07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 4, 2011

இன்னைக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்... :))

செய்தி :
ப்ளாக் வைத்திருக்க வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும்... கூகிள் நிர்வாகம் அறிவிப்பு

செய்தியின் பாதிப்பு :
செய்திய கேட்டதும் பிளாக்கர்'கள் எல்லாம் பொங்கி எழுகிறார்கள். கூகிள் நிர்வாகிக்கு கண்டன செய்திகள் அனுப்பப்படுகின்றன. போராட்டம் வலுப்பெறுகிறது. கூகிள் சமரசம் பேச அப்பாவி தங்கமணிக்கு சம்மன் அனுப்புகிறது

இனி...

கூகிள் நிர்வாகி : நீர் தான் அப்பாவி தங்கமணியோ?

அப்பாவி தங்கமணி : நீர் தான் கூகிள் நிர்வாகியோ?
 
கூகிள் : ஏது, வெகுதூரம் வந்து விட்டீர்?

அப்பாவி : நட்புறவு நாடியதாக அறிந்தேன், அதை விரும்பியே நானும் வந்தேன்

கூகிள் : நட்பு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தையில்லை உன்னிடம்

அப்பாவி : கற்றுக்கொடுக்கும் இனம் தமிழினம், நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்.

கூகிள் : இறுமாப்பு இன்னும் அடங்கவில்லை

அப்பாவி : அது என் உடன் பிறந்தது, அடங்காது, உரக்க உரக்க மேலெழும்.

கூகிள் : உன் மீது குற்றம் சுமத்துகிறேன்

அப்பாவி : என்னவென்று?

கூகிள் : எடுத்துரைத்தால் கணக்கிலடங்காது

அப்பாவி : எண்ணிக்கை தெரியாத குற்றம்

கூகிள் : எனக்கா எண்ணிக்கை தெரியாது, அகம் பிடித்தவளே, கூறுகிறேன் கேள், நீ எழுதி கிழிக்கும் வலைப்பூவுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் Server'ஐ உபயோகிக்க திரைப்பணம் செலுத்தவில்லை, நெடுநாளாக கேட்டும் subscription பணம் வந்து சேரவில்லை, இந்தப் பாக்கிக்கெல்லாம் இன்னும் வட்டியும் கூடக் கட்டவில்லை.

அப்பாவி : கிஸ்தி, திரை, வரி, வட்டி, வேடிக்கை! கமெண்ட் பொழிகிறது, போஸ்ட் விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு டிஸ்கசன்'க்கு வந்தாயா? டிசைன் செய்தாயா? விரல் வலிக்க டைப் அடித்தாயா? Follow செய்தாயா? கமெண்ட் போட்டாயா? மாய்ந்து மாய்ந்து போஸ்ட் போடும் பிளாக்கர்க்கு டீ கப் சுமந்தாயா? அங்கு ஓடி ஓடி ப்ளாக் படிக்கும் எம் குல பிளாக்கர்களுக்கு கரண்ட் சார்ஜ் கட்டினாயா? அல்லது நீ follower'ஆ? கூகிள் ரீடரா? யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் திரை?

கூகிள் : போதும் நிறுத்து... பைசா செலவின்றி வெட்டியாய் பொழுதை  கழிப்பது மட்டுமின்றி என்னையே எதிர்த்து பேச என்ன இறுமாப்பு உனக்கு

அப்பாவி : வெட்டியாய் பொழுதை கழிக்கிறோமா... என்ன தெரியும் உனக்கு... பட்டியலிடுகிறேன் கேள்...:-

புதுகை தென்றல் அவர்கள் பள்ளி பிள்ளைகளுக்கான இந்த புது கருவி EDUTOR பத்தி சொன்னது, எவ்ளோ உபயோகமான விஷயம் தெரியுமா?

ராமலக்ஷ்மி அவர்களோட  எத்தனை படைப்புகள் பல பத்திரிக்கைகளில் வந்திருக்கு தெரியுமா? அருமையான படிப்பினை கதை ஒண்ணு தினமணி கதிரில் வந்திருக்கு மே தினத்துக்கு கூட

கூட்டு குடும்ப வாழ்க்கை குறைந்து விட்ட இந்த நாளில் அம்மாக்களின் பதிவுகள்னு இந்த வலைப்பூவில் உள்ள விஷயங்கள் எத்தனை இளம் தாய்மார்களுக்கு நல்ல வழி காட்டியாய் இருக்கிறது தெரியுமா?

அப்பப்போ என்னை போல மொக்கை போஸ்ட் போட்டாலும் (ஹி ஹி), சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசி பிழியும் ஹுஸைனம்மாவின்  பதிவுகளை படித்து பார், வலைப்பூக்கள் பற்றிய உன் எண்ணம் மாறி விடும்

எல்.கேவோட இந்த பதிவை பாத்தா புரியும், நல்ல பல காரியங்கள் கூட வலைப்பூக்களின் மூலம் நடக்குதுன்னு

பதிவுலகில் கேணிவனம் கதை எழுதி புகழ் பெற்ற ஹரீஷ் ஒரு இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பது தெரியுமா உனக்கு

வயதில் சிறியவராய் இருந்தாலும் பெரிய விஷயங்கள் பற்றி எழுதும் மாதங்கியின் வலைப்பூவை ஒருமுறை படித்து பார்... இவரின் அழகு தமிழுக்கு நீயும் ரசிகையாகி விடுவாய்

இத்தனை ஏன், சொர்கத்தில் நிச்சியக்கப்பட்ட திருமணங்கள் நரகத்தை நோக்கி செல்லாமல் பாதுகாக்கும் முக்கியமான விடயம் இன்றைய நாளில் சமையல் வலைப்பூக்கள்...:))

இன்று பெரும்பாலான வீடுகளில் அடுப்பெறிவதே ப்ளாக் உபயம் என நீ அறிவாயா... நானே ரசம் வெக்கறதுக்கு மகி ப்ளாக் போய் ரெசிபி எடுத்து இருக்கேன், கீதா ப்ளாக்ல பாத்து கைமா இட்லி பண்ணி இருக்கேன், மேனகாவோட புளிசாதம் செய்து சாப்பிட்டு ஆனந்த கண்ணீர் விட்டு இருக்கேன்...

தெய்வசுகந்தியோட மொச்சை கொட்டை கத்திரிக்காய் குழம்பு சுவை இன்னும் நாக்குல இருக்குனா பாரேன்...   கிருஷ்ணவேணியோட எலுமிச்சை ஊறுகாய் செய்து பாரு, அப்புறம் நீயே நாலு பேருக்கு சொல்லுவ இதை பத்தி... இத்தனை ஏன்? திரட்டிப்பால் என்ற ஒன்று வழக்கொழிந்து வரும் இந்த நாளிலும் மக்கள் திரட்டிப்பால் செய்து உண்டு மகிழும் ரகசியம் அறிய தக்குடுவின் இந்த பக்கத்தை பார்...

கூகிள் : போதும் அப்பாவி போதும்...  அககண்ணை திறந்து என் அகந்தையை அகற்றி விட்டாய்... இனி ஒரு போதும் திரை / கப்பம் என கேட்க மாட்டோம்... மன்னித்து விடுங்கள்... நான் போய் வருகிறேன்

அப்பாவி : வெற்றி நமதே... ஸ்வீட் எடு.... கொண்டாடு...:)))

பின் குறிப்பு: 
இன்றைய அறிமுகங்கள்... அறிமுகங்கள் என சொல்ல இயலாது, ஏனெனில் இவர்கள் பதிவுலகளில் பிரபலமானவர்கள் தான்... ஆனால் அவர்களின் சில முக்கிய பதிவுகளை  தொகுத்து  சேமித்து  கொள்ளும் ஆவலில்  இந்த சரத்தை தொடுத்தேன்... நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புறேன்... நன்றி...

42 comments:

 1. கல்வி உதவி தேவை பற்றிய பதிவை போட்டதற்கு நன்றி.

  ReplyDelete
 2. What happened to Idli maami?

  ReplyDelete
 3. உங்க ஸ்டைல்ல கலகிட்டீங்க புவனா!!!

  ReplyDelete
 4. நல்ல அறிமுகங்கள் மேடம்.
  "பொதுநலம் கருதி வெளியிடுவோர் : "இட்லி" புகழ் அப்பாவி! "
  கூகிள் இப்படி அறிவிப்பு வெளியிட்டாலும் ஆச்சர்யமில்லை அந்த அளவுக்கு அடிச்சு துவைச்சிட்டீங்க! :))

  ReplyDelete
 5. நல்ல கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி.

  ReplyDelete
 6. /நல்ல கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி.//

  @போர்க்கொடி

  என்னாச்சு

  ReplyDelete
 7. //கிஸ்தி, திரை, வரி, வட்டி, வேடிக்கை! கமெண்ட் பொழிகிறது, போஸ்ட் விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு டிஸ்கசன்'க்கு வந்தாயா? டிசைன் செய்தாயா? விரல் வலிக்க டைப் அடித்தாயா? Follow செய்தாயா? கமெண்ட் போட்டாயா? மாய்ந்து மாய்ந்து போஸ்ட் போடும் பிளாக்கர்க்கு டீ கப் சுமந்தாயா? அங்கு ஓடி ஓடி ப்ளாக் படிக்கும் எம் குல பிளாக்கர்களுக்கு கரண்ட் சார்ஜ் கட்டினாயா? அல்லது நீ follower'ஆ? கூகிள் ரீடரா? யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் திரை?//


  அருமை!! இந்த வரிகளை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என தோன்றுகிறது!!

  ReplyDelete
 8. நல்ல நகைச்சுவையுடன் கூடிய அசத்தல் அறிமுகங்கள். பாராட்டுக்கள்.

  அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரபலங்களின் படைப்புகள் யாவும் மிகச்சிறந்த படைப்புகள். அவ்ர்களுக்கும் என் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. யப்பா அப்பாவியின் பேச்சை கேட்டு கூகிள்காரனே பயந்து ஓடிட்டான் .... சூப்பர் காமெடியா இருந்தது....நல்ல பதிவுகளை அறிமுகம் செய்து இருக்கீங்க....வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 10. தெரிந்த அசத்தலான அறிமுகங்கள் ...

  ReplyDelete
 11. கட்ட பொம்மன் ஸ்டைல் நல்லா இருக்கு மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 12. கட்டபொம்மனே இன்று இருந்திருந்தால் இப்படி பொங்கி இருப்பாரோ என்று சந்தேகம்... நல்ல அறிமுகங்கள்.

  ReplyDelete
 13. //சமரசம் பேச அப்பாவி தங்கமணிக்கு//
  அவங்க கூப்பிட்டாங்கங்கிறது நம்புற மாதிரி இல்லை. ஆனா, இப்படியொரு பிரசனை வந்தாக்க, உங்களைத்தான் பேச்சுவார்த்தைக்கு அனுப்புவோம் கண்டிப்பா; பேசிப்பேசி, பேசிப்பேசி, பேசிப்பேசி, பேசிப்பேசி, பேசிப்பேசியே கொல்ல.. சாரி, விஷயத்தை முடித்துக் கொள்ள உங்களை மாதிரித் திறமை யாருக்கு வரும்? ;-)))

  ReplyDelete
 14. //அப்பப்போ என்னை போல மொக்கை போஸ்ட் போட்டாலும்//
  யக்கா, சந்தடிச் சாக்குல இதுவுமா?

  //திருமணங்கள் நரகத்தை நோக்கி செல்லாமல் பாதுகாக்கும் முக்கியமான விடயம் இன்றைய நாளில் சமையல் வலைப்பூக்கள்//
  இது உண்மை. (ஹி..ஹி..)

  //பெரும்பாலான வீடுகளில் அடுப்பெறிவதே ப்ளாக் உபயம்//
  ஆனா, ஒரு விஷயம் அம்மணி. இந்த சமையல் பிளாக் இருக்கதுனால, இப்ப யாரும் ’அம்மா வீட்டுக்குப் போறேன்’னு கோவிச்சுட்டுப் போக முடியாமப் போச்சு. பின்ன, போனா போ, பிளாக் பாத்து நானே சமைச்சுக்கறேனு ரங்கமணிகள் உஷாராயிடறாங்களாம்!! :-(((

  ReplyDelete
 15. //கீதா ப்ளாக்ல பாத்து கைமா இட்லி பண்ணி இருக்கேன்//
  அந்தக் கல் இட்லியை வேற எப்டித்தான் காலி பண்றது, இல்லே? ;-)))))

  ReplyDelete
 16. கூகிளுக்கு நிஜமாவே அப்படியொரு ஐடியா இருந்தாக்கூட, இதப்படிச்சப்புறம் கை விட்டுடுவாங்க :-)))

  ReplyDelete
 17. நன்றி புவனா:)! அறிமுகமாகியுள்ள மற்றவருக்கும் என் வாழ்த்துக்கள்!

  சமரசம் பேசி வெற்றியை ஈட்டி வந்த உங்களுக்கு என் நன்றி:))! தொடர்ந்து அசத்துங்கள்!

  ReplyDelete
 18. பிரபல பதிவர்களை காட்டி கூகிள் தொரையின் வாயை அடைத்ததற்கு..புது புது ஐடியா....கலக்குவதற்கு பாராட்டுகள்..

  ReplyDelete
 19. hehe super akka...nalla top bloggersthan arimugapaduthurukenga...

  ReplyDelete
 20. அப்பாவி தங்கமணியின்
  அரசவை
  அமர்க்களம்
  அசத்தல்
  அறிந்த
  அறிமுகங்கள்
  படைப்பாளிகளின்
  பட்டையை கிளப்பும்
  படைப்புகளின்
  பட்டியல்
  பிரகடனம் .
  பிரமாதம்
  பிரமிப்பு
  பிச்சிட்டிங்க ...................... சகோதரி , சந்தோஷம்.

  ReplyDelete
 21. எங்களோடு டிஸ்கசன்'க்கு வந்தாயா? டிசைன் செய்தாயா? விரல் வலிக்க டைப் அடித்தாயா? Follow செய்தாயா? கமெண்ட் போட்டாயா? மாய்ந்து மாய்ந்து போஸ்ட் போடும் பிளாக்கர்க்கு டீ கப் சுமந்தாயா? அங்கு ஓடி ஓடி ப்ளாக் படிக்கும் எம் குல பிளாக்கர்களுக்கு கரண்ட் சார்ஜ் கட்டினாயா? அல்லது நீ follower'ஆ? கூகிள் ரீடரா? யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் திரை?//
  கட்டபொம்மன் குரலில் மன்தில் உங்களை ஓட்டிப் பார்த்துக்கொண்டோம்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 22. பெரிய பெரிய ஆட்களுக்கு நடுல இந்த சுண்டெலியையும் அறிமுகம் செய்த அக்காவுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்...:))

  ReplyDelete
 23. அருமை அருமை சுவையும் அருமை....

  ReplyDelete
 24. என் பதிவின் அறிமுகத்துக்கு நன்றி புவனா,

  ஹுசைனம்மா கமெண்டுகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. கடைசி கட்ட இரண்டு வசனங்கள் சாமர்த்யமாக தங்கமணியால் விட்டுப்போனது
  கூகிள்:- சரி அப்போ போரட்டத்தை உடனே நிறுத்திக்கொள்கிறீர்களா
  அப்பாவி தங்கமணி:- அதெப்படி யாருக்கும் தெரியாம எனக்கு மாத்திரம் ஒரு மில்லியன் டாலர் வெட்டுங்க அப்போதான்
  கூகிள்:= சரி உங்க ஸ்விஸ் பேங்க் அக்கௌன்ட் நம்பரைக் கொடுங்க
  அப்பாவி தஙமணி: ஸந்தோஷமாக நோட் பண்ணிக்கோங்க xxxxxxxxxxxxxxxxx

  ReplyDelete
 26. கமெண்ட் பொழிகிறது, போஸ்ட் விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு டிஸ்கசன்'க்கு வந்தாயா? டிசைன் செய்தாயா? விரல் வலிக்க டைப் அடித்தாயா? Follow செய்தாயா? கமெண்ட் போட்டாயா? மாய்ந்து மாய்ந்து போஸ்ட் போடும் பிளாக்கர்க்கு டீ கப் சுமந்தாயா? அங்கு ஓடி ஓடி ப்ளாக் படிக்கும் எம் குல பிளாக்கர்களுக்கு கரண்ட் சார்ஜ் கட்டினாயா? அல்லது நீ follower'ஆ? கூகிள் ரீடரா? யாரைக் கேட்கிறாய் வரி?

  SUPER

  ReplyDelete
 27. நகைச்சுவையுடன் அசத்தல் அறிமுகங்கள் அருமை

  ReplyDelete
 28. உங்களோட ஸ்டைல்லியே மிகவும் அருமையான நடையில் நகைச்சுவையாக படைத்துள்ளீர்கள். மிக அருமை..! அறிமுகத்துக்கு மிக்க நன்றி..!

  -
  DREAMER

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. கூகிளை வம்புக்கிழுத்தால் ஏதாவது பதில் வந்திருக்கணுமே...மிக உபயோகமான பதிவு!

  ReplyDelete
 31. கூகுள்-அப்பாவி உரையாடல் அருமை! நல்ல அறிமுகங்கள் புவனா.பெரும்பாலும் தெரிந்த பதிவர்கள்தான். :)

  கலக்குங்க!

  ReplyDelete
 32. உங்கள் எழுத்து நடையில் கலக்கிட்டீங்க புவனா!! பெரும்பாலும் அனைவரும் அறிந்தவர்களே...அறிமுகத்திற்க்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
 33. @ எல் கே - you're welcome...:)

  @ அனாமிகா - தேங்க்ஸ் மேடம்..:)

  @ vanathy - தேங்க்ஸ்'ங்க வானதி

  @ தெய்வசுகந்தி - தேங்க்ஸ்'ங்க சுகந்தி :)

  @ Balaji saravana - ஹா ஹா... என்னை மட்டும் மாட்டி விட்டு நீங்க எஸ்கேப் ஆய்டலாம்னு பிளான் போல இருக்கே... நன்றிங்க :)))

  @ Porkodi (பொற்கொடி) - என்னாச்சு கொடி? நாட்டாமை மாதிரி நீங்களும் டெம்ப்ளேட் கமெண்ட் அதுவும் "உபயோகமிக்க"னு எல்லாம் பயம் காட்டறீங்க....:)))

  @ எல் கே - அதே தான் என் பயமும்...:))

  @ தமிழ் மகன் - நன்றிங்க தமிழ் மகன்

  @ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க

  @ சௌந்தர் - நன்றிங்க சௌந்தர்..:)

  @ asiya omar - ஆமாங்க ஆசியா... நன்றிங்க

  @ சசிகுமார் - நன்றிங்க

  @ தமிழ் உதயம் - நன்றிங்க

  @ வெங்கட் நாகராஜ் - ஹா ஹா... நன்றிங்க

  @ ஹுஸைனம்மா - ஹி ஹி... துணைக்கு கண்டிப்பா உங்களைத்தான் கூட்டிட்டு போவேன்... கிடைக்கறத சமமா பிரிச்சுப்போம் எதுவானாலும்... :)))

  //ஆனா, ஒரு விஷயம் அம்மணி. இந்த சமையல் பிளாக் இருக்கதுனால, இப்ப யாரும் ’அம்மா வீட்டுக்குப் போறேன்’னு கோவிச்சுட்டுப் போக முடியாமப் போச்சு. பின்ன, போனா போ, பிளாக் பாத்து நானே சமைச்சுக்கறேனு ரங்கமணிகள் உஷாராயிடறாங்களாம்!! :-((( //
  இது வம்பு தானுங்க அக்கா... அம்மா வீட்டுக்கு போறப்ப லேப்டாப் சகிதம் கிளம்பிடனும்... அப்புறம் இன்டர்நெட் எல்லாம் கட் பண்ணி விட்டுடணும்... இப்ப ஒகே வா?:))))

  //அந்தக் கல் இட்லியை வேற எப்டித்தான் காலி பண்றது, இல்லே//
  கூடவே இருந்து கல் பறிக்கும்...ச்சே குழி பறிக்கும் அக்கா டௌன் டௌன்...:)))

  @ அமைதிச்சாரல் - ஹா ஹா... நன்றிங்க

  @ ராமலக்ஷ்மி - நன்றிங்க

  @ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

  @ Gayathri - ஆமா காயத்ரி... தேங்க்ஸ்.:)

  @ A.R.RAJAGOPALAN - ரெம்ப நன்றிங்க

  @ இராஜராஜேஸ்வரி - ஹா ஹா... நன்றிங்க

  @ தக்குடு - ஆஹா... நன்றிங்கோ...:)))

  @ hajasreen - நன்றிங்க

  @ புதுகைத் தென்றல் - ஹா ஹா... தேங்க்ஸ்'ங்க

  @ திவா - :))))

  @ தி. ரா. ச.(T.R.C.) - ஹி ஹி ஹி... TRC அங்கிள், ரகசியம் ரகசியமாத்தான் இருக்கணும் யு சி...:)))

  @ r.v.saravanan - தேங்க்ஸ்'ங்க

  @ DREAMER - நன்றிங்க ஹரீஷ்...:)

  @ ஸ்ரீராம். - இதுவரைக்கும் வரலீங்க... :))

  @ Mahi - தேங்க்ஸ் மகி...:))

  @ S.Menaga - நன்றிங்க..:)

  ReplyDelete
 34. //கிஸ்தி, திரை, வரி, வட்டி, வேடிக்கை! கமெண்ட் பொழிகிறது, போஸ்ட் விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு டிஸ்கசன்'க்கு வந்தாயா? டிசைன் செய்தாயா? விரல் வலிக்க டைப் அடித்தாயா? Follow செய்தாயா? கமெண்ட் போட்டாயா? மாய்ந்து மாய்ந்து போஸ்ட் போடும் பிளாக்கர்க்கு டீ கப் சுமந்தாயா? அங்கு ஓடி ஓடி ப்ளாக் படிக்கும் எம் குல பிளாக்கர்களுக்கு கரண்ட் சார்ஜ் கட்டினாயா? அல்லது நீ follower'ஆ? கூகிள் ரீடரா? யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் திரை? //


  ஹ ஹ ஹா... செம!! எப்படிதான் உங்களை வீட்டுல வெச்சு சமாளிக்கறாரோ அந்த புண்ணியவான்... வாழ்க வாழ்க!!!

  ReplyDelete
 35. ஹா , புது விதமான தலைப்புகள்,
  அனைத்து தெரிந்த அறிமுகஙக்ளுக்கும் வாழ்த்துக்கள்
  இரண்டுல ஒன்னு பார்த்தீங்களா இல்லையா?

  ReplyDelete
 36. WOW!! thanks for mentioning me... :) i am honoured!

  maththa blog ellaam-um intro koduththathukku romba thanks... i ll read them all! :)

  ReplyDelete
 37. @ அன்னு - எப்படி சமாளிக்கரிங்கனு கேட்டேன்... ஒரியாகாரர்கிட்ட இருந்து அட்வைஸ் வாங்கித்தான்னு சொன்னாரு அன்னு... என்கிட்டயேவா... ஹா ஹா ஹா...:))


  @ Jaleela Kamal - ஹா ஹா... பாத்துட்டோம் ரெண்டுல ஒண்ணு... நன்றிங்க...:)


  @ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி...:)

  ReplyDelete
 38. கலக்கலான இடுகை. ;) ரசித்தேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது