தமிழ்மணத்தை கலகலக்கவைக்கும் வ.வா. சங்கம்!
============================================================ தமிழ்மணத்தை கலகலக்க வைக்கும் வ.வா. சங்கம்!
தமிழ்மணத்தில் நான் தேடிச் சென்று, அல்லது ஓடி சென்று
பார்க்கும் பதிவுகள் என்றால் முதல் இடத்தில் இருப்பது
வருதப்படாத வாலிபர்.சங்கத்தினரின் பதிவுகளே!
2006ம் ஆண்டில் 129 பதிவுகளையும், 2007ல் இன்றுவரை
50 பதிவுகளையும் தந்து பலரையும் மகிழ்வித்திருப்பவர்கள்
அவர்கள்தான்.
அதனால் அந்த சங்கத்து சிங்கங்களுக்கு ஒரு
Hats Off!
அவர்களுடைய பெரும்பாலான பதிவுகள் அசத்தலாக
இருக்கும் என்றாலும் இடம் கருதி சில பதிவுகளை மட்டுமே
குறிப்பிட்டுள்ளேன்
"ஒரு புன்னகை எதையும் சாதித்து விடும்
ஒரு மகிழ்ச்சியான தருணம் எதையும் போக்கிவிடும்!"
'மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையும்,
உப்பு இல்லாத உண்வும் ஒன்றுதான்'
அனைவரும் படித்து மகிழுங்கள்
இடம் பெறாத வேறு பதிவுகளை எழுதியவர்கள்
தவறாக நினைக்க வேண்டாம்!
இது என்னுடைய அன்பான வேண்டுகோள்!
---------------------------------------------------------------------------------
1. வடிவுக்கு போறாத காலம்
பதிவர் பெயர்: டி.பி.ஆர்.ஜோசப்
2. கவுண்டர் -Devil Show - வெட்டிப்பயல்
பதிவர் பெயர்: இராம்
3. முதுகலை இல்லறத்தியல் - M.Sc, wifeology
பதிவர் பெயர்:பினாத்தல் சுரேஷ்
4. வருததப்படாதீங்க ப்ளீஸ்!!
பதிவர் பெயர்: ஜொள்ளுப் பாண்டி
5. கோவியாரின் நாடக சபா - பாகம் 1 & 2
பதிவர் பெயர்: தேவ்
6. Sangam Technologies Part (Farmer) 1 & 2
பதிவர் பெயர்: இளா
7. மாடு மேய்ப்பது எப்படி?
பதிவர் பெயர்: கப்பி பய
8. ச்சிரிப்பு வருது..ச்சிரிப்பு வருது!
பதிவர் பெயர்: கைப்புள்ள
9. செயற்குழு கூட்டம்
பதிவர் பெயர்: நாகை சிவா
10. நான் ஒரு தடவை சொன்னா....!
பதிவர் பெயர்: நாமக்கல் சிபி
------------------------------------------------
அன்புடன்,
மகிழ்ச்சியுடன்,
SP.VR.சுப்பையா
இந்தவார ஆசிரியர்
வலைச்சரம் - இணையத் தமிழ் இதழ்
---------------------------------------
(ஆய்வு தொடரும்)
|
|
மிக்க நன்றி வாத்தியார் :)
ReplyDelete///இராம் அவர்கள் சொல்லியது:
ReplyDeleteமிக்க நன்றி வாத்தியார் ///
ஆகா, சந்தோஷம்!
கவுண்டரிடம் என்னை மாட்டிவிட்டுவிடாதீர்கள்!:-))))
இங்கிட்டும் என்பெயர் ஆகா,
ReplyDeleteஆசிரியரின் அருமை மாணவன் என்று
அள்ளி அள்ளி மதிப்பெண்களைப் போடுகிறார். எனக்கு அக்கரை உணர்வு அதிகமாகுது. வாத்தியார் பெயரை காப்பத்தனுமேன்னு பொறுப்பு வந்துட்டு.
நன்றி ஆசிரியரே !
///
ReplyDeleteகோவியார் சொல்லியது: மாணவன் என்று
அள்ளி அள்ளி மதிப்பெண்களைப் போடுகிறார். எனக்கு அக்கரை உணர்வு அதிகமாகுது. வாத்தியார் பெயரை காப்பத்தனுமேன்னு பொறுப்பு வந்துட்டு.///
அட தேவுடா! அது தேவ் அவர்கள் எழுதிய பதிவு ஸ்வாமி!
அதற்கு நீங்கள் எப்படி மார்க் வாங்கியிருக்க முடியும்?
ஆசிரியரை மாட்ட வைப்பதிலேயே குறியாக இருக்கிறீர்களே!:-))))
ஐயா,
ReplyDeleteபதிவில் பாகம் 1 க்கு தான் தொடுப்பு இருந்தது,
பாகம் 1 மற்றும்
பாகம் 2
லொள்ளுடன்,
கோவி.கண்ணன்
///கோவியார் சொல்லியது: ஐயா,
ReplyDeleteபதிவில் பாகம் 1 க்கு தான் தொடுப்பு இருந்தது,
பாகம் 1 மற்றும்
பாகம் 2
லொள்ளுடன்,
கோவி.கண்ணன்///
சரி,இதற்கு வேண்டுமென்றால் மார்க் போட்டுவிடுகிறேன்:-)))
//தமிழ்மணத்தில் நான் தேடிச் சென்று, அல்லது ஓடி சென்று
ReplyDeleteபார்க்கும் பதிவுகள் என்றால் முதல் இடத்தில் இருப்பது
வருதப்படாத வாலிபர்.சங்கத்தினரின் பதிவுகளே//
இந்த ஒரு கருத்தில் மட்டும்தாம்யா நீர் யூத் மாதிரி யோசிச்சிருக்கீங்க, வகுப்புல இருக்குற மாதிரி நீங்க "உர்" பேர்வழினு நினைச்சேன், பரவாயில்லையே உங்களுக்கும் சிரிக்கத் தெரியுமா? நம்ப சிங்கங்களின் பதிவைப் பெருமைப்படுத்தீட்டீங்க! நன்றி,
நீங்க கோவிருக்கு மட்டும் அதிக மார்க் கொடுப்பதை கண்டித்து இன்னும் ஒரு வாரத்திற்க்கு வகுப்பிற்க்கு வருவதில்லை என்று மாணவர்களின் செயற்குழுவில் முடிவெடுத்துள்ளோம்( அப்பாடி! ஒரு வார வகுப்பு "கட்" டிற்கு காரணம் கிடைத்து விட்டது), சொன்னது போல் செய்த சக மாணவர் கோவியாருக்கும் நன்றி!
வகுப்பிற்குத்தான் வரமாட்டோம், ஆனால் அப்போ,அப்போ! இப்படிப் பின்வாசல் (பின்னூட்டம்) வழி வந்து தொந்தரவு தருவோம்.
அன்புடன்...
சரவணன்.
போன வருசம் கைப்புள்ள சொன்னதன் பேரில் வ.வா. சங்கப் பதிவுகள் வாசிக்க ஆரம்பிச்சேன்.. என் முடிவு: விழுந்து எழுந்து சிரிச்சு வயித்து வலி வேணும்னா....... வாங்க வ.வா. சங்கத்துக்கு :-)
ReplyDelete//அட தேவுடா! அது தேவ் அவர்கள் எழுதிய பதிவு ஸ்வாமி!
ReplyDeleteஅதற்கு நீங்கள் எப்படி மார்க் வாங்கியிருக்க முடியும்?
ஆசிரியரை மாட்ட வைப்பதிலேயே குறியாக இருக்கிறீர்களே!:-))))//
ஐயா சாமி,
அது கோவியாரின் லொள்ளு பதிவுதான். என் சார்பில் தேவ் ஏற்றிவிட்டார். இப்பவும் மாட்டி இருக்கிங்க... பதிவை எழுதியவர் யார் என்று தெரியாமல் பதிவிட்டவர் பெயரைத்தான் சொல்லி இருக்கிங்க.
:)
மார்க் எனக்கு ! இல்லாட்டி தலைமை ஆசிரியரை கூப்பிடுவேன்.
தலைமை ஆசிரியர் என்றால் யார் ?
தலைக்கு டை (மை) அடித்த ஒரு வாத்தியார் இருக்கார்.. உஷ் ரகசியம் அவரைக் கூப்பிட்டு முறையிடுவேன்.
:))))
neha2007//// உங்கள் நண்பன் said...
ReplyDelete//தமிழ்மணத்தில் நான் தேடிச் சென்று, அல்லது ஓடி சென்று
பார்க்கும் பதிவுகள் என்றால் முதல் இடத்தில் இருப்பது
வருதப்படாத வாலிபர்.சங்கத்தினரின் பதிவுகளே//
இந்த ஒரு கருத்தில் மட்டும்தாம்யா நீர் யூத் மாதிரி
யோசிச்சிருக்கீங்க, வகுப்புல இருக்குற மாதிரி நீங்க "உர்"
பேர்வழினு நினைச்சேன், பரவாயில்லையே உங்களுக்கும்
சிரிக்கத் தெரியுமா? நம்ப சிங்கங்களின் பதிவைப்
பெருமைப்படுத்தீட்டீங்க! நன்றி, /////
நான் யூத் இல்லைன்னு யார் சொன்னது?
எத்தணை வயதானலும் மனதளவில் நான் என்றும் யூத்'தான்!
நான் முன்பு - அதாவது ஆகஸ்ட் 2006 முதல் நவம்பர் 2006
வரை எழுதியுள்ள பதிவுகளையெல்லாம் நீங்கள் படித்ததில்லை
போலிருக்கிறது. மாதிரிக்காக நாளை மூன்று அல்லது
நான்கு பதிவுகளுக்குச் சுட்டி தருகிறேன்.படித்தபிறகு
சொல்லுங்கள்.
////நீங்க கோவியாருக்கு மட்டும் அதிக மார்க் கொடுப்பதை கண்டித்து
இன்னும் ஒரு வாரத்திற்க்கு வகுப்பிற்க்கு வருவதில்லை என்று
மாணவர்களின் செயற்குழுவில் முடிவெடுத்துள்ளோம்////
கோவியார் சதி செய்து நினைத்ததைச் சாதித்துவிட்டார்.
நான் வேறு என்ன சொல்ல் முடியும்?
சரி, இதற்கு அவர் என்ன முகாந்திரம் அளிக்கிறார் என்று
பார்ப்போம். இல்லையென்றால் மறுபடியும் வகுப்பு
ஆரம்பித்தவுடன் அவரை ஒருவாரம் பென்ஞ்சின்மேல்
நிற்க வைத்துவிடுகிறேன் சரிதானே?
///சேதுக்கரசி said...
ReplyDeleteபோன வருசம் கைப்புள்ள சொன்னதன் பேரில் வ.வா.
சங்கப் பதிவுகள் வாசிக்க ஆரம்பிச்சேன்.. என் முடிவு:
விழுந்து எழுந்து சிரிச்சு வயித்து வலி வேணும்னா.......
வாங்க வ.வா. சங்கத்துக்கு :-)///
அடடா அரசியாரும் வ்.வா.ச வின் ரசிகையா!
சந்தோசம் சகோதரி!:-))))
கோவியாரின் பார்வைக்கு!
ReplyDelete///அந்த நாடகத்திலிருந்து சில வரிகள்: சின்னப்புள்ளை : நான்தேன் ... ! ஆனா நா ஒன்னும் ஒன்னிய கூப்பிடலயே... ! யாரப்பு நீயீ... ? கெட்டப்பல்லாம் பலமா இருக்கு, பின்லேடன் அட்ரஸ் கேட்டு வந்திருக்கிறாயா ? என்று பயந்தபடி கேட்கிறார்.
லொ.சிவா : ஹா ஹாஹ் ... ஹா ..... !
பலமாக சிரிக்கிறார் சிவா
சின்னப்புள்ளை : இப்ப இப்படித் தான் சிரிப்ப... ! அப்பறம் என் சட்டையையும் .. ஒன் சட்டையும் கிழிச்சிட்டு திரும்பி நின்னும் சிரிப்பே ! ... ஆள வுடு... நான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்கும் பின்னால திரும்பு துணியெல்லாம் நல்லா இருக்கான்னு ஒருதடவ பாக்கிறேன் !///
அட்டா, இதைக் கோவியார் எழுதினார் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?
இவ்வளவு நகைச்சுவையாக எழுத
ஒரிஜினல் வ்.வா.ச ஆட்களுக்குத்தான் வரும்!
சரி, உண்மையைச் சொல்லுங்கள்
மண்டபத்திற்குக் கூட்டிக் கொண்டுபோய் யாரிடம் எழுதி வாங்கினீர்கள்?
இல்லை தேவ் எழுதினதையே - ஆக்கம் கோவி.க என்று கெஞ்சிப்
போடச் சொல்லிவிட்டீர்களா?
உண்மையைச் சொல்லுங்கள்
நீங்கள் தலைமை ஆசிரியரிடம் போனால் - நான் கல்வி அமைச்சரின் மகனைக் கூட்டிக் கொண்டு வருவேன்
//நான் யூத் இல்லைன்னு யார் சொன்னது?
ReplyDeleteஎத்தணை வயதானலும் மனதளவில் நான் என்றும் யூத்'தான்!//
உண்மைதான் ஐயா, நான் தங்கள் பதிவுகளின் ரசிகன் , சும்மா டமாசுக்குச் சொன்னேன்,ஹி ஹி..(இப்படி ஐஸ் வைக்கலைனா பின்ன மார்க் எப்படி வாங்குறதாம்?) :))))))
//மாதிரிக்காக நாளை மூன்று அல்லது
நான்கு பதிவுகளுக்குச் சுட்டி தருகிறேன்.படித்தபிறகு
சொல்லுங்கள். //
ஐயா! அறியாப் புள்ள தெரியாம செஞ்சிட்டேன்,அதற்காக இவ்வளவு கடுமையான தண்டனையா?:))))
//மறுபடியும் வகுப்பு
ஆரம்பித்தவுடன் அவரை ஒருவாரம் பென்ஞ்சின்மேல்
நிற்க வைத்துவிடுகிறேன் சரிதானே?
//
சும்மா டமாசு பண்ணாதீங்க சார், போன தபா இதே மாதிரி நிக்க வைத்ததற்க்கு கோவி என்ன சொன்னர் தெரியுமா? பாத்தீங்களா?நீங்க புக் வச்சிப் படிக்கிற டேபிளில் நான் ஏறி நிக்கிறேன்,இப்போவாவது தெரியுதா நான் தான் பெரிய ஆள்னு, அப்படினு கலாய்ச்சார் அதனால இந்த தண்டனை பத்தாது,இன்னும் அதிகமா கொடுக்கனும் , கோவி wants more,
"தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்"
அன்புடன்...
சரவணன்.
//ஆகா, சந்தோஷம்!
ReplyDeleteகவுண்டரிடம் என்னை மாட்டிவிட்டுவிடாதீர்கள்!:-))))//
தங்கள் சித்தம் எம் பாக்கியம்.....
விரைவில் எதிர்பாருங்கள்... கவுண்டர் டெவில் ஷோ - வாத்தியார்,,
ஹி ஹி
வாத்தியார்,
ReplyDeleteநீங்க கொல்டி புகழ் (சங்க இ.த)வெட்டி எழுதுன ஆட்டோகிராப் தொடர் படிக்கலைன்னு நினைக்கிறேன்...?
///இராம் அவர்கள் சொல்லியது: தங்கள் சித்தம் எம் பாக்கியம்.....
ReplyDeleteவிரைவில் எதிர்பாருங்கள்... கவுண்டர் டெவில் ஷோ - வாத்தியார்,,ஹி ஹி ///
அடடா, நனே சும்மா இருக்காம வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கப் போறேனா?
என்னய்யா இது வாத்தியாருக்கு வந்த சோதனை! (பாலைய்யா குரலில் படிக்கவும்)
///இராம் அவர்கள் சொல்லியது:நீங்க கொல்டி புகழ் (சங்க இ.த)வெட்டி எழுதுன ஆட்டோகிராப் தொடர் படிக்கலைன்னு நினைக்கிறேன்...? ///
ReplyDeleteவெட்டியாரை நான் காமெடியாக நினைக்காமல், குணசித்திரக்காரராக நினைத்து
அவர் எழுதிய சூப்பர் பதிவு ஒன்றைத் தெரிவு செய்து வைத்திருக்கிறேன்.
அது நாளை வரும்!
(அதற்குள் அவரிடம் சொல்லிவிடாதீர்கள்)
///இராம் அவர்கள் சொல்லியது: "தண்டனைகள் கடுமையானால் தான் தவறுகள் குறையும்"///
ReplyDeleteஅதெல்லாம் ஆகாது!
வலைப் பதிவுகளைப் பொறுத்தவரை அதிகம் ஆகும்:-)))
அதென்ன நீங்கள் கோவியாரையே சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்?
நன்றாகப் பாடங்களைப் படித்து அவரைவிட
அதிகமாக ஒரு மார்க் வாங்குங்கள்
மற்றதை அப்புறம் பார்ப்போம்:-)))
சார்.. இப்போத் தான் இந்தப் பதிவினைப் பார்க்கிறேன்.. நம்ம பெயரில் இருக்கப் பதிவின் முழு உரிமையும் பாசமிகு நண்பர் கோவியாரையேச் சாரும்...
ReplyDeleteவ.வா.சங்கம் குறித்தான உங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
///Dev said: வ.வா.சங்கம் குறித்தான உங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்///
ReplyDeleteஉண்மையிலேயே உங்கள் சங்க்த்துப் பதிவுகளையெல்லாம் தொடர்ன்ந்து படித்து மகிழ்ந்ததால்தான்
தனிப் பதிவாகப் பதிந்தேன்