ஜெமோ (GMO) எனும் ஓரசுரன்
![]() |
B.T.Tomato (கருப்புத் தக்காளி) Photo Credit: Google |
'ஜெமோ'விற்குள் இறங்குமுன், பசுமைப்புரட்சி குறித்து சிந்தித்தல் நலம் பயக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பாரத நாடே பஞ்சம் பட்டினியில் தவிப்பதைத் தவிர்க்க, அன்றிருந்த அரசியல் தலைவர்கள் வேளாண் வல்லுநர்களோடு இணைந்து இத்திட்டத்தைக் கொண்டு வந்ததாக அறிகிறோம்.
எல்லாத் துறைகளிலும் இருக்கும் Pros & Cons, 'ஜெமோ'விலும் இல்லாமலில்லை. மரபணு மாற்று விதைகள், உயர்ரக ரசாயணம், பூச்சிக் கொல்லிகள், மேலதிக மகசூல். இவை, இதன் சிறப்புக்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன. இதெல்லாம் தேவையேயில்லை, இவை நம் மண்ணின் வளத்தை இன்றில்லை என்றாலும் நாளை குலைத்துவிடும் என்று இயற்கை வழி விவசாயிகள் போராடுகின்றனர்.
GMO உலகையே ஆட்டி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவின் மான்ஸான்டோ நிறுவனம், வித்திலிருந்து, விருட்சம் வரைக்கும் தன் கைகளுக்குள் வைத்திருக்கிறது. ஏன்? நாளைய விவசாயம் இவர்களிடம் எனும் நிலையும் ஓங்கி வருகிறது.
GMO நன்மையே என நவீன விஞ்ஞானமும், பண முதலைகளும் சொல்லிக் கொண்டிருக்க, மரபணு மாற்று காய்கனிகளால் மனிதனுள் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அடித்துக் கூறுகின்றனர் இயற்கை வழி விவாசயம் செய்யும் பலர். இது பல கேடுகளை விளைவித்து, நாளைய சமுதாயத்தை சத்தின்றி நடைபோட வைக்கும் என்றும் பதறுகிறார்கள். உதாரணத்திற்கு ஒரு காணொளி Seeds of death. தயவுசெய்து நேரம் ஒதுக்கி கவனித்துப் பாருங்கள்.
GMO ஒரு புறம் எனில், ஊரே பீட்ஸா, நூடுல்ஸ், பர்கர் என்று இன்னொரு புறம். நமக்கு இன்னும் Non GMO குறித்த விழிப்புணர்வு போதவில்லை என்றே தோன்றுகிறது. இது குறித்து நம் பதிவர்கள் என்ன நினைக்கின்றார்கள் எனத் தேடியதில் மிக சொற்பமான பதிவுகளே காணக்கிடைக்கின்றன. அதுவும் ஒரு சில வருடங்கள் முன்னர் எழுதியவை. இதோ ...
நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி. - அட்ரா...சக்க எனும் தளத்திலிருந்து. இதில் பலரின் மறுமொழிகளும் சிந்திக்க உகந்தவை.
பசுமை புரட்சி என்னும் மாய வலை - முத்துக்கிருஷ்ணன் அவர்களின் தளம். இவரைத் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். நன்றாகப் பேசக்கூடியவர்.
பசுமைப் புரட்சி..!!! - கலைவேந்தன் வடுவூர் தளத்திலிருந்து. தான் எழுதியதல்ல எங்கேயோ படித்தது எனப் போட்டிருக்கிறார். இருப்பினும் வாசிக்க உகந்த பதிவு.
பசுமைப்புரட்சியின் உண்மைக் கதை - சங்கீதா ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து. இவர் எழுதிய புத்தகத்திற்கு, எழுத்தாளர் 'ஜெமோ' அளித்த முன்னுரையின் ஒரு சிறு பகுதி ... "ஆகவேதான் சங்கீதா ஸ்ரீராமின் ‘பசுமைப்புரட்சியின் கதை’ என்ற இந்த நூல் எனக்கு என் வாழ்க்கையை விளக்கும் மிக அந்தரங்கமான, கொந்தளிப்பான ஒரு வாசிப்பனுபவமாக அமைந்தது. பசுமைப்புரட்சியைப்பற்றிய பெரும்பாலான ‘நவீனதொன்மங்களை’ இந்த நூல் மிக விரிவான ஆதாரங்களுடன் மறுக்கிறது. பசுமைப்புரட்சி நல்லது என்று இன்று கொஞ்சம் நிதானமான எவரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ‘பசுமைபுரட்சிதான் இந்தியாவில் பட்டினியை இல்லாமலாக்கியது’ என்று சொல்வார்கள். ‘இப்ப அது எப்டி இருந்தாலும் அப்ப அது நன்மைக்காகத்தான் வந்திச்சி சார்’ என்பார்கள்"
பி.டி. கத்தரிக்காய் குறித்த பீதியும், அறிவார்ந்த விவாதமும் - GMOவிற்கு ஆதரவாக தனது கண்ணோட்டம் தளத்திலிருந்து ரவி ஸ்ரீநிவாஸ். பதிவை படிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. கண்மூடி நம்புகிறோமா நாமெல்லாம். நம்மாழ்வார், பாலேக்கர் செய்த செய்துவரும் பணியை எந்த ஆதாரத்துடன் இவர் மறுக்கிறார் எனத் தெரியவில்லை. இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுகருத்து இருக்கத் தானே செய்யும்.
GMOவில் இருந்து விடுபட வேண்டுமெனில், இயற்கை வழி விவசாயம் தான் சிறந்தது என்று போராடும்/போராடிய பாலேக்கர், நம்மாழ்வார் போன்றோரின் கருத்துக்களை சிந்திப்போமாக!
நம்மாழ்வாரும்,எஸ்.கே.ஸாலிஹூம் - நேர்வழி எனும் தளத்திலிருந்து அதன் ஆசிரியர், நம்மாழ்வார் அவர்களின் வானகத்திற்கு விஜயம் செய்ததை விவரித்திருக்கிறார்.
நன்றி! நாளை வேறொரு பதிவினில் சந்திப்போம்!!