வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே வலைச்சரச்சனி இன்றைய பதிவில்அரசியல்,சினிமா,காமெடி,அனுபவம்,பயணம்,சிறுகதை,தொடர்கதை,கட்டுரை,சமூகம்,நையாண்டி,சிந்தனை,கவிதை,படத்தொகுப்பு,படைப்புகள்,செய்திகள் என பல்வேறு களங்களுக்கும் தங்கள் எண்ணங்களை கொண்டு சென்று பதிவுகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களில் என் பார்வையில் பட்ட சில பதிவர்களை சரமாகத் தொடுத்து அவர்களின் தளங்கள் வழியே சில புதிய அறிமுகங்களுடன் உங்களை சந்திக்கவருவதில் மிக்க மகிழ்ச்சி.பெரும்பாலும் இந்த பதிவர்களை பற்றி நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள், எனினும் என் போன்ற புதியவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் விளைந்த சரம்.
இவர்களின் சிந்தனைகள் இன்னும் வளமோடு பெருக மனமாற வாழ்த்தி பல்சுவை பதிவர்களின் சரத்திற்க்குள் செல்வோமா
அட்ராசக்க வலைத்தளம் நடத்தும் அண்ணன் சிபிதான் இன்றுவரை பதிவர் நம்பர் ஒன்.இவரது சினிமா விமர்சனம் பார்த்தபின் பதிவர்கள் தியேட்டருக்கு போகலாம்.
அடுத்து வேடந்தாங்கல் என்ற வலையில் எழுதி வரும் கரூண்
ஆசிரியரான இவரின் மகான்களின் வாழ்க்கையில் தொடர் மிகப்பிரபலம்
தமிழ்வாசி வலைத்தளம் நடத்தும் பிரகாஷ் ப்ளாக்கர் டிப்ஸ் முதல் சின்னப்பாப்பா பெரிய பாப்பா என காமெடி வரை கலக்குபவர்
விக்கியுலகம் வலை நடத்தும் வெங்கட் அவர்கள் வலையில் ரத்தக்கறையின் டைரி உண்மையான போர்வீரனின் டைரிக்குறிப்பு,பேச்சுலர் வாழ்க்கை என தொடர் நீள்கிறது.
நாஞ்சில் மனோ என்ற வலையில் எழுதிவரும் மனோ அவர்கள். காமெடி
சீரியஸ் சமூக அவலம் என அனைத்தையும் பகிர்ந்தளிப்பவர்.
மெட்ராஸ் பவன் வலைத்தளம் நடத்திவரும் சிவா சினிமா உட்பட அனைத்து விஷயங்களையும் ஆழமாக சிந்திப்பவர். சமீபத்திய சமூகம் சார்ந்த பதிவுகள் மிகவும் பிரபலமானவை.
கவிதை கட்டுரை
சினிமா காமெடி எந்த களமாய் இருந்தாலும் களத்தில் இறங்கி வீடு கட்டுகிறார் சுரேஷ்
அடுத்து நாற்று வலைநடத்தும் நிரூபன்
திடகாத்திரமான பதிவுகளின் சொந்தக்காரர்.ஈழ போரின் உச்சங்களை கண்முன் நிறுத்துபவர்.புதியவர்களை
ஊக்குவிப்பவர்
நாய் நக்ஸ் நக்கீரர்
மாதமிரு பதிவுகளில் வந்தாலும் நகைச்சுவை மற்றும் சீரியஸ் பதிவிடுவதில் வல்லவர்.கழுகில் வெளிவரும் இவரது சமூகம் சார்ந்த பதிவிடுவதில் வல்லவர்.
பிரபாகரின் தத்துப்பித்துவங்கள் வலை நடத்தும் பிலாஷபி பிரபாகர் இவரின்
பிரபா ஒயின்ஷாப் பதிவுகள் வலையுலகில் அதிபிரபலம் இவர் எழுதும் சினிமா விமர்சனம் ஏகபிரபலம்
கவிதைவீதி சவுந்தர்
கவிதை முதல் இன்றைய சூடான அரசியல் விஷயம் வரை பகிர்ந்தளிப்பவர்
கூடல் பாலா என்று வலை நடத்தும் சுற்றுப்புற
சூழல் நாயகன் பாலா அவர்கள்.இவரின் அணு உலை உண்ணாவிரத போராட்டம் பதிவுலகை ஒன்று சேர்த்தது
ஆணிவேர் சூர்யஜீவா
சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளின் ஆழத்தினை பதிவுலகில் விமர்சிப்பவர்
உணவு உலகம் சங்கரலிங்கம்
விழிப்புணர்வு பதிவுகளின் சொந்தக்காரர்
ஸ்டார்ட் மியூசிக் வலையின் உரிமையாளர் நமது அண்ணன் ராமசாமி நான் சொல்லித்தெரியப்போவதில்லை.எந்த களமானாலும் இறங்கி கலக்கும் ஆல் ரவுண்டர்
தங்கம் பழனி நடத்தும் பழனி ப்ளாக்கர்
டிப்ஸ் முதல் மாவட்டங்களின் கதை வரை அலசுபவர்
ஈரோடு தங்கதுரை வலையில் பகிர்ந்து வரும் தங்கத்துரை – மொபல் டிப்ஸ்,கம்ப்யூட்டர் டிப்ஸ் என தொழிநுட்ப பதிவுகளின் ஆல்ரவுண்டர்
ராஜபாட்டை ராஜா
கணினி டிப்ஸ் முதல் இன்றைய மாணவர்களுக்கு கல்வி டிப்ஸ் வரை தொகுத்தளிப்பவர்
Counsel for any வலை எழுதும் நண்பர் சண்முகவேல் அது இது என எந்த விஷ்யத்தையும் ஆழமாக விவரிப்பவர்
அனுபவம் அரசியல்
சினிமா என அனைத்திலும் தீர்க்கமான பார்வைகாட்டும் வீடு திரும்பல் மோகன் குமார்
அரசியல் செய்தி சினிமா என அனைத்து துறைகளிலும் பதிவுகளை பகிரும் இட்லிவடை
நண்பர்கள் ராஜ் கிரிக்கெட் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை எழுதுபவர்.தற்சமயம் பதிவுலகிலிருந்து விலகி நிற்கிறார். மீண்டும் வாங்க ராஜ்.
வடகரை தாரிக் அவர்களின் வலைதளம் பல்சுவை வார இதழ்களின் டவுன்லோட் சென்டர்
புதிய பதிவர் அறிமுகம்
என் இனிய தமிழ் உலகம் திரு
சாய்பாபா அவர்கள் நடத்தி வருகின்றார்.ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அவர் ஓய்விற்க்கு பின் வலையெழுதி வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.நண்பரின் வலையில்
தானே பெயர் வந்த காரணம் பார்க்கச் செல்வோமா..
சின்னசின்ன சிதறல்கள் என்ற வலையில் பகிர்ந்து வரும் சகோதரி
அகிலா மனதில் பட்ட அன்றாட நிகழ்வுகளை வலையில் பகிர்ந்து வருபவர்.நேற்றைய என்கவுண்டர் பற்றிய அவரது பார்வை
பொதினியிலிருந்து - என்று வலையில் எழுதிவரும் நண்பர் கிருபாகரன் சினிமா விமர்சனங்களை தனது வலையில் பகிர்ந்து வருகிறார்
அடுத்து
என் அனபு மித்ரா என்ற வலைத்தளத்தில் தனது எண்ணங்களை பகிர்ந்து வரும் சகோதரி மித்ரா அம்மா அவர்களின் சமீபத்திய பதிவு
சந்தியாவிற்க்கு,குழந்தைவளர்ப்பு பற்றிய விஷயங்களை அலசுகிறார்.
புதியதாய் அறிமுகமான பதிவர்களை வரவேற்று அவர்கள் தமிழ் வலையுலகில் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார வாழ்த்துகின்றேன்
நன்றி நண்பர்களே !
நாளைய பதிவில் தமிழ் பதிவர்களுக்கு உதவும் திரட்டிகள்,பேஸ்புக்,கூகுள் ப்ளஸ் போன்ற சமூகவலைத்தளத்தில் பதிவுகளை பகிர்வதற்குத் தேவையான டிப்ஸ்களின் வழியே உங்களை சந்திக்க வருகின்றேன்
நட்புடன் நலம் நாடும்
சம்பத்குமார்
மேலும் வாசிக்க...
வணக்கம் அன்பு உள்ளங்களே..வலைச்சர வெள்ளி இன்றைய பதிவில் தமிழ்பதிவுலகில் தங்கள் எழுத்துக்களால் ஜொலித்துக்கொண்டிருக்கும் சகோதரிகளின் பதிவுச்சரங்களுடனும் புதிய அறிமுங்களுடனும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.பொதுவாக வலையுலகில் பதிவெழுத வரும் பெண்பதிவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.எனினும் தற்போது பதிவெழுதிக் கொண்டிருக்கும் பெண்பதிவர்கள் அனைவரும் தமிழ் பதிவுலகை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்லும் தேடல்களில் இருப்பது நிஜம்.சமூக அவலங்களைச் சாடுவதிலிருந்து,எதிர்கால சந்ததிகளை வளமாக்குவதுவரை அனைத்துப் பணிகளையும் வலையினூடே செய்து வருவது பாராட்டுதலுக்குரியது.
நேற்றைய கவிதைசரத்திற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொண்டு இனி எனது பார்வையில் பதிவுலகில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பெண் சிற்பிகள்.
இனி வலையுலகில் ஜொலிக்கும் பதிவுச் சிற்பிகளின் சரம்
முதலில் நாம் செல்ல இருப்பது பதிவுலக அம்மா லட்சுமி அவர்களின் வலைக்கு.தனது பயணபகிர்வுகளின் மூலம் அவருடன் நாம் சென்று வந்த உணர்வை அளிக்கவல்லவர்.இப்போது கூட தமிழ்பதிவர்களை கிலிபி ஆப்பிரிக்காவிற்க்கு அழைத்துச்செல்கிறார்.நாமும் செல்வோமா..
மிடில்கிகிளாஸ் மாதவி என்ற வலையில் நடுத்தர குடும்பத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நிகழும் சொத்து அடமானம் வைப்பதினை விரிவாக அலசியுள்ளார் சகோதரி மிடில்கிளாஸ் மாதவி
சாதாரணமானவள் வலையில் எழுதும் சகோதரி காதலைப்பற்றியும் காதலின் அடுத்த பரிணாமம் பற்றிய ஓர் அலசல் பதிவு
சகோதரி கீதமஞ்சரி அவர்களின் ஆஸ்திரேலியாவில் பள்ளிகளும் கற்பிக்கும் பாட முறைகளும் நமக்கும் பாடம் கற்றுத்தருகின்றன.இவரது கவிதை ஒன்று சமூகத்தினை சாடி நிற்கிறது பாருங்களேன்
சகோதரி ஆச்சி அவர்களின் வலையில் தற்பொழுது மறக்க முடியாத பேருந்து நினைவுகள் இடைநில்லா பேருந்தாக ஓடிக்கொண்டிருக்கிறது.நீங்களும் பயணம் செய்ய என்னோடு வாருங்களேன்
மதுரகவி வலை எழுதும் சகோதரி ராம்வி அவர்கள் தனது ஹாஸ்டல் நினைவுகளை சுவாரஸ்யம் மாறாமல் பதிவின் வழியாக தருகின்றார்.இந்த லின்கில் சென்று நீங்களும் வாசிக்கலாமே
டென்மார்க்கிலிருந்து வலை எழுதும் கோவைக்கவி அவர்களின் வேதா திலகம் வலையில் நான் ரசித்த கவிதை ஒன்று ஒருகாதலர் தினம் ஏன்
தமிழ்கவிதைகள் தங்கச்சுரங்கம் வலை நடத்தும் சகோதரி ஸ்ரவாணி அவர்கள் தங்க மங்கைகளைப்பற்றி ஓர் பதிவிட்டுள்ளார்.916 ஹால்மார்க் சொக்கத்தங்கத்தினைப் பற்றிய ஓர் பதிவையும் வாசியுங்களேன்
அடுத்து சகோதரி
இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆன்மீகப் பதிவுகள் அதிகம் எழுதுகிறார்.இவரது ஓவ்வொரு பதிவின் வழியே இணையத்திலிருந்தே கோயிலை தரிசிக்கலாம்.அவரின்
மஹாசிவராத்திரி பதிவு ஒன்று.
டாக்டர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ரதனவேல் ஐயா அவர்களின் வலையில் எழுதிய நாய்கடியா ஜாக்கிரதை வெறி நாயாகவும் இருக்கலாம்.மருத்துவ விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கின்றார்.
வானம் வெளித்த பின்னும் வலையில் எழுதிவரும் சகோதரி
ஹேமா அவர்கள்
காட்சிப்பிழை என்ற கவிதை வரிகளை வாசித்துவிட்டு வரலாமே..
அடுத்து ரம்யம் வலையில் பகிர்ந்து வரும் சகோதரி
மாதேவி அவர்கள் பூக்களில் இத்தனை வகைகளா பார்த்ததும் பிரமித்துப்போனேன்.நீங்களும்
பூ பூக்கும் ஓசையை பார்க்க வாங்களேன்
அடுத்து சமையல் அட்டகாசங்கள் வலையில் நமக்கு தேவையான சமையல் வகைகளை பரிமாறும் சகோதரி
ஜலீலா கமால் அவர்கள்.ஆண்களுக்கு
கோடைகாலத்தினை சமாளிக்கும் டிப்ஸ் தருகிறார்.கண்டிப்பாய் உதவும்.
என்பக்கம் வலையில் பகிந்து வரும் சகோதரி அதிரா அவர்கள் அவரது வளர்ப்பு மகள் சிறுகதையை வாசிக்க செல்லலாமா..
முத்துச்சிதறல் வலையில் எழுதிவரும் சகோதரி
மனோசாமிநாதன் அவர்களின் சார்ஜாவில் வசிக்கும் இவரின் சமீபத்திய தமிழ்நாட்டுப்பயணம் பதிவு
நம்ம ஊரு நல்ல ஊரு பதிவு.
அடுத்து உங்களை அழைத்துக்கொண்டு செல்லவிருப்பது அம்மாக்களின் வலைப்பூக்களுக்கு.குழந்தைவளர்ப்பு முதல் அனைத்தையும் விரிவாக அலசுகின்றனர்.தேசம் விட்டு தேசம் சென்றாலும் தமிழ் என்று வாழும் எனபதை உணர்த்தும் அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி
இன்றைய பதிவர் அறிமுகத்தில்
தேவதையின் கனவுகள் என்ற வலையில் எழுதிவரும் சகோதரி தூயா அவர்கள்.தன்னைப்பற்றி சொல்வதற்க்கு ஒன்றுமில்லை ஏதாவது சாதித்துவிட்டுச் சொல்கின்றேன் என்கிறார்.புலிக்கு பிறந்தது பூனையாகாது ஏனெனில் இவரது பெண்வேங்கை பதிவே அதற்கு சாட்சி
தீபிகா கவிதைகள் என்னும் வலையில் வரும் சகோதரி தீபிகா ஈழத்தில் உதித்த உயிர்துளி எனது என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.இதோ அவரது கவிதைகளில் ஒன்று அறுந்து விழுந்த பல்லியின் வாலும் பயங்கரவாதிகளும்
புதிய அறிமுக பதிவர்களுக்கு வரவேற்று தமிழ் வலையுலகில் அவர்கள் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
விடுபட்டுப்போன நல் இதயங்கள் பொறுத்தருள்க.
நன்றி சகோதர சகோதரிகளே..
நட்புடன் சகோதரன்,
சம்பத்குமார்
மேலும் வாசிக்க...
வணக்கம் அன்பு நெஞ்சங்களே! வலைச்சர வியாழன் இன்றைய பதிவில் தமது எண்ணங்களையும்,சிந்தனைகளையும் தமிழ்பதிவுலகில் கவிதைவரிகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களின் பதிவுகளை சரமாக தொடுத்து அறிமுகப்பதிவர்களுடன் உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.இவர்கள் வாழ்க்கையின் உணர்வலைகளை செந்தமிழாம் தமிழ்மொழியில் வரிகள் எனும் தூரிகை கொண்டு பதிவுகளில் தீட்டிவைத்துள்ளனர்.வாருங்கள் அவர்கள் வரைந்து வைத்த கவிதைகளை சுவாசித்து விட்டு வருவோம்.
அதற்குமுன் நேற்றைய
மனம் கவர்ந்த பதிவிற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இனி இதோ கவிதைச்சரம்
முதலில்
புலவர் இராமானுஜம் ஐயா அவர்களின் தமிழ் கவிதைச்சுரங்கத்தில்
மீனவர்கள் படும் வேதனையின் வலி வரிகளாய்..
இறந்துபோவேனோ என்பதற்காக சுவாசிக்கவில்லை ஒருவேளை மறந்து போவேனோ என்பதற்காக சுவாசிப்பதாக சொல்லிநிற்கும் நண்பர்
பனித்துளிசங்கர் சுவாசிக்கின்றேன் உனக்காக
பொதுவாக பெண்களின் பருவநிலை ஏழு எனக்கேட்டிருக்கின்றேன்.ஆண்களுக்கிங்கே ஏழு பருவங்களை எடுத்து இயம்புகிறார் நண்பர் மகேந்திரன் தனது வசந்தமண்டபத்தில்
வேர்களைத்தேடி முனைவர் குணசீலன் அவர்களின் வலையில் வந்த முறைமான் சீரு கவிதை வரைந்தவர் அவரது மாணவர் கேசவன்.
மானுஷ்யபுத்திரன் கவிதைகள்,மற்றும் பல சிறந்த கவிஞர்களின் தொகுப்பு ரசிக்க ருசிக்க காலக்கூத்து கவிதை பெட்டகமாய் நிற்கிறது
நண்பர்
மதுரை சரவணன் அவர்களின் வலையின் வழியே பிறந்து வந்த
கிறுக்கல்கள் வாசிக்கலாமே...
நண்பர் ரமணி அவர்கள் நடத்தும் தீதும் நன்றும் பிறர் தரவாரா வலையில் தொலைக்காட்சித் தொடரை விட்டொழிக்கவேண்டியதின் அவசியத்தை உண்ர்த்தும் நிஜமல்ல கதை
கவி அழகன் என்றவலையில் பகிர்ந்து வரும் நண்பர்
கவியழகனின் கேள்வி ஒன்று
உடலுக்குள் அசுத்தமா ? உலகமே அசுத்தமா ?
கரூர் பிரபாகரன் அவர்கள் எழுதிய நீ நிலவு நான் சூரியன் கவிதை வரிகளாய் இங்கே.
தென்காசிபைங்கிளியின் கவிதையில் அணைக்கும் கை படிப்பவருக்கும், பார்ப்பவருக்கும், மனதை நெகிழச்செய்யும்...
அணைக்கும் கை
கிராமத்துக் கருவாச்சி என்ற வலைத்தளத்தில் பகிர்ந்து வரும்
தோழி கலை அவர்களின்
உன்னைப்போல் நான்
தாயின் இழப்பைத் தாங்கமுடியாத
மகனின் கதறல் தனசேகரின் சேகர் தமிழ் வலையில்
பதிவர் அறிமுகம்
முதலில்
என் பாதிப்புகள் பதிவுகளாய் என்ற வலையில் எழுதிவரும் நண்பர் திரு.புஷ்பராஜ்.இவரின் விருப்பங்கள் கேட்பதில் இசையும்,படிப்பதில் வரலாற்று நிகழ்வுகளும்,எழுதுவதில் கவிதைகளும் என அறிமுகப்படுத்துகின்றார்.இவரின்
கூடல் கவிதை ஒன்று.
அடுத்தது சிறுமுயற்சி என்ற வலையில் எழுதிவரும் திரு.விஜயகுமார் அவர்கள்.தன்னை அக்கவுண்டண்ட் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர் தனது வலையில்
விவசாயம் பற்றிய பதிவுகளை பகிர்ந்துவருகின்றார்
புதிய நண்பர்களை உங்கள் சார்பில் வரவேற்று அவர்கள் மென்மேலும் சிறப்பாய் வலையுலகில் வலம்வர வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
காத்திருங்கள் நண்பர்களே!..நாளைய வலைச்சரத்தில் தமிழ் பதிவுலகை செதுக்கிக் கொண்டிருக்கும் பெண் சிற்பிகள் பதிவின் வழியே உங்களைச் சந்திக்க வருகின்றேன்
நன்றி நண்பர்களே...
நட்புடன் நலம் நாடும்
சம்பத்குமார்
தமிழ்பேரண்ட்ஸ்
மேலும் வாசிக்க...
வணக்கம் நண்பர்களே!
வலைச்சர புதனில் இன்று என்னைக்கவர்ந்த பதிவுகளின் வழியாக அறிமுகப்பதிவர்களுடன் உங்களை சந்திக்கவருகின்றேன்.எல்லா பதிவுகளை தினம் தினம் வாசித்து வந்தாலும் சிலரது பதிவுகளை வாசித்தவுடன் ஏதோ நமக்கே நடந்தது போன்ற ஓர் உணர்வு வருவது இயற்கையே.அத்தகைய பதிவுகளில் என்னை கவர்ந்த சில பதிவுகளை பூச்சரமாக தொடுத்து உங்களிடம் சமர்பிக்கின்றேன்.
முதலில் சென்னைமண்ணின் சூப்பர் ஸ்டார் சென்னை பித்தன் அவர்களின் அசத்தல் பதிவு. நான்தான் சமையல்காரி அலமேலு.வீட்டுவேலைக்கு செல்லும் தாய்மார்களின் மனநிலையை படம்பிடித்துக்காட்டுகிறார்
ஒரு பெற்றோராக தனது பிள்ளைகளுக்கு உணவு,உடை,இருப்பிடம் கல்வி மட்டும் அளிப்பது கடமையல்ல.பாதுகாப்பான பழக்க வழக்கங்களை சொல்லித்தரவும் வேண்டும் என்பதை வலியுறுத்தும் பர்தா போபியா.இதனை அழகுற செதுக்கியவர் சகோதரி ஹுசைனம்மா.
அடுத்து இரவுவானம் சுரேஷ். திருப்பூர்காரர். எப்போதாவது பதிவிடுவார். ஆனாலும் இவரின் பதிவு பேசப்படும். அதில் ஒன்றினைப் பார்ப்போம்.இவரின் நாய்கள் V/S மனிதர்கள் பதிவினை வாசித்து பாருங்களேன்.நண்பர் தொடர்ந்து எழுத அவரது சூழ்நிலைகள் ஓத்துழைக்கட்டும்.
நா. மணிவண்ணன். மதுரைக்காரர்.மதுரை வட்டார வழக்கில் இவர் எழுதுவது சுவாரஸ்யமாக இருக்கும். இவரது பதிவுகளில் மிகவும் கவர்ந்தது அத்த மக ரத்தினமே.நீங்களும் வாசித்துவிட்டு வரலாமே.இப்போது எழுதுவதை வெகுவாக குறைத்து கொண்டது எல்லோருக்கும் வருத்தமே.
அடுத்தது சுடச்சுட அரசியல் பதிவுகளை எழுதும் ரஹீம்கஸாலி. அவரது பதிவுகளில் தொலைபேசி நிறுவனத்தால் அவருக்கு நேர்ந்த கதி பற்றி எடுத்துச்சொல்லி அதற்க்கு தீர்வு காண்கிறார்.இந்த கதி நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.
அடுத்தது நண்பர் ரெவரி இவரின் வலை மெல்லத்தமிழ் இனி வாழும்.இவருடைய படம் வரைந்து பாகம் குறி தொடர் பிரபலமானவைகளில் ஒன்று.அவரின் புத்தாண்டுத் தீர்மானங்களையும் அதனை அவர் கடைபித்தவிதமும் நம் சார்பாக பதிவிட்ட மாதிரிதான் எனக்குத்தெரிகிறது.
அடுத்தது நண்பர் ஆரூர் முனா செந்தில்.இவர் தோத்தவண்டா என்ற பெயரில் வலை நடத்தி வருகிறார்.சொந்த ஊரின் சுவாரசியத்தினை அழகுற பகிர்ந்துவைத்துள்ளார். நாமும் சென்று பார்த்துவிட்டு வரலாமா..
அடுத்தது நண்பர் கோகுல்மனதில் கோகுல் சமுதாயத்தில் தினம் தினம் காணும் விஷயங்களை கருவாக கொண்டு மனதில் பட்டதை விழிப்புணர்வு பதிவாக வெளியிடுவதில் கெட்டிக்காரர்.தற்சமயம் தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பாதிக்கப்பட்ட போது வலையுலக நிதி திரட்டி முடிந்தவரை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கியவர்.இவரின் பதிவு ஒன்று இங்கே குடிகாரன் பேச்சு விடிஞ்சா...?
அடுத்து நண்பர்
ஹைதர் அலி அவர்கள்.வலையுகம் என்ற வலையினை நடத்தி வருகின்றார்.சமூக சிந்தனையுடன் சமூதாயத்தில் ஊடுருவியிருக்கும்
சாதிவெறியால் பாதிக்கப்பட்ட தனது நண்பரை பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பதிவர் அறிமுகம் :
இன்றைய அறிமுகப்பதிவர் திரு S.S பூங்கதிர் அவர்கள்.இவர் பூங்கதிர் போர்ட்டூன்ஸ் என்ற பெயரில் தற்போது வலை நடத்தி வருகிறார்.பிரபல இதழ் பாக்யாவில் எதிரொலி என்ற பகுதியில் தொடர்ந்து எழுதி வருகிறார்.இவரது ஊர் திருவிழா பற்றிய கவிதை ஒன்றினை காணலாமே.
அடுத்த அறிமுகப்பதிவர் திரு ராஜ் அவர்கள்.இவர் அரசியல் ஆர்வமுள்ள, சமூக அக்கறை உள்ள,சினிமாவை விரும்பும் ஒரு சராசரி வாலிபன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றார்.ஹோலிவுட்ராஜ் என்ற பெயரில் வலையில் இருந்தாலும் விமர்சனம் செய்வது ஹாலிவுட் படங்களே.
நன்றி நண்பர்களே ! நீங்கள் தொடர்ந்து வளமோடும் நலமோடும் எழுத வலைச்சரத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன்.
மீண்டுமொரு பதிவில் புதிய அறிமுகங்களுடனும் மனதை கவர்ந்த பதிவுகளுடனும் உங்களை சந்திக்க வருகின்றேன்
நட்புடன் நலம் நாடும்
சம்பத்குமார்
மேலும் வாசிக்க...