07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 22, 2007

வாத்தியார் ஆசிரியரான கதை



வாத்தியார் ஆசிரியரான கதை
By SP.VR.SUBBIAH

வாத்தியார் என்றாலும் ஆசிரியர் என்றாலும் ஒன்றுதானே
இது என்ன புதுக்குழப்பமாக இருக்கிறதே என்கிறீர்களா?

வகுப்பறையில் வாத்தியாராக அல்லல் பட்டுக்கொண்டிருந்தவன்
இப்போது இந்த வலைச்சரப் பத்திரிக்கையின் ஆசிரியாராகி விட்டேன்

பயப்பட வேண்டாம்!

சும்மா ஒரு வாரத்திற்கு மட்டும்தான். அப்புறம் பழையபடி
வகுப்பறைக்கே போய்விடுவேன்

நண்பர் சிந்தாநதி அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.
உடனே ஓடி வந்து விட்டேன்.

என் வகுப்புக் கண்மணிகளிடம் கூடச் சொல்லவில்லை
அங்கே பண்ணுகிற ரகளை பத்தாதா? இங்கேயும் வந்து
பண்ணுவார்கள். அதனால் சொல்லவில்லை!

முதல்வன் படத்தில் வரும் நாயகர் அர்ஜுன் ஒருநாள் முதல்வராகக்
கலக்கியதைப்போல நானும் ஒருவாரம், பத்திரிக்கை ஆசிரியராகக
இருந்து தமிழ்மணத்தை ஒரு கலக்குக் கலக்குவது என்று முடிவு
செய்து விட்டேன்

அதனால் துண்டோடு வந்துவிட்டேன்!

தோளில் துண்டு போட்டுக் கொண்டு ஆசிரியர் ஸீட்டில் அமர்வது
என்பது என்னுடைய நீண்டநாள் கனவு.

அந்தக் காலத்தில் கல்கி, தேவன், கி.வா.ஜ ஆகியோர்கள் எல்லாம்
தோளில் துண்டு போட்டுக்கொண்டுதான் பணி செய்வார்கள்
படத்தில் பார்த்திருக்கிறேன்

அவர்களைப் போல எழுதமுடியாவிட்டலும், துண்டாவது இருகட்டுமே
என்ற நைப்பாசைதான் - வேறு ஒன்றுமில்லை!

“சரி, உங்கள் புராணம் போதும்!” என்று படிப்பவர்கள் முனுமுனுப்பதற்குள்
விஷயத்திற்கு வருகிறேன்.

தமிழ்மணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது பலர் குழுக்களாகச் சேர்ந்து,
செயல்பட்டுப் பல அரிய பதிவுகளைத் தருவது!..

அதில் பதிவர்களிடையே ஒரு ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறது.
அத்துடன் பல திறமையாளர்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றும்போது
நிறைவான, உபயோகமான பதிவுகளும் கிடைக்கின்றன

அதைபபற்றிய விவரங்களை - எனது கண்ணோட்டத்தில் இங்கே
சொல்ல விழைகின்றேன்.

என் அறிவிற்கும், பார்வைக்கும் எட்டியவரை குழுக்களின் பெயர்களைக்
கொடுத்திருக்கின்றேன். என்னை அறியாமல் ஏதாவ்து குழுவின் பெயர்
விடுபட்டிருந்தால் தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

அன்புடன்
SP.VR. சுப்பையா
இந்தவார ஆசிரியர்
வலைச்சரம் - தமிழ் இணைய இதழ்
++++++++++++++++++++++++++++++++++++

1. தமிழ் வலைப் பதிவாளர்கள் உதவிப்பக்கம்
(6 பேர்கள் கொண்ட குழு)

புதிதாக வரும் பதிவர்களுக்கும் சரி, அல்லது
கணினித்தொழில் நுட்பத்தில் அதிகப் பரீட்சயம்
இல்லாத என்னைப் போன்ற ஆசாமிகளுக்கும் சரி,
கை கொடுத்து உதவும் பதிவு இது
--------------------------------------------------------------------------------
2. வேலை வாய்ப்பு கல்வி வலையிதழ்
(5 பேர்கள் கொண்ட குழு)

இலைஞ்ரகள் பாணியில் சொன்னால் சூப்பரான பதிவு இது
வேலை தேடும் அல்லது வேலையில் முன்னேறத்துடிக்கும்
பல இளைஞர்களுக்கு இந்த வலையிதழ் ஒரு வரப்பிரசாதம்.
என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு - வயது காரணமாக
எவரும் வேலை தரமாட்டார்கள். ஆனால் நான் எனக்குத்
தெரிந்த பல இளைஞர்களைப் பார்க்கச் சொல்லும் பதிவு இது.
----------------------------------------------------------------------------------------
3. தமிழ் சங்கம்
(6 பேர்கள் கொண்ட குழு)


4. இலக்கணம்
(4 பேர்கள் கொண்ட குழு)

5. சொல் ஒரு சொல்
(4 பேர்கள் கொண்ட குழு)

இந்த மூன்று பதிவுக்ளுமே - பெயரிலேயே
பதிவின் நோக்கத்தைக் கொடிபிடித்துச்
சொல்கிறது!
இவர்கள் தமிழுக்கு அறிய சேவைகள்
செய்து வருகிறார்கள்.
பல அறிவு ஜீவிகளின் பின்னூட்டங்களைங்களை
நிறையக் காணலாம். சுவாரசியமாகவும், உபயோகமாவும்
இருக்கின்றது!
-------------------------------------------------------------------------------------
6. திராவிடத் தமிழர்கள்
(5 பேர்கள் கொண்ட குழு)

தங்கள் நிலைப் பாடுகளைச் சொல்லாற்றலுடன்
சொல்லும் குழு.
பெயரிலேயே குழுவின் சிறப்பான நோக்கம் தெரியும்
உடன்பாடான கருத்துக்களும் இருக்கும். சமயங்களில்
சில எதிர்மறையான கருத்துக்களும் இருக்கும்
நான் இவ்ர்களுடைய பதிவுகளை விரும்பிப் படிப்பதுண்டு!
------------------------------------------------------------------------------------
7. விக்கி பசங்க
(11 பேர்கள் கொண்ட குழு)

அறிவியல், தொழில் நுட்ப விஷயமாக் என்ன
கேள்விகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம்
உடனே தயக்கமின்றிப் பதில் வரும்
(நான் இவர்களிடம் கேட்க விருபும் கேள்வி –
எப்போதாவது நீங்கள் 11 பேர்களும் ஒன்றாக
சந்தித்திருக்கிறீர்களா?
அதேபோல உங்கள் குழுவில் உள்ள அனைவரும்
சகக்குழு உறுப்பினரை நேரில் சந்தித்திருக்கின்றீர்களா?
-------------------------------------------------------------------------------------
8. சாப்பிட வாங்க
(4 பேர்கள் கொண்ட குழு)

விதம் விதமாக உணவுகளைப் பற்றி - த்யாரிக்கும்
முறையுடன் எழுதுகின்றார்கள். அதற்குத்
தொடர்பான படத்தைப் பார்த்தாலே போதும்
அப்போதே செய்து சாப்பிடத்தோன்றும்
இந்தக் குழுவினரிடமும் கேட்டுத் தெரிந்து
கொள்ள ஒரு கேள்வி உள்ளது.
பாலாபாய் அவர்களை உங்கள் குழுவில் எப்படி
சேர்த்துக் கொண்டீர்கள்?
அவர் நல்லவர் - வல்லவர்
அவருக்குச் சாப்பிடத் தெரியும், மற்றவர்களுக்கு
விருந்து வைக்கத்தெரியும்!
ஆனால் சமையலைப் பற்றி உண்மையிலேயே
அவருக்கு ஏதாவ்து தெரியுமா?:-)))
------------------------------------------------------------
9. கடல் கன்னி
(9 பேர்கள் கொண்ட குழு)

கடலையும், கடல் சார்ந்த நகரங்களையும்
சிறப்பாக எழுதிக் கொண்டிருக்கும் குழு
--------------------------------------------------------------------
10. திரைப்பார்வை
(3 பேர்கள் கொண்ட குழு)

பெயரிலேயே இந்தக் குழுவின் செயல்பாடுகள்
தெரிவதால் விளக்கம் தேவையில்லை!
--------------------------------------------------------------------------
11. வலைச்சரம்
( 3 பேர்கள் கொண்ட குழு)

மிக மிக ந்ல்ல குழுவினரின் பதிவு.
(நான் ஆசிரியராக இருக்கிறேன் அல்லவா –
அதனால் தான் இரண்டு மிக மிக!)
இதைப் பற்றிய விளக்கம் தேவையில்லை
நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கும் பதிவு
பல நல்ல பதிவுளை அடையாளங்காட்டும்
அருமையான வேலையைச் செய்து கொண்டிருக்கிரார்கள்
இவர்கள் என்னைபோன்ற ஆசாமிகளைக் கூப்பிட்டு
ஆசிரியராக ஒருவாரம் பணி செய்யப் பணிப்பதைக்
குறைத்துக் கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கிறது!
-----------------------------------------------------------------------------
12. வருத்தப் படாத வாலிபர்கள் சங்கம்
(9 பேர்கள் கொண்ட குழு)

சிரிக்க, சரிக்க மட்டுமே என்று நகைசுவையாக எழுதி
வலைப் பதிவர்களின் ஏகோபித்த ஆதரவைபெற்ற
குழு இதுதான் என்றால் அது மிகையல்ல
கவனிக்கவும் - வலைப்பதிவர்களில் 40% நகைசுவை
விரும்பிகள்
------------------------------------------------------------------------------
13. முருகனருள்
(6 பேர்கள் கொண்ட குழு)

14. கண்ணன் பாட்டு
( 5 பேர்கள் கொண்ட குழு)

மேற்கண்ட இரு குழுவினரும் இறைத்
தொண்டாற்றுபவர்கள். அருமையான்
இறை வழிபாட்டுப் பாடல்களையும், மனதை
நெறிப்படுத்தும் கட்டுரைகளையும் எழுதிக்
கொண்டிருப்பவர்கள்.
இவ்ர்களின் பதிவுகள் - என்னைபோன்ற
வயதான் ஆசாமிகளுக்கு மனத்தெம்பைக் கொடுக்கும்:-))))
-----------------------------------------------------------------------------------
15. சக்தி
( 3 மாதரசிகள் கூட்டாக கலக்கும் பதிவு)

பெண்களின் தேவைகள், பெண்களின் பிரச்சினைகள்
அதற்கான் தீர்வுகள், யோசனைகள் என்று சிறப்பாக
எழுதுகின்றார்கள்
----------------------------------------------------------------
16. சென்னப்பட்டிணம்
( 8 பேர்கள் கொண்ட குழு)

சென்னையின் சிறப்புக்களையும் பிரச்சினைகளையும்,
அதற்கான சீரமைப்பு யோசனைகளையும் எழுதிக்
கொண்டிருக்கும் குழுவினர்
-----------------------------------------------------------------------
17. இயன்ற வரையிலும் இனிய தமிழில்
( இருவர் கூட்டணிப் பதிவு)

தனிதமிழ் ஆர்வலர்களுக்கான் பதிவு. அரிய
தமிழ்ச் சேவைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்
----------------------------------------------------------
18. சற்று முன் ( Breaking News)

தமிழ் வலைப் பதிவுகளில் ஒரு புதிய, அற்புதமான
முயற்சி - செயல் பாடுகள் கொண்ட பதிவு
இந்திய மற்றும் வெளி நாட்டுச் செய்திகளை சுடச் சுடச்
தொகுத்துக் கொடுக்கிறார்கள்
16 நல்ல இதயங்கள் Cum வல்லுனர்கள் சேர்ந்து செயல்
படுகின்றார்கள். அதோடு நம் மின்னஞ்சல் முகவரிக்கே
செய்திகள் வந்து சேரும் இணைப்பையும் கொடுத்து
உதவுகிறார்கள்.
ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளேயே 537 பதிவுகள்
இட்டிருக்கின்றார்கள் என்பது வியப்பான செய்தி
இப்போது தமிழ்மணத்தில் மிகவும் Popular ஆன பதிவு
இவர்களுடைய பதிவுதான்
ந்ல்ல வளர்ச்சியும், எதிர்காலமும் இந்த்ப் பதிவிற்கு உள்ளது
இன்னும் சில மாதங்களில் கூகிள் நிறுவன்மே (Tamil Division)
இவர்கள் பதிவின் மேல் ஒரு கண் வைத்து, நல்ல விலை
கொடுத்து வாங்கிவிடக் கூடிய வாய்ப்பும் உள்ளது!:-))))

(க்ண்ணோட்டம் தொடரும்)

--------------------------------------------------------------------
Blogger சொதப்புகிறது. அதனால் இந்த
18 குழுக்களுக்கும் பெயரின் மீது அழுத்தி
சுட்டி வரும்படி செய்ய இயலவில்லை! (செஞ்சாச்சு-சிந்தாநதி)
பொருத்தருள்கவும்!

37 comments:

  1. வாங்கையா வாத்தியாரையா வரவேற்க வந்தோமையா...

    ReplyDelete
  2. நல்ல conceptல் ஒரு அறிமுகம். நன்றி

    ReplyDelete
  3. வாங்க வாங்க.. வகுப்புக் கண்மணிகளுக்கு சொல்லாட்டியும் வந்துருவோம்ல!!

    ReplyDelete
  4. ////குமரன் (Kumaran) said... வாங்கையா வாத்தியாரையா வரவேற்க வந்தோமையா.///

    முதலில் யார் வருகிறார் என்று ஆவலுடன் இருந்தேன்.
    அந்த திருப்பரங்ன்றக் குமரனின் பிரதிநிதியே வந்திருக்கிறார்!
    அதுவும் வாழ்த்துக்களுடன்!
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. ////ரவிசங்கர் said... நல்ல conceptல் ஒரு அறிமுகம். நன்றி///

    பாராட்டுவதற்கும் ஒரு நல்ல மனம் வேண்டும்.
    சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் மிஸ்டர் ரவிஷங்கர்
    நன்றி!

    ReplyDelete
  6. //// சேதுக்கரசி said..வாங்க வாங்க.. வகுப்புக் கண்மணிகளுக்கு
    சொல்லாட்டியும் வந்துருவோம்ல!! ////

    சொன்னாத்தான் வரமாட்டீங்க ஹி..ஹி..!
    என் வகுப்புக் கண்மணிகளைப் பற்றி எனக்குத் தெரியாதா?

    நான் எதிர் பார்த்தபடி, நீங்கள் தான் நமது வகுப்பறையின்
    சார்பில் முதலில் வந்திருக்கிறீர்கள்!
    நன்றி அரசியாரே!

    எங்கே அந்த டில்லிவாலா?
    (நாகேஷ் போட்டோவோடு
    வகுப்பிற்கு வருவாரே அவர்தான்)

    ReplyDelete
  7. 'அந்த வகுப்பு'-ல தான் பின் தங்கி இருக்கோம்.
    இங்காவது வந்து "வாங்க அய்யா"-னு சொல்லிடலாம் :)

    ReplyDelete
  8. //தென்றல் அவர்கள் சொல்லியது: 'அந்த வகுப்பு'-ல தான் பின் தங்கி இருக்கோம்.
    இங்காவது வந்து "வாங்க அய்யா"-னு சொல்லிடலாம் :)///

    யார் சொன்னது?
    நம் வகுப்பறையில் பின் தங்கியவர்கள்
    என்ற பேச்சுக்கே இட்மில்லை!
    எல்லோருமே வாத்தியாருக்கு முன்
    தங்கியவர்கள்தான்! (அமர்ந்திருப்பவர்கள்)

    ReplyDelete
  9. சுப்பையா ஐயா,
    பள்ளிகளில் விளையாட்டின் போது குழுக்களாக பிரிவார்கள்,

    கங்கை அணி, காவே அணி இப்படி பல குழுக்கள்.

    அது போல் பதிவுலகிலும் குழுக்கள் இருக்கிறது. எல்லாவற்றையும் இங்கே *ஒன்று*படுத்தியதற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  10. //G.K.Said: அது போல் பதிவுலகிலும் குழுக்கள் இருக்கிறது. எல்லாவற்றையும் இங்கே *ஒன்று*படுத்தியதற்கு பாராட்டுக்கள் //

    அட்டா, சிங்கைக்காரரைக் காணோமே
    என்றிருந்தேன். வந்து இரண்டு வரி பாராட்டியமைக்கு நன்றி!

    சரி, இந்தப் பதினெட்டுக் குழுக்களில்
    நீங்கள் எத்தனை குழுக்களில் இடம் பெற்றிருக்கிறீர்கள் - அதைச் சொல்லவில்லையே?

    ReplyDelete
  11. //அறிவியல், தொழில் நுட்ப விஷயமாக் என்ன
    கேள்விகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம்//

    ஐய்யய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க. எது பத்தி வேண்டுமானாலும் கேட்கலாம்.
    இந்தப் பதிவைப் பாருங்க.


    //எப்போதாவது நீங்கள் 11 பேர்களும் ஒன்றாக
    சந்தித்திருக்கிறீர்களா?
    அதேபோல உங்கள் குழுவில் உள்ள அனைவரும்
    சகக்குழு உறுப்பினரை நேரில் சந்தித்திருக்கின்றீர்களா?//

    என்னளவில் பதில் சொல்லறேன். நான் தினமும் சாட் செய்யும் நண்பர்கள் கூட இந்த குழுவில் இருந்தாலும் நான் யாரையுமே நேரில் பார்த்தது இல்லை.

    இப்படி கண்காணாமல் இருந்தும் கூட ஒரு சிறிய குழப்பம் கூட வராமல் செல்லும் இந்த பாங்குதான் எனக்கு ஆச்சரியம் அளிப்பது. Touch Wood!

    ReplyDelete
  12. //எங்கே அந்த டில்லிவாலா?
    (நாகேஷ் போட்டோவோடு
    வகுப்பிற்கு வருவாரே அவர்தான்//

    வாத்தியார் (அ) ஆசானே (அ) ஆசிரியரே,

    தங்களின் பெயரை சிந்தாநதி முன் மொழிந்ததும் முதல் பின்னூட்டமிட்டது தலைநகர மாணவந்தான்.
    நீங்க வந்தப்புறம் எங்களை தேடுவீங்க.. எங்க காணோம்னு.
    நாங்க நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சு ரெடியா ஜாலியா காத்துக்கிட்டிருக்கோம்

    :)))

    டெல்லிவாலா "சென்ஷி"

    ReplyDelete
  13. பா.க.ச.வ சேக்காததால உங்க மேல நம்ம்ம்பிக்கை, தும்பிக்கை இல்லா தீர்மானம் போடப்போறாங்களாம்.. எப்படி நம்ம குரூப்ப கரீக்டா மறந்தாச்சு.. :))

    (G.K. நான் சொல்ல வேண்டிய மேட்டர சொல்லிட்டாரு., அதான் நீங்க சொல்லாத மேட்டர நான் சொல்லிட்டேன் :) )

    சென்ஷி

    ReplyDelete
  14. :) நன்றி சுப்பையா சார் :)

    //ஆனால் சமையலைப் பற்றி உண்மையிலேயே
    அவருக்கு ஏதாவ்து தெரியுமா//
    பாலா சொல்ல சொன்னாரு சார், அவருக்குச் சமைக்கத் தெரியுமாம். ஆனால், அவர் சமைப்பதை உங்களால் சாப்பிட முடியுமான்னு கேட்டுட்டு வரச் சொன்னர் :-D

    - பாகச
    தலைமை ஔஅலுவலகம்
    சென்னை

    ReplyDelete
  15. //பாலாபாய் அவர்களை உங்கள் குழுவில் எப்படி
    சேர்த்துக் கொண்டீர்கள்?
    அவர் நல்லவர் - வல்லவர்
    அவருக்குச் சாப்பிடத் தெரியும், மற்றவர்களுக்கு
    விருந்து வைக்கத்தெரியும்!
    ஆனால் சமையலைப் பற்றி உண்மையிலேயே
    அவருக்கு ஏதாவ்து தெரியுமா?:-)))//

    சாரி,,,! இது ஒரு பாகச பதிவுன்னு தெரியாம உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.

    :)))


    சென்ஷி

    ReplyDelete
  16. //// இலவசக்கொத்தனார் said... //அறிவியல், தொழில் நுட்ப விஷயமாக் என்ன
    கேள்விகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம்//
    ஐய்யய்யோ அப்படி எல்லாம் இல்லைங்க. எது பத்தி வேண்டுமானாலும் கேட்கலாம்.
    இந்தப் பதிவைப் பாருங்க. ///

    முன்பு, ஹிந்து நாளிதழில் "Know Your English' என்று பகுதி வரும்
    சிறப்பாக இருக்கும். அதுபோல உங்கள் பதிவுகள் சிற்ப்பாக உள்ளன்

    சமையல் பண்றதுலே ஆரம்பிச்சு, கோட் எழுதறது, பதிவு போடறது, பல்
    தேய்க்கறதுன்னு ஆளாளுக்கு ஆயிரம் சந்தேகங்கள். இதை எல்லாம்
    தீர்த்து வைப்போம் என்று சொல்லியுள்ளீர்கள்
    மிக்க மகிழ்ச்சி!

    அப்படியே பதிவுகளில் உள்ள 'யுத்தப்" பதிவர்களைச்
    சமாதானப் படுத்தி ஒரு நிரந்தர அமைதிக்கு
    அவர்கள் அனைவரையும் கொண்டு வருவதற்கு
    ஏதாவது யோசனை சொல்ல முடியமா?
    நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்புள்ளது!:-))))))

    ReplyDelete
  17. //எப்போதாவது நீங்கள் 11 பேர்களும் ஒன்றாக
    சந்தித்திருக்கிறீர்களா?
    அதேபோல உங்கள் குழுவில் உள்ள அனைவரும்
    சகக்குழு உறுப்பினரை நேரில் சந்தித்திருக்கின்றீர்களா?//

    என்னளவில் பதில் சொல்லறேன். நான் தினமும் சாட் செய்யும்
    நண்பர்கள் கூட இந்த குழுவில் இருந்தாலும் நான் யாரையுமே
    நேரில் பார்த்தது இல்லை.

    இப்படி கண்காணாமல் இருந்தும் கூட ஒரு சிறிய குழப்பம் கூட
    வராமல் செல்லும் இந்த பாங்குதான் எனக்கு ஆச்சரியம்
    அளிப்பது. Touch Wood!///

    இதுதான் அனைவரின் நெஞ்சையும் தொடும் சாதனை!

    வாழ்க உங்கள் சேவைகள்! வளர்க உங்கள் ஒற்றுமை உணர்வு!!!

    ReplyDelete
  18. //// Shenshi said: நாங்க நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சு ரெடியா ஜாலியா காத்துக்கிட்டிருக்கோம்///

    வாத்தியார் வருகையில் அப்படி என்ன ஜாலி?
    ஒழுங்காகப் பாடம் நடத்தாமல் பையன்களுடன் சேர்ந்து
    கூத்தடிக்கும் வாத்தியார் என்றல்லவா மற்றவர்கள்
    நினைப்பார்கள்.

    என் பெயரை ரிப்பேர் செய்வது என்று எப்போது
    முடிவெடுத்தீர்கள்?

    ReplyDelete
  19. // SP.VR. சுப்பையா said...
    //// Shenshi said: நாங்க நீங்க வருவீங்கன்னு தெரிஞ்சு ரெடியா ஜாலியா காத்துக்கிட்டிருக்கோம்///

    வாத்தியார் வருகையில் அப்படி என்ன ஜாலி?
    ஒழுங்காகப் பாடம் நடத்தாமல் பையன்களுடன் சேர்ந்து
    கூத்தடிக்கும் வாத்தியார் என்றல்லவா மற்றவர்கள்
    நினைப்பார்கள்.

    என் பெயரை ரிப்பேர் செய்வது என்று எப்போது
    முடிவெடுத்தீர்கள்? //

    ஒரு ஆசிரியரை மாணவருக்கு பிடித்துப்போக மாணவர்களுடன் சேர்ந்து கூத்தடிக்க வேண்டுமென்பது அவசியமில்லை. மாணவர்களுக்கு பிடித்தமான பாடத்தை எடுப்பதும் அவ்வகையே :))

    இன்றைய பாடம் பாகசவுடன் ஆரம்பமாகியுள்ளதால் மாணவர்களாகிய பாகச கிளை, வேர், இலை மற்றும் இத்யாதிக்கள் சந்தோஷமடைந்துள்ளனர். :))

    சென்ஷி

    ReplyDelete
  20. ////// பொன்ஸ் said...
    பாலா சொல்ல சொன்னாரு சார், அவருக்குச் சமைக்கத்
    தெரியுமாம். ஆனால், அவர் சமைப்பதை உங்களால்
    சாப்பிட முடியுமான்னு கேட்டுட்டு வரச் சொன்னர் ////

    நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
    சரி, நான் வருகிறேன்! அவரிடம் சொல்லி
    விடுங்கள்
    எதற்கும் எங்கள் குடும்ப வைத்தியரையும்
    உடன் கூட்டிக் கொண்டே வருகிறேன்
    கோவைக்குத் திரும்ப முடியாமல் ஆகிவிடக்
    கூடாது. இல்லையா - அத்னால்!

    எங்கே சந்திக்க வேண்டுமாம்?
    நடேசன் பூங்காவா?
    அல்லது தேனாம்பேட்டை அலுவலகத்திலா?
    ப்ளீஸ், அதையும் கேட்டுச் சொல்லி விடுங்கள்

    ReplyDelete
  21. ////மதுரையம்பதி said...
    உள்ளேனய்யா!////

    என்ன மதுரையம்பதி, இது பத்திரிக்கை அலுவ்லகம் - இங்கே
    வந்தும் நீங்கள் வகுப்பறையை
    மறக்கவில்லையே?

    பதிவைப் படித்தீர்களா?
    18 குழுக்களையும் சேர்த்து மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள் என்று பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்
    அடுத்தவாரம் Class Test உண்டு!:-))))

    ReplyDelete
  22. வணக்கம் ஆசிரியர் ஐயா.

    கூட்டுப்பதிவுகள் சிலதில் கூட்டு சேர்ந்து இருந்தாலும், அங்கே கூத்தடிக்காமக்
    கொஞ்சம் பதுங்கி(!!) இருக்கறதாலேதான் உங்க பதிவைப் படிச்சுட்டு சத்தமில்லாம
    நகர்ந்துட்டேன்.

    விக்கிப் பசங்க தலைவரை, நம்ம கோபால் சந்திச்சு இருக்கார். அதைவேணா
    என் கணக்குலே சேர்த்துக்கவா?

    துண்டு பத்திரமா இருக்குதா? :-)))

    ஒன்று பட்டால் நல்லதுதான் . (ஊர்) ரெண்டுதான் படக்கூடாது. இல்லீங்களா?

    ReplyDelete
  23. வா வாத்யாரே பதிவாண்ட
    நீ வராங்காட்டி வுடமாட்டேன்னு இழுத்திட்டு வந்துட்டாங்களா? நல்லதுதான்.

    குழுப்பூக்களைப் பத்திச் சொல்லியிருக்கீங்க. புழுப்பூக்களுக்கு நடுவுல குழுப்பூக்கள் மலர்ந்து நல்லதைச் செய்கிறதுன்னா நல்லதுதானே.

    நான் பங்குபெறும் குழுப்பூக்களும் இங்கு குறிப்பிட்டிருக்கின்றீர்கள்.

    சொல்லொரு சொல், முருகனருள், தமிழ்ச்சங்கம் என்று மூன்று பூக்கள். தமிழுக்கும் தமிழ்க்கடவுளுக்கும் உயர்வு செய்யும் இந்தக் குழுக்களில் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். மற்ற வலைக்குழுப்பூக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். செய்வன சிறந்தோங்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. ///துளசி கோபால் அவர்கள் சொல்லியது: வணக்கம் ஆசிரியர் ஐயா.
    ஒன்று பட்டால் நல்லதுதான் . (ஊர்) ரெண்டுதான் படக்கூடாது. இல்லீங்களா?///

    உண்மைதான் சகோதரி!
    ஒரு இரண்டு மணி நேரம் உட்கார்ந்து
    ஆய்வு செய்த போதுதான் மலைப்பாக இருந்தது.
    குழுக்களைப் பற்றியும், அவர்களுடைய உறுப்பினர்கள் எண்ணிக்கை
    பற்றியும். பலரும் பல தேசங்களில் வசித்தாலும், நேரம் காலம்
    பார்க்காமல் எடுத்த பணியைச் செம்மையாகச் செய்வது பற்றியும்
    முழுமையாகத் தெரிந்து கொண்டேன்
    அவர்களைப் பாராட்டும் முகமாகத்தான், ஆசிரியர் வாரத்தில்
    முதல் பதிவில் அவர்களைப் பற்றி எழுதினேன்.
    நன்றி சகோதரி!

    ////துண்டு பத்திரமா இருக்குதா? :-))) ///

    விடுவேனா? அதைப் பார்த்துக் கொள்ள கூடவே
    என் மாணவக் கண்மணிகள் இருவரைக் கூட்டிக்
    கொண்டு வந்துள்ளேன்:-))))

    ReplyDelete
  25. //விடுவேனா? அதைப் பார்த்துக் கொள்ள கூடவே
    என் மாணவக் கண்மணிகள் இருவரைக் கூட்டிக்
    கொண்டு வந்துள்ளேன்:-))))//

    உள்ளேன் ஐயா :)))

    சென்ஷி

    ReplyDelete
  26. ///G.Raghavan Said:சொல்லொரு சொல், முருகனருள்,தமிழ்ச்சங்கம் என்று மூன்று பூக்கள். தமிழுக்கும் தமிழ்க்கடவுளுக்கும் உயர்வு செய்யும் இந்தக் குழுக்களில் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். மற்ற வலைக்குழுப்பூக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். செய்வன சிறந்தோங்க வாழ்த்துகள். //

    உங்கள் பெயரிலேயே ஜிரா இருக்கிறது
    அதனால் எழுதுவதும் இனிப்பாக இருக்கிறது:-)))

    ReplyDelete
  27. 'சூப்பர் சுப்பையா'சார் :)
    கலக்கிட்டீங்க. பிரிந்துகிடக்கும் நம்மை ஒன்றாய் இணைகும் குழுப் பதிவுகள் மிகவும் அவசியம்.

    நான் 6 குழுக்களில் இருக்கீறேன் (அம்மாடியோவ்) உங்க லிஸ்ட்ட்ட பாத்தாஇறகுதான் விடியுது.:)
    உருப்படியா ஒன்றிரண்டில்தான் செயல்படுகிறேன். :(

    கடவுள் வாழ்த்து எனும் குழு துவக்க நிலையிலேயே உள்ளது.

    சற்றுமுன் பற்றிய பாராட்டுக்கு குழுவின் சார்பில் நன்றி.

    கடல்கன்னி கன்னியாகுமரி மாவட்டத்தை பற்றிய பதிவு. கொஞ்சம் மெதுவாகத்தான் ஓடுகிறது.

    ReplyDelete
  28. /எல்லோருமே வாத்தியாருக்கு முன்
    தங்கியவர்கள்தான்! (அமர்ந்திருப்பவர்கள்)
    /
    /உங்கள் பெயரிலேயே ஜிரா இருக்கிறது
    அதனால் எழுதுவதும் இனிப்பாக இருக்கிறது:-)))
    /

    சார் (வகுப்பறையில்தான் நீங்கள் அய்யா...), தமிழ் வகுப்பும் எடுக்கும் எண்ணம் உண்டோ? கலக்குங்க!!

    ReplyDelete
  29. குருவே,

    அருமையான பதிவு. இவ்வளவு குழுக்களையும் தொகுத்து தந்ததிற்கு உங்கள் வகுப்பு மாணவர்கள் சார்பாக நன்றி.

    ராஜகோபால்

    ReplyDelete
  30. நல்ல பதிவு...
    என்னத்தான் யாரும் எந்தப் பதிவிலையும் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்களேப்பா!!!!
    ஹி... ஹி... சும்மா ஜோக்கு!!! ;)

    ReplyDelete
  31. ////// சிறில் அலெக்ஸ் said... 'சூப்பர் சுப்பையா'சார்
    கடவுள் வாழ்த்து எனும் குழு துவக்க நிலையிலேயே உள்ளது.
    சற்றுமுன் பற்றிய பாராட்டுக்கு குழுவின் சார்பில் நன்றி./////

    உங்களுடைய மனம் உவந்த பாராஅட்டிற்கு நன்றி மிஸ்டர்
    சிறில் அலெக்ஸ்!

    ReplyDelete
  32. ///// தென்றல் said...
    சார் (வகுப்பறையில்தான் நீங்கள் அய்யா...),
    தமிழ் வகுப்பும் எடுக்கும் எண்ணம் உண்டோ?
    கலக்குங்க!!/////

    வகுப்பறை என்றால் தமிழ் இல்லாமலா?
    நன்றி மிஸ்டர் தென்றல்!

    ReplyDelete
  33. //// Rajagopal said...
    அருமையான பதிவு. இவ்வளவு குழுக்களையும் தொகுத்து
    தந்ததிற்கு உங்கள் வகுப்பு மாணவர்கள் சார்பாக நன்றி.
    ராஜகோபால////

    நமக்கு நாமே நன்றி சொல்லிகொள்ளலாமா?:-)))

    ReplyDelete
  34. ///// மயூரேசன் Mayooresan said... நல்ல பதிவு...
    என்னத்தான் யாரும் எந்தப் பதிவிலையும் சேர்த்துக்க
    மாட்டேங்கிறாங்களேப்பா!!!!
    ஹி... ஹி... சும்மா ஜோக்கு!!! ////

    அதுதானே பார்த்தேன்:-))))
    நன்றி மயூரேசன்!

    ReplyDelete
  35. வாத்தியார் அய்யா, எங்கள் திராவிட தமிழர்கள் குழு பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி, எங்கள் குழுமத்தில் 70+ உறுப்பினர்கள் உள்ளனர், எங்கள் வலைப்பதிவிற்கு பலரும் கட்டுரைகள் எழுதித்தருகின்றனர், அந்த 5 உறுப்பினர்கள் வெறும் நிர்வாகிகள் மட்டுமே, தள நிர்வாகத்தை செய்து வருகிறார்கள் அவ்வளவே, இன்னமும் நிறைய கட்டுரைகள் வெளியிட முயற்சிக்கின்றோம், அடுத்த முயற்சிகள், அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியெல்லாம் தெரிவிக்கின்றோம், கட்டுரைகளை மிகவும் தேர்ந்தெடுத்து தான் போடுகின்றோம்... அதனாலேயே எங்கள் பதிவில் கட்டுரைகள் சற்று குறைவாகவே உள்ளன

    நன்றி

    ReplyDelete
  36. ///குழலி அவர்கள் சொல்லியது: வாத்தியார் அய்யா, எங்கள் திராவிட தமிழர்கள் குழு பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி, எங்கள் குழுமத்தில் 70+ உறுப்பினர்கள் உள்ளனர், எங்கள் வலைப்பதிவிற்கு பலரும் கட்டுரைகள் எழுதித்தருகின்றனர், அந்த 5 உறுப்பினர்கள் வெறும் நிர்வாகிகள் மட்டுமே, தள நிர்வாகத்தை செய்து வருகிறார்கள் அவ்வளவே, இன்னமும் நிறைய கட்டுரைகள் வெளியிட முயற்சிக்கின்றோம், அடுத்த முயற்சிகள், அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியெல்லாம் தெரிவிக்கின்றோம், கட்டுரைகளை மிகவும் தேர்ந்தெடுத்து தான் போடுகின்றோம்... அதனாலேயே எங்கள் பதிவில் கட்டுரைகள் சற்று குறைவாகவே உள்ளன ////

    ஆகா வாருங்கள் குழலியாரே!
    உங்கள் விளக்கத்திற்கு நன்றி!

    இப்போது நிர்வாகத்தில் இருக்கும்
    நீங்கள் 5 பேர்களே 100 பேர்களுக்குச் சமம்!

    லக்கியார் ஒருத்தர் போதாதா?:-))))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது