07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 19, 2007

காமெடி கலக்கல்ஸ்

ஒரு முறை நம்ம வலைவாத்தியார் SP.VR சுப்பையா அவர்கள் வலைப்பதிவுகளிலே எவ்வகையான பதிவுகள் அதிகம் படிக்கப் படுகிறது என்று ஒரு சர்வே போட்டிருந்தார். பெரும்பாலான பேர் எதை தெரிவு செய்திருப்பாங்கன்னு நினைக்கிறீங்க?... 'நகைச்சுவை..நையாண்டி'-யைத்தான் கணிச்சிருந்தீங்கன்னா உங்களுக்கு நீங்களே 'ஒரு சபாஷ்' போட்டுக்கங்க.

நகைச்சுவையை ரசிக்கிறது எளிது, ஆனா, நகைச்சுவையா எழுதுறது அவ்வளவு சுலபமில்லை. இதுலயும் நம்ம மக்கள், புகுந்து விளையாடி வலைப்பூவை ஜாலிப்பூவாக்கி விடுறாங்க.

அபிஅப்பாவோட 'அஞ்சு ஜார்ஜும் அபிபாப்பாவும்' படிச்சீங்களா? பாப்பாவின் குறும்போட, இவரது குறும்பையும் சேர்த்து சுவாரஸ்யமா சொல்லியிருப்பாரு. படிச்சதில்லைன்னா, படிச்சுப் பாருங்க, உங்க வயிறு, சிரிச்சுசிரிச்சு புண்ணாகிறதுக்கு நான் கியாரண்டி.

பொதுவாக பெண்கள், அழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அளவுக்கு நகைச்சுவைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க, (இப்படிச் சொல்லி, எதுவும் வாங்கி கட்டிக்கப் போறேனோ?) அப்படிங்கிற நினைப்பை, தகர்க்கிற மாதிரி இருந்தது கண்மணியோட 'ச்சுப்ரமணிக்கு இனிஷியல்' பதிவு.

தலைப்பிலேயே உள்ள இழுத்து வச்சு, படிக்க வைக்கிறதும் ஒரு கலைதான். அந்த வகையில 'குட்டின்னாலே தனி 'கிக்'குதான்' ஜொள்ளுபாண்டியும் தன்பங்குக்கு ஜாலியா ஜொள்ளுவிட்டிருக்காரு. ஜொள்ளுவிட்டுட்டே படிங்க. :)).

ஜாலியா எழுதுறதுல ரொம்ப முக்கியமா குறிப்பிட வேண்டிய ஒருத்தர் இருக்கார், இவரோட எழுத்தோ, இல்ல எழுத்துக்கு கிடைச்ச பின்னூட்டமோ, ஏதோ ஒன்னு இவர தமிழ்மண முகப்புல காட்டிகிட்டே இருக்கும். அந்த அளவுக்கு வசீகரிச்சு வச்சிருக்கார், யாரைச் சொல்ல வாரேன்னு வழக்கமா தமிழ்மணம் படிக்கிறவங்க தெரிஞ்சிருப்பீங்க.. , சமீபமா இவெரெழுதின உள்குத்து பதிவும், வழக்கமான அவரது பதிவு போல சிறப்புதான்.

கலாய்க்கிறதுக்குன்னே பதிவு ஆரம்பிச்சு, கலாய்ச்சிகிட்டு இருக்காரு இவரு. அவரோடபதிவுகளும் ஜாலியா இருக்கும்.

இன்னும் நிறைய மக்கள் ஜாலியா எழுதுறாங்க, சிலர் ஜாலியா பின்னூட்டத்தில கதைக்கிறாங்க, நீங்க உங்களுக்கு தெரிஞ்ச பிற ஜாலிப் பதிவர்களையும் குறிப்பிடுங்களேன், பின்னூட்டத்தில்.

16 comments:

 1. 1. அபி அப்பா
  2. வெட்டிப்பயல்
  3. கலாய்த்தல் சிபி
  4. இம்சை
  5. கண்மனி
  6. ஜொள்ளு
  7. தம்பி

  சென்ஷி

  பி.கு:- நான் எனக்கு நம்பர் போட்டுக்கல... :))

  ReplyDelete
 2. கலாய்த்தலுக்கும் காமெடி கலக்கலில் இடம் கொடுத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி!

  :))

  டுபுக்கு என்ற பதிவரை விட்டு விட்டீர்கள் போலும்.

  ReplyDelete
 3. சென்ஷி,

  இம்சையோட பதிவு லின்க் கொடுக்கீறீங்களா?

  நன்றி

  ReplyDelete
 4. சிபி,

  ஆமாம் சிபி, டுபுக்குவை நினைவுறுத்தியதற்கு நன்றி,

  http://dubukku.blogspot.com/2006/03/blog-post_20.html

  ReplyDelete
 5. எந்தப் பதிவானாலும் சுண்டியிழுக்கும் தலைப்பு முக்கியம்!
  அதைவிட முக்கியம் சனி, நாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பதிவிட வேண்டாம்.
  ஆணி பிடுங்கும் நாட்களில் மட்டும்தான் இடை இடையே நம்து மக்கள் பதிவுகளைப் படிப்பது வழக்கம்!
  ஆகவே திங்கள் to வெள்ளி பதிடுவது உத்தமம்!

  ReplyDelete
 6. இம்சைய தெரியாதா..
  அவரு மொக்கயில Ph.D வாங்கினவருங்க. :))
  செந்தமிழ் ரவிதான்
  நானும் டுபுக்கு - இளவஞ்சியை மறந்துட்டேன். சரியான நக்கல் பார்ட்டி. அப்புறம் வ.வா.ச., பாகச., இதெல்லாம தனி குரூப்பா சுத்துறவங்க :))

  சென்ஷி

  ReplyDelete
 7. இம்சை(?!)யின் லிங்க் :
  http://imsai.blogspot.com/

  சென்ஷி

  ReplyDelete
 8. மிக்க நன்றி சிவா!

  http://dubukku.blogspot.com/2006/03/blog-post_20.html
  நம்ம டுபுக்கர் எங்கே நான் எங்கே?

  ReplyDelete
 9. அது போல் "எல்லே ராம்" சார் எங்கே நான் எங்கே?

  http://losangelesram.blogspot.com/

  ReplyDelete
 10. நல்ல லிஸ்டுங்கோ.

  டுபுக்கு
  கைப்புள்ள
  யேஸ். பாலபாரதி
  (பாலா கலாய்க்கலைன்னாலும் நாங்க கலாய்ப்போம்ல.. இவண், பா.க.ச)

  ReplyDelete
 11. நம்மலையும் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சிவா...

  நகைச்சுவை பின்னூட்டம்னா டாப் நாகை சிவா...

  ReplyDelete
 12. //ஆணி பிடுங்கும் நாட்களில் மட்டும்தான் இடை இடையே நம்து மக்கள் பதிவுகளைப் படிப்பது வழக்கம்!
  ஆகவே திங்கள் to வெள்ளி பதிடுவது உத்தமம்!//

  சூப்பர் டிப்ஸ் சுப்பையா சார், புதுசா வர்ரவங்களுக்கு உதவும்!

  ReplyDelete
 13. //ஆணி பிடுங்கும் நாட்களில் மட்டும்தான் இடை இடையே நம்து மக்கள் பதிவுகளைப் படிப்பது வழக்கம்!
  ஆகவே திங்கள் to வெள்ளி பதிடுவது உத்தமம்!//

  சூப்பர் டிப்ஸ் சுப்பையா சார், புதுசா வர்ரவங்களுக்கு உதவும்!

  ReplyDelete
 14. மேலும் சில பதிவர்களை சுட்டியதற்கு நன்றி, அபிஅப்பா, சென்ஷி, சேதுக்கரசி,சிபியாரே!

  நகைச்சுவை பின்னூட்டத்திற்கு நாகை சிவா என்ற தகவலைத்தந்தமைக்கு நன்றி பாலாஜி,

  ReplyDelete
 15. 1. தேவ்
  2. ஜி
  3. ஷயாம் (இவர் இன்னும் தமிழ்மணத்திலே சேர்க்கலை)
  4. இம்சைஅரசி

  இன்னும் லிஸ்ட் இருக்கு... திரும்ப வாறேன் ;)

  ReplyDelete
 16. வாங்க.வாங்க ராம், கொடுங்க..கொடுங்க..இன்னும் லிஸ்ட் பெருகட்டும்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது