பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)
➦➠ by:
# கவிதை வீதி # சௌந்தர்
“இந்த பதிவுலகம் வந்ததற்கான முதல் நோக்கம் எப்படியாவது ஒரு ஆண்டுக்குள் 10,00,000 ஹிட்ஸ் எடுத்து தமிழ் மணம் உள்பட அனைத்து தரவரிசையிலும் தொடர்ந்து முதலிடத்தில் வகிக்கவேண்டும்” அப்படிங்கிற ஆசையெல்லாம் இல்லங்க என் மூளை யோசித்ததை இந்த உலகம் வாசிக்க வேண்டும் என்று விளையாட்ட நுழைஞ்சேனுங்க... (என் தளம் ஆரம்பிச்சி கொடுத்தவர் வேறயாரும் இல்லிங்க நம்ம வேடந்தாங்கல் கரண் தான் அவருக்கு ஒரு நன்றி)---- இனி என்கதை...
என் நாட்குறிப்புகளில் புழுவாய் இருந்து... வெகுகாலங்கலாய் மௌனம் காத்து... தற்போது சிறகுவளர்த்து... வண்ணத்துப்பூச்சியாய் இந்த வலைப்பூக்களை மொய்த்துக்கொண்டிருக்கும் என் எழுத்துகளுக்கும், எனக்கும் அங்கீகாரம் தந்த இந்த பதிவுலக நண்பர்களுக்கும், இனிய தமிழ் வாசக நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
வளர்ந்து வரும் தற்போதை நிலையில் மிகப்பெரிய பணியாக வலைச்சர ஆசிரியர் பணியை தந்து அழகுபார்த்த மரியாதைக்குரிய சீனா ஐயா அவர்களுக்கு என் வணக்கங்களும்... நன்றிகளும்...
முதல் பதிவில் என் சுயபுராணத்தை அறங்கேற்ற வந்திருக்கிறேன்.. இதைப் படிக்கும் போதே ஒரு வேண்டுகோள்... தயவு கூர்ந்து ஏதாவது ஒரு மனம்கவர்ந்த பதிவை சொடுக்கி அது எப்படியுள்ளது என்று கருத்து சொல்லிவிட்டுச் சொல்லுங்கள்...
மேல் நிலை வகுப்பு படிக்கும்போது சக தோழர்கள் கவிதை எழுதுவதைப்பார்த்து விளையாட்டாய் கிறுக்க ஆரம்பித்தேன். அது வளர்ந்து கவித்துவம் அடைந்து நாலெல்லாம் என் நாட்குறிப்புளிலும், வெள்ளைத்தாள்களிலும் அவைகளை சேகரித்து வைத்து பின்பு அவையே என் வாழ்க்கைப்பாதையை என்னை அறியாமலயே வசந்தகாலமாக்கியது.
என் கவிதைகளில் அதிகம் ஆட்கொண்டிருப்பது என்னுடைய வறுமையும், என்னுடைய இயலாமையும், என்னுடைய கோவமும்தான். என்னசெய்ய வறுமைக்கோட்டுக்மேல் செல்லலாம் என்றால் அது தொடும் தூரத்தில் கூட இல்லை. என் கவிதையில் இருப்பது தனிஒருவனின் கோவமல்ல அது சமுதாயத்தின் கோவம்.
கவிதைகள் என்னை கவலைகளிலிருந்து காப்பாற்றுகிறது.. அவைகள் தான் என் உயிர்அணுக்களின் உற்பத்திக்கு தற்போது உறுதுணையாக இருக்கிறது. வாட்டம் தரும் வாடை காற்றில் நான் வாடாமல் இருக்கவும், ஏக்கம் தரும் உலக இன்பத்திலிருந்து என்னை ஒதுக்கி காக்கவும், வறுமைச்சூரியக் என்னை சுட்டாலும் அந்த வெப்பத்தை தனிக்கவும், வாழ்க்கையை வழிநடத்த தற்போது துணையாக இருப்பது என் கவிதைகளே...
பதிவுக்கு வந்துவிட்டேன்.... என் முதல் கவிதை இங்கே பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சிறகுகள் எதற்கு பறப்பதற்கு...
சிகரங்கள் எதற்கு மிதிப்பதற்கு...
சமுத்திரம் எதற்கு குடிப்பதற்கு...
தூண்டுகோள்கள் தேவைப்படுவதில்லை
மின்மினிகளுக்கு...
உன்னை நம்பி தூண்டில்போடு
சிக்கிக்கொள்ளும்
சில சாதனைகள்...
சிகரங்கள் எதற்கு மிதிப்பதற்கு...
சமுத்திரம் எதற்கு குடிப்பதற்கு...
தூண்டுகோள்கள் தேவைப்படுவதில்லை
மின்மினிகளுக்கு...
உன்னை நம்பி தூண்டில்போடு
சிக்கிக்கொள்ளும்
சில சாதனைகள்...
ஒரு மாலை வேலையில் முதல் முதலாய் கவிதை எழுத, நண்பர்கள் ஐந்து பேர் அமர்ந்து எழுதிய கவிதைகளில் என் கவிதை சிறந்ததென்று சான்று கிடைக்க என்னைக்கேட்காமலேயே மகுடங்கள் அணிந்துக் கொண்டு, சிறகு வளர்த்து கூட்டிலிருந்து வெளிப்படும் சிட்டுக்குருவிப்போல் இந்த பூமிப்பந்து முழுவதும் சிறகுவிரித்தது என் கவிதை... அன்றிலிருந்து தான் துவங்கியது என் ஜென்மமும்....
ஒரு கவிஞனுக்கு ஒரு சம்பவத்தை, ஒரு சூழலை, ஒரு நிகழ்ச்சியை அறிய வில்லை என்றாலும் அதனை கவிதையாக்கும் திறன் இருக்கவேண்டும். மரணத்தைப்பற்றி கவிதை எழுத நான் இறந்துப்பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதானே.... அந்த திறனுக்குள் தான் என் கவிதைகள் இருக்கும்.
என் தளத்தில் நான் முதல் பதிவாக வெளியிட்டது ஒரு கவிதைதான். இது என் காதலிக்கு திருமணம் நடப்பதுபோன்று மனநிலையில் எழுதப்பட்டது. காதலிக்கு கல்யாணம்... கண்டிப்பாக இதில் உண்மையான அனுபவம் இல்லை. இருந்தும் அந்த வலியை என்னால் அந்த கவிதையில் கொடுக்க முடிந்தது
அன்றாட நிகழ்வுகள் தனக்கும் கவிதையை வைத்திருக்கும். அந்த நிகழ்வுகளின் தொகுப்பாக பல கவிதைகள்.. இவைகள் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு யாதார்த்த நிகழ்வுதான். பாரதி வன்மையாய் ஏசுவதற்குக்கூட கவிதையைதானே பயன்படுத்தினான். அப்படி தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் இங்கே கவிதையில் அடைப்பட்டுக்கிடக்கிறது... அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
தன்னம்பிக்கை குறித்த கவிதை எழுதாமல் எந்த கவிஞனும் முழுமைப்பெற்றதில்லை. இந்த சமுகம்.. இந்த நாடு... இந்த சுதந்திரம்... இந்த வாழ்க்கை... எல்லாம் உருவானது. நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையில் தானே இந்த உலகம் குரங்கிலிருந்து தோலுரித்து மனிதத்தை உடுத்திக் கொண்டது.. இதோ என் தன்னம்பிக்கை குறித்த கவிதைகள்.
ஒரு தவறை தாம் செய்தால் குற்றமற்றதாக நினைக்கிறோம். அதே தவறை பிறர் செய்யும் போது அதுமிகப்பெரிய குற்றமாக கருதுகிறோம். அதெப்படி ஒரே தவறு தனக்கும் மற்றவர்க்கும் வித்தியாசப்படும். இந்தகருத்தை மையப்படுத்தி நான் எழுதிய கட்டுரைகள் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.. அவை
கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த நான் வாசகர்கள் மற்றும், மற்ற பதிவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கட்டுரைகள், வாரம் ஒரு தகவல், சினிமா விமர்சனம், நகைச்சுவைகள், மொக்கை பதிவுகள் என் ஜனரஞ்சகமாகவும் என்னை மாற்றிக்கொண்டேன். அதன் பிறகுதான் என் வலைப்பூ மணவீச ஆரம்பித்தது.. அவற்றில் சில உங்களுக்காக...
பொது கட்டுரைகள் ...
வாரம் ஒரு தகவல் என்று தலைப்பில்...
நகைச்சுவை
இன்னும் நிறைய வந்துக் கொண்டிருக்கும் உங்களின் ஆதரவு இருந்தால்.
ஆரம்பத்தில் தடம் தெரியாமல் சென்றுக்கொண்டிருந்தேன். மற்ற பதிவுகளை படிக்கும் நேரமும் எனக்கு கிடைக்காமல் இருந்தது. அதன் பிறகு மூத்த பதிவர்கள் நண்பர் தொப்பி தொப்பி, கே.ஆர்.பி.செந்தில், பனித்துளி சங்கர், ரஹிம் கஸாலி போன்றோரின் பதிவுகளை படித்தபின் நாமும் தரமான பதிவுகளை தரவேண்டும் என்ற நோக்கில் பதிவிட ஆரம்பித்தேன். 100-க்கு 90 சதவீதப்பதிவுகள் சொந்தப்பதிவுகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். காபி டூ பேஸ்ட் பதிவில் எனக்கும் அதிக ஆர்வம் இல்லை அது நம் தனித்தன்மையை எடுத்துக்காட்டாது.
ஆரம்பத்தில் தடம் தெரியாமல் சென்றுக்கொண்டிருந்தேன். மற்ற பதிவுகளை படிக்கும் நேரமும் எனக்கு கிடைக்காமல் இருந்தது. அதன் பிறகு மூத்த பதிவர்கள் நண்பர் தொப்பி தொப்பி, கே.ஆர்.பி.செந்தில், பனித்துளி சங்கர், ரஹிம் கஸாலி போன்றோரின் பதிவுகளை படித்தபின் நாமும் தரமான பதிவுகளை தரவேண்டும் என்ற நோக்கில் பதிவிட ஆரம்பித்தேன். 100-க்கு 90 சதவீதப்பதிவுகள் சொந்தப்பதிவுகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன். காபி டூ பேஸ்ட் பதிவில் எனக்கும் அதிக ஆர்வம் இல்லை அது நம் தனித்தன்மையை எடுத்துக்காட்டாது.
ஆகையால் தோழர்களே பதிவுளகில் ஒன்று கூடி தமிழ் பருகுவோம்... நட்பு வட்டத்தை வளர்த்துக் கொள்வோம். பகைவளர்த்து எல்லைவகுக்க நாம் என்ன காட்டினமா... கற்பனைக்கும் கருத்துக்கும் மட்டும் செவிச்சாய்ப்போம்...
பிறகு இந்த தமிழ் வலைப்பூ உலகமெங்கும் அடர்ந்துப்படரும்.....
நன்றி..! வணக்கம்..!
கவிதை வீதியில் இன்றை பதிவு : வானம் வசப்படும்...
பிறகு இந்த தமிழ் வலைப்பூ உலகமெங்கும் அடர்ந்துப்படரும்.....
நன்றி..! வணக்கம்..!
கவிதை வீதியில் இன்றை பதிவு : வானம் வசப்படும்...
அன்புடன் # கவிதை வீதி # சௌந்தர்
அறிமுகங்களுடன் நாளை சந்திக்கிறேன்...
அறிமுகங்களுடன் நாளை சந்திக்கிறேன்...
|
|
ஆரம்பமே அதகளம்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் நண்பரே :)
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete////
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆரம்பமே அதகளம்..
வாழ்த்துக்கள்..
/////
வாங்க கரண்...
தங்கள் வருகைக்கு நன்றி..
////
ReplyDeleteமாணவன் said...
வாழ்த்துக்கள் நண்பரே :)///
வாங்க மாணவரே...
///
ReplyDeleteநா.மணிவண்ணன் said...
வாழ்த்துக்கள்////
நன்றி மணிவண்ணன்...
சுயஅறிமுகம் அருமை நண்பரே....ஒரு ஆசிரிய நண்பரை தொடர்ந்து இன்னொரு ஆசிரிய நண்பர், வலைச்சர ஆசிரியராய், வாழ்த்துக்கள் சௌந்தர்....தொடர்ந்து கலக்குங்கள்....
ReplyDeleteபதிவுளகில் ஒன்று கூடி தமிழ் பருகுவோம்... நட்பு வட்டத்தை வளர்த்துக் கொள்வோம். பகைவளர்த்து எல்லைவகுக்க நாம் என்ன காட்டினமா... கற்பனைக்கும் கருத்துக்கும் மட்டும் செவிச்சாய்ப்போம்...
பிறகு இந்த தமிழ் வலைப்பூ உலகமெங்கும் அடர்ந்துப்படரும்...
அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்....
அட்டகாசம்
ReplyDeleteகலக்குங்க
வாழ்த்துக்கள் சௌந்தர்
ReplyDeleteகலக்குங்க
///
ReplyDeleteரேவா said...
சுயஅறிமுகம் அருமை நண்பரே....ஒரு ஆசிரிய நண்பரை தொடர்ந்து இன்னொரு ஆசிரிய நண்பர், வலைச்சர ஆசிரியராய், வாழ்த்துக்கள் சௌந்தர்....தொடர்ந்து கலக்குங்கள்....
பதிவுளகில் ஒன்று கூடி தமிழ் பருகுவோம்... நட்பு வட்டத்தை வளர்த்துக் கொள்வோம். பகைவளர்த்து எல்லைவகுக்க நாம் என்ன காட்டினமா... கற்பனைக்கும் கருத்துக்கும் மட்டும் செவிச்சாய்ப்போம்...
பிறகு இந்த தமிழ் வலைப்பூ உலகமெங்கும் அடர்ந்துப்படரும்...
அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்....////
தங்கள் கருத்துக்கு நன்றி ரேவா...
////////
ReplyDeleteBlogger Speed Master said...
அட்டகாசம்
கலக்குங்க//
நன்றி ..
////
ReplyDeleteயாழ். நிதர்சனன் said...
வாழ்த்துக்கள் சௌந்தர்
கலக்குங்க//////
நன்றி நண்பரே...
பக்காவான ஓப்பனிங்
ReplyDeletewelcome
ReplyDelete///
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
பக்காவான ஓப்பனிங்////
வாங்க சிபி...
////
ReplyDeleteரஹீம் கஸாலி said...
welcome////
நன்றி... தலைவரே...
வானம் வசப்பட வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சிறப்பாக தொடருங்கள் ..
ReplyDeleteவாழ்த்துக்கள் கலக்குங்கள் ..........
ReplyDelete/////இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவானம் வசப்பட வாழ்த்துக்கள்.//
வாங்க இராஜராஜேஸ்வரி
/////
ReplyDeleteகந்தசாமி. said...
வாழ்த்துக்கள் சிறப்பாக தொடருங்கள் ..////
நன்றி கந்தசாமி...
/////
ReplyDeleteஅஞ்சா சிங்கம் said...
வாழ்த்துக்கள் கலக்குங்கள் ..........////
நன்றி அஞ்சா சிங்கம்..
செம அதிரடி ஆரம்பம். இந்த அதிரடி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஅசத்துங்க எசமான் அசத்துங்க...
ReplyDeleteஎன் கவிதைகளில் அதிகம் ஆட்கொண்டிருப்பது என்னுடைய வறுமையும், என்னுடைய இயலாமையும், என்னுடைய கோவமும்தான். என்னசெய்ய வறுமைக்கோட்டுக்மேல் செல்லலாம் என்றால் அது தொடும் தூரத்தில் கூட இல்லை. என் கவிதையில் இருப்பது தனிஒருவனின் கோவமல்ல அது சமுதாயத்தின் கோவம்.//
ReplyDeleteமிகவும் சரியாக சொன்னீர்கள்....
வாழ்த்துக்கள் சௌந்தர்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சௌந்தர் அண்ணா . உங்கள் கவிதை வீதியில் பூத்த கவிதை பூக்கள் வலைச்சரத்தில் அலங்கரிக்கட்டும்.
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteசெம அதிரடி ஆரம்பம். இந்த அதிரடி தொடர வாழ்த்துக்கள்
/////////
வா.. மாப்ள...
//////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
அசத்துங்க எசமான் அசத்துங்க...//////
நீங்க சொன்ன பிறகு அப்படியே இருந்தா எப்படி உடனே அசத்துறேன்...
/////
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
என் கவிதைகளில் அதிகம் ஆட்கொண்டிருப்பது என்னுடைய வறுமையும், என்னுடைய இயலாமையும், என்னுடைய கோவமும்தான். என்னசெய்ய வறுமைக்கோட்டுக்மேல் செல்லலாம் என்றால் அது தொடும் தூரத்தில் கூட இல்லை. என் கவிதையில் இருப்பது தனிஒருவனின் கோவமல்ல அது சமுதாயத்தின் கோவம்.//
மிகவும் சரியாக சொன்னீர்கள்..../////
இது யாவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் உண்மை...
////
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துக்கள் சௌந்தர்!/////
வாங்க தல...
////
ReplyDeleteFOOD said...
Very Nice introduction. I admire the way of presentation. Sorry in camp and hence English comments////
ok..ok..
Thanks for a comment
////
ReplyDeletesulthanonline said...
வாழ்த்துக்கள் சௌந்தர் அண்ணா . உங்கள் கவிதை வீதியில் பூத்த கவிதை பூக்கள் வலைச்சரத்தில் அலங்கரிக்கட்டும்.////
நண்றி நண்பரே..
சூப்பர் கலக்கல் தூள் அருமை பாராட்டியது போதுமாப்பா ஹா ஹா ஹா...
ReplyDeleteஆசிரியர் பொறுப்பு ஏற்றதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
good !
ReplyDeleteசுய அறிமுகம் சுவையாக இருக்கிறது! அச்த்துங்க,சௌந்தர்!
ReplyDeleteவாழ்த்துகள் சௌந்தர்.உங்கள் பதிவுகள் எல்லாமே ஏதோ ஒரு சிறப்பு.அதனால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை !
ReplyDeleteகே.ஆர்.பி. செந்தில் மற்றும் கசாலி ஆகிய புதிய பதிவர்கள் அறிமுகம் சூப்பர் நண்பரே!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் பணியில் நீங்கள் எப்போதுமே டாப்தான். இந்த வாரமும் ரசிக்கும்படி செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
ReplyDelete/////
ReplyDeleteசசிகுமார் said...
சூப்பர் கலக்கல் தூள் அருமை பாராட்டியது போதுமாப்பா ஹா ஹா ஹா...
ஆசிரியர் பொறுப்பு ஏற்றதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
/////
இது போதும் நண்பரே...
நாம் ரொம்ப எதிர்பார்க்க மாட்டேன்...
///
ReplyDeleteஆகாயமனிதன்.. said...
good !/////
thanks
////
ReplyDeleteசென்னை பித்தன் said...
சுய அறிமுகம் சுவையாக இருக்கிறது! அச்த்துங்க,சௌந்தர்!////
தங்கள் வருகைக்கு நன்றி சென்னை பித்தன்...
/////
ReplyDeleteஹேமா said...
வாழ்த்துகள் சௌந்தர்.உங்கள் பதிவுகள் எல்லாமே ஏதோ ஒரு சிறப்பு.அதனால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை !////
தங்களின் ஆதரவுக்கு நன்றி..
////
ReplyDelete! சிவகுமார் ! said...
கே.ஆர்.பி. செந்தில் மற்றும் கசாலி ஆகிய புதிய பதிவர்கள் அறிமுகம் சூப்பர் நண்பரே!////
சிவக்குமார் பதிவை முழுமையாக படித்துவிட்டு பதில் சொல்லுங்கள் நண்பரே...
ஏன் இந்த அவசரம்...
////
ReplyDeleteஜீ... said...
வாழ்த்துக்கள்!/////
நன்றி ஜீ...
////
ReplyDeleteகடம்பவன குயில் said...
வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் பணியில் நீங்கள் எப்போதுமே டாப்தான். இந்த வாரமும் ரசிக்கும்படி செல்லும் என்பதில் சந்தேகமில்லை.//////
வாங்க நண்பரே..
தங்கள் வருகைக்கு நன்றி..
வாழ்த்துக்கள் மாப்ள!
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பி!
ReplyDelete/////
ReplyDeleteவிக்கி உலகம் said...
வாழ்த்துக்கள் மாப்ள!////
வாங்க நண்பரே....
/////
ReplyDeleteகே.ஆர்.பி.செந்தில் said...
வாழ்த்துக்கள் தம்பி!/////
வாங்க தல...
வாழ்த்துக்கள் திரு.கவிதைவீதி சௌந்தர்
ReplyDelete/////
ReplyDeleteசாகம்பரி said...
வாழ்த்துக்கள் திரு.கவிதைவீதி சௌந்தர்//////
சாகம்பரி....
நீங்கள் பதிவுலகத்தில் நுழைந்ததைக்கூட நல்லதொரு கவிதைபோல கூறியிருக்கும் சுயசரிதையிது. அப்படியே உங்கள் பல பதிவுகளை இடையிடையே படிக்க உந்துமாறு நுழைத்திருக்கும் ஐடியாவும் புத்திசாலித்தனமே... வாழ்த்துக்கள். நேரம் அனுமதிக்கும் போது உங்கள் கவிதைகள் அனைத்தையும் படிக்கலாமென்றிருக்கிறேன். ஆல் இஸ் வெல்.. குட் லக்!
ReplyDeleteஉங்கள் பணி சிறப்பாக அமைய என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தங்களைப்பற்றிய அறிமுகமே நன்றாக எழுதியுள்ளீர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து மகிழ்கிறேன். பின்னூட்டமும் அளிக்கிறேன். அன்பான வாழ்த்துக்களுடன் vgk
ReplyDeleteசாய்ரோஸ் said...
ReplyDeleteநீங்கள் பதிவுலகத்தில் நுழைந்ததைக்கூட நல்லதொரு கவிதைபோல கூறியிருக்கும் சுயசரிதையிது. அப்படியே உங்கள் பல பதிவுகளை இடையிடையே படிக்க உந்துமாறு நுழைத்திருக்கும் ஐடியாவும் புத்திசாலித்தனமே... வாழ்த்துக்கள். நேரம் அனுமதிக்கும் போது உங்கள் கவிதைகள் அனைத்தையும் படிக்கலாமென்றிருக்கிறேன். ஆல் இஸ் வெல்.. குட் லக்!
///////
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
////
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said...
உங்கள் பணி சிறப்பாக அமைய என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தங்களைப்பற்றிய அறிமுகமே நன்றாக எழுதியுள்ளீர்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து மகிழ்கிறேன். பின்னூட்டமும் அளிக்கிறேன். அன்பான வாழ்த்துக்களுடன் vgk//////
தங்களின் வருகைக்கும்..
கருத்துக்கும் மிக்க நன்றி..
Best wishes! :-)
ReplyDeleteஅருமை.பதிவு...மேன்மேலும் வளரவாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://zenguna.blogspot.com
ஆரம்பமே, கவிதை நடையில், அழகிய சொல் ஓவியங்களால், ஏற்ற இறக்கமற்ற மொழி நடையில் மனதைக் கவரும் படியான அல்லது மனதினுள் குடி புகுந்து எம்மை ஆட் கொள்ளும் தமிழால் அழகாக இருக்கிறது சகோ.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ.
வாழ்த்துக்கள் நண்பரே :)
ReplyDeleteஅன்பின் சௌந்தர் - அருமையான துவக்கம் - சுய அறிமுகம் கூட இவ்வளவு அழகாக எழுத இயலுமா - உண்மை நிலையை அப்படியே எடுத்துக் கூறுவதென்பது அவ்வளவு எளிதல்ல - அத்தனை அறிமுக இடுகைகளையும் இன்றே படிக்கிறேன் சௌந்தர்.
ReplyDelete// என் கவிதைகளில் அதிகம் ஆட்கொண்டிருப்பது என்னுடைய வறுமையும், என்னுடைய இயலாமையும், என்னுடைய கோவமும்தான். என்னசெய்ய வறுமைக்கோட்டுக்மேல் செல்லலாம் என்றால் அது தொடும் தூரத்தில் கூட இல்லை. என் கவிதையில் இருப்பது தனிஒருவனின் கோவமல்ல அது சமுதாயத்தின் கோவம்.//
மனம் வலிக்கிறது சௌந்தர் - நம் நாட்டில் இன்னும் இப்படிப்பட்ட சமுதாயம் இருக்கிறது. என்று தணியும் இக்கோபம். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
வறுமை - இயலாமை - கோபம் அத்தனையிலும் இருந்து விடுபட பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வடிவமைப்பு அழகு - அருமை சௌந்தர்
ReplyDeleteமுதல் கவிதை அருமை சௌந்தர் - சாதனைகள் சிக்க - தூண்டில் போட வேண்டும். ஆமாம் சமுத்திரம் குடிப்பதற்கா ? அக்காலத்தில் அவ்வயதில் தோன்றிய சிந்தனையா ? பரவாய் இல்லை. கடல் எதற்கு - கப்பல் விடுவதற்கு - அயலகம் செல்வதற்கு - வாழ்வில் முன்னேறுவதற்கு ..... சரியா சௌந்தர்
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே, அசத்தலான தொடக்கம், ஆரம்பியுங்கள் உங்கள் அதிரடிகளை
ReplyDeleteஅத்தனையும் படித்து விட்டேன் சௌந்தர் - மறுமொழிகளும் இட்டிருக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete