07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 29, 2007

குறிஞ்சி பூக்கும் வாரம்

வாத்தியார் ஒரு வாரத்தில் 9 பதிவுகள் இட்டு சாதனையே செய்து விட்டார். வாத்தியாரும் அவரது மாணவர்களுமாக வலைச்சரத்தை கலகலப்புக் கூடாரமாக்கி மகிழ்வித்து விட்டார்கள். ஒரு வாரம் சென்றதே அறிய முடியாமல் சுடச்சுட பதிவுகள் இட்டு வலைச்சரம் தொடுத்த வலைப்பதிவு வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு நன்றி.

விதவிதமாக தொகுப்புகள் இட்டு மகிழ்வித்தார். நண்பர்கள் சுட்டிக் காட்டியபடி பல தலைப்புகளில் வலைப்பதிவுகள் என்பதை தமிழ்மணத்தைச் சுட்டியே கூறியது அவர் தமிழ்மணத்திலிருந்தே தொகுப்புகளை தேர்ந்தெடுத்தார் என்பதனால் என்று தோன்றுகிறது. வலைப்பதிவு அறிமுகம் இல்லாமல் பதிவு வந்திருக்கிறதே என்று இன்னும் சில நண்பர்கள் என்னிடம் கேட்டனர். தன் கோட்டாவை நிறைவு செய்த பின்னரே வலைப்பதிவு அறிமுகம் இல்லாத ஒரு பதிவை இட்டார். அது கூட சுவையான சில தகவல்களோடு தான். அவர் வலைச்சரத்தை மாறுபட்ட முறையில் அணுகி நிறைய உழைப்புகளோடு தொகுத்து தந்திருக்கிறார். மிக்க நன்றி ஐயா.

அடுத்து உங்களுக்கு வலைச்சரம் தொடுத்துத் தர வருகிறார் குறிஞ்சிமலர் மலைநாடான். இணையத்தில் இன்பத்தமிழ் என்னும் வானொலி நிகழ்ச்சி மூலம் தமிழ் வலைப்பதிவுகளின் அறிமுகத்தை வான்வெளியில் பரப்பிவரும் இவர் தன் வலைப்பதிவுகளுக்கும் குறிஞ்சி, முல்லை, நெய்தல் என தமிழ் திணைப் பெயர்களால் அழகுற அமைத்து கிராமிய மணத்துடன் படைப்புக்களை தந்து வருகிறார்.

மலைநாடானுடன் இணைந்து அடுத்த ஒரு வாரகாலம் வலைச்சர வாசம் வாசித்து சுவாசிப்போம்.

2 comments:

  1. மலைநாடான் அவர்களே வருக!
    மனம்நிறை பதிவுகளைத் தருக!

    ReplyDelete
  2. //ஒரு வாரம் சென்றதே அறிய முடியாமல் சுடச்சுட பதிவுகள் இட்டு வலைச்சரம் தொடுத்த வலைப்பதிவு வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு நன்றி.//

    உண்மைதான். இவருக்காகவே ஞாயிறு கூட தமிழ்மணம் எட்டிப்பார்த்தேன். ஒருவாரம் இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதா?


    //SP.VR. சுப்பையா said...
    மலைநாடான் அவர்களே வருக!
    மனம்நிறை பதிவுகளைத் தருக!//

    ரிப்பீட்டே....

    சென்ஷி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது