07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சம்பத் குமார். Show all posts
Showing posts with label சம்பத் குமார். Show all posts

Sunday, February 26, 2012

பேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்



வணக்கம் நண்பர்களே வலைச்சர ஞாயிறு. நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த உதவுகிறது ப்ளாக்கர் தளம்.ஆயினும் என்னதான் நாம் நமது வலையில் பதிவுகளை பதிந்து வைத்தாலும் உலகில் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பது சமூகவளைத்தளங்களான பேஸ்புக்,டிவிட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் போன்றவையே.இதை தவிர தமிழ் திரட்டிகளும் உதவுகின்றன.தமிழ் பதிவர்களுக்கு உதவும் சமூகவலைத்தள டிப்ஸ் மற்றும் தமிழ் திரட்டிகளின் டிப்ஸ் ஆகியவ்ற்றை இன்றைய சரமாக உங்களிடம் சமர்பிக்கின்றேன்.நிச்சயம் இதுவும் உங்களுக்கு கண்டிப்பாக உதவும் என்ற நம்பிக்கையில்

இதற்கு முந்தைய பாகம் ப்ளாக்கர் டிப்ஸ் 2012 படிக்க...

பேஸ்புக் டிப்ஸ் 

FACEBOOK உருவான வரலாறு
http://www.thangampalani.com/2011/12/face-book.html

FACEBOOK ல் பக்கம் உருவாக்குவது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/06/facebook-fan-page.html

FACEBOOK ல் GROUP உருவாக்குவது எப்படி ?
http://www.vandhemadharam.com/2011/11/group.html

FACEBOOK ல் பதிவுகளை பகிர்வது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/05/blog-post_374.html

FACEBOOK ல் TIMELINE வசதி ஆக்டிவேட் செய்வது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/12/facebook-timeline.html

TIMELINE BANNER க்கு விதவிதமான படங்கள் வைக்க
http://www.vandhemadharam.com/2011/12/timeline-cover-banner-5.html

FACEBOOK ல் வரவேற்பது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/11/blog-post.html

ப்ளாக்கர் பதிவுகளை FACEBOOK ல் தானாக அப்டேட் செய்ய..
http://ponmalars.blogspot.in/2012/02/rss-graffiti.html

GMAIL ல் FACEBOOK கணக்கை கொண்டுவர..
http://www.vandhemadharam.com/2011/02/blog-post_15.html

இணைய தொடர்பு இல்லாமல் facebook உபயோகிக்க
http://www.karpom.com/2012/01/access-facebook-without-internet.html



கூகுள் ப்ளஸ் டிப்ஸ்

GOOGLE PLUS ல் ஒரு பக்கம் உருவாக்குதல்
http://www.bloggernanban.com/2011/11/google-pages.html

GOOGLE PLUS அப்டேட்களை ப்ளாக்கில் தெரியப்படுத்த
http://ponmalars.blogspot.in/2011/08/show-google-plus-updates-in-blogger.html

கூகுள் ப்ளஸ் மூலம் வாசகர்களை அதிகரிக்க
http://www.bloggernanban.com/2011/11/google-badge.html

ப்ளாக்கின் முகப்பிற்க்கு PLUS ONE பட்டன் வைக்க
http://www.karpom.com/2011/08/google-1-button-add.html

தமிழ் திரட்டிகள் டிப்ஸ்

அனைத்து SOCIAL விட்ஜெட்கள் ஒரே இடத்தில்
http://www.vandhemadharam.com/2011/11/email-subscribe-social-networks-feed.html

தமிழ் திரட்டிகளின் ஓட்டுப்பட்டை ஒரே வரிசையில் இணைக்க
http://www.tamilvaasi.com/2012/01/tamil-thiratti-social-sites-vote.html

உங்கள் ப்ளாக்கை பிரபலப்படுத்த 30 திரட்டிகளின் தொகுப்பு
http://www.thangampalani.com/2012/02/30-popularize-your-blog.html

பீட் பர்னர்டிப்ஸ்

feedburner ஈ மெயில் டெலிவரி நேரத்தை மாற்ற
http://www.vandhemadharam.com/2011/11/email-delivery-3.html

ஃபீட் பர்னரில் உங்கள் லோகோ வரவைப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/05/feedburner-email-subscription-logo.html

ஃபீட் பர்னரில் Feed Url மாற்றுவது எப்படி ?
http://www.vandhemadharam.com/2011/10/feed-url.html


இலவச ப்ளாக்கர் டிப்ஸ் மின்னிதழ் 

தற்போது தமிழ்வலையுலகில் தொழில்நுட்பபதிவுகள் எழுதி வரும் நம் நண்பர்கள் அனைவரும் கற்போம் என்றொரு வலையில் ஒன்றிணைந்து தொழில்நுட்பபதிவுகளை அழகாக எளிய தமிழில் பகிர்ந்து வருகின்றனர்.மாதம் ஒரு இலவசமின்னிதழ் உங்கள் மெயில் முகவரிக்கே அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்கள்.விருப்பமுள்ள வாசகர்கள் தளத்தினை தொடரலாமே..


நன்றி நவிழல்

நண்பர்களே வலைச்சர ஆசிரியர் பணி ஏற்ற பொழுது மிகவும் பயமாய் இருந்தது.நாமே இன்னும் தமிழ் வலையுலகில் புதிய பதிவராக இருக்கையில் இத்தனை இடுகைக்களை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற பயம்.எனினும் நண்பர்கள் கொடுத்த ஊக்கம் இந்த அளவிற்க்கு ஆசிரியர்ப்பணி செய்ய வைத்தது.உதவி ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

இந்த பணிக்கான இடுகை தேடல்களில் இன்னும் நிறையக் கற்றுக் கொண்டதுதான் நிஜம்.தமிழ் பதிவுலகில் இன்று எழுத வரும் இளைஞர் சமுதாயம் கண்டிப்பாக அடுத்த கட்ட வளர்ச்சியினை நோக்கித்தான் செல்கிறது என்பதை என்னால் நிச்சயம் அறுதியிட்டுச் சொல்ல முடியும் இதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல் லை.

அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சர நிர்வாகிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

நன்றி! நன்றி!! நன்றி!!!

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்


தமிழ்பேரன்ட்ஸ் & Cute Parents


நண்பர்களே இந்த வார ஆசிரியர் பணி பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.உங்களின் பின்னூட்டமே எனக்கான ஊக்கமருந்து.


மேலும் வாசிக்க...

Saturday, February 25, 2012

பல்சுவை பதிவர்கள்


வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே வலைச்சரச்சனி இன்றைய பதிவில்அரசியல்,சினிமா,காமெடி,அனுபவம்,பயணம்,சிறுகதை,தொடர்கதை,கட்டுரை,சமூகம்,நையாண்டி,சிந்தனை,கவிதை,படத்தொகுப்பு,படைப்புகள்,செய்திகள் என பல்வேறு களங்களுக்கும் தங்கள் எண்ணங்களை கொண்டு சென்று பதிவுகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களில் என் பார்வையில் பட்ட சில பதிவர்களை சரமாகத் தொடுத்து அவர்களின் தளங்கள் வழியே சில புதிய அறிமுகங்களுடன் உங்களை சந்திக்கவருவதில் மிக்க மகிழ்ச்சி.பெரும்பாலும் இந்த பதிவர்களை பற்றி நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள், எனினும் என் போன்ற புதியவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் விளைந்த சரம்.


இவர்களின் சிந்தனைகள் இன்னும் வளமோடு பெருக மனமாற வாழ்த்தி பல்சுவை பதிவர்களின் சரத்திற்க்குள் செல்வோமா

அட்ராசக்க வலைத்தளம் நடத்தும் அண்ணன் சிபிதான் இன்றுவரை பதிவர் நம்பர் ஒன்.இவரது சினிமா விமர்சனம் பார்த்தபின் பதிவர்கள் தியேட்டருக்கு போகலாம்.


அடுத்து வேடந்தாங்கல் என்ற வலையில் எழுதி வரும் கரூண் ஆசிரியரான இவரின் மகான்களின் வாழ்க்கையில் தொடர் மிகப்பிரபலம்

தமிழ்வாசி வலைத்தளம் நடத்தும் பிரகாஷ் ப்ளாக்கர் டிப்ஸ் முதல் சின்னப்பாப்பா பெரிய பாப்பா என காமெடி வரை கலக்குபவர்


விக்கியுலகம் வலை நடத்தும் வெங்கட் அவர்கள் வலையில் ரத்தக்கறையின் டைரி உண்மையான போர்வீரனின் டைரிக்குறிப்பு,பேச்சுலர் வாழ்க்கை என தொடர் நீள்கிறது.

நாஞ்சில் மனோ என்ற வலையில் எழுதிவரும் மனோ அவர்கள். காமெடி சீரியஸ் சமூக அவலம் என அனைத்தையும் பகிர்ந்தளிப்பவர். 

மெட்ராஸ் பவன் வலைத்தளம் நடத்திவரும் சிவா சினிமா உட்பட அனைத்து விஷயங்களையும் ஆழமாக சிந்திப்பவர். சமீபத்திய சமூகம் சார்ந்த பதிவுகள் மிகவும் பிரபலமானவை.

கவிதை கட்டுரை சினிமா காமெடி எந்த களமாய் இருந்தாலும் களத்தில் இறங்கி வீடு கட்டுகிறார் சுரேஷ்

அடுத்து நாற்று வலைநடத்தும் நிரூபன் திடகாத்திரமான பதிவுகளின் சொந்தக்காரர்.ஈழ போரின் உச்சங்களை கண்முன் நிறுத்துபவர்.புதியவர்களை ஊக்குவிப்பவர்

நாய் நக்ஸ் நக்கீரர் மாதமிரு பதிவுகளில் வந்தாலும் நகைச்சுவை மற்றும் சீரியஸ் பதிவிடுவதில் வல்லவர்.கழுகில் வெளிவரும் இவரது சமூகம் சார்ந்த பதிவிடுவதில் வல்லவர்.

பிரபாகரின் தத்துப்பித்துவங்கள் வலை நடத்தும் பிலாஷபி பிரபாகர் இவரின் பிரபா ஒயின்ஷாப் பதிவுகள் வலையுலகில் அதிபிரபலம் இவர் எழுதும் சினிமா விமர்சனம் ஏகபிரபலம்

கவிதைவீதி சவுந்தர் கவிதை முதல் இன்றைய சூடான அரசியல் விஷயம் வரை பகிர்ந்தளிப்பவர்

கூடல் பாலா என்று வலை நடத்தும் சுற்றுப்புற சூழல் நாயகன் பாலா அவர்கள்.இவரின் அணு உலை உண்ணாவிரத போராட்டம் பதிவுலகை ஒன்று சேர்த்தது

ஆணிவேர் சூர்யஜீவா சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளின் ஆழத்தினை பதிவுலகில் விமர்சிப்பவர்

உணவு உலகம் சங்கரலிங்கம் விழிப்புணர்வு பதிவுகளின் சொந்தக்காரர்


ஸ்டார்ட் மியூசிக் வலையின் உரிமையாளர் நமது அண்ணன் ராமசாமி நான் சொல்லித்தெரியப்போவதில்லை.எந்த களமானாலும் இறங்கி கலக்கும் ஆல் ரவுண்டர் 

தங்கம் பழனி நடத்தும் பழனி ப்ளாக்கர் டிப்ஸ் முதல் மாவட்டங்களின் கதை வரை அலசுபவர்

ஈரோடு தங்கதுரை வலையில் பகிர்ந்து வரும் தங்கத்துரை  – மொபல் டிப்ஸ்,கம்ப்யூட்டர் டிப்ஸ் என தொழிநுட்ப பதிவுகளின் ஆல்ரவுண்டர்

ராஜபாட்டை ராஜா கணினி டிப்ஸ் முதல் இன்றைய மாணவர்களுக்கு கல்வி டிப்ஸ் வரை தொகுத்தளிப்பவர்

Counsel for any வலை எழுதும் நண்பர் சண்முகவேல் அது இது என எந்த விஷ்யத்தையும் ஆழமாக விவரிப்பவர்


அனுபவம் அரசியல் சினிமா என அனைத்திலும் தீர்க்கமான பார்வைகாட்டும் வீடு திரும்பல் மோகன் குமார்

அரசியல் செய்தி சினிமா என அனைத்து துறைகளிலும் பதிவுகளை பகிரும் இட்லிவடை

நண்பர்கள் ராஜ் கிரிக்கெட் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளை எழுதுபவர்.தற்சமயம் பதிவுலகிலிருந்து விலகி நிற்கிறார். மீண்டும் வாங்க ராஜ்.

வடகரை தாரிக் அவர்களின் வலைதளம் பல்சுவை வார இதழ்களின் டவுன்லோட் சென்டர்


புதிய பதிவர் அறிமுகம்



உழவன் என்ற வலை நடத்தி வரும் நண்பர் உழவன் ராஜா அவர்கள்.உலகின் எங்கோ ஓர் மூலையில் நடக்கும் அநியாத்தினை கண்டு மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.இதோ அவரது பதிவு சொத்துக்களுக்கு பத்திரப்பதிவு மட்டும் செல்லாது

என் இனிய தமிழ் உலகம் திரு சாய்பாபா அவர்கள் நடத்தி வருகின்றார்.ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அவர் ஓய்விற்க்கு பின் வலையெழுதி வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.நண்பரின் வலையில் தானே பெயர் வந்த காரணம் பார்க்கச் செல்வோமா..

சின்னசின்ன சிதறல்கள்  என்ற வலையில் பகிர்ந்து வரும் சகோதரி அகிலா மனதில் பட்ட அன்றாட நிகழ்வுகளை வலையில் பகிர்ந்து வருபவர்.நேற்றைய என்கவுண்டர் பற்றிய அவரது பார்வை

பொதினியிலிருந்து - என்று வலையில் எழுதிவரும் நண்பர் கிருபாகரன் சினிமா விமர்சனங்களை தனது வலையில் பகிர்ந்து வருகிறார் 

சங்கர் கணேஷ் வலையில் எழுதிவரும் நண்பர் கணேஷ்.அவரின் வாழிய வாழியவே கவிதை ஒன்று

கண்மணி அன்போடு வலையில் பகிர்ந்து வரும் சகோதரி கண்மணி அவர்களின் கவிதை துளி ஒன்று காதலின் பதம்

அம்மாவிற்க்கு என்ற வலைத்தளம் நடத்தி வரும் நண்பர் செந்தில்குமார் தனது வலையில் எழுதிய இயந்திர நிமிடங்கள் கவிதை 

அடுத்து என் அனபு மித்ரா என்ற வலைத்தளத்தில் தனது எண்ணங்களை பகிர்ந்து வரும் சகோதரி  மித்ரா அம்மா அவர்களின் சமீபத்திய பதிவு சந்தியாவிற்க்கு,குழந்தைவளர்ப்பு பற்றிய விஷயங்களை அலசுகிறார்.


புதியதாய் அறிமுகமான பதிவர்களை வரவேற்று அவர்கள் தமிழ் வலையுலகில் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார வாழ்த்துகின்றேன்

நன்றி நண்பர்களே !

நாளைய பதிவில் தமிழ் பதிவர்களுக்கு உதவும் திரட்டிகள்,பேஸ்புக்,கூகுள் ப்ளஸ் போன்ற சமூகவலைத்தளத்தில் பதிவுகளை பகிர்வதற்குத் தேவையான டிப்ஸ்களின் வழியே உங்களை சந்திக்க வருகின்றேன்

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்


மேலும் வாசிக்க...

Friday, February 24, 2012

ஜொலிக்கும் பெண் சிற்பிகள்


வணக்கம் அன்பு உள்ளங்களே..வலைச்சர வெள்ளி இன்றைய பதிவில் தமிழ்பதிவுலகில் தங்கள் எழுத்துக்களால் ஜொலித்துக்கொண்டிருக்கும் சகோதரிகளின் பதிவுச்சரங்களுடனும் புதிய அறிமுங்களுடனும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.பொதுவாக வலையுலகில் பதிவெழுத வரும் பெண்பதிவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.எனினும் தற்போது பதிவெழுதிக் கொண்டிருக்கும் பெண்பதிவர்கள் அனைவரும் தமிழ் பதிவுலகை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்லும் தேடல்களில் இருப்பது நிஜம்.சமூக அவலங்களைச் சாடுவதிலிருந்து,எதிர்கால சந்ததிகளை வளமாக்குவதுவரை அனைத்துப் பணிகளையும் வலையினூடே செய்து வருவது பாராட்டுதலுக்குரியது.

நேற்றைய கவிதைசரத்திற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொண்டு இனி எனது பார்வையில் பதிவுலகில் ஜொலித்துக்கொண்டிருக்கும் பெண் சிற்பிகள்.

இனி வலையுலகில் ஜொலிக்கும் பதிவுச் சிற்பிகளின் சரம்

முதலில் நாம் செல்ல இருப்பது பதிவுலக அம்மா லட்சுமி அவர்களின் வலைக்கு.தனது பயணபகிர்வுகளின் மூலம் அவருடன் நாம் சென்று வந்த உணர்வை அளிக்கவல்லவர்.இப்போது கூட தமிழ்பதிவர்களை கிலிபி ஆப்பிரிக்காவிற்க்கு அழைத்துச்செல்கிறார்.நாமும் செல்வோமா..

மிடில்கிகிளாஸ் மாதவி என்ற வலையில் நடுத்தர குடும்பத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நிகழும் சொத்து அடமானம் வைப்பதினை விரிவாக அலசியுள்ளார் சகோதரி மிடில்கிளாஸ் மாதவி

முக்திநாத் யாத்திரைக்கு சென்று வந்த அவர் நம்மளையும் பதிவின் வழியே அழைத்துச் செல்கிறார் சகோதரி கோமதி அரசு 

சாதாரணமானவள் வலையில் எழுதும் சகோதரி காதலைப்பற்றியும் காதலின் அடுத்த பரிணாமம் பற்றிய ஓர் அலசல் பதிவு

சகோதரி கீதமஞ்சரி அவர்களின் ஆஸ்திரேலியாவில் பள்ளிகளும் கற்பிக்கும் பாட முறைகளும் நமக்கும் பாடம் கற்றுத்தருகின்றன.இவரது கவிதை ஒன்று சமூகத்தினை சாடி நிற்கிறது பாருங்களேன்

தென்றல் எனும் வலையில் எழுதிவரும் சகோதரி சசிகலா அவர்கள் நடுத்தர வர்க்கத்தின் அவலத்தினை படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்

சகோதரி ஆச்சி அவர்களின் வலையில் தற்பொழுது மறக்க முடியாத பேருந்து நினைவுகள் இடைநில்லா பேருந்தாக ஓடிக்கொண்டிருக்கிறது.நீங்களும் பயணம் செய்ய என்னோடு வாருங்களேன்

சகோதரி சந்திரகவுரி அவர்கள் எழுதும் வலைப்பூவில் புத்தாண்டுத்தீர்மானங்கள் 2012 ஓர் சுய பரிசீலனை கவிதையை வாசிக்கலாமா,,

மதுரகவி வலை எழுதும் சகோதரி ராம்வி அவர்கள் தனது ஹாஸ்டல் நினைவுகளை சுவாரஸ்யம் மாறாமல் பதிவின் வழியாக தருகின்றார்.இந்த லின்கில் சென்று நீங்களும் வாசிக்கலாமே

டென்மார்க்கிலிருந்து வலை எழுதும் கோவைக்கவி அவர்களின் வேதா திலகம் வலையில் நான் ரசித்த கவிதை ஒன்று ஒருகாதலர் தினம் ஏன்

சகோதரி அம்பாளடியாள் அவர்களின் கவிதைகளில் ஓர் அழகிய கவிதை ஒன்று சொன்னால் புரிஞ்சுக்கோ..

தமிழ்கவிதைகள் தங்கச்சுரங்கம் வலை நடத்தும் சகோதரி ஸ்ரவாணி அவர்கள் தங்க மங்கைகளைப்பற்றி ஓர் பதிவிட்டுள்ளார்.916 ஹால்மார்க் சொக்கத்தங்கத்தினைப் பற்றிய ஓர் பதிவையும் வாசியுங்களேன்

அடுத்து சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்கள் ஆன்மீகப் பதிவுகள் அதிகம் எழுதுகிறார்.இவரது ஓவ்வொரு பதிவின் வழியே இணையத்திலிருந்தே கோயிலை தரிசிக்கலாம்.அவரின் மஹாசிவராத்திரி பதிவு ஒன்று.

டாக்டர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ரதனவேல் ஐயா அவர்களின் வலையில் எழுதிய நாய்கடியா ஜாக்கிரதை வெறி நாயாகவும் இருக்கலாம்.மருத்துவ விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கின்றார்.

முத்துச்சரம் வலையில் எழுதிவரும் சகோதரி ராமலட்சுமி அவர்களின் ஓர் பதிவுச்சரம் பள்ளி நிர்வாகங்கள்,ப்ளாஸ்டிக் அரக்கன் போன்ற தூறல்களின் துளிகள்

வானம் வெளித்த பின்னும் வலையில் எழுதிவரும் சகோதரி ஹேமா அவர்கள் காட்சிப்பிழை என்ற கவிதை வரிகளை வாசித்துவிட்டு வரலாமே.. 

அடுத்து ரம்யம் வலையில் பகிர்ந்து வரும் சகோதரி மாதேவி அவர்கள் பூக்களில் இத்தனை வகைகளா பார்த்ததும் பிரமித்துப்போனேன்.நீங்களும் பூ பூக்கும் ஓசையை பார்க்க வாங்களேன்

அடுத்து சமையல் அட்டகாசங்கள் வலையில் நமக்கு தேவையான சமையல் வகைகளை பரிமாறும் சகோதரி ஜலீலா கமால் அவர்கள்.ஆண்களுக்கு கோடைகாலத்தினை சமாளிக்கும் டிப்ஸ் தருகிறார்.கண்டிப்பாய் உதவும்.

என்பக்கம் வலையில் பகிந்து வரும் சகோதரி அதிரா அவர்கள் அவரது வளர்ப்பு மகள் சிறுகதையை வாசிக்க செல்லலாமா..

முத்துச்சிதறல் வலையில் எழுதிவரும் சகோதரி மனோசாமிநாதன் அவர்களின் சார்ஜாவில் வசிக்கும் இவரின் சமீபத்திய தமிழ்நாட்டுப்பயணம் பதிவு நம்ம ஊரு நல்ல ஊரு பதிவு.

அடுத்து உங்களை அழைத்துக்கொண்டு செல்லவிருப்பது அம்மாக்களின் வலைப்பூக்களுக்கு.குழந்தைவளர்ப்பு முதல் அனைத்தையும் விரிவாக அலசுகின்றனர்.தேசம் விட்டு தேசம் சென்றாலும் தமிழ் என்று வாழும் எனபதை உணர்த்தும் அமெரிக்காவில் ஆரம்பக்கல்வி

இன்றைய பதிவர் அறிமுகத்தில் 



தேவதையின் கனவுகள் என்ற வலையில் எழுதிவரும் சகோதரி தூயா அவர்கள்.தன்னைப்பற்றி சொல்வதற்க்கு ஒன்றுமில்லை ஏதாவது சாதித்துவிட்டுச் சொல்கின்றேன் என்கிறார்.புலிக்கு பிறந்தது பூனையாகாது ஏனெனில் இவரது பெண்வேங்கை பதிவே அதற்கு சாட்சி

தீபிகா கவிதைகள் என்னும் வலையில் வரும் சகோதரி தீபிகா ஈழத்தில் உதித்த உயிர்துளி எனது என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.இதோ அவரது கவிதைகளில் ஒன்று அறுந்து விழுந்த பல்லியின் வாலும் பயங்கரவாதிகளும்

புதிய அறிமுக பதிவர்களுக்கு வரவேற்று தமிழ் வலையுலகில் அவர்கள் மென்மேலும் வளர வலைச்சரத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

விடுபட்டுப்போன நல் இதயங்கள் பொறுத்தருள்க.

நன்றி சகோதர சகோதரிகளே..

நட்புடன் சகோதரன்,

சம்பத்குமார்

மேலும் வாசிக்க...

Thursday, February 23, 2012

கவிதை சரம்


வணக்கம் அன்பு நெஞ்சங்களே! வலைச்சர வியாழன் இன்றைய பதிவில் தமது எண்ணங்களையும்,சிந்தனைகளையும் தமிழ்பதிவுலகில் கவிதைவரிகளாய் பகிர்ந்து வரும் பதிவர்களின் பதிவுகளை சரமாக தொடுத்து அறிமுகப்பதிவர்களுடன் உங்கள் முன் சமர்பிக்கின்றேன்.இவர்கள் வாழ்க்கையின் உணர்வலைகளை செந்தமிழாம் தமிழ்மொழியில் வரிகள் எனும் தூரிகை கொண்டு பதிவுகளில் தீட்டிவைத்துள்ளனர்.வாருங்கள் அவர்கள் வரைந்து வைத்த கவிதைகளை சுவாசித்து விட்டு வருவோம்.

அதற்குமுன் நேற்றைய மனம் கவர்ந்த பதிவிற்க்கு ஆதரவளித்த அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இனி இதோ கவிதைச்சரம்

முதலில் புலவர் இராமானுஜம் ஐயா அவர்களின் தமிழ் கவிதைச்சுரங்கத்தில் மீனவர்கள் படும் வேதனையின் வலி வரிகளாய்..

இறந்துபோவேனோ என்பதற்காக சுவாசிக்கவில்லை ஒருவேளை மறந்து போவேனோ என்பதற்காக சுவாசிப்பதாக சொல்லிநிற்கும் நண்பர் பனித்துளிசங்கர் சுவாசிக்கின்றேன் உனக்காக

பொதுவாக பெண்களின் பருவநிலை ஏழு எனக்கேட்டிருக்கின்றேன்.ஆண்களுக்கிங்கே ஏழு பருவங்களை எடுத்து இயம்புகிறார் நண்பர் மகேந்திரன் தனது வசந்தமண்டபத்தில்

வேர்களைத்தேடி முனைவர் குணசீலன் அவர்களின் வலையில் வந்த முறைமான் சீரு கவிதை வரைந்தவர் அவரது மாணவர் கேசவன்.

எங்கே செல்லும் இந்தப்பாதை நண்பர் K.R.P.செந்தில் அவர்களின் கடவுள்களும் கந்தசாமிகளும் 

மானுஷ்யபுத்திரன் கவிதைகள்,மற்றும் பல சிறந்த கவிஞர்களின் தொகுப்பு ரசிக்க ருசிக்க காலக்கூத்து கவிதை பெட்டகமாய் நிற்கிறது

நண்பர் மதுரை சரவணன் அவர்களின் வலையின் வழியே பிறந்து வந்த கிறுக்கல்கள் வாசிக்கலாமே...

மகளின் பிறந்த நாளிற்காக ஏற்பட்ட குடும்பசண்டை ஓர் கவிதையாய் எண்ணங்கள் அழகானால் நம்பிக்கை பாண்டியனின் உனக்குப்பிடித்ததும் எனக்குப்பிடித்ததும்.

நண்பர் ரமணி அவர்கள் நடத்தும் தீதும் நன்றும் பிறர் தரவாரா வலையில் தொலைக்காட்சித் தொடரை விட்டொழிக்கவேண்டியதின் அவசியத்தை உண்ர்த்தும் நிஜமல்ல கதை 

கவி அழகன் என்றவலையில் பகிர்ந்து வரும் நண்பர் கவியழகனின் கேள்வி ஒன்று உடலுக்குள் அசுத்தமா ? உலகமே அசுத்தமா ?

கரூர் பிரபாகரன் அவர்கள் எழுதிய நீ நிலவு நான் சூரியன்  கவிதை வரிகளாய் இங்கே.

தோழர் மதுமதி அவர்களின் மழையும் முத்தமும் திகட்டாத கவி வரிகள்.

தென்காசிபைங்கிளியின் கவிதையில் அணைக்கும் கை படிப்பவருக்கும், பார்ப்பவருக்கும், மனதை நெகிழச்செய்யும்...அணைக்கும் கை

கிராமத்துக் கருவாச்சி என்ற வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கலை அவர்களின் உன்னைப்போல் நான்

ரிஷ்வனின் கவிதைத்துளிகளில் ஓர்துளி இயற்கையின் பிறவிக்குணமோ ?

தாயின் இழப்பைத் தாங்கமுடியாத மகனின் கதறல் தனசேகரின் சேகர் தமிழ் வலையில்

கவிதைகள் என்றொரு வலையில் நம்ம கடவுளுக்கே வேலைவைக்கிறார் கவிதைப்பிரேம் அவர்கள்

ராஜா சந்திர சேகர் கொடுக்கும் அனுபவ சித்தன் குறிப்புகள் ஒவ்வொன்றும் அழகிய ஹைகூக்கள்

நல்லவன் வலையில் ஜெயராம் தினகரபாண்டியன் வரைந்த சத்தமாகிப்போன வார்த்தைகள்.

சகோதரி மாலதியின் சிந்தனைகளில் உதித்த கோழையல்ல தமிழன்

நிகழ்வுகள் கந்தசாமி அவர்களின் வலையில் இன்னும் எனக்கேன் தடைகள்



பதிவர் அறிமுகம்

முதலில் என் பாதிப்புகள் பதிவுகளாய் என்ற வலையில் எழுதிவரும் நண்பர் திரு.புஷ்பராஜ்.இவரின் விருப்பங்கள் கேட்பதில் இசையும்,படிப்பதில் வரலாற்று நிகழ்வுகளும்,எழுதுவதில் கவிதைகளும் என அறிமுகப்படுத்துகின்றார்.இவரின் கூடல் கவிதை ஒன்று.

அடுத்தது ”ஓலை சிறிய” என்ற வலைதளத்தில் எழுதிவரும் ஓலை அவர்கள்.சமீபத்தில் ராசாக்கா என்ற பதிவினை வரைந்துள்ளார்.நாமும் சென்று வாசித்துவிட்டு வரலாமே.

அடுத்தது சிறுமுயற்சி என்ற வலையில் எழுதிவரும் திரு.விஜயகுமார் அவர்கள்.தன்னை அக்கவுண்டண்ட் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர் தனது வலையில் விவசாயம் பற்றிய பதிவுகளை பகிர்ந்துவருகின்றார்

புதிய நண்பர்களை உங்கள் சார்பில் வரவேற்று அவர்கள் மென்மேலும் சிறப்பாய் வலையுலகில் வலம்வர வாழ்த்துக்களை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

காத்திருங்கள் நண்பர்களே!..நாளைய வலைச்சரத்தில் தமிழ் பதிவுலகை செதுக்கிக் கொண்டிருக்கும் பெண் சிற்பிகள் பதிவின் வழியே உங்களைச் சந்திக்க வருகின்றேன்

நன்றி நண்பர்களே...

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்
தமிழ்பேரண்ட்ஸ்


மேலும் வாசிக்க...

Wednesday, February 22, 2012

மனம் கவர்ந்த பதிவுகள்



வணக்கம் நண்பர்களே! வலைச்சர புதனில் இன்று என்னைக்கவர்ந்த பதிவுகளின் வழியாக அறிமுகப்பதிவர்களுடன் உங்களை சந்திக்கவருகின்றேன்.எல்லா பதிவுகளை தினம் தினம் வாசித்து வந்தாலும் சிலரது பதிவுகளை வாசித்தவுடன் ஏதோ நமக்கே நடந்தது போன்ற ஓர் உணர்வு வருவது இயற்கையே.அத்தகைய பதிவுகளில் என்னை கவர்ந்த சில பதிவுகளை பூச்சரமாக தொடுத்து உங்களிடம் சமர்பிக்கின்றேன்.

முதலில் சென்னைமண்ணின் சூப்பர் ஸ்டார் சென்னை பித்தன் அவர்களின் அசத்தல் பதிவு. நான்தான் சமையல்காரி அலமேலு.வீட்டுவேலைக்கு செல்லும் தாய்மார்களின் மனநிலையை படம்பிடித்துக்காட்டுகிறார்

இவர் நகைச்சுவை எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். சகோதரி ஆமினா  வர்கள் எழுதியதில் பிடித்தது ஆணாதிக்கத்துக்கு காரணம் ஆண்களா? பெண்களா ஒரு பட்டிமன்றமே பதிவுல நடத்திக்காட்டியிருக்கார்.

 அடுத்து காணாமல் போன கனவுகள் வலையெழுதும் ராஜி அக்கா அவர்கள் தன் தந்தை குறித்து எழுதிய நெகிழ்வான பதிவு படித்ததும் ஒரு கணம் விக்கித்தது மனம்.குடும்ப உறவுகளில் தந்தை மகள் பாசத்தின் பிரதிபலிப்பாய் இப்பதிவுடன் உன்வீட்டு சுவற்றில் ஓர் புகைப்படமாய் கவிதையை வாசியுங்களேன்.

ஒரு பெற்றோராக தனது பிள்ளைகளுக்கு உணவு,உடை,இருப்பிடம் கல்வி மட்டும் அளிப்பது கடமையல்ல.பாதுகாப்பான பழக்க வழக்கங்களை சொல்லித்தரவும் வேண்டும் என்பதை வலியுறுத்தும் பர்தா போபியா.இதனை அழகுற செதுக்கியவர் சகோதரி ஹுசைனம்மா.

அடுத்து இரவுவானம் சுரேஷ். திருப்பூர்காரர். எப்போதாவது பதிவிடுவார். ஆனாலும் இவரின் பதிவு பேசப்படும். அதில் ஒன்றினைப் பார்ப்போம்.இவரின் நாய்கள் V/S மனிதர்கள் பதிவினை வாசித்து பாருங்களேன்.நண்பர் தொடர்ந்து எழுத அவரது சூழ்நிலைகள் ஓத்துழைக்கட்டும்.

நா. மணிவண்ணன். மதுரைக்காரர்.மதுரை வட்டார வழக்கில் இவர் எழுதுவது சுவாரஸ்யமாக இருக்கும். இவரது பதிவுகளில் மிகவும் கவர்ந்தது அத்த மக ரத்தினமே.நீங்களும் வாசித்துவிட்டு வரலாமே.இப்போது எழுதுவதை வெகுவாக குறைத்து கொண்டது எல்லோருக்கும் வருத்தமே. 

அடுத்தது சேலம் தேவா.இவரது தளம் தேவாவின் தேடுதல்கள்.சர்க்கஸ்.இவரது பதிவு ஒன்று சர்க்கஸ் அனுபவம்.குழந்தை பருவத்தில் இருந்த குதூகலங்கள் மறைவது வயதாவதை நினைவுபடுத்துக்கிறது 

அடுத்தது சுடச்சுட அரசியல் பதிவுகளை எழுதும் ரஹீம்கஸாலி. அவரது பதிவுகளில் தொலைபேசி நிறுவனத்தால் அவருக்கு நேர்ந்த கதி பற்றி எடுத்துச்சொல்லி அதற்க்கு தீர்வு காண்கிறார்.இந்த கதி நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடும்.

அடுத்தது நண்பர் ரெவரி இவரின் வலை மெல்லத்தமிழ் இனி வாழும்.இவருடைய படம் வரைந்து பாகம் குறி தொடர் பிரபலமானவைகளில் ஒன்று.அவரின் புத்தாண்டுத் தீர்மானங்களையும் அதனை அவர் கடைபித்தவிதமும் நம் சார்பாக பதிவிட்ட மாதிரிதான் எனக்குத்தெரிகிறது.

அடுத்தது நண்பர் ஆரூர் முனா செந்தில்.இவர் தோத்தவண்டா என்ற பெயரில் வலை நடத்தி வருகிறார்.சொந்த ஊரின் சுவாரசியத்தினை அழகுற பகிர்ந்துவைத்துள்ளார். நாமும் சென்று பார்த்துவிட்டு வரலாமா..

அடுத்தது நண்பர் கோகுல்மனதில் கோகுல் சமுதாயத்தில் தினம் தினம் காணும் விஷயங்களை கருவாக கொண்டு மனதில் பட்டதை விழிப்புணர்வு பதிவாக வெளியிடுவதில் கெட்டிக்காரர்.தற்சமயம் தானே புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பாதிக்கப்பட்ட போது வலையுலக நிதி திரட்டி முடிந்தவரை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கியவர்.இவரின் பதிவு ஒன்று இங்கே குடிகாரன் பேச்சு விடிஞ்சா...?

அடுத்து நண்பர் ஹைதர் அலி அவர்கள்.வலையுகம் என்ற வலையினை நடத்தி வருகின்றார்.சமூக சிந்தனையுடன் சமூதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதிவெறியால் பாதிக்கப்பட்ட தனது நண்பரை பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.



பதிவர் அறிமுகம் :

இன்றைய அறிமுகப்பதிவர் திரு S.S பூங்கதிர் அவர்கள்.இவர் பூங்கதிர் போர்ட்டூன்ஸ் என்ற பெயரில் தற்போது வலை நடத்தி வருகிறார்.பிரபல இதழ் பாக்யாவில் எதிரொலி என்ற பகுதியில் தொடர்ந்து எழுதி வருகிறார்.இவரது ஊர் திருவிழா பற்றிய கவிதை ஒன்றினை காணலாமே.

அடுத்த அறிமுகப்பதிவர் திரு ராஜ் அவர்கள்.இவர் அரசியல் ஆர்வமுள்ள, சமூக அக்கறை உள்ள,சினிமாவை விரும்பும் ஒரு சராசரி வாலிபன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றார்.ஹோலிவுட்ராஜ் என்ற பெயரில் வலையில் இருந்தாலும் விமர்சனம் செய்வது ஹாலிவுட் படங்களே.

அடுத்த அறிமுகப்பதிவர் திருமதி மு.சரளாதேவி அவர்கள்.பெண் என்னும் புதுமை என்ற பெயரில் வலைத்தளம் நடத்திவருகிறார்.கடந்த ஜனவரி முதல் கவிதைகளை எழுதி வருகிறார்.இவரது பதிவில் பெண் என்னும் இலக்கியம் வாசிக்கலாமே. 


நன்றி நண்பர்களே ! நீங்கள் தொடர்ந்து வளமோடும் நலமோடும் எழுத வலைச்சரத்தின் வாயிலாக வாழ்த்துகின்றேன்.

மீண்டுமொரு பதிவில் புதிய அறிமுகங்களுடனும் மனதை கவர்ந்த பதிவுகளுடனும் உங்களை சந்திக்க வருகின்றேன்

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்


மேலும் வாசிக்க...

Tuesday, February 21, 2012

ப்ளாக்கர் டிப்ஸ் 2012



வணக்கம் அன்பு நெஞ்சங்களே !

நேற்றைய அறிமுகப்பதிவினை சுவாசித்து மகிழ்ந்த ஒவ்வொரு நல் இதயத்திற்க்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, இன்று தமிழில் பதிவெழுத வரும் ஒவ்வொருவருக்கும் தேவையான ப்ளாக்கர் டிப்ஸ்களை காண்போம்..இதற்கு முன் கடந்த வருடம் இதே நாளில் அன்பு நண்பர் பிலாஷபி பிரபாகரன் அவர்கள் ப்ளாக்கர் டிப்ஸ் -ஒன் ஸ்டாப் ஷாப் தொகுத்து அளித்திருந்தார்.அதனுடன் இணைந்து இன்று வரை புதியதாய் வந்த ப்ளாக்கர் டிப்ஸ்களை வாசகர்கள் மற்றும் பதிவர்கள் அனைவருக்கும் உதவும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் சரமாக தொடுத்துள்ளேன்.

ப்ளாக்கர் டிப்ஸ்

1.ப்ளாக் தொடங்கணுமா ? முற்றிலும் புதியவர்களுக்காக...
http://www.bloggernanban.com/p/how-to-start-blog.html

2.உங்க ப்ளாக்கை மேம்படுத்த டாப் டென் டிப்ஸ்
http://ponmalars.blogspot.in/2010/11/tips-for-improve-blogging.html

3.உங்கள் ப்ளாக்கிற்க்கு தேவையான் சிறந்த TEMPLATE
http://www.tamilvaasi.com/2011/09/blog-template.html

4. உங்க ப்ளாக்குக்கு ஏன் டொமைன் வாங்கணும் ?  
http://www.vandhemadharam.com/2011/09/com-net-org.html

5.ப்ளாக்கரிலிருந்தே டொமைன் எப்படி வாங்குவது ?  
http://www.bloggernanban.com/2012/02/how-to-buy-custom-domain.html

6.வாங்கிய DOMAIN ற்க்கு SUB DOMAIN அமைப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/09/4-sub-domain.html

7.ப்ளாக்கிற்க்கு அவசியமான META TAG இணைப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/06/search-engine-meta-tag.html

8.பதிவினை PUBLISH பண்ணுவதற்க்கு முன்பு கவனிக்க…
http://www.vandhemadharam.com/2011/12/blog-post_12.html

9.பதிவுகள் AUTO PUBLISH ஆக வேண்டுமா ?
http://www.vandhemadharam.com/2011/03/auto-publish.html

10.பதிவின் தலைப்பை சரியாக தேர்ந்தெடுக்க
http://ponmalars.blogspot.in/2010/11/create-suitable-permalinks-for-blogger.html

11.ப்ளாக்கை பேக்கப் எடுப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/09/back-up.html

12.உங்களுக்கான GOOGLE GROUP உருவாக்க / NEWS LETTER அனுப்ப…
http://www.karpom.com/2011/08/newsletter.html



13.GMAIL லில் இருந்தே உங்கள் பதிவுகளை பகிர்வது எப்படி ?
http://www.thangampalani.com/2011/11/post-to-blogger-from-gmail-gmail-post.html

14.ப்ளாக்கர் முகவரி மாறியதால் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு
http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

15.பதிவர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய கூகுள் வெப்மாஸ்டர் டூல்
http://www.bloggernanban.com/2011/09/labs.html

16.ப்ளாக்கரில் READ MORE பட்டன் வைப்பது எப்படி ?
http://www.tamilvaasi.com/2011/10/automatic-read-more-with-thumbnails.html

17.பதிவுகளின் இடையில் கோப்புகளை சேர்க்க
http://wesmob.blogspot.com/2012/01/embed-pdf-doc-docx-ppt-pptx-xls-xlsx.html

18.ஜீமெயில் அக்கவுண்டை இழந்தால் உங்கள் ப்ளாக்கையும் இழப்பீர்கள் மாற்று வழி என்ன ?
http://tipsblogtricks.blogspot.in/2011/05/blog-post_15.html

19.பதிவுகளின் முடிவில் அதன் இணைப்பை வரவழைக்க
http://vairaisathish.blogspot.in/2011/10/blog-post_9590.html

20.பதிவர்கள் செய்யும் தவறுகள் அதனை திருத்தும் வழிகள்
http://www.vandhemadharam.com/2011/12/2.html


 கமெண்ட் பாக்ஸ் டிப்ஸ்

1.ப்ளாக்கர் பின்னூட்டத்தில் html மொழி பயன்படுத்த
http://ethirneechal.blogspot.in/2012/01/html.html

2. ப்ளாக்கருக்கு அழகான கமெண்ட் பெட்டிகள் வைப்பதற்க்கு
http://vairaisathish.blogspot.in/2011/09/comment.html

3.ப்ளாக்கரில் கமெண்ட் REPLY வசதி ஆக்டிவேட் செய்ய
http://www.vandhemadharam.com/2012/01/comment-reply-threaded-comment-system.html



4.பிளாக்கரின் comment பாக்சில் பதிவின் லிங்க் இணைக்க
http://www.thangampalani.com/2011/12/how-add-your-blogpost-link-comment.html

5.FACEBOOK ஸ்டைலில் கமெண்ட் பாக்ஸ் வைக்க..
http://www.vandhemadharam.com/2011/08/comment-box.html

6.ப்ளாக்கரில் கருத்துரைகளை சுருக்க விரிக்க..
http://vairaisathish.blogspot.in/2011/10/blog-post.html

7.படத்துடன் கூடிய RECENT COMMENT விட்ஜெட் அமைக்க
http://www.tamilvaasi.com/2012/01/recent-comment-widget.html

8.மறுமொழி வரிசையை தலை கீழாக்க
 http://ethirneechal.blogspot.in/2011/11/comment-sort.html


மேற்படி அறிமுகப்படுத்திய அனைத்து இடுகைகளின் உரிமையாளர்கள் அனைவருக்கும் அறிமுகம் தேவையில்லை என நினைக்கின்றேன். பொதுவாக நாம் வலையுலகில் என்ன நினைத்து எழுத வருகிறோமோ அதை வாசகர்களிடம் அழகுற கொண்டு செல்ல, இதுபோன்ற தொழில்நுட்பப் பதிவர்கள் செய்யும் உதவிக்கு இந்த நேரத்தில் உங்களின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளவனாகின்றேன்.

நன்றி நண்பர்களே ! தொடரட்டும் உங்கள் நற்பணி..

உறவுகளே ! பதிவின் நீளம் கருதி இந்த சரத்தின் தொடர்ச்சி கூகுள் ப்ளஸ் டிப்ஸ்,பேஸ்புக் டிப்ஸ்,பீட்பர்னர் டிப்ஸ் வரும் ஞாயிறு அன்று மதியம் வெளிவரும்.காத்திருங்கள்.

நட்புடன்
சம்பத்குமார்

மேலும் வாசிக்க...

Monday, February 20, 2012

வலைச்சரத்தில் தமிழ்பேரண்ட்ஸ்



வணக்கம் அன்பிற்கினிய பதிவுலக உறவுகளே..இந்தவார வலைச்சர ஆசிரிய பணியை முதல் பதிவாய் சுய அறிமுகத்துடன் தொடங்குகின்றேன்.இந்த வாய்ப்பினை நல்கிய பின்னூட்டப் பிதாமகன் சீனா ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்த பதிவுலக நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் நிர்வாகி தமிழ்ப்பிரியன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

நான் சம்பத்குமார் .சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம்.தற்சமயம் கோவையில் தனியார் ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் ஸ்பேர் பார்ட்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வருகின்றேன்.பணிச்சுமை போக கிடைக்கின்ற நேரங்களில் நான் கற்றதையும் பெற்றதையும் வாழும் தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் பகிர்ந்து விட்டுச் செல்ல தமிழ் வலையுலகில் எனது கவிதை கிறுக்கல்களோடு பகிர்ந்து வருகின்றேன்.கடந்த ஜூலையில் பதிவுலகில் தமிழ்பேரன்ட்ஸ் வலைத்தளம் ஆரம்பித்து இன்று வரை சுமார் 130 பதிவுகளை கடந்து இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.சென்ற செப்டம்பர் முதல் CUTEPARENTS என ஆங்கிலத்தளமும் ஆரம்பித்து அதிலும் பதிவுகளை தொடர்ந்து கொண்டுள்ளேன்.பதிவுகளில் பெரும்பாலும் குடும்ப உறவுகளில், பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள விஷயங்களை பதிவாக பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.

மழலை சமுதாயம் கோலோச்சுகின்ற சமயம் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் அவர்களின் பங்கேற்பு அபரிமிதமாகவே உள்ளது.விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளிலும் கூட அவர்களின் திறமைகள் மற்றும் ஆர்வங்கள் எல்லாமே வியப்பைத்தருகின்றன.எனினும் நமது நாட்டில் எந்த அளவிற்க்கு மழலை சமுதாயம் முன்னேற்றம் கண்டுள்ளதோ அந்த அளவிற்க்கு பின்னடைவும் கண்டுவருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.இதனை அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல்,நரபலி,ஆசிரியர் மாணவர் உறவு முறிவு போன்றவற்றில் இருந்து நன்கு உணரமுடியும்.தவறான உறவுகளில் பிறக்கும் குழந்தைகளிலிருந்து பெண் சிசு கொலைகள் வரை இன்று சர்வ சாதரணமாகவே சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது கேட்டுக் கொண்டிருக்கும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.குழந்தைகளின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் ஒடுங்கி வாழும்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதால் அவர்களின் வளர்ச்சியில் தீவிரவாதமும் வன்முறையும் கூடவே வளர்ந்துவிடுகிறது.


குழந்தைகளின் வளர்ப்புமுறை சரியில்லையென்றால் அவர்களின் பாதை தவறாகப் போய்விடுகிறது.அதே சமயத்தில் அவர்களின் வழிகாட்டல் சரியாக இருந்தால் சாதனைகளாக மாறிவிடுகின்றன.

இனி பதிவுகளின் பூச்சரம் 

படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது.ஆனால் எழுதுதல்தான் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது.குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி ? என்ற பதிவில் காணலாம் 

குழந்தையை ஈன்றெடுத்து வளர்ப்பதில் பெற்றோகளின் மனப்போங்கை வைத்து ஐந்து வகைகளாக பிரிக்கலாம் அவர்களை பார்த்துவிட்டு வாங்களேன்.

பள்ளியிறுதித் தேர்வு நெருங்கிவிட்டது.வாழ்க்கையில் சாதனை புரிய அடித்தளமாய் விளங்கப் போகும் இந்த தேர்வு நேரத்தில் குழந்தைகள் படிப்பதற்காக பெற்றோர்கள் செய்யவேண்டியவை. 

வளரும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நாம் தர வேண்டிய மிகப்பெரிய சொத்து தான் என்ன ? இங்கு சென்று பார்த்து விட்டு வரலாமே 

குழந்தைகளை இயல்பாக வாழவிடுங்கள். இயந்திரமாக அல்ல. சுதந்திரமாக வாழவிடுங்கள். அடிமையாக அல்ல. பாசத்தையும், பந்தத்தையும் புறம்தள்ளும் குதிரைப் பந்தயம் இனி நமக்கு வேண்டவே வேண்டாம்.மொத்தத்தில் அவர்கள் என்ன பந்தயக்குதிரைகளா ? 

பல பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.வேண்டாமே இந்த ஆசிரியர்ப்பணி 

நம் குடும்பத்தில் ஒன்றிற்க்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் போதும்.விடியற்காலையில் எழுவதிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை வீட்டையே அமர்கள்ப்படுத்திவிடுவார்கள்.இது மாதிரி சண்டையிடும் குழந்தைகளை சாமளிக்கும் வழிகள்



வரைந்ததில் கவர்ந்த கவி வரிகள் சில : 

தூங்க நினைத்து முகம் புதைக்கும் போது 
எஞ்சின் தடதடப்பில் கனவு மறந்து போயிருக்கும்....!


வாழைத் தோட்டங்கள் விழித்திருந்தன
புலர்ந்த போதுவெளிரிய நிலா
வயல் நீரில் தேய்ந்துபோனது..!



தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்…வாழ்க்கையைத்
தருகிற கொடி ஒன்று வரும்வரை
கொடிகள் தைப்பதைத் தள்ளி வைக்கலாமென்று….


அம்மாவின் அணைப்பிலிருந்து நீங்கிய நினைவில்
அழுதும் வந்தவுடனே தூங்கியும்
கனிவாய்க் குறுகுறுப்பாய் நோக்கியும் ...


என் தாய் கொடுக்கத் தவறிய முத்தங்களையும்…!
என் மனைவியிடம் அரைமனதுடன் பெற்ற
அந்தரங்க முத்தங்களையும்…! விட...



இவ்வளவு போதும் என்று நினைக்கின்றேன்.எனது படைப்புகளை தவறவிடாமல் வாசித்து தளத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து நல் இதயங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவிக்கின்றேன்.புதிய உறுப்பினர்களை வருக வருக என அன்போடு அழைக்கின்றேன்

தமிழ் தளத்திற்க்குச் செல்ல : தமிழ் பேரன்ட்ஸ்

ஆங்கிலத் தளத்திற்க்கு செல்ல : Cute Parents

நன்றி நண்பர்களே ! நாளைய தினம் பதிவுலகில் பதிவெழுத வரும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் உதவப்போகும் பதிவிகளின் வழியே உங்களை சந்திக்க வருகின்றேன்.

நட்புடன் நலம் நாடும்
சம்பத்குமார்

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது