07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label SP.VR.SUBBIAH. Show all posts
Showing posts with label SP.VR.SUBBIAH. Show all posts

Wednesday, March 28, 2007

புதிய கீதை


=====================================================
புதிய கீதை

எது கிடைத்ததோ
அது நன்றாகவே கிடைத்தது
எது கிடைக்கவில்லையோ
அது உன் நன்மைக்காகக கிடைக்கவில்லை!
எது கிடைக்க வேண்டுமோ
அது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்

எதை நீ கேட்காமலிருந்தாய்?
உன் நோக்கப்படி கிடைப்பதற்கு?
எதற்கு நீ ஆசைப்படாமலிருந்தாய்?
அது நியாமாகக் கிடைப்பதற்கு?

எது இன்று கிடைத்ததோ
அது நாளையே உனக்கு அலுத்து விடும்
அடுத்த நாள் உனக்கு
அது வெறுத்து விடும்!

கிடைப்பதன் அருமை
அது கிடைக்கும் நொடி வரைதான்
அடுத்த நொடி
நீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்!

ஆகவே கேட்காம்ல் இரு!
இருப்பதைக் கொண்டு சந்தோஷப்படு!

இதுவே கிடைப்பதின் நியதியும்
பெறுவதின் சாரம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே! யுகே!
=====================================================

விடைபெறும் நேரம் வந்து விட்டது!

இந்த புதிய கீதை எனக்காக நானே எழுதி வைத்துள்ளது!

வலைச்சரம் இணைய இதழின்
ஒரு வார ஆசிரியர் வேலை
நான் கேட்காமலேயே வந்தது
கிடைத்ததைக் கொண்டு
ஒரு வாரம் சந்தோஷ்மாக இருந்தேன்!
இப்போது விடை பெறுகிறேன்!


நன்றி
வணக்கம்!
அன்புடன்
SP.VR சுப்பையா
--------------------------------------------------------------------------
வாய்ப்புக் கொடுத்த வலைச்சரம் (அதிபர்:-))
நண்பர் சிந்தாநதி அவர்களுக்கும்
ஒத்துழைத்த
என் இனிய வலைப் பதிவு நண்பர்களுக்கும்
ம்ற்றும் என் வகுப்ப்றைக் கண்மணிகளுக்கும்
என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
மேலும் வாசிக்க...

தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!


=======================================================
தமிழ்மணமும் திருவிழாக்கூட்டமும்!

கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின் முதல்
சிறப்பு அம்சம் அங்கே வந்து சேரும் பலவிதமான
மக்கள் கூட்டம்தான்.

அதோடு அந்தக்கூட்டத்தை நம்பி டென்ட் அடித்துக்
கடைவிரிக்கும் வியாபாரிகளும், ஜவ்வு மிட்டாய், பலூன்
போன்ற சில்லுண்டிச் சாமான்களை விற்கும் (நடை)
ராஜாக்களும், குடைராட்டிணம், ராட்சச சுழலும் சக்கரம்
இத்யாதி போன்ற குழந்தைகளைக் கவரும் வித்தைக்
காரர்களும் அங்கே கூடுவது கூடுதல் சிறப்பு.

ஒரே கலகலப்பாக இருக்கும்!

தமிழ்மணமும் அப்படித்தான் தினமும் திருவிழா
நடக்கும் இடமாகி விட்டது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை
நாட்களில் கூட்டம் சற்றுக் குறைவாக இருக்கும்
அவ்வளவுதான். மற்றபடி வருடம் 365 நாட்களுமே
திருவிழாதான்

கலகலப்பிற்கும், வேடிக்கைகளுக்கும், உற்சாகத்திகும்
உரசல்களுக்கும் என்றும் குறைவில்லை!

இங்கே வந்துபோகும் எண்ணிக்கையற்ற தமிழ்
வாசகர்கள்தான் மக்கள் கூட்டம்..

பதிவர்கள் அத்தனை பேர்களுமே வியாபாரிகள் அல்லது
நடைராஜாக்கள் (இதற்கு விளக்கம் மேலே உள்ளது)

சில பல பதிவர்களும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு
நாட்கள் பதிந்து விட்டு மற்ற நாட்களில் அவர்களும்
பொதுமக்களுடன் மக்களாக விழாவில் கலந்து கொள்ள
வருவார்கள்!

Monetary Benefit' என்ற ஒன்று துளிக்கூட இல்லாவிட்டாலும்
தங்கள் பதிவுகளின் மூலம் தங்கள் எண்ணங்களையும்,
கருத்துக்களையும், திறமையான எழுத்தாற்றல்களையும்
இலவசமாகக்கொடுத்து ஒன்று பெயர் வாங்க அல்லது
மனத்திருப்திகொள்ள வருபவர்கள் அவர்கள்!

நான் இந்தத் திருவிழாவிற்குள் 23.12.2005 அன்று காலெடி
எடுத்து வைத்தபோது இருந்த ராஜாக்களின் எண்ணிக்கை
800க்கும் குறைவு . இந்தப் பதினைந்து மாத காலத்தில்
அந்த எண்ணிக்கை 1,800 ஆக உயர்ந்திருக்கிறது.

அதுபோல மக்கள் கூட்டமும் அதிகரித்திருக்கிறது.

சரி இவ்வளவு கூட்டத்தையும் தாங்கும் அளவிற்குத் தமிழ்
மணத்தின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதி
மேம்பட்டிருக்கிறதா என்றால் மேம்பட்டிருக்கிறது.

ஆனாலும் இன்னும் சற்று அதிகப்படியான வசதிகள்
செய்து தரப்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!

மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிகத்தான் திருவிழா
சிறப்பாக இருக்கும். அதனால் அதை வரவேற்போம்.

ஆனால் ராஜாக்களுக்கும் உரிய வசதிகள செய்து தரப்பட
வேண்டும்!

சரி இங்கே தினமும் வந்து கடைவிரிக்கும் ராஜாக்களின்
எண்ணிக்கையையும், அவர்கள் கொண்டுவரும் பதிவுகளின்
வகைகளையும் கீழ்க்கண்ட அட்டவனைகள் மூலமாகப்
பார்ப்போம்.

இதற்காக நான் எடுத்துக் கோண்டது 15.3.2007 முதல் 22.3.2007
வரை வந்த பதிவுகள் . அவைகள் மொத்தம் 1028 (7 நாட்களில்)

சராசரியாகத் தினமும் 150 பதிவுகள் வருகின்றன!

==================================================

எண்ணிக்கை வரிசையில் பதிவு வகைகளின் பிரிவுகள்

=========================================================

தமிழ்மணத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள வரிசையில் பிரிவுகள்


============================================================

சதவிகித அடிப்படையில் பிரிவுகள்

=======================================================

இந்த அட்டவணைகளின் நோக்கம் எந்தப் பிரிவில்

எத்தனை பதிவுகள் இடப்படுகின்றன. நெருக்கடி எங்கே

அதிகமாக உள்ளது என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்!

==================================================

முகப்பில் அண்மையில் எழுதப்பெற்றவை என்னும்
இடத்திற்குக் கீழே இடம் பெறும் பதிவுகள்தான் அதிகம்
பேர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவை!! படிக்கும் வாய்ப்பை அதிகமாகப் பெறுபவை!

சுமார் 20 அல்லது 22 பதிவுகளுக்குத்தான் அந்த வாய்ப்பு
அதுவும் மூன்று முதல் நான்கு மணி நேரம்வரைதான்
பதிவுகள் அங்கே நிற்கவும் முடியும்!.

சகபதிவர்களும், வாசகர்களும் பல தேசங்களில்
வசிப்பவர்கள் ஆதலால் இரவு, பகல் என்று எந்தப்
பாகுபாடும் இன்றி, அவரவர்கள் வசிக்கும் தேசங்களைப்
பொறுத்து வந்து போகும் நேரமும் மாறுபடுவதால்,
முகப்பை மட்டும் வைத்துப் பதிவுகள் பார்க்கப்பட்டுவிடும்
என்று சொல்வதற்கில்லை!

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட
இடுகைகள் என்ற பக்கத்தில் உள்ள 16 பிரிவுகளில்
பதிவுகளைக் காண முடிகிறது.

ஆனாலும் அங்கேயும் இட நெருக்கடி.

பல பிரிவிகளில், கடைசியாக வந்த 5 இடுகைகள் மட்டுமே
பதிவரின் பெயர், பதிவின் தலைப்பு, பதிவின் Pofile படம்,
மற்றும் பதிவின் ஆரம்ப வரிகள் என்று அசத்தலாகக்
கண்ணில் பட்டு கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும்

அதற்கு முன் வந்தைவைகள் எல்லாம் நெருக்கடிபட்டு
சடடை கசங்கி, தலை கலைந்து காணப்படும்! உற்றுப்
பார்த்தால்தான் அவைகள் கண்ணுக்குத் தெரியும்

அந்தப் பக்கத்தில் அனைத்துப் பதிவுகளூமே நாள்
முழுவதும் பொலிவோடு தெரிவதற்கு வகை செய்யப்பட
வேண்டும். இந்தப் பதிவின் நோக்கமும் அதுதான்!

நான் குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு பக்கங்களின் அளவை
அல்லது எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்!

அதுதான் ஒரு நல்ல தீர்வு!

தமிழ்மணம் நிர்வாகத்தினர் இதைச் செய்வார்களா?

நாம் அனைவரும் ஏகமனதாக எடுத்துரைத்தால்
செய்யமாட்டார்களா என்ன?

உங்கள் மேலான கருத்து என்ன?

பின்னூட்டத்தில் சொல்லுபடி கேட்டுக்கொள்கிறேன்!

அன்புடன்
SP.VR. சுப்பையா,
இந்த வார ஆசிரியர்
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்

======================================

மேலும் வாசிக்க...

Tuesday, March 27, 2007

கைவந்த கலை

=========================================================
கைவந்த கலை

எனக்கு மிகவும் கைவந்த கலை என்று சொன்னால்
அது கதை சொல்வதும், கதை எழுதுவதும்தான்.

கதை சொல்வதிலும்,எழுதுவதிலும் ஒரு டெக்னிக்
இருக்கிறது

கேட்பவரையோ, அல்லது படிப்பவரையோ ஈர்க்கும்
சக்தியுடன் அது சொல்லப்பட வேண்டும் அல்லது
எழுதப்பட வேண்டும்.

Jeffery Archerரின் சிறுகதைகளைப் படித்தீர்களென்றால்
இது சட்டென்று பிடிபடும்.

அவர் கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து
விடுவார். கடைசி வரிவரை கதையைச் சுவாரசியமாகச்
சொல்லிக்கொண்டு போவார். உள்ளே வந்துவிட்ட வாசகன்
நகராமல் பார்த்துக் கொள்ளும் விதமாகக் கதையின்
போக்கு இருக்கும்.

கதையின் முடிவு பஞ்ச்சிங்காகவும், எதிர்பாராத
விதமாகவும் இருக்கும்.

நடை எளிமையாகவும், அழுத்தமாகவும் இருக்கும்
தேவையில்லாத சொற்கள் இருக்காது!
எல்லாம் வித்தியாசமாக இருக்கும்

அவருடைய இரண்டொரு கதைகளைப் படிப்பவன்
அவருடைய ஆத்மார்ந்த ரசிகனாகிவிடுவான்

Twist in the tale என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பில்
மொத்தம் 12 சிறுகதைகள் இருக்கும். அத்தனையுமே
விதம் விதமான களங்களில் விதம் விதமான பாத்திரப்
படைப்புக்களுடன் அசத்தலாக எழுதப்பெற்றிருக்கும்

அவருடைய கதைகளைத் தொடர்ந்து படிக்கும் வாசகனுக்கு
நாமும் இது போல ஒர் சிறுகதையாவது எழுத வேண்டும்
என்ற உந்துதல் வந்து விடும்

அதுதான் சிறுகதையின் இலக்கணம்!

பதிவுலகத்திற்கு வந்த புதிதில் அடியவன் எழுதிய
முதல் பதிவே ஒரு சிறுகதைதான்.

மகாபாரதத்தில் நடந்ததாகக் கேள்விப்பட்டிருந்த
ஒரு சம்பவத்தை என்னுடைய கற்பனையில் விரிவாக்கிக்
கதையாக எழுதிப் பதிவிட்டேன்.

அந்தப் பதிவிற்கு வந்தது ஒரே ஒரு பின்னூட்டம்தான்
அதில் இருந்த வாசகங்கள் நூறு பின்னூட்டங்களுக்குச் சமம்
அதை இட்டவரின் பெருமைபற்றி அப்போது எனக்குத்
தெரியாது. பின்னால்தான் தெரிந்து கொண்டேன்

அவர்தான் வலைப்பதிவுலகின் ராஜகுரு
திரு. ஞானவெட்டியான் அய்யா அவர்கள்.

நான் வலையுலகிற்கு வரும் முன்பே மாதப்பத்திரிக்கை
யொன்றில் தொடர்ந்து சிற்கதைகளும், கவிதை ஆய்வுத்
தொடர் ஒன்றையும் எழுதிக் கொண்டிருந்ததால், முதல்
பதிவிற்குப் பிறகு 7 நாட்களுக்குள் அடுத்தடுத்து பல
சிறுகதைகளைப் பதிவிட்டேன்

அவைகளெல்லாம் நான் எதிர்பார்த்த அளவிற்கு
வரவேற்பைப் பெறவில்லை!

என்ன காரணம் என்று பிறகுதான் தெரிந்து கொண்டேன்

என் கண்களைத் திறந்து பதிவுலகின் உண்மை நிலையைப்
பல கோணங்களிலும் பார்க்க வைத்தவர் அந்த சிங்கைக்காரர்
ஜி.கே தான்.

இதுவரை வெளிப்பத்திரிக்கைகளில் 36 கதைகள்
எழுதியுள்ளேன்.

அவைகள் ஒவ்வொன்றும் A4 Size Paperல் 6 பக்கங்கள்
அளவிற்கு வரும். சில 8 பக்கங்கள் வரும். அதையெல்லாம்
படிக்ககூடிய பொறுமை பதிவுலக இளைஞர்களிடம்
(அவர்கள் 81%) இருக்கின்ற மாதிரி எனக்குத் தெரியவில்லை!

இருந்தாலும் இன்று துணிச்சலாக என்னுடைய
6 சிறுகதைகளுக்கான சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன்
படிக்க விருப்பமிருப்பவர்க்ள் மட்டும் படித்து விட்டுச்
சொல்லுங்கள் அவைகள் எப்படி இருக்கின்றன என்று!
--------------------------------------------------------
எனது சிறுகதைகள்

1.கலியுகத்தின் முதல் தீர்ப்பு
எனது முதல் பதிவு (23.12.2005)

2. மதிப்பும் மரியாதையும்
26.12.2005

3. தந்தி மீனி ஆச்சி
26.12.2005

4. ஆயா வீடு
26.12.2005

5.மேங்கோப்பு மேனா
29.12.2005

6. உல்லாசம் பொங்கும் தீபாவளி
31.12.2005

---------------------------------------
அன்புடன்,
SP.VR. சுப்பையா
இந்த வார ஆசிரியர்,
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்
--------------------------------------------------
மேலும் வாசிக்க...

அது ஒரு தனி உலகம்

அது ஒரு தனி உலகம்!

உலகம் என்பது ஒன்றுதானே - அதில் எப்படித் தனி
உலகம் என்று ஒரு பிரிவு வரும் என்று கேட்பவர்களுக்கு,
ஒரு வார்த்தை!

உலகம் ஒன்றல்ல!

குழந்தைக உலகம் தனி They are living in a momentary life
அவரகள் அந்தக் கணநேரத்தில் வாழ்கிறவர்கள்
அதுபோல பெண்கள் உலகம், இளைஞர்கள்
உலகம், 'குடி' மக்கள் உலகம், வயதானவர்கள்
உலகம் என்று பலவகை உலகங்கள் இருக்கின்றன!

அந்தந்த உலகத்தின் முழுமை அதிலே உள்ளவர்
களுக்கும், அதில் சுய அனுபவப் பட்டவர்களுக்கும்
மட்டும்தான் தெரியும்!

கவிதை உலகம் என்பது சிறப்பானது!

கவிதை உலகம்தான் நம்மை மெய்மறக்கச்
செய்வது!

அதிலேயே உழல்பவர்களுக்கும், உணர்ந்தவர்களுக்கும்
தான் அது பிடிபடும்!

எனக்குப் பல கவிஞர்கள் நண்பர்களாக உள்ளார்கள்
பட்டியல் இட்டால் இருபது கவிஞர்களுக்குமேல் தேறும்

அதுபோல பல கவிஞர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்
கவியரசர் கண்ணதாசன் அவர்களை இருமுறை சந்தித்துப்
பேசியிருக்கிறேன். கவிஞர் வைரமுத்து அவர்களையும்,
கவிஞர் மேத்தா அவர்களையும் சந்தித்திருக்கிறேன்.

அவர்களெல்லாம் அற்புதமான கவிஞர்கள். அவர்களுடைய
பல பாடல் வரிகள் என் மனதிற்குள் குடியிருக்கின்றன!

இந்தப் பதிவில் என்னுடைய நெருங்கிய நண்பரும்,
எங்கள் பகுதியைச் சேர்ந்தவருமான கவித்தென்றல்
திரு. காசு. மணியன் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த
விரும்புகிறேன்

அவரைப் பற்றிய விவரங்களை முழுமையாக எழுதி நான்
முன்பு (23.09.2007) பதிந்த பதிவின் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்
அதில் அவர் எழுதிய அசத்தலான பல கவிதை வரிகள் உள்ளன
அவரைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் உள்ளன!
அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்

சிலர் படித்திருக்கலாம். சிலர் கண்களில் படாமல் பதிவு
மறைந்திருக்கலாம். ஆகவே மீண்டும் ஒருமுறை அனைவரும்
படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் பதிவின்
சுட்டியை உங்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்

"நெஞ்சத்தில் கருவுற்றால் நிமிடத்தில் பெற்றெடுப்பான்"
என்று கவியரசர் கண்ணதாசன் அவர்களால்

பாராட்டுக்களைப் பெற்றவர் அவர்.

அதைவிட அவருக்கு வேறு பெருமை என்ன வேண்டும்?

சுட்டி இங்கே உள்ளது!

=======================================================


11.3.2007 அன்று சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு
விழா ஒன்றில் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர்

திரு.ப.சிதம்பரம் அவர்களுடன் கவித்தென்றல் காசு.மணியன்

==========================================================

2.6.2006ல் நடைபெற்ற ( நான் எங்கள் ஊரைப்பற்றித் தொகுத்து
வெளியிட்ட) புத்தக வெளியீட்டு விழாவில்
உச்ச நீதிமன்ற நீதியரசர் டாக்டர்.திரு.AR. லெட்சுமணன்
அவர்களுடன் கவித்தென்றல் காசு.மணியன்.
படத்தில் இடது ஓரம் நான் நிற்கின்றேன்.


கவிஞர் திரு.வைரமுத்து அவர்களுடன் திரு.காசு. மணியன அவர்களும் நானும். இடது ஓரம் திரு.காசு மணியன் அவர்கள். வலது ஓரம் கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் திரு. வேலாயுதம் அவர்கள்

=============================================================


கவிஞர் திரு.மேத்தா அவர்களுடன் திரு.காசு. மணியன்

========================================================


திரு.மு.மேத்தா அவர்களுடன் அடியவன்


கவித்தென்றல் காசு.மணியன் அவர்களும் நானும்!
என்னுடைய மேடைச் சொற்பொழிவு ஒன்றின் முடிவில்
அவர் எனக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்புச் செய்தபோது
எடுத்த படம்

==========================================================

அன்புடன்,

SP.VR.சுப்பையா,

இந்தவார ஆசிரியர்,

வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்

---------------------------------------------------



மேலும் வாசிக்க...

அசத்திய பதிவுகள் - பகுதி 2

========================================================
அசத்திய பதிவுகள் - பகுதி 2

இதற்கு முன் பதிவில் என்னை வியக்கவைத்த
தமிழ்மணப் பதிவுகள் என்ற தலைப்பில் 27 பதிவுகளை
உங்களுக்காகத் தேடிப்பிடித்துக் கொடுத்திருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 23 பதிவுகளுக்கான
சுட்டியைக் கொடுத்திருக்கிறேன்

அனைவரையும் படித்து மகிழ வேண்டுகிறேன்.
படித்த பதிவுகள் சில இருக்கலாம். அதனால் என்ன?
மீண்டும் ஒருமுறை படியுங்கள்!
--------------------------------------------------------------

28. தமிழ்மணத்தில் யுத்தப் பிரகடனம்
பதிவர் பெயர்: கொழுவி

சென்ற மாதம் தமிழ்மணத்தில் ஒரு இறுக்கமான
சூழ்நிலை நிலவியபோது - நகைச்சுவையோடு
அசத்தாலாக வந்த பதிவு. இந்தப்பதிவு!.
பதிவிற்கு வந்த பின்னூட்டங்களும் அதற்கு கொழுவி
கொடுத்திருந்த பதில்களும் பதிவிற்கு மேலும் சுவை
சேர்த்தன! படித்திராதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய
பதிவு!!!!

29. கவிதைகளில் வரும் முருங்கைக்காய்
பதிவர் பெயர் - செல்லி

30. இன்னும் இருக்கிறது ஆகாயம்.
பதிவர் பெயர்: பெருசு

33 அந்தக் காலப் பிரபலங்களின் போட்டோ
பதிவர் பெயர்: சின்னக்குட்டி

34. தமிழ் சினிமாவின் தலை சிறந்த பத்து வசனங்கள்
பதிவர் பெயர்: வெளிகண்ட நாதர்

35 குறும்பாறு
பதிவர் பெயர்: குறும்பன்

36. மேற்கில் கலாச்சாரம் உண்டு - ஆன்மீகம் இல்லை!
பதிவர் பெயர்: எழில்

37. ஆழி என்றொரு உலகம்
பதிவர் பெயர்: சிறில் அலெக்ஸ்

38. பெண்ணல்ல...மழை!
பதிவர் பெயர்: சிவனாம்ஜி

39. LET'S HIT THE NAILS!
பதிவர் பெயர்: தருமி

40. படிச்சவன் பாட்டைக் கெடுக்கிறான்
பதிவர் பெயர்: மா.சிவகுமார்


42. சேரனின் முத்தையாவும் என் முத்துவும்
பதிவர் பெயர்: முத்து குமரன்


43. மகளின் தத்துவம்
பதிவர் பெயர்: பாஸ்டன் பாலா

45. பாரதியின் பாடல்களில் அறிவியல் படிமங்கள்
பதிவர் பெயர்: ஜடாயு

46. கோவை ஐ.டிபார்க் படங்கள் & பரப்பளவு
பதிவர் பெயர்: சிவபாலன்

47. எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ?
பதிவர் பெயர்: நரசிம்ஹன் ராகவன் (டோண்டு)

48. சுவாமியே சரணம்!
பதிவர் பெயர்: மணியன்

49. கனவில் சென்னைi
பதிவர் பெயர்: தமிழி

50. மென்ட்டாலிட்டி மாற்றப்படுமா?
பதிவர் பெயர்: மோகன் தாஸ்
--------------------------------------------------------
இந்தப் பதிவுத் தேடலுக்கு எனக்கு சுமார் 6 மணி
நேரம் பிடித்தது! பதிவு மனதில் இருந்தாலும் சுட்டியைப்
பிடிப்பதற்கு நான் பட்ட பாடு - அதற்கு ஒரு தனிப்பதிவு
போடலாம்!

இன்னும் பல பதிவுகள் நினைவில் உள்ளன!
பதிவின் நீளம் கருதியும், அதைவிட உங்களின் பொறுமை
கருதியும் இத்துடன் அதை நிறைவு செய்கிறேன்
வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது மேலும் ஒரு
ஐம்பது பதிவுகளை அடையாளங்காட்டுகிறேன்

இந்த ஐம்பதில் பெயர் வாராத நண்பர்கள் என்னைத்
தவறாக நினைக்கவேண்டாம். மீண்டும் ஒரு வாய்ப்பு
வரும் போது என்னை அசத்திய உங்கள் பதிவு
அதில் நிச்சயம் இடம் பெறும்!!!!!!!!!!!!!!!

வேறு ஒரு தலைப்பில் ஒரு ஆய்வு பாக்கி உள்ளது
அந்த ஆய்வுடன் மீண்டும் சந்திக்கிறேன்!

அன்புடன்,
SP.VR.சுப்பையா
இந்த வார ஆசிரியர்
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்
=================================
(தொடரும்)

மேலும் வாசிக்க...

Sunday, March 25, 2007

என்னை வியப்பிற்குள்ளாக்கிய சில தமிழ்மணப் பதிவுகள்!

=========================================================
என்னை வியப்பிற்குள்ளாக்கிய சில தமிழ்மணப் பதிவுகள்!
பகுதி - 1

ஒன்றைப் படித்தவுடன் அந்தப் படைப்பு, படிப்பவனை
'அட!" என்று சொல்ல வைக்க வேண்டும்.அதுதான்
சிறந்த படைப்பு. அது எதைப் பற்றியதாக வேண்டு
மானாலும் இருக்கலாம். ஆனால் படிப்பவனை அது
சென்றடைய வேண்டும்

படைப்பின் அளவுகோல் அதுதான்!.

அதன் விளைவாகப் படித்தவன் மனதிலும் அந்தப்
படைப்பாளி தங்கி விடுவான். தங்கிவிடுவான் என்பது
மட்டுமல்ல நிரந்தரமாகக் குடியேறிவிடுவான்

நான் முதலில் சிறந்த வாசகன்.
எழுத வந்ததெல்லாம் விபத்து!

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகப் படித்து
வருகிறேன்.

கனமான புததகங்கள் முதல் (முன்பு) மளிகைச்
சாமான்கள் கட்டிவரும் காகிதம்வரை அச்சடிக்கப்
பெற்ற எதையும் வாசித்து மகிழ்வது என் பழக்கம்.

பல படைப்பாளிகளை அவர்களது மாஸ்டர் ஃபீஸ்
என்னும் படைப்புக்களைக் கொண்டுதான் நான் என்
மனதில் அமர்த்தி வைத்திருக்கிறேன்

பாலகுமாரன் என்றால் 'பச்சை வயல் மனது'
என்ற அவருடைய குறு நாவலும்,
சுஜாதா என்றால், 'காகிதச் சங்கிலிகள்" என்ற
அவருடைய குறு நாவலும்,

அனுராதா ரமணன் என்றால் அவருடைய
'பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா' என்ற
குறு நாவலும்,

Jeffery Archer என்றால் "Twist in the tale" என்ற
அவருடைய சிறுகதைத் தொகுப்பும்தான் என் மனதில்
முன்வந்து நிற்கும்.


அதற்குப் பிறகுதான் அவர்கள் என்
மனக்கண்ணில் தெரிவார்கள்

அதுபோல தமிழ்மணத்தில் நான் வந்த குறுகிய
காலத்திற்குள் (15 மாதங்களாகின்றன) ஒரு 100 பதிவுகளுக்கு
மேல் ஒருவிதமான சந்தோசமான மனத்தாக்கத்துடன்
என் மனதில் தங்கிவிட்டன1

அவைகள் சும்மா தங்கவில்லை - பதிவருடைய பெயருடன்
சேர்ந்தே தங்கிவிட்டன!.

கைப்புள்ள என்றால் எனக்கு "பஸ் பயணங்களில்"
என்ற அவருடைய பதிவுடன்தான் நினைவிற்கு வருவார்.
அதுபோல வெட்டிப்பயல் என்றால் எனக்கு அவர் பதிந்த
கர்ணனும் - கண்ணனும் என்ற பதிவுடன்தான் அவர் என்
நினைவிற்கு வருவார். செல்வன் எண்றால் கம்யூனிசமும்

கண்ணனும் என்ற பதிவுடன்தான் அவர் என் நினைவிற்கு
வருவார்

இப்படி ஒவ்வொருவரையும் சொல்லிக்கொண்டே போகலாம்!

ஒவ்வொரு பதிவிலும் ஒரு சிறப்பு உள்ளது
அவைகள் என்னை 'அட' என்று வியக்க வைத்திருக்கின்றன
எல்லாப் பதிவுகளையும் குறிப்பிட எனக்கு ஆசை!
இடம், நேரம், பதிவின் நீளம், உங்களுடைய
பொறுமை என்று பலவற்றையும் மனதில் அசைபோட்டு
ஒரு முடிவிற்கு வந்தேன்.

அவ்வளவு பதிவுகளையும் இந்கே குறிப்பிட்டுச் சுட்டி தருவது
என்பது அசாத்திய வேலை! ஆகவே கிடைக்கும் சில
பதிவுகளை மட்டும் இங்கே தரவுள்ளேன்

சிலவற்றை இந்த முதல் பகுதியிலும், மீதமுள்ளவற்றை
அடுத்த 2ம் பகுதியிலும் தருகிறேன்.

அவைகளில் பல நீங்கள் படித்ததாகவும் இருக்கலாம்
அதனால் என்ன? மீண்டும் ஒரு முறை படித்து மகிழுங்கள்!
இந்தப் பதிவைப் Book Mark செய்து வைத்துக் கொண்டு
நேரம் இருக்கும் போது படித்து இன்புற வேண்டுகிறேன்

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

-------------------------------------------------------

1. பஸ் பயணங்களில்
பதிவர் பெயர்: கைப்புள்ள

2. கம்யூனிசமும் கண்ணன் கோவிலும்
பதிவர் பெயர்: செல்வன்

3. ஒளவையின் அகவல்
பதிவர்:பெயர்: கண்ணபிரான் ரவிசங்கர்

4. கற்பக மரம் = தமிழ்மணம்
பதிவர் பெயர்: குமரன்

5. கண்ணன் - கர்ணன்
பதிவர் பெயர்: வெட்டிப்பயல்

6. வாங்க 3க்கு போலாம்
பதிவர் பெயர்: லக்கி லுக்

7. பாட்டுப் பிடிக்கும் வேலை
பதிவர் பெயர். வடுவூர்.எஸ்.குமார்

8. வலைப்பதிவர்களுக்கு பட்டமளிப்பு விழா
பதிவர் பெயர்: வரவனையான்

9. விவேக சிந்தாமணி - பாடல் எண் 69
பதிவர் பெயர்: ஞானவெட்டியான்

10. வாத்தியாரின் வீட்டுப்பாடம்
பதிவர் பெயர்: துளசி கோபால் (அக்கா)
அக்கா என்பது ஒரு மரியாதைக்காக
அல்லது என் துண்டைக் காப்பபற்றிக்கொள்ள
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொளலாம் !:-)))

11. ஏற்றம் தரும் யோகா கலை!
பதிவர் பெயர்: செந்தழல் ரவி

12. சாதிகள் இருக்குதடி பாப்பா
பதிவர் பெயர்: வி.எஸ்.கே

13. இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி
பதிவர் பெயர்: ஸ்ரீதரன் கனக்ஸ்

14. பா.க.ச.வில் சேர்வது எப்படி?
பதிவர் பெயர்: ஜெயசங்கர்.நா.
(இந்தப் பதிவில் பின்னூட்டங்களும் கலக்கலாக
இருக்கும்)

15. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
பதிவர் பெயர்: விடாது கருப்பு

16. விக்கிபீடியா கூட்டுழைப்பு
பதிவர் பெயர். மு.மயூரன்

17. யார் பேச்சை யார் கேட்கிறார்கள்?
பதிவர் பெயர்: வல்லி சிம்ஹன்

18. பீர்பல் கதைகள்
பதிவர் பெயர்: ஹரிஹரன்

19. ஆறிப்போகுமுன் ஒரு ஆறு பதிவு
பதிவர் பெயர்: இலவசக்கொத்தனார்

20. இன்னிசை வேந்தர்
பதிவர் பெயர்: யோகன் பாரிஸ்


21. ஆன்மிகம் ஆனந்தமானது
பதிவர் பெயர்: கால்கரி சிவா

22. ரெளத்திரம் கொள்
பதிவர் பெயர்: வற்றாயிருப்பு சுந்தர்

23. கழுகு மலை
பதிவர் பெயர்: ஜி.ராகவன்

24. யாருக்காக எழுதுகிறோம்?
பதிவர் பெயர்: ஆசிப் மீரான்

25. கொச்சின் விட்டகுறை - தொட்டகுறை
பதிவர் பெயர் - கானா பிரபா

26. பழனி மலையாண்டி தரிசனம்
பதிவர் பெயர்: கார்மேக ராஜா

27. தராவி குடிசைப் பகுதியா?
பதிவர் பெயர்: எஸ்.பாலபாரதி
-----------------------------------------------------------------
( மீதமுள்ளவைகள் அடுத்த பதிவில்)

அன்புடன்.
SP.VR.சுப்பையா,
இந்த வார ஆசிரியர்,
வலைச் சரம் - தமிழ் - இணைய இதழ்
------------------------------------------------------------------
மேலும் வாசிக்க...

தமிழ்மணத்தை கலகலக்கவைக்கும் வ.வா. சங்கம்!




============================================================ தமிழ்மணத்தை கலகலக்க வைக்கும் வ.வா. சங்கம்!

தமிழ்மணத்தில் நான் தேடிச் சென்று, அல்லது ஓடி சென்று
பார்க்கும் பதிவுகள் என்றால் முதல் இடத்தில் இருப்பது
வருதப்படாத வாலிபர்.சங்கத்தினரின் பதிவுகளே!

2006ம் ஆண்டில் 129 பதிவுகளையும், 2007ல் இன்றுவரை
50 பதிவுகளையும் தந்து பலரையும் மகிழ்வித்திருப்பவர்கள்
அவர்கள்தான்.

அதனால் அந்த சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு
Hats Off!

அவர்களுடைய பெரும்பாலான பதிவுகள் அசத்தலாக
இருக்கும் என்றாலும் இடம் கருதி சில பதிவுகளை மட்டுமே
குறிப்பிட்டுள்ளேன்

"ஒரு புன்னகை எதையும் சாதித்து விடும்
ஒரு மகிழ்ச்சியான தருணம் எதையும் போக்கிவிடும்!"

'மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையும்,
உப்பு இல்லாத உண்வும் ஒன்றுதான்'

அனைவரும் படித்து மகிழுங்கள்

இடம் பெறாத வேறு பதிவுகளை எழுதியவர்கள்
தவறாக நினைக்க வேண்டாம்!

இது என்னுடைய அன்பான வேண்டுகோள்!
---------------------------------------------------------------------------------

1. வடிவுக்கு போறாத காலம்
பதிவர் பெயர்: டி.பி.ஆர்.ஜோசப்

2. கவுண்டர் -Devil Show - வெட்டிப்பயல்
பதிவர் பெயர்: இராம்

3. முதுகலை இல்லறத்தியல் - M.Sc, wifeology
பதிவர் பெயர்:பினாத்தல் சுரேஷ்

4. வருததப்படாதீங்க ப்ளீஸ்!!
பதிவர் பெயர்: ஜொள்ளுப் பாண்டி

5. கோவியாரின் நாடக சபா - பாகம் 1 & 2
பதிவர் பெயர்: தேவ்

6. Sangam Technologies Part (Farmer) 1 & 2
பதிவர் பெயர்: இளா

7. மாடு மேய்ப்பது எப்படி?
பதிவர் பெயர்: கப்பி பய

8. ச்சிரிப்பு வருது..ச்சிரிப்பு வருது!
பதிவர் பெயர்: கைப்புள்ள

9. செயற்குழு கூட்டம்
பதிவர் பெயர்: நாகை சிவா

10. நான் ஒரு தடவை சொன்னா....!
பதிவர் பெயர்: நாமக்கல் சிபி

------------------------------------------------

அன்புடன்,
மகிழ்ச்சியுடன்,

SP.VR.சுப்பையா
இந்தவார ஆசிரியர்
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்
---------------------------------------

(ஆய்வு தொடரும்)
மேலும் வாசிக்க...

Friday, March 23, 2007

தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!

தமிழ்மணத்தில் வலம் வரும் கவிஞர்கள்!

கவிதை என்றால் என்ன?

உரைநடையில் எழுதாத - நெஞசைத்தொடும்
ஆக்கங்கள் அனைத்துமே கவிதைதான்!

என் நண்பர் கவித்தென்றல் காசு மணியன்
கவிதைக்கு இப்படி விளக்கம் சொல்வார்:

“உள்ளத்து உள்ளது கவிதை - நெஞ்சில்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த மொழியால் - நன்கு
தெரிந்துரைப்பது கவிதை!”

என்னுடைய இன்னொரு நண்பர், மகாகவி,
கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறைத் தலைவராக
இருந்து ஓய்வு பெற்றவர். என்னைவிட பத்து வயது
பெரியவர். அற்புதமான மரபுக் கவிஞர்
அவர் எழுதிய கவிதை ஒன்றைக் கீழே கொடுத்
துள்ளேன்

"காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் - கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!"

இப்போது மரபுக் கவிஞர்கள் எல்லாம் அரிதாகி
விட்டார்கள்

எல்லோரும் புதுக் கவிதை வடிப்பவர்கள்தான்
திரு.மு.மேத்தா அவர்கள்தான் புதுக்கவிதை
யுகத்தைத் துவக்கிவைத்தவர்.

நாட்டிற்கு சுதந்திரம் சுதந்திரம் கிடைத்தது
பற்றி ஒரு கவிஞன் இரண்டே வரிகளில்
எழுதினான். அது மிகவும் பிர்சித்தமான
கவிதை.

தலைப்பு : சுதந்திரம்
"இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை"


கடலோர ஊர்களில் புயல் வந்துவிட்டுப்
போனபிற்கு அது ஏற்படுத்திவிட்டுப்போன
சேதங்களைத்தான் அனைவரும் பேசுவார்கள்
ஆனால் ஒரு கவிஞன் புயலுக்குப் பரிந்து
கொண்டு எழுதினான்:

"என் வீடு
இடிந்தாலென்ன
உன் வீடு
இடிந்தாலென்ன
புயலுக்கோ
பாதை தேவை!

எப்படி நச் சென்று இருக்கிறது பார்த்தீர்களா?

திருடன் ஒருவன் வீடொன்றுக்குள் நுழைந்து
அனைத்தையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டான்
ஒன்றே ஒன்றை ம்ட்டும் விட்டுச் சென்றுவிட்டான்
வந்த திருடன் விட்டுச் சென்றது என்ன?

ஒரு கவிஞன் எழுதினான்

"வந்த திருடன்
வீட்டிகுள்
வீட்டுச் சென்றான்
நிலவொளியை!"

பலரின் பற்குழிகளை நிரப்பிய பல்வைத்தியர்
இறந்து அடக்கம் செய்யப்பட்டவுடன், ஒரு
கவிஞன் எழுதினான்

"மெதுவாகவே நடந்து செல்லுங்கள்
பல் வைத்தியர்
தன் கடைசிக் குழியை
நிரப்பிக் கொண்டிருக்கிறார்"

வெளிநாட்டில் தனியாகக் காரில் சென்று
கொண்டிருந்த இளம் பெண் ஒருத்தி, வழிப்பறிக்
காரர்களிடம் தன் உடமைகள் அனைத்தையும்
பறிகொடுத்துவிட்டாள் - தன் ஆடைகள் உட்பட
ஒரு கவிஞ்ன் அதை ஒற்றை வரியில் இப்படி
எழுதினான்.

She lost everything except her smile!

இதுபோல இன்னொரு நிகழ்வை ஒரு கவிஞன்
படு சூப்பராக இரண்டே வரிகளில் எழுதினான்
ஆனால் அது Adults Only கவிதை
இங்கே சொல்வதற்கில்லை.

என் வகுப்புக் கண்மணிகள் வந்து போகும்
இடம். எனக்கு டின் கட்டிவிடுவார்க்ள்

எப்போதாவது நடேசன் பூங்கா போன்ற இடங்களில்
அதுதான் வலைப் பதிவர்கள் கூட்டாகச் ச்ந்திக்கும்
இடங்களில் நினைவு படுத்துங்கள் சொல்கிறேன்
--------------------------------------------
வலைப் பதிவுகளில் கவிதை என்ற தலைப்பில்
என்ன தேறுகிறது என்று பார்த்தேன்

Randum ஆக ஒருவாரப் பதிவுகளைப் படித்துப்
பார்த்தேன் 16.3.2007 முதல் 22.3.2007
தேதி வரை மொத்தம் 84 பதிவுகள் இருந்தன.

அதிகமான கவிதைகளைச் சும்மா காள்மேகம்
கணக்காக எழுதித தள்ளி முன்னனியில்
இருப்பவர் தொட்டராய சாமி.

அவருக்கு வாழத்துக்கள்

பெரும்பாலான- ஏன் 80% கவிதைகள் காதலிக்காக
எழுதப்பெற்றவைதான். காதலைத்தாண்டி பலர் வெளியே
வரவில்லை. காரணம் தமிழ் மணத்தில் 81%
இளைஞ்ர்கள்தான்.

பிற்காலத்தில் இவர்களெல்லாம் சமூகத்தைப்
பார்க்க ஆரம்பித்துக் கவிதைகள் எழுதுவார்கள்
என்று நம்புகிறேன்

இப்போது அந்த 84ல் சில கவிதைகளைக் கீழே
கொடுத்துள்ளேன். எல்லாவற்றையும் கொடுக்க
எனக்கு ஆசைதான். பதிவின் நீளம் கருதி
அவ்வாறு செய்ய முடியவில்லை
-------------------------------
1. கோவை மணி

"அவன் ஒற்றைவிரலசைவை
உலகமே எதிர்பார்க்கும்
அம்பயர்!"
-------------------------------
2. தொட்டராயசாமி

"எந்த சாபம்
வேண்டுமானாலும்
வாங்கிட
தயாராக உள்ளேன்

நான்
உனக்கு குழந்தையாக
பிறக்க வேண்டும்
அவ்வளவுதான்."

-------------------------
3. யாழினி அத்தன்

"சொல் ஒரு சொல்
உன்னோடு வரச் சொல்
இல்லை தூரப் போகச் சொல்
போதும் உன் விழிச் சொல்
வேண்டும் உன் வாய்ச் சொல்
சொல்லாமல் தினமும் சொல்லும் சொல்லுக்கு
வாய்திறந்து அர்த்தம் சொல்
சொல்வதை நான் சொல்லிவிட்டு நிற்கிறேன்
உன் சொல்லுக்கு!"

------------------------------------------------
4. சென்ஷி

"காலம் காயத்தை ஆற்றும்;
காதலை..?
கைசேராத காதலிக்காக
காத்திருக்கும் ஒற்றைக்கை;
உடைந்த மனசுடன்..
உறக்கத்திற்கு காரணம் தெரியவில்லை..
நான் உறங்காததன்
காரணம் நீ!
உன்னிடம்
பேச நினைத்த
வார்த்தைகள் எல்லாம்
மௌனத்தில் அழுகின்றன..
நீ இல்லாமல்..!"

-------------------------------------------
5. சி.வி.ஆர்

"பெண்ணே உந்தன் விரல் அழகு
என் வேதனை கூட்டும் விழி அழகு
எனை சோதனை செய்யும் சொல் அழகு
உன் புருவம் இரண்டில் கண்டேன் வில் அழகு!"

------------------------------------------------
6. சத்தியா

"என் வீட்டு வாசலில்
அழுத்தமாய் அழைக்கும்
அழைப்பு மணி
நீயாக இருக்காது
என்று தெரிந்தும் கூட
அந்தரித்து
உனை தேடி நிற்கிறது
என் ஆத்மா!
ஒரு தடவையேனும்
உன் குரல் கேட்காதா
என்ற ஏக்கம்
எனை வாட்ட...
ஒவ்வொரு தடவையும்
சிணுங்கும் தொலைபேசியில்...
நீயாக இருக்க வேண்டுமென்று
நீண்ட பிரார்த்தனையோடு
மூச்சிறைக்க ஓடிச் சென்று...
ஏமாற்றத் தீயில்வேகி
ஒடிந்துதான் போகின்றேன்!
சூரியனின் வட்டப் பாதையை
சுற்றிச் சுற்றியே பழக்கப்பட்ட
பூமிப் பந்தைப் போல..
உன்னையே சுற்றி சுற்றியே
எப்போதும்
வலம் வருகிறேன் நான்!"


------------------------------------------------------------
7.அமிழ்து

"தோட்டத்து ரோஜா செடியில் முள்ளில்லை...
வியப்பில்லை...
சரி தான், உன் வீட்டுச் செடியல்லவா!
பூச்செடியென்றால் இலை, தண்டு எல்லாமுண்டு தானே
நீ என்ன செய்கிறாய்...?
உன் வீட்டுச் செடியில் மட்டும் பூக்களாகவே உள்ளனவே!"

------------------------------------------------------
8.கென்

"பிறை நிலா புன்னகையில்,
ப்ரியங்கள் வழிந்திட,
உறைபனி மேகமாய் .
உள்ளம் மிதக்கும்.
கடக்கும் நொடியினில்,
தடதடக்கும் மின் தொடராய்,
இதயத்தின் துடிப்போ
இமயத்தை எட்டிடும்.
தெய்வம் பார்த்திட்ட பக்தனாய்,
சாபம் தொலைத்திட்ட அரக்கனாய்,
விழிகள் பெற்ற பயனை,
நொடியினில் தந்து மறைகிறாய்.
கடந்து போய்விட்ட காதல்பார்வைக்காய்
காத்திருக்கிறேன்,
காலத்தின் சூதில் பார்வை இழந்தப்பின்..."

----------------------------------------------
9.அருட்பெருங்கோ

"மழையில் குடை
குடைக்குள் நாம்
நமக்குள் மழை!"

-----------------------------------------------------
10. கோவி.கண்ணன்

"இந்த வழி ஆபத்தானதல்ல
இதோ பார் எனக்கு நன்றாகவே
இருக்கிறது என்றார்
செருப்பணிந்த ஒருவர் !

காலுக்குச் செருப்பின்றி நடக்கும் நான்
அதே வழியில் முட்கள் கிடந்து
தைப்பதை உணர்ந்தேன்.

இந்த செருப்பே வேண்டாம் !
என நினைத்து
ஒன்று பாதையை மாற்ற வேண்டும் அல்லது
பாதையை தூய்மைப் படுத்த போராட வேண்டும்

செருப்பணிந்தவர் சொல்கிறார்
என்னளவில் இந்த வழி நல்வழியே !
இதில் மாற்றம் தேவை இல்லை !

எப்போதும்,
நன்மை - தீமை என்ற பகுப்பில்,
பார்வையில் காணாமல் போகிறது
உண்மைகள் ! "

-------------------------------------------
அடுத்து, வேறு ஒரு தலைப்பில் தமிழ் மணப் பதிவுகள்
ஆயவு செய்யப்பட்டு, பதிவிடப்படும்

அன்புடன்
SP.VR.சுப்பையா
இந்த வார ஆசிரியர்
'வலைச்சரம்' இணையத் தமிழ் இதழ்
மேலும் வாசிக்க...

Thursday, March 22, 2007

வாத்தியார் ஆசிரியரான கதை



வாத்தியார் ஆசிரியரான கதை
By SP.VR.SUBBIAH

வாத்தியார் என்றாலும் ஆசிரியர் என்றாலும் ஒன்றுதானே
இது என்ன புதுக்குழப்பமாக இருக்கிறதே என்கிறீர்களா?

வகுப்பறையில் வாத்தியாராக அல்லல் பட்டுக்கொண்டிருந்தவன்
இப்போது இந்த வலைச்சரப் பத்திரிக்கையின் ஆசிரியாராகி விட்டேன்

பயப்பட வேண்டாம்!

சும்மா ஒரு வாரத்திற்கு மட்டும்தான். அப்புறம் பழையபடி
வகுப்பறைக்கே போய்விடுவேன்

நண்பர் சிந்தாநதி அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.
உடனே ஓடி வந்து விட்டேன்.

என் வகுப்புக் கண்மணிகளிடம் கூடச் சொல்லவில்லை
அங்கே பண்ணுகிற ரகளை பத்தாதா? இங்கேயும் வந்து
பண்ணுவார்கள். அதனால் சொல்லவில்லை!

முதல்வன் படத்தில் வரும் நாயகர் அர்ஜுன் ஒருநாள் முதல்வராகக்
கலக்கியதைப்போல நானும் ஒருவாரம், பத்திரிக்கை ஆசிரியராகக
இருந்து தமிழ்மணத்தை ஒரு கலக்குக் கலக்குவது என்று முடிவு
செய்து விட்டேன்

அதனால் துண்டோடு வந்துவிட்டேன்!

தோளில் துண்டு போட்டுக் கொண்டு ஆசிரியர் ஸீட்டில் அமர்வது
என்பது என்னுடைய நீண்டநாள் கனவு.

அந்தக் காலத்தில் கல்கி, தேவன், கி.வா.ஜ ஆகியோர்கள் எல்லாம்
தோளில் துண்டு போட்டுக்கொண்டுதான் பணி செய்வார்கள்
படத்தில் பார்த்திருக்கிறேன்

அவர்களைப் போல எழுதமுடியாவிட்டலும், துண்டாவது இருகட்டுமே
என்ற நைப்பாசைதான் - வேறு ஒன்றுமில்லை!

“சரி, உங்கள் புராணம் போதும்!” என்று படிப்பவர்கள் முனுமுனுப்பதற்குள்
விஷயத்திற்கு வருகிறேன்.

தமிழ்மணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது பலர் குழுக்களாகச் சேர்ந்து,
செயல்பட்டுப் பல அரிய பதிவுகளைத் தருவது!..

அதில் பதிவர்களிடையே ஒரு ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது.
அத்துடன் பல திறமையாளர்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றும்போது
நிறைவான, உபயோகமான பதிவுகளும் கிடைக்கின்றன

அதைபபற்றிய விவரங்களை - எனது கண்ணோட்டத்தில் இங்கே
சொல்ல விழைகின்றேன்.

என் அறிவிற்கும், பார்வைக்கும் எட்டியவரை குழுக்களின் பெயர்களைக்
கொடுத்திருக்கின்றேன். என்னை அறியாமல் ஏதாவ்து குழுவின் பெயர்
விடுபட்டிருந்தால் தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
SP.VR. சுப்பையா
இந்தவார ஆசிரியர்
வலைச்சரம் - தமிழ் இணைய இதழ்
++++++++++++++++++++++++++++++++++++

1. தமிழ் வலைப் பதிவாளர்கள் உதவிப்பக்கம்
(6 பேர்கள் கொண்ட குழு)

புதிதாக வரும் பதிவர்களுக்கும் சரி, அல்லது
கணினித்தொழில் நுட்பத்தில் அதிகப் பரீட்சயம்
இல்லாத என்னைப் போன்ற ஆசாமிகளுக்கும் சரி,
கை கொடுத்து உதவும் பதிவு இது
--------------------------------------------------------------------------------
2. வேலை வாய்ப்பு கல்வி வலையிதழ்
(5 பேர்கள் கொண்ட குழு)

இலைஞ்ரகள் பாணியில் சொன்னால் சூப்பரான பதிவு இது
வேலை தேடும் அல்லது வேலையில் முன்னேறத்துடிக்கும்
பல இளைஞர்களுக்கு இந்த வலையிதழ் ஒரு வரப்பிரசாதம்.
என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு - வயது காரணமாக
எவரும் வேலை தரமாட்டார்கள். ஆனால் நான் எனக்குத்
தெரிந்த பல இளைஞர்களைப் பார்க்கச் சொல்லும் பதிவு இது.
----------------------------------------------------------------------------------------
3. தமிழ் சங்கம்
(6 பேர்கள் கொண்ட குழு)


4. இலக்கணம்
(4 பேர்கள் கொண்ட குழு)

5. சொல் ஒரு சொல்
(4 பேர்கள் கொண்ட குழு)

இந்த மூன்று பதிவுக்ளுமே - பெயரிலேயே
பதிவின் நோக்கத்தைக் கொடிபிடித்துச்
சொல்கிறது!
இவர்கள் தமிழுக்கு அறிய சேவைகள்
செய்து வருகிறார்கள்.
பல அறிவு ஜீவிகளின் பின்னூட்டங்களைங்களை
நிறையக் காணலாம். சுவாரசியமாகவும், உபயோகமாவும்
இருக்கின்றது!
-------------------------------------------------------------------------------------
6. திராவிடத் தமிழர்கள்
(5 பேர்கள் கொண்ட குழு)

தங்கள் நிலைப் பாடுகளைச் சொல்லாற்றலுடன்
சொல்லும் குழு.
பெயரிலேயே குழுவின் சிறப்பான நோக்கம் தெரியும்
உடன்பாடான கருத்துக்களும் இருக்கும். சமயங்களில்
சில எதிர்மறையான கருத்துக்களும் இருக்கும்
நான் இவ்ர்களுடைய பதிவுகளை விரும்பிப் படிப்பதுண்டு!
------------------------------------------------------------------------------------
7. விக்கி பசங்க
(11 பேர்கள் கொண்ட குழு)

அறிவியல், தொழில் நுட்ப விஷயமாக் என்ன
கேள்விகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம்
உடனே தயக்கமின்றிப் பதில் வரும்
(நான் இவர்களிடம் கேட்க விருபும் கேள்வி –
எப்போதாவது நீங்கள் 11 பேர்களும் ஒன்றாக
சந்தித்திருக்கிறீர்களா?
அதேபோல உங்கள் குழுவில் உள்ள அனைவரும்
சகக்குழு உறுப்பினரை நேரில் சந்தித்திருக்கின்றீர்களா?
-------------------------------------------------------------------------------------
8. சாப்பிட வாங்க
(4 பேர்கள் கொண்ட குழு)

விதம் விதமாக உணவுகளைப் பற்றி - த்யாரிக்கும்
முறையுடன் எழுதுகின்றார்கள். அதற்குத்
தொடர்பான படத்தைப் பார்த்தாலே போதும்
அப்போதே செய்து சாப்பிடத்தோன்றும்
இந்தக் குழுவினரிடமும் கேட்டுத் தெரிந்து
கொள்ள ஒரு கேள்வி உள்ளது.
பாலாபாய் அவர்களை உங்கள் குழுவில் எப்படி
சேர்த்துக் கொண்டீர்கள்?
அவர் நல்லவர் - வல்லவர்
அவருக்குச் சாப்பிடத் தெரியும், மற்றவர்களுக்கு
விருந்து வைக்கத்தெரியும்!
ஆனால் சமையலைப் பற்றி உண்மையிலேயே
அவருக்கு ஏதாவ்து தெரியுமா?:-)))
------------------------------------------------------------
9. கடல் கன்னி
(9 பேர்கள் கொண்ட குழு)

கடலையும், கடல் சார்ந்த நகரங்களையும்
சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் குழு
--------------------------------------------------------------------
10. திரைப்பார்வை
(3 பேர்கள் கொண்ட குழு)

பெயரிலேயே இந்தக் குழுவின் செயல்பாடுகள்
தெரிவதால் விளக்கம் தேவையில்லை!
--------------------------------------------------------------------------
11. வலைச்சரம்
( 3 பேர்கள் கொண்ட குழு)

மிக மிக ந்ல்ல குழுவினரின் பதிவு.
(நான் ஆசிரியராக இருக்கிறேன் அல்லவா –
அதனால் தான் இரண்டு மிக மிக!)
இதைப் பற்றிய விளக்கம் தேவையில்லை
நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் பதிவு
பல நல்ல பதிவுளை அடையாளங்காட்டும்
அருமையான வேலையைச் செய்து கொண்டிருக்கிரார்கள்
இவர்கள் என்னைபோன்ற ஆசாமிகளைக் கூப்பிட்டு
ஆசிரியராக ஒருவாரம் பணி செய்யப் பணிப்பதைக்
குறைத்துக் கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கிறது!
-----------------------------------------------------------------------------
12. வருத்தப் படாத வாலிபர்கள் சங்கம்
(9 பேர்கள் கொண்ட குழு)

சிரிக்க, சரிக்க மட்டுமே என்று நகைசுவையாக எழுதி
வலைப் பதிவர்களின் ஏகோபித்த ஆதரவைபெற்ற
குழு இதுதான் என்றால் அது மிகையல்ல
கவனிக்கவும் - வலைப்பதிவர்களில் 40% நகைசுவை
விரும்பிகள்
------------------------------------------------------------------------------
13. முருகனருள்
(6 பேர்கள் கொண்ட குழு)

14. கண்ணன் பாட்டு
( 5 பேர்கள் கொண்ட குழு)

மேற்கண்ட இரு குழுவினரும் இறைத்
தொண்டாற்றுபவர்கள். அருமையான்
இறை வழிபாட்டுப் பாடல்களையும், மனதை
நெறிப்படுத்தும் கட்டுரைகளையும் எழுதிக்
கொண்டிருப்பவர்கள்.
இவ்ர்களின் பதிவுகள் - என்னைபோன்ற
வயதான் ஆசாமிகளுக்கு மனத்தெம்பைக் கொடுக்கும்:-))))
-----------------------------------------------------------------------------------
15. சக்தி
( 3 மாதரசிகள் கூட்டாக கலக்கும் பதிவு)

பெண்களின் தேவைகள், பெண்களின் பிரச்சினைகள்
அதற்கான் தீர்வுகள், யோசனைகள் என்று சிறப்பாக
எழுதுகின்றார்கள்
----------------------------------------------------------------
16. சென்னப்பட்டிணம்
( 8 பேர்கள் கொண்ட குழு)

சென்னையின் சிறப்புக்களையும் பிரச்சினைகளையும்,
அதற்கான சீரமைப்பு யோசனைகளையும் எழுதிக்
கொண்டிருக்கும் குழுவினர்
-----------------------------------------------------------------------
17. இயன்ற வரையிலும் இனிய தமிழில்
( இருவர் கூட்டணிப் பதிவு)

தனிதமிழ் ஆர்வலர்களுக்கான் பதிவு. அரிய
தமிழ்ச் சேவைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்
----------------------------------------------------------
18. சற்று முன் ( Breaking News)

தமிழ் வலைப் பதிவுகளில் ஒரு புதிய, அற்புதமான
முயற்சி - செயல் பாடுகள் கொண்ட பதிவு
இந்திய மற்றும் வெளி நாட்டுச் செய்திகளை சுடச் சுடச்
தொகுத்துக் கொடுக்கிறார்கள்
16 நல்ல இதயங்கள் Cum வல்லுனர்கள் சேர்ந்து செயல்
படுகின்றார்கள். அதோடு நம் மின்னஞ்சல் முகவரிக்கே
செய்திகள் வந்து சேரும் இணைப்பையும் கொடுத்து
உதவுகிறார்கள்.
ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே 537 பதிவுகள்
இட்டிருக்கின்றார்கள் என்பது வியப்பான செய்தி
இப்போது தமிழ்மணத்தில் மிகவும் Popular ஆன பதிவு
இவர்களுடைய பதிவுதான்
ந்ல்ல வளர்ச்சியும், எதிர்காலமும் இந்த்ப் பதிவிற்கு உள்ளது
இன்னும் சில மாதங்களில் கூகிள் நிறுவன்மே (Tamil Division)
இவர்கள் பதிவின் மேல் ஒரு கண் வைத்து, நல்ல விலை
கொடுத்து வாங்கிவிடக் கூடிய வாய்ப்பும் உள்ளது!:-))))

(க்ண்ணோட்டம் தொடரும்)

--------------------------------------------------------------------
Blogger சொதப்புகிறது. அதனால் இந்த
18 குழுக்களுக்கும் பெயரின் மீது அழுத்தி
சுட்டி வரும்படி செய்ய இயலவில்லை! (செஞ்சாச்சு-சிந்தாநதி)
பொருத்தருள்கவும்!
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது