நவரச புன்னகை
➦➠ by:
செய்தாலி,
நவரச புன்னகை
சுட்ட
பழம் இனிக்குமாம்
கடி ....?
*நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும்,
அதால ஒரு மிஸ்டுகால கூட குடுக்க முடியாது?
*வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
ஏன் காவிரி ஆத்துல கூட மீன் பிடிக்கலாம்!
ஆனால் அய்யர் ஆத்துல மீன் புடிக்க முடியுமா?
*கோலமாவில் கோலம் போடலாம்!
ஆனால் கடலை மாவில் கடலை போடமுடியுமா?
*லைப்ல ஒன்னுமே இல்லனா போர் அடிக்கும்!
தலையில ஒன்னுமே இல்லனா கிளார் அடிக்கும்!
கேரட்-டை "பச்சை"யா சாப்பிட்ட உடம்புக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னாரு நல்லதுதானேஎல்லா கடையிலும் தேடிப்பார்த்துட்டேன் சிவப்பு நிற கேரட்தான் இருக்குது
*இட்லி சாஃப்டா இருக்குமா?
சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!!
சாப்பிட்டா இருக்காது வயித்துக்குள்ள போயிடும்!!!
நகைச்சுவை
அது ஒரு சிலருக்கே கிடக்கும் வரப்பிரசாதம்
என்னை கேட்டால் நகைச்சுவைகளை படித்து ,பார்த்து சிரிப்பேன்
மற்றவர்களை சிரிக்க சிந்திக்க வைக்க தெரியாது
தன்
நகைச்சுவைகளில் நம்மை
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்
பழம்பெரும் நடிகரில் எனக்கு பிடித்தவர் என் எஸ் கே தான்
அதன்பின்
வார்த்தை முக ஜாலங்களில்
ஆடிப் பாடிசிந்திக்க சிரிக்கவத்தவர் சந்திரபாபு அவர்கள்
நவரச
நகைச்சுவை வல்லவர் அப்படின்னா
நம்ம நாகேஷ் சார்தான்
நகைச்சுவை நடிப்பில்
நடிப்பும் துடிப்பும் சொல்லி அடங்காதது
கவுண்டமணி செந்தில்
பெயரை சொன்னாலே சிருப்புதான் வரும்
பெரிய இடைவெளிக்குப் பின் சினிமாவுக்கு கிடைத்த கூட்டணி
விவேக்
பெயரைப்போலவே விவேகாமான
ஆழ்ந்த கருத்துக்களை சொல்லி சிரிக்க சிந்திக்க வைத்தார்
இன்று
அவரும் சிலரைப்போல கூட்டம் சேர்த்ததால்
கருத்தும் நகைச்சுவையும் துவக்கிறது
அடி
வாங்குதலிலும்
காமச் சொல்லிலும் நகைச்சிவை என்று
சொல்லிக்கொண்டு எத்தனையோபேர்
சந்தானம்
டைமிங் காமெடி என்றுதான் சொல்லலாம்
சொல் செயலும் மனதில் நிற்கும்
வலையில்
தங்கள் பதிவுகளால்
சிரிக்க சிந்திக்க வைக்கிறாங்க இவங்க
''மனசாட்சி'' ன்னு
பெயர வச்சுப்புட்டு
கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல்
நகைச்சுவை அட்டூழியம் செய்கிறார்
லொள்ளு & ஜொள்ளில்
வாணியாய் வடிக்கிறார்
கவிதைகளை
மின்னல்
வரிகளில்
அனுபவ தொகுப்புக்களை
அழகாய் சவராசியமாய் சொல்லிச்செல்லும்
கணேஷ் சார்
சிரிங்கள்
இல்லை சிறை என்கிறார் பாருங்கள்
நாளை வருகிறார்கள்
பல்சுவை வேந்தர்கள்
ம்(:





