07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 29, 2007

எழுத்து என்பது...

வணக்கம் நண்பர்களே!

மற்றுமோர் அவதாரம். வலைச்சரத்தின் இந்தவாரத் தொகுப்பாசிரியராக.

வலைச்சரத்தின் ஆசிரியர் சிந்தாநதியிடமிருந்து, சென்றவாரத்தில் தேடிவந்த இப்பொறுப்பை, பணிகள் காரணமாக இவ்வாரத்திற்கென மாற்றிக் கொண்டேன். ஆனால் இப்போது நினைக்கின்றேன் சென்ற வாரமே செய்திருக்கலாம் என. காரணம், சென்றவாரத்தில் ஆசிரியராக இருந்த, சுப்பையா ஆசிரியர், அந்தளவுக்குச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சும்மா, சிலம்பம், கம்பு, வாள், எனப் பந்தாவாக, பக்காவாகச் சுழற்றி விளையாடியிருக்கிறார். அப்படி ஆர்ப்பாட்டமாக விளையாடிய களத்தில் , மருள விழித்தபடி நான். என்ன செய்யப்போகின்றேனோ?... எனும் ஒருவித அச்சத்துடனேயே வந்திருக்கின்றேன்.


என்னைப்பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. என்னசெய்யலாமென்பதை மட்டுமே இப்போது பேசலாமென் றெண்ணுகின்றேன்.


வலைப்பதிவில் எழுத வருவதென்னவோ பலருக்கும் உள்ளதைப் போன்ற ஒருவித ஆசையில்தான். ஆனால் அதே ஆசையில்தான் தொடர்கிறோமா? இல்லையென்றே எண்ணுகின்றேன். ஏனெனில் ஆசையில் எழுதுவதென்றால் அது ஒருகாலத்தின்பின் சலித்துவிடும். ஆனால் ஆசையால் எழுதுவதென்பது தொடரக் கூடியது. என்ன ஆசையால் என்பது அவரவர் விருபத்தேர்வு. ஆனால் ஒடுக்கப்படுகின்ற மக்களின் ஆசையென்பது விடுதலை நோக்கியதாகவே இருக்கும்.

சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க விரும்பும் ஆசையால் எழுதுபவர்களுக்கு,
எழுத்து, வெறும் ஊட்டமல்ல
எழுத்து, வெறும் சுவாசமல்ல
எழுத்து, வெறும் நேசமல்ல
எழுத்து வெறும் இயக்கமல்ல
எழுத்து வெறும் ஆயுதம் அல்ல

எழுத்து, ஒரு போராட்டம்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நேசித்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும், ஒரு போராட்டம். அதை எழுதும் எல்லோரும், ஒரு சமூகப் போராளி. அப்படியாக நான் அடையாளங் கண்டு கொண்ட எழுத்துக்கள் சிலவற்றை இவ்வார வலைச்சரத்தில் தொடுக்க எண்ணியுள்ளேன், தொடரும் உங்கள் ஆதரவுக் கரங்களை இறுகப் பற்றியவாறே.....

11 comments:

 1. //ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நேசித்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும், ஒரு போராட்டம். அதை எழுதும் எல்லோரும், ஒரு சமூகப் போராளி. அப்படியாக நான் அடையாளங் கண்டு கொண்ட எழுத்துக்கள் சிலவற்றை இவ்வார வலைச்சரத்தில் தொடுக்க எண்ணியுள்ளேன், தொடரும் உங்கள் ஆதரவுக் கரங்களை இறுகப் பற்றியவாறே..... //


  :)) ...இறுகிப் பிடித்த பிடியில் ஏராளமான எதிர்பார்ப்புகளுடன்

  சென்ஷி

  சென்ஷி

  ReplyDelete
 2. ///எழுத்து, வெறும் ஊட்டமல்ல
  எழுத்து, வெறும் சுவாசமல்ல
  எழுத்து, வெறும் நேசமல்ல
  எழுத்து வெறும் இயக்கமல்ல
  எழுத்து வெறும் ஆயுதம் அல்ல

  எழுத்து, ஒரு போராட்டம்.///

  உண்மைதான் திருவாளர் மலைநாடன் அவர்களே!

  எழுத்து என்பது போராடும் உள்ளத்தின் வெளிப்பாடு!
  போராட்டத்தைப் பார்க்கும் உள்ளத்தின் வெளிப்பாடு!

  அப்படிப்பட்ட வெளிப்பாடுதான் சிறப்பாக இருக்கும்

  "சுற்றும்வரை உலகம்
  எரியும்வரை நெருப்பு
  பொராடும்வரை மனிதன்"
  என்றான் ஒரு கவிஞன்

  சிறப்பான கட்டுரைகளைத் தாருங்கள்
  வாழ்த்துக்களுடன்,

  அன்பன்
  SP.VR.சுப்பையா

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் மலைநாடன்..

  அடுத்த சுழல் விளையாட்டுக்காக காத்திருக்கிறேன் இந்த வாரம் :)

  ReplyDelete
 4. ம்ம்ம்ம்ம்ம்ம் ஆட்டம் ஆரம்பிக்கட்டும்.

  போராட்டத்தைச் சொன்னேன்:-)))

  ReplyDelete
 5. சென்ஷி!

  ரொம்ப எதிர்பார்க்காதீங்க...:)) நன்றி

  SP.VR.சுப்பையா !

  நன்றி ஐயா. நிச்சயமாக உங்கள் அளவுக்கு முடியாது. முயற்சிக்கின்றேன்,:)

  பொன்ஸ்!
  வாங்க வாங்க. தொடர்ந்து வாங்க: நன்றி.

  துளசிம்மா!

  வாங்க. ஆட்டத்தை உங்களில இருந்துதான் ஆரம்பிக்க நெனச்சேன். அப்புறம் பாதை மாறிடிச்சு. பார்ப்போம். நன்றி

  ReplyDelete
 6. மறுபடி பேச உள்ளே வந்தேன். நீங்கள் வலைச்சரம் வழியாகப் பேசுவதைக் கேட்க ஆவலோடிருக்கிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. //எழுத்து, ஒரு போராட்டம்.///

  மலைநாடர்!
  அந்த போராட்டம் காண நாட்டம்!
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வாருங்கள் மலைநாடான். வாழ்த்துக்கள்.
  எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

  ஊரோடி பகீ

  ReplyDelete
 9. யோகன்!, பகி!

  வருகைக்கும், ஊட்டத்திற்கும், நன்றி.

  ReplyDelete
 10. மலை,

  /* வலைப்பதிவில் எழுத வருவதென்னவோ பலருக்கும் உள்ளதைப் போன்ற ஒருவித ஆசையில்தான். ஆனால் அதே ஆசையில்தான் தொடர்கிறோமா? இல்லையென்றே எண்ணுகின்றேன். ஏனெனில் ஆசையில் எழுதுவதென்றால் அது ஒருகாலத்தின்பின் சலித்துவிடும். ஆனால் ஆசையால் எழுதுவதென்பது தொடரக் கூடியது. என்ன ஆசையால் என்பது அவரவர் விருபத்தேர்வு. */

  என்ன சொல்ல முனைகிறீர்கள்? நீங்கள் மேலே சொல்லியுள்ளதில் ஒரு துளியும் எனக்கு விளங்கவில்லை.

  "ஏனெனில் ஆசையில் எழுதுவதென்றால் அது ஒருகாலத்தின்பின் சலித்துவிடும்."

  என்கிறீர்கள், பின்னர்,
  "ஆனால் ஆசையால் எழுதுவதென்பது தொடரக் கூடியது."

  குழப்பமாக இருக்கிறதே!

  ஆசையால் என்பதற்கும் ஆசையில் என்பதற்கும் என்ன வித்தியாசம்?

  ReplyDelete
 11. தமிழ்நதி!

  வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், நன்றி.


  வெற்றி!

  உங்கள் கேள்வி நியாயமானதே. அது சற்றுக் குழப்பமாகவே தெரிகிறது. நான் சொல்வது, எழுதவேண்டும் எனும் ஆசையில் தொடங்குவது சலிப்பு வரும்போது நின்றுவிடும். ஆனால், ஒரு இலக்கை அடைய வேண்டும் எனும் ஆசையால், நோக்கத்தால் எழுதுவது தொடரும் என்பதையே அவ்விதமே சொல்லியுள்ளேன்.

  நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது