்களும்ம் அருமை தேவா....வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் மிக்க நன்றி..!!

  @ வெங்கட்
  குழம்பிசரி பிரச்சினை வந்திடும் ஐயா..!!(அதாங்க காப்பிரைட்)தமிழ் வளர்க்க பாடுபடுவதில் தேவா எப்பவும் தீவிரமா இருப்பான். ஹி.ஹி..ஹி...

  ReplyDelete
 11. எனது ஃப்ளிக்கர் தளத்தையும் இணைத்திருப்பதற்கு மிக்க நன்றி:)! மற்றவருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. நன்றி நண்பரே..என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தியதிற்கு.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது