07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 15, 2007

நானா? 'வலைச்சரம்' தொடுக்கிறேனா?

நானா? வலைச்சரம் தொடுக்கிறேனா? - வாவ்.. ஆச்சரியம்தான். போன வாரம் 'மின்மினி'க்கு மெயிலில் வந்த கருத்துக்களை படித்துக் கொண்டிருக்கையில், 'சிந்தாநதி'யிடமிருந்து, 'சமீபத்தில் நான் ரசித்த ப்ளாக்' என்பதற்கான பின்னூட்டத்தில், 'மின்மினி'யின் மெயில் முகவரி கேட்டிருந்தார்.

என்னடா இது, மனுசன் கமெண்ட் ஏதும் போடாம, தனியா மெயில் முகவரி கேட்டிருக்காரே, என்ன விசயமாயிருக்கும்?னு மண்டை குடைஞ்சது. 'ஏதாவது, தனியா மெயில்ல கூப்பிட்டு அர்ச்சனை பண்ணிடுவாரோ-ன்னு ஒரு சின்ன கிலியும்தான். :). 'காசா, பணமா அனுப்பி வை'-ன்னு பட்சி சொன்னதுல, அனுப்பி வச்சா, 'வருகின்ற வாரத்துக்கு வலைச்சரத்தின் ஆசிரியரா இருக்க முடியுமா?'ன்னு கேட்டிருந்தார். 'கரும்பு திங்க கூலி கொடுக்கிறேங்கிறார்', வேணாமுன்னு உட்டுடுவோமா என்ன?' , கபக்-னு புடிச்சுட்டேன். பதிவுகளின் படைப்பாளன் என்பதை விட, பதிவுகளின் படிப்பாளன் என்பது எனக்குப் பிடித்த ஒன்று.

நாளொன்றுக்கு குறிப்பிடத்தக்க அளவில், புதிய ப்ளாக்குகள் அறிமுகமாகிற வேளையில், 'வலைச்சரம்' போன்ற முயற்சிகள் நல்ல எழுத்துக்களைப் 'பத்தோடு பதினொன்றாய்'ப் போய்விடாமல், எல்லோரும் அறிய இனம் காட்ட கண்டிப்பாய் உதவும். இது போன்ற எண்ணம், எனக்கும் உண்டு. அவ்வகை எண்ணத்தின் பிரதிபலிப்புதான் 'மின்மினியில்' நானெழுதிய 'சமீபத்தில் நான் ரசித்த புதிய ப்ளாக்' மற்றும் 'சமூகப்பொறுப்புணர்த்தும் பதிவுகள்' போன்றன.

தமிழ்மணத்திலும், தேன்கூட்டிலும் புதிய வலைப்பூக்கள் அறிமுகப் பகுதி, எனக்குப் பிடித்த ஒன்று. தமிழ்மணத்தில் போர்க்களமாய் இருந்த, சில சந்தர்ப்பங்களில், இம்மாதிரி புதியவர்களின் அறிமுகங்கள் சில, குழந்தையின் வருகையாய் மகிழ்ச்சியளித்ததுண்டு.

இந்த வலைச்சரத்தின் முக்கிய நோக்குகளின் ஒன்று, புதியவர்களை அறிமுகம் செய்வதும்! ஸ்டார் பதிவர்களின் படைப்புகளுக்கு முன்பு, 'நமது பதிவுகளுக்கும் அங்கீகாரம் கிடைக்காதா?' என்ற புதியவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கும் வலைச்சரத்தின் பங்கு பாராட்டுக்குரியது, இதனைத் தான் மட்டுமே செய்யாது, வலைஞர்களின் பங்களிப்போடு, செய்ய முயற்சித்திருக்கும், சிந்தாவுக்கு ஒரு 'ஸ்பெஷல்' பாராட்டு.

'பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?'ங்கிற விதமாய், நல்ல எழுத்துக்கள் எங்கிருந்தாலும் அடையாளம் காணப்பெறும்' என்று வாளா இருக்காமல், அதனை இனம் காட்ட முயற்சிக்கும் வலைச்சரத்திற்கு, என்னை இவ்வவர தொகுப்பாசிரியராக்கிய சிந்தாவுக்கு நன்றியுடன் தொடங்குகிறேன், இந்த வாரத்தினை.

கூடவே வாங்க, என்னோட பார்வையில இந்த வலைப்பூக்களைக் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாம்.

3 comments:

 1. உங்களைப்போல் சீனியர்களால்தான் எங்களைபோல் ஜூனியர்களும் மற்றவர்களுக்கு அறிமுகமாகின்றார்கள். :-)

  ReplyDelete
 2. பக்கப்பட்டை வண்ணத்த கொஞ்சம் மாத்துங்க சிந்தாநதி ..அடிக்கிற வண்ணமா இருக்கு

  ReplyDelete
 3. ரவி

  கொஞ்ச நேரம் மாத்தி மாத்தி போட்டு திருப்தி வராம விட்டுட்டுப் போனது..பார்க்கிறேன்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது