
வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
வலைச்சரத்தை தொடுக்கும் பெருமை எனக்கு இந்த வாரத்தில் கிடைத்திருக்கின்றது. முதலில் சிந்தாஸ் என்னை வலைச்சரத்தில் ஆசிரியராக அழைத்த போது, மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நானா?எனக்கு ஆசிரியராக இருக்கும் தகுதி இருக்கா சிந்தாஸ் என கேட்டேன். என்னால் முடியும் என கூறி அழைத்துவந்த சிந்தாஸுக்கு தான் முதலில் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.
முதல் பதிவு அறிமுகப்பதிவாக அமைய வேண்டும் என கேட்டிருந்தார்கள். என்னை பற்றிய அறிமுகத்தை என் பதிவுகள் மூலமே செய்யலாம் என்ற எண்ணத்தில்:
என்னை பற்றி அறிந்துகொள்ள:
Weird Post By a weirdoஎனக்கு சரியாக எழுத வருகின்றதோ இல்லையோ, மற்றவர்களின் ஆக்கங்களை விமர்சித்து பாராட்டுவதில் எனக்கு அலாதி பிரியம்:
சயந்தனின் ஒலி பதிவுகள் பற்றிய ஒரு கருத்து குறிப்புசின்ன வயதில் இருந்து ஆங்கிலத்தில் கல்விகற்று, ஆங்கிலத்தில் ஆக்கங்கள் எழுதி வந்த எனக்கு தமிழிலும் எழுதலாம் என ஊக்கம் தந்தது யாழ் இணையம் தான். கவிதை, கட்டுரை போன்றவை எனக்கு தூரத்தில் நின்றுவிட, என்னை தனக்குள் இழுத்துக்கொண்டது சிறுகதைகள் தான். ஒரு கை பார்த்துவிடுவது என களத்தில் இறங்கி முயற்சி செய்தவற்றில் சில:
* மானமும், உயிரும் போன கதை:
விதையானால் முளையாகும்* மாவீரன் கதையொன்று:
மதியண்ணாவின் கண்ணம்மா* புலம்பெயர் [சிட்னி] கதையொன்று:
இது யார் தப்பு?* என் உயிர் நண்பன்:
என் நண்பன் என் கடவுள்* ஒதுக்கப்படும் உணர்வுகள்:
சிறகுகள் வேண்டும் எனக்குதமிழீழத்தை தாய்நாடாக கொண்ட எனக்கு, மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்திய பயணம் எனில் அது "என் சென்னை பயணம்" தான். எங்கள் ஈழத்தை போல பல ஒற்றுமைகள் கொண்ட ஒரு இடம் என்றால் அது சென்னை தானே! எம் அனுபவத்தை ஒரு பயணத்தொடராக பதிந்துள்ளேன்:
சென்னையில் தூயா - 2005 - பகுதி1சென்னையில் தூயா - 2005 - பகுதி2புலத்தில் தமிழ் கற்ற தமிழீழத்து வாரீசான எனக்கும், என் தாய் நாட்டிற்குமான உறவை ஒரு அனுபவத்தொடராக எழுதி வருகின்றேன்:
"நானும் என் ஈழமும் - இதுவரை எழுதிய 5 பகுதிகள்"------------------------------------------------------------------------------------
சமையல் மீதான என் காதலை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். இதுவரை எனது சமையல் கட்டை பார்க்காதவர்களுக்காக:
தூயாவின் சமையல்கட்டு-----------------------------------------------------------------------------------
தமிழ் அல்லாத, தமிழ் படிக்க தெரியாத சில நண்பர்களுக்கென ஆரம்பித்த எனது ஆங்கில வலைப்பூ. இந்த வலைப்பூவின் மூலம் தான் உலக வலைப்பதிவர் ஒன்றியத்தில் இணைந்து, தமிழீழத்தின் பிரதிநிதியாக எழுதிவருகின்றேன்:
Thooyas World-----------------------------------------------------------------------------------
இசை மீதான என் காதலில் உருவாக்கிய ஒரு வலைப்பூ:
தூயாவின் இசையுலகம்-----------------------------------------------------------------------------------
இதுவரை நான் எழுதியவற்றில் சிலவற்றை உங்களுக்காக மீட்டெடுத்து தந்திருக்கேன். வலைச்சரத்தை தொடுப்பதோடு நிற்காமல், சரத்தில் ஒரு பூவாக நானும் மாறும் ஆசையில் எனது அறிமுக பதிவை நிறைவு செய்கின்றேன்.
தூயா