07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 4, 2011

இன்னைக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்... :))

செய்தி :
ப்ளாக் வைத்திருக்க வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும்... கூகிள் நிர்வாகம் அறிவிப்பு

செய்தியின் பாதிப்பு :
செய்திய கேட்டதும் பிளாக்கர்'கள் எல்லாம் பொங்கி எழுகிறார்கள். கூகிள் நிர்வாகிக்கு கண்டன செய்திகள் அனுப்பப்படுகின்றன. போராட்டம் வலுப்பெறுகிறது. கூகிள் சமரசம் பேச அப்பாவி தங்கமணிக்கு சம்மன் அனுப்புகிறது

இனி...

கூகிள் நிர்வாகி : நீர் தான் அப்பாவி தங்கமணியோ?

அப்பாவி தங்கமணி : நீர் தான் கூகிள் நிர்வாகியோ?
 
கூகிள் : ஏது, வெகுதூரம் வந்து விட்டீர்?

அப்பாவி : நட்புறவு நாடியதாக அறிந்தேன், அதை விரும்பியே நானும் வந்தேன்

கூகிள் : நட்பு வேண்டும், ஆனால் அதற்கேற்ற நடத்தையில்லை உன்னிடம்

அப்பாவி : கற்றுக்கொடுக்கும் இனம் தமிழினம், நீர் கற்றுக்கொடுக்க முயற்சிப்பது அறிவீனம்.

கூகிள் : இறுமாப்பு இன்னும் அடங்கவில்லை

அப்பாவி : அது என் உடன் பிறந்தது, அடங்காது, உரக்க உரக்க மேலெழும்.

கூகிள் : உன் மீது குற்றம் சுமத்துகிறேன்

அப்பாவி : என்னவென்று?

கூகிள் : எடுத்துரைத்தால் கணக்கிலடங்காது

அப்பாவி : எண்ணிக்கை தெரியாத குற்றம்

கூகிள் : எனக்கா எண்ணிக்கை தெரியாது, அகம் பிடித்தவளே, கூறுகிறேன் கேள், நீ எழுதி கிழிக்கும் வலைப்பூவுக்கு கிஸ்தி கொடுக்கவில்லை, எங்கள் Server'ஐ உபயோகிக்க திரைப்பணம் செலுத்தவில்லை, நெடுநாளாக கேட்டும் subscription பணம் வந்து சேரவில்லை, இந்தப் பாக்கிக்கெல்லாம் இன்னும் வட்டியும் கூடக் கட்டவில்லை.

அப்பாவி : கிஸ்தி, திரை, வரி, வட்டி, வேடிக்கை! கமெண்ட் பொழிகிறது, போஸ்ட் விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு டிஸ்கசன்'க்கு வந்தாயா? டிசைன் செய்தாயா? விரல் வலிக்க டைப் அடித்தாயா? Follow செய்தாயா? கமெண்ட் போட்டாயா? மாய்ந்து மாய்ந்து போஸ்ட் போடும் பிளாக்கர்க்கு டீ கப் சுமந்தாயா? அங்கு ஓடி ஓடி ப்ளாக் படிக்கும் எம் குல பிளாக்கர்களுக்கு கரண்ட் சார்ஜ் கட்டினாயா? அல்லது நீ follower'ஆ? கூகிள் ரீடரா? யாரைக் கேட்கிறாய் வரி? எதற்குக் கேட்கிறாய் திரை?

கூகிள் : போதும் நிறுத்து... பைசா செலவின்றி வெட்டியாய் பொழுதை  கழிப்பது மட்டுமின்றி என்னையே எதிர்த்து பேச என்ன இறுமாப்பு உனக்கு

அப்பாவி : வெட்டியாய் பொழுதை கழிக்கிறோமா... என்ன தெரியும் உனக்கு... பட்டியலிடுகிறேன் கேள்...:-

புதுகை தென்றல் அவர்கள் பள்ளி பிள்ளைகளுக்கான இந்த புது கருவி EDUTOR பத்தி சொன்னது, எவ்ளோ உபயோகமான விஷயம் தெரியுமா?

ராமலக்ஷ்மி அவர்களோட  எத்தனை படைப்புகள் பல பத்திரிக்கைகளில் வந்திருக்கு தெரியுமா? அருமையான படிப்பினை கதை ஒண்ணு தினமணி கதிரில் வந்திருக்கு மே தினத்துக்கு கூட

கூட்டு குடும்ப வாழ்க்கை குறைந்து விட்ட இந்த நாளில் அம்மாக்களின் பதிவுகள்னு இந்த வலைப்பூவில் உள்ள விஷயங்கள் எத்தனை இளம் தாய்மார்களுக்கு நல்ல வழி காட்டியாய் இருக்கிறது தெரியுமா?

அப்பப்போ என்னை போல மொக்கை போஸ்ட் போட்டாலும் (ஹி ஹி), சமுதாயத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசி பிழியும் ஹுஸைனம்மாவின்  பதிவுகளை படித்து பார், வலைப்பூக்கள் பற்றிய உன் எண்ணம் மாறி விடும்

எல்.கேவோட இந்த பதிவை பாத்தா புரியும், நல்ல பல காரியங்கள் கூட வலைப்பூக்களின் மூலம் நடக்குதுன்னு

பதிவுலகில் கேணிவனம் கதை எழுதி புகழ் பெற்ற ஹரீஷ் ஒரு இயக்குனர் அவதாரம் எடுத்திருப்பது தெரியுமா உனக்கு

வயதில் சிறியவராய் இருந்தாலும் பெரிய விஷயங்கள் பற்றி எழுதும் மாதங்கியின் வலைப்பூவை ஒருமுறை படித்து பார்... இவரின் அழகு தமிழுக்கு நீயும் ரசிகையாகி விடுவாய்

இத்தனை ஏன், சொர்கத்தில் நிச்சியக்கப்பட்ட திருமணங்கள் நரகத்தை நோக்கி செல்லாமல் பாதுகாக்கும் முக்கியமான விடயம் இன்றைய நாளில் சமையல் வலைப்பூக்கள்...:))

இன்று பெரும்பாலான வீடுகளில் அடுப்பெறிவதே ப்ளாக் உபயம் என நீ அறிவாயா... நானே ரசம் வெக்கறதுக்கு மகி ப்ளாக் போய் ரெசிபி எடுத்து இருக்கேன், கீதா ப்ளாக்ல பாத்து கைமா இட்லி பண்ணி இருக்கேன், மேனகாவோட புளிசாதம் செய்து சாப்பிட்டு ஆனந்த கண்ணீர் விட்டு இருக்கேன்...

தெய்வசுகந்தியோட மொச்சை கொட்டை கத்திரிக்காய் குழம்பு சுவை இன்னும் நாக்குல இருக்குனா பாரேன்...   கிருஷ்ணவேணியோட எலுமிச்சை ஊறுகாய் செய்து பாரு, அப்புறம் நீயே நாலு பேருக்கு சொல்லுவ இதை பத்தி... இத்தனை ஏன்? திரட்டிப்பால் என்ற ஒன்று வழக்கொழிந்து வரும் இந்த நாளிலும் மக்கள் திரட்டிப்பால் செய்து உண்டு மகிழும் ரகசியம் அறிய தக்குடுவின் இந்த பக்கத்தை பார்...

கூகிள் : போதும் அப்பாவி போதும்...  அககண்ணை திறந்து என் அகந்தையை அகற்றி விட்டாய்... இனி ஒரு போதும் திரை / கப்பம் என கேட்க மாட்டோம்... மன்னித்து விடுங்கள்... நான் போய் வருகிறேன்

அப்பாவி : வெற்றி நமதே... ஸ்வீட் எடு.... கொண்டாடு...:)))

பின் குறிப்பு: 
இன்றைய அறிமுகங்கள்... அறிமுகங்கள் என சொல்ல இயலாது, ஏனெனில் இவர்கள் பதிவுலகளில் பிரபலமானவர்கள் தான்... ஆனால் அவர்களின் சில முக்கிய பதிவுகளை  தொகுத்து  சேமித்து  கொள்ளும் ஆவலில்  இந்த சரத்தை தொடுத்தேன்... நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புறேன்... நன்றி...
மேலும் வாசிக்க...

Tuesday, May 3, 2011

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்... :)))

"வணக்கம்'ங்க... எல்லாரும் சௌக்கியமா?"

"சௌக்கியம் அப்பாவி தங்கமணி.... நீ நலமா? உன் குடும்பத்தார் நலமா?" என ஒருத்தர் என்ட்ரி ஆகிறார்

"யாருங்க நீங்க...?"

"நான் யாரா? நாராயண நாராயண .... ஹா ஹா... என்னை தெரியவில்லையா பெண்ணே... நன்றாக உற்று பார்"

"உத்து பாத்தாலும் ஊதி பாத்தாலும் தெரியலைனு சொல்றனல்ல... சின்னப்புள்ள தனமா பேசிக்கிட்டு ... ஹ்ம்ம்"

"நான் தான் நாரதர்..."

"என்னாது? நா...ர.. தரா..... ஹையோ ஹையோ...ஹா ஹா ஹா"

"ஏன் சிரிக்கிறாய் பெண்ணே? நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?"

"அட போங்க நீங்க வேற... நேத்து இப்படி தான் ஒரு ஆளு நான் தான் அலாவுதீனின் அற்புத விளக்குல வந்த பூதம்னு வந்து நின்னாரு...ஹா ஹா ஹா"

"ஹ்ம்ம்... ஆக நீ என்னை நம்பவில்லை... ஏன்?"

"ஏன்னா... எனக்கு தெரிஞ்சு நாரதர் கைல ஒரு சப்லாங்கட்டை இருக்கணும்... அப்புறம் நடு மண்டைல ஒரு கோடாலி கொண்டை.... ம்... இன்னும் ஏதோ மிஸ் ஆகுதே...ம்... கைல கிடார் மாதிரி ஒண்ணு... எல்லாம் இருந்தாத்தான் நாரதர்... நீங்க என்னமோ ஒரு டீ ஷர்ட் பான்ட் போட்டுட்டு நிக்கறீங்க... ஹா ஹா... "

"உங்கள் சினிமாவில் காட்டியது போல் இருந்தால் தான் என்னை நம்புவாய் இல்லையா?"

"பின்ன... இதென்ன கோலம்... அதை விடுங்க... உங்க டிரைவிங் லைசன்ஸ் இருந்தா காட்டுங்க... நம்பறதா இல்லையான்னு அப்பறம் சொல்றேன்"

"என்ன சோதனை நாராயணா இது? மூன்று லோகங்களும் வண்டி இன்றியே டிரைவ் செய்யும் என்னிடமே டிரைவிங் லைசென்ஸ் கேட்கிறார்களே"

"இங்க பாருங்க... எனக்கு வலைச்சரத்துல போஸ்ட் போடணும்... அதுக்கு ப்ளாக் எல்லாம் தேடி பிடிக்கணும்... நெறைய வேலை இருக்கு... போங்க சார்...போங்க..."

"ஹ்ம்ம்... கலி முற்றித்தான் விட்டது... முக்காலமும் அறிந்த எனக்கே இந்த கதியா? நாராயண நாராயண"

"முக்காலமும் தெரியுமா... ஹ்ம்ம்" என சற்று நேரம் யோசித்த அப்பாவி

"இங்க பாருங்க நாரதரே.. நான் கேக்கற கேள்விக்கு நீங்க பதில் சொன்னா நீங்க நாரதர்னு நான் ஒத்துக்கறேன்"

"ம்ம்ம்... கேளு... கேளு..."

"காதலிக்காக காத்திருக்கிறேன்னு ஒரு பதிவு எழுதினவர் யார்னு உங்களால சொல்ல முடியுமா?"

"நாராயணா... என்ன சோதனை இது... சரி சொல்கிறேன்...ஆயுத எழுத்து என்ற வலைப்பூவின் சொந்தகாரர் அவர்"

"ஹ்ம்ம்... சரி... ஆஸ்திரேலியா பற்றி அங்குள்ள இடங்களை பற்றி இன்னும் பல அறிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பதிவர் இருக்கிறார் யார் அவர்"

"ஹ்ம்ம்... இவரை தெரியாதா? பதிவர் இராஜராஜேஸ்வரி தான் அவர்"
"சரியா சொல்லிட்டாரே...ம்... இன்னொன்னு கேட்டு பாப்போம்... காணாமல் போன தன் சகோதரனை தேடும் ஒரு பதிவு... எழுதியது யார்"

"நெஞ்சை உருக்கும் பதிவல்லவா அது... ராஜி அவர்கள் தானே அது"

"இதையும் கரெக்டா சொல்லிட்டாரே...ம்... ஒருவேள நிஜமாவே நாரதர் தானோ... எதுக்கும் இன்னும் ரெண்டு கேள்வி கேப்போம்..." என மனதிற்குள் நினைத்த அப்பாவி

"அழகா வாழ்வியல் கதைகள் சொல்லும் ஒருத்தர் இருக்கார்... யார் அவர்?"

"திருமதி ஸ்ரீதர்..." என்ற நாரதர் "சரி தானே அப்பாவி பெண்ணே" என சிரித்தார்

"ம்... சிரிப்பது இருக்கட்டும்... பாரதி பாடல்களோடு நினைவுகள்னு பாரதியின் நினைவு நாளன்று ஒரு அருமையான பதிவு எழுதினார் அவர்... யார் தெரியுமா?"

"ரசிகமணி என சிலரால் அன்போடு அழைக்கப்படும் அனந்த பத்மநாபன் அவர்கள் தானே..."

"சரி சரி... இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்... அடிக்கடி போட்டி வெச்சு கலக்கற ஒரு ப்ளாக் எதுவோ"

"மிக எளிமையான கேள்வி... ஹா ஹா... எங்கள் ப்ளாக் தான் அது"

"ம்... அது சரி... தேவதை விளையாட்டை பத்தி அழகா எழுதி இருந்தாரே ஒருத்தர்... யாருன்னு சொல்லுங்க பாப்போம்" என அப்பாவி சவாலாய் பார்க்க

ஒரு கணம் யோசித்த நாரதர் "மனச்சிதறல்களை பதிவு செய்யும் பாலாஜி சரவணா தானே" என்றார்

"தன் பிள்ளையோட ஸ்கூல்க்கு போன ஒரு நாள் ஸ்கூல் அனுபவம் பத்தி எழுதின ஒருத்தரை சொல்லுங்க பார்ப்போம்"

"அவரை தெரியாதா... அறிவியல் கதைகள் எல்லாம் கூட எழுதும் ஸ்ரீதர் நாராயணன்"

"ஒபாமாவே appointment வாங்கிட்டு தான் பாக்கணும்னு சொல்ற அளவுக்கு ஒரு வெட்டி ச்சே... பிஸியான ஒருத்தர் யாருன்னு சொல்லுங்க"

"ஹா ஹா ஹா... இவரை தெரியாதா... நம்ம கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா தானே"

"எதை கேட்டாலும் சொல்றாரே... எதாச்சும் டெக்னிகலா கேட்டு மடக்குவோம்..." என நினைத்த அப்பாவி "மென் பொருட்கள் பற்றியும் இன்னும் பல உபயோகமான பதிவுகள் தரும் ஒருவர்... யார்னு சொல்லுங்க...நீங்க நாரதர்னு நான் ஒத்துக்கறேன்"

"ஆறுபடை வீடு கொண்டவனின் பெயர் கொண்டவர் தானே அவர்... வடிவேலன் அல்லவா"

"என்னை மன்னித்து விடுங்கள் நாரதரே... நாட்டில் போலிகள் பெருகி விட்ட காரணத்தால் சற்று கவனமாக இருக்க வேண்டி உங்களை சோதித்து விட்டேன்" என அப்பாவி மனமுருகி கூற

"போகட்டும் அப்பாவி..அதனால் என்ன... என்னை இத்தனை கேள்வி கேட்டாயே ... உன்னை ஒரே ஒரு கேள்வி கேட்கலாமா?"

"கேளுங்கள் நாரதரே"

"உன்னுடைய 'ஜில்லுனு ஒரு காதல் கதை' எப்போ தான் முடியும்"

"அது...அது... எனக்கு முக்கியமா ஒரு வேலை இருக்கு சார்... நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க... நான் வந்து சொல்றேன்" என போன அப்பாவி போனது தான்... வரவே இல்லை என நாரதர் வேஷத்தில் இருந்த மைண்ட்வாய்ஸ் நொந்து போய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது...:)))
மேலும் வாசிக்க...

Monday, May 2, 2011

வந்தாள் அப்பாவியே...:)))

"ஹலோ... ஹலோ.... மைக் டெஸ்டிங்... A B C D"

"உனக்கு ஆங்கிலத்துல தெரிஞ்சதே அந்த நாலு எழுத்து தான்னு எங்களுக்கு தெரியும்... எதுக்கு இப்ப பந்தா பண்ற"

"சத்தம் மட்டும் வருது ஆளக்காணோம்... ஹலோ யார் பேசறது?"

"நீதான்டா பேசற"

"ஐயையோ... அவனா நீ... ஆஹா.... இங்கயும் வந்துட்டானா.... அவ்வவ்வ்வ்வ்"

"நான் இங்கயும் வருவேன்... அங்கயும் வருவேன்... நான் என்ன உன்னை மாதிரி துபாய்ல..."

அவசரமாய் இடைமறித்து "சரி சரி... இப்ப அதை பத்தி என்ன.... நீ வந்த வேலைய சொல்லு"

"யாரோ அப்பாவி தங்கமணினு ஒரு பொண்ணு இன்னிக்கி இங்க வர போகுதாம்... நம்மள மாதிரி குண்டக்க மண்டக்க பேசுதுன்னு சொன்னாங்க... அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

"அடி ஆத்தி... இன்னொரு குண்டக்க மண்டக்கவா... ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா... இப்பவே கண்ண கட்டுதே... அந்த பொண்ண பத்தி கொஞ்சம் சொல்லு... நானும் கொஞ்சம் சுதாரிச்சுக்கறேன்..."

"உனக்கு எதுக்கு நான் சொல்லணும்"

"என்னப்பா இப்படி சொல்லிட்ட... நாம என்ன அப்படியா பழகினோம்..."

"எப்படி பழகினோம்? அது சரி, யார் நீ?"

"ஆஹா... எல்லாம் ப்ளான் பண்ணித்தான் பண்றாய்ங்க...ஊஊஊஊ...."

"சரி ஊளை இடாத... தொலஞ்சு போ... அந்த அப்பாவியை பத்தி சொல்றேன் கேளு"

"சொல்லு சொல்லு..." என ஆர்வமாகிறார்

"அந்த பொண்ணுக்கு இட்லி மாமினு ஒரு பட்ட பேரு இருக்கு தெரியுமா?"

"ஏன்... அம்புட்டு நல்லா இட்லி செய்யுமா?"

"நீ திங்கரதுலையே இரு.... இது வேற... அப்பாவி இட்லி சுடறதுக்குபட்ட கஷ்டத்த படிச்சா கல் இட்லியும் கரைஞ்சு போகும்...ச்சே... கல் மனசும் கரைஞ்சு போகும்னு சொல்ல வந்தேன்..."

"அப்படியா.. அடடா... ஒரே சோக கதை தானா... சிரிப்பா கிரிப்பா ஒண்ணுமில்லையா?"

"ஏன் இல்லாம... நம்மள பத்தி கூட அப்பாவி எழுதி இருக்காங்களே..."

"அடியாத்தி... சொல்லவேயில்ல... என்னை பத்தி நல்லவிதமா சொல்லி இருக்கா"

"நீயே போய் பாரு இந்த முட்டை ஆம்லேட் தத்துவத்த...சும்மா படிச்சாலே அதிருதில்ல... அதுமட்டுமில்ல 'தங்கமணி ரங்கமணி' னு ரெண்டு கேரக்டர்களை உருவாக்கி ஒரே காமடி தர்பார் தான் போ"

"அது யாரு தங்கமணி ரங்கமணி"

"தங்கமணினா மனைவி ரங்கமணினா கணவர்னு பொதுவா இங்க சொல்றாங்க... இந்த ரங்கமணிகள் க.மு Vs க.பி பதிவு படிச்சா இன்னைக்கி பூரா சிரிக்கலாம்"

"அதென்ன க.மு Vs க.பி... புதுசா எதுனா காப்பி பொடி பேரா"

"இல்ல மூக்கு பொடி பேரு.... போடாங்......................"

"இங்க பாரு, திட்டறதுன்னா சத்தமா திட்டு... இப்படி வாய்க்குள்ளையே பேசிக்கறது நல்லால்ல... அவ்வ்வ்வவ்"

"சரி சரி அழுவாத... அப்புறம் எனக்கு எங்க ஆத்தா ஞாபகம் வந்துடும்... அதுவும் அப்பாவியோட இந்த அம்மா கவிதைய படிச்சா இப்பவே அம்மாவை பாக்கணும்னு தோணும்"

"ஓஹோ...அப்புறம்"

"அப்புறம் விழுப்புரம்... நான் என்ன கதையா சொல்றேன்... ஆனா இந்த அப்பாவி தங்கமணி நெறைய கதை சொல்லி இருக்காங்க... நச்சுனு ஒரு கதை வேணுமா இதோ 'என்னை போல் ஒருவன்'.... கணவன் மனைவியின் அன்பை கூறும் 'பிரசவ வைராக்கியம்'னு ஒரு கதை, ஒரு குட்டி பொண்ணோட அம்மாவுக்கான ஏக்கம் கூறும் 'ஆசை ஆசை இப்பொழுது'னு ஒரு கதை... இப்படி சொல்லிட்டே போலாம்"

"ஆஹா... இவ்ளோ இருக்கா.. எல்லாம் சின்னகதயாத்தான் இருக்கும் போலியே... தொடர்கதை எல்லாம் இல்லியா"

"நல்லா கேட்ட போ... சன் டிவில சீரியல் எழுத கூப்பிடராங்கன்னு கூட ஒரு வதந்தி இருக்கு... இப்ப 'ஜில்லுனு ஒரு காதல்' ஒரு தொடர் கதை ஓடிட்டு இருக்கு... கொஞ்ச நாள் முன்னாடி தம்பி சௌந்தர் கூட இந்த கதைய பத்தி வலைச்சரத்துல சொல்லி இருந்தாரே... இதுக்கு முன்னாடி 'பிரியமானவளே'னு ஒண்ணு... தான் எழுதினதுல தனக்கு பிடிச்சது இதான்னு அப்பாவி ஒரு பேட்டில சொல்லி இருக்காங்க"

"காதல் கதை மட்டும் தான் எழுதுமா இந்த புள்ள"

"அப்படின்னு இல்ல... 'அதே கண்கள்'னு ஒரு திரில்லர் மாதிரி ஒண்ணு ஆரம்பிச்சு அப்புறம் எக்கசக்க யு டர்ன் எடுத்து அதுவும் லவ் ஸ்டோரியா போய் முடிஞ்ச கதைகளும் உண்டு"

"ஓஹோ... யாரு பெத்த புள்ளையோ... பேர் சொல்றாப்ல வளந்து நிக்குது போல"

"நீ பேருன்னு சொன்னதும் 'நான் பத்திரகாளியா'னு அப்பாவி அவங்களுக்கு பேரு வெச்ச புராணம் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது... பேரை பாத்து ஒண்ணும் பயந்துடாதே"

"யாரப்பாத்து பயம்னு சொன்ன... நானெல்லாம் சந்திரமுகிகிட்டையே டென் ரூபிக்கு சில்லற கேட்டவனாக்கும்... ஹ்ம்ம்கும்...."

"உன் சில்லறை புத்திய நிரூபிக்கற பாத்தியா... ஆனா நம்ம அப்பாவி இந்த சில்லறை மேட்டர் எல்லாம் கூட அலசி காய போட்டு இருக்கு இந்த பதிவுல"

"ஓஹோ... அப்ப டெல்லி வரைக்கும் போகும்னு சொல்லு"

"என்னது டெல்லியா... அது மட்டும் அப்பாவிக்கு ஒத்தே வராது... ஹிந்தி சுட்டு போட்டாலும் வராது... அந்த காமடிய 'உபர்வாலா கியா ஹே' ஒரு பதிவுல சொல்லி இருக்கு பாரேன்... ஒரே சிரிப்பு"

"அது சரி... இந்த பொண்ணுக்கு எங்கன ஊரு... எங்க மதுர பக்கமா"

"அப்பாவிக்கு சொந்த ஊரு நம்ம சரளா ஊரு"

"இங்க பாரு... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்... சரளா என்னோட ஜோடி... அதென்ன நம்ம சரளா... உன் ஜோடிய நான் கேட்டனா... இல்ல கேட்டனா... இது நல்லால்ல ஜென்டில்மேன்"

"போடாங்........."

"ஒகே....ஒகே... அப்பாவி கோயம்புத்தூர்ல தான் இருக்காகளா...அடுத்த வாரம் பொள்ளாச்சி பக்கம் ஒரு சூட்டிங் இருக்கு... அப்படியே ஒரு எட்டு பாத்துட்டு வாரேன்"

"இரு இரு... அப்பாவிக்கு சொந்த ஊரு தான் கோயமுத்தூரு... இப்ப குப்ப கொட்டிட்டு இருக்கறது கனடால"

"அந்த பொண்ணும் குப்ப தான் கொட்டுதா... நம்ம ஜாதி...ஹா ஹா ஹா"

"ஏய் லூசு... ஒரு பேச்சுக்கு குப்பனு சொன்னேன்... ஏதோ மன்னார் அண்ட் மன்னார் கம்பேனில மண்ட காயற வேலையாம்"

"ஓஹோ... அது சரி... ப்ளாக்ல மட்டும் தான் எழுதுதா... பத்திரிக்க கித்திரிக்க ஒண்ணுமில்லையா"

"என்ன அப்படி கேட்டுட்ட... 'என் பௌர்ணமி' அப்புறம் 'என்னுடன் ஒரு நாள்' இந்த ரெண்டு கவிதையும் விகடன்ல கூட வந்திருக்குனா பாரேன்"

"அது ஏதோ தெரியாத்தனமா வந்துடுச்சு விடுங்க பாஸ்" என ஒரு குரல் கேட்க

"யாருப்பா அது... யாரா இருந்தாலும் முன்னுக்கு வந்து பேசணும்... இப்படி ராத்திரி நேரத்துல சும்மா சும்மா சவுண்ட் விட்டு பீதிய கிளப்ப கூடாது...ஆமா சொல்லிட்டேன்... அவ்வ்வ்வவ்வ்வ்"

"நான் தாங்க மைண்ட்வாய்ஸ்" என என்ட்ரி ஆகிறது அப்பாவிக்கான சனிதிசை

"அடடே... உங்கள பத்தி நெறைய கேள்விப்பட்டு இருக்கேன்... கமல் சாருக்கு ஒரு 'அவள் ஒரு தொடர்கதை' ஜூனியர் மாதிரி நீங்க அப்பாவி ப்ளாக்ல ஒன்றி போன ஒரு பாத்திரம் இல்லையா... வாங்க வாங்க"

"Yes yes... Glad to meet you Mr. Parthiban... I heard a lot about you... what a pleasure what a pleasure?"

"என்னது உங்களுக்கு பிரசர் சாஸ்தி ஆய்ருச்சா...நல்ல டாக்டரை பாக்க வேண்டியது தானே" என வைகை புயல் கிளம்ப

"ha ha ha ... that was funny... real funny... ha ha ha"

"இங்க பாருங்க... சும்மா பன்னி கின்னினு திட்டற வேலை எல்லாம் வேண்டாம்... நான் அழுதுருவேன்" என டென்ஷன் ஆகிறார் வைகை புயல்

பார்த்திபன் : "ஏன்யா மானத்த வாங்கற... அது பன்னி இல்ல... funny ... சிரிப்பாணியா பேசறனு சொல்றாரு நம்ம மைண்ட்வாய்ஸ்"

வடிவேல் : "அப்ப சிரிப்பாணினே சொல்ல வேண்டியது தானே... சின்ன புள்ளத்தனமா பேசிகிட்டு.... ராஸ்கல்ஸ்...."

மைண்ட்வாய்ஸ் : "நானும் உங்கள மாதிரி நல்ல தமிழ் தாங்க பேசிட்டு இருந்தேன்... இந்த அப்பாவியோட என்னைக்கி சேந்தனோ...ஹ்ம்ம்... எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்..."

பார்த்திபன் : "என்ன மைண்ட்வாய்ஸ் இப்படி சொல்றீங்க... அந்த பொண்ணு ரெம்ப அப்பாவின்னு...."

மைண்ட்வாய்ஸ் : "அது அப்பாவியே அப்பாவிய பத்தி சொல்லிக்கறதுங்க... நிஜத்துல உலக மகா அலப்பறை... நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைனா ரெண்டு வாரம் முன்னாடி 'ரஸ்க் சாப்பிடறதே ரிஸ்க்ஆ போச்சே' னு ஒரு போஸ்ட் வந்தது... அத படிங்க... உங்க முடிவ மாத்திப்பீங்க"

பார்த்திபன்: "நிஜமாவா?"

மைண்ட்வாய்ஸ்: "ஆமாம் சார்... நீங்களே சொல்லுங்க... ட்ரெயின் பிளாட்பார்ம்ல ஒட்டு கேக்கறதை எல்லாம் ஒரு போஸ்ட் தேத்தற கொடுமைய என்ன சொல்றது...அது கூட பரவா இல்லிங்க... கேவலம் ஒரு சோனி நாய் அப்பாவியோட பிஞ்ச கட் ஷூவை பாத்து தொரத்தினதை எல்லாம் போஸ்ட் போட்டு... ஹ்ம்ம்" விசும்புகிறது

"சரி சரி... அழுவாதீங்க... எனக்கும் அழுவ அழுவையா வருது..." என சமாதானம் சொல்கிறார்கள் இருவரும்

அதே நேரம், அங்கு வந்த சேர்ந்த அப்பாவி, மைண்ட்வாய்ஸ் நிற்பதை பார்த்ததும் டென்ஷன் ஆகிறார்

"ஐயையோ... இதெங்க இங்க வந்தது... பூனைய மடில கட்டிட்டு சகுனம் பாத்த கதை தான்..." என மனதிற்குள் நினைத்து கொண்டவர் அடுத்த நிமிடம் சுதாரித்து கொள்கிறார்

"வணக்கம் பார்த்திபன் சார்... வணக்கம் வடிவேலு சார்... மைண்ட்வாய்ஸ் இப்ப தான் வந்தீங்களா?" என அப்பாவி ஏக மரியாதையுடன் கேட்க

"நல்ல புள்ளயாத்தானே தெரியுது... இந்த மைண்ட்வாய்ஸ் ஏன் அப்படி சொல்லிச்சு"னு பார்த்திபனும் வடிவேலுவும் கேள்வியாய் மைண்ட்வாய்ஸை பார்க்க

"வெயிட் அண்ட் சி..." என ஜாடை காட்டுது மைண்ட்வாய்ஸ்

அப்பாவி அந்த சங்கேத பாஷையை புரிந்தவராய் "மைண்ட்வாய்ஸ், கொஞ்சம் அப்படி வரீங்களா... உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என சிரித்து கொண்டே கேட்க

மைண்ட்வாய்ஸ்'ன் முகம் வெளிறி போகிறது "அது... நான்... எ... எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு... நீங்க தனியா பேசுங்க... நான் போயிட்டு அப்பறமா... வரவே இல்ல" என மாயமாய் மறைகிறது

அதை கண்ட மற்ற இருவரும் கூட பயந்து எழுந்து ஓட தயாராய் நிற்க "நீங்க உக்காருங்க... introduction ரீல் ஓட்டி முடிச்சப்புறம் போலாம் சரியா" என்ற அப்பாவி பணிவாய் மிரட்ட, பவ்யமாய் அமர்கின்றனர் இருவரும்...

அப்பாவி ஏதோ வணக்கம் சொல்லணுமாம்... சொல்லிட்டு போகட்டும்...காசா பணமா....

வணக்கம் வந்தனம் நமஸ்கார் நமஸ்தே குட்மார்னிங் .... அப்புறம் இத்தாலியன்ல என்னமோ வருமே... சரி விடுங்க மறந்து போச்சு... என் பெயர் அப்பாவி தங்கமணி'ங்க

ஐந்து அல்லது ஆறு முறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தபட்டுள்ளேன்... அதை மிக்க மகிழ்ச்சியாய் டயரி மில்க் சாக்லேட் எல்லாம் சாப்பிட்டு கொண்டாடி இருக்கிறேன்... இன்று மற்றவர்களை நான் அறிமுகம் செய்யும் வாய்ப்பு கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு முதல் நன்றி

முதல் பதிவு என்னை பத்தி சொல்லிக்கலாம்னு சொல்லி இருந்தாங்க... என்னை பத்தி நானே சொன்னா நல்லா இருக்காதுங்க... எனக்கு விளம்பரம் புடிக்காது யு சி... :)))

நான் பேசினா பேசிட்டே இருப்பேன்... அவ்ளோ வெள்ளந்தி மனசு... அதான் அப்பாவினு பேர்லயே இருக்கே... (ஹி ஹி), அதனால் இதோடு எனது இன்றைய உரையை முடித்து கொள்கிறேன்...

மற்ற அறிமுகங்கள் எல்லாம் இனி வரும் நாளில் பார்ப்போம்... நன்றி... வணக்கம்... :))
மேலும் வாசிக்க...

Sunday, May 1, 2011

அப்பாவி தங்கமணி ஓ.வ.நாராயணனிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஓட்டை வடை நாராயணன், தான் ஏற்ற பொறுப்பினை வித்தியாசமான முறையில் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் ஏறத்தாழ நூறு பதிவர்களை அறிமுகப் படுத்தி, அவர்களின் இடுகைகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். பெற்ற மறுமொழிகளோ முன்னூறை நெருங்குகின்றன. கடைசி இடுகையில் அவரது நண்பர்கள் பத்துப் பேரை அறிமுகம் செய்திருக்கிறார். அவர்களது பதிவினில் இவருக்குப் பிடித்த இடுகைகளையும் அறிமுகம் செய்திருக்கலாம். நேரமின்மை காரணமாக செய்ய இயலவில்லை என நினைக்கிறேன்.

நம்மிடமிருந்து, கடமையினை முழுமையாகச் செய்த மன நிறைவுடன் விடை பெறுகிறார். நண்பரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் அப்பாவி தங்கமணி. இவர் கோவையைச் சார்ந்தவர். தற்போது கணவருடன் கனடாவில் வசிக்கிறார். அங்கு ஒரு பொது சுகாதார நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இயந்திரத் தனமான வாழ்வினில் ஒரு சிறு மாற்றம் வேண்டுமென இப்பதிவினைத் துவங்கி எழுதி வருகிறார். இவரது படைப்புகள் சில விக்டன் மற்றும் திண்ணையில் வெளி வந்துள்ளது. கற்றது கைம்மண்ணளவு - கல்லாதது உலகளவு என்ற சிந்தனை எப்பொழுதும் இவருக்குண்டு.

அப்பாவி தங்கமணியினை வருக வருக ! ஏற்ற பொறுப்பினை முழு மனதுடனும் மகிழ்வுடனும் நிறைவேற்றுக என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஓட்ட வட நாராயணன்
நல்வாழ்த்துகள் அப்பாவி தங்க மணீ
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

வானில் ஏணி போட்டு கட்டு - கொடிகட்டு!! 

வணக்கம் நண்பர்களே! 

வலையுலகில் நண்பர்கள், நட்பு வட்டம் மிக முக்கியம்! எனது நண்பர்கள் வட்டம் பரந்து விரிந்தது!  அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாவதும் எமது இந்த வட்டம்தான்!! வலைப்பூக்களில் நாம் எழுதுகின்ற விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு போதுமே எம்மை அளவிட முடியாது! 

அதனால் எமது நண்பர்கள் குழாமில் இருந்து முக்கிய நண்பர்கள் சிலரது, இதுவரை வெளிவராத தகவல்களை வெளியிடுகிறேன்! கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள்!! 


01. சி. பி .செந்தில்குமார்! 



தமிழ் வலைப் பதிவர்களில் நம்பர் ஒன் பதிவர்! இனிய நண்பர்! யாருடனும் சண்டை சச்சரவுக்கு போகமாட்டார்! மஹேந்திரா அண்ட் மஹேந்திரா பைனான்ஸ் கம்பெனியில், கலெக்சன் பகுதியில் டீம் லீடராக வேலை பார்க்கிறார்!  இவர் ஒரு செஸ் சாம்பியன்! 

இன்றைய தேதியில் அலெக்சா ரேட்டிங் - 45,161   



02. பன்னிக்குட்டி ராமசாமி! 




வலையுலகின் கலகலப்பு கதாநாயகன்! இவர் கமென்ட் போட வந்தாலே , ஏரியா கலகலப்பாகி விடும்! இவர் ஒரு விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர்! சவுதியில் ஒரு பல்கலைக் கழகத்தோடு இணைந்த, மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் ஹெட் ஆப் த டிபார்ட் மென்ட் ஆக பணி புரிகிறார்! பதவிநிலை - துணைப் பேராசிரியர்! 
ப்ளாக் நண்பர்களுடன் ஈகோ பார்க்கமாட்டார்! அன்பாகப் பழகுவார்! இவருடைய போட்டோவும் , இன்னும் பல தகவல்களும் என்வசம் இருக்கிறது! அவற்றை வெளியிட வேண்டாம் என்று அன்பாக சொல்லியுள்ளார்! 



வலையுலகில் எனது குருநாதர் மதிசுதாதான்!  வலையுலகம் பற்றிய சூட்சுமங்களை எனக்கு சொல்லித்தந்தவர்! பிரபலமாவதற்கு வழி ஏற்படுத்தி தந்தவர்! மிகச்சிறந்ததொரு கிரிக்கெட் வீரன்! சகலதுறை ஆட்டக்காரர்! சாதாரணமாக வலதுபக்கம் பத்து அடியும், இடது பக்கம் எட்டு அடியும் பாய்ந்து பந்து பிடிப்பதில் வல்லவர்! 

இன்னொரு ஆச்சரியமான தகவல் - மதிசுதா ஒரு தனியார் மருத்துவர் ஆவார்! 




நண்பர் விக்கி உலகம் - விக்கி அவர்கள் ஒரு முன்னாள் இராணுவ வீரர் ஆவார்! இந்திய ராணுவத்தில் இவர் கடமையாற்றினார்! கார்கில் யுத்தத்தில் பங்கெடுத்து காயமடைந்தவர்! இவரது சிறுமூளைக்கு அருகில் குண்டுகள் பாய்ந்ததில், ஏழு மாதங்கள் வரை சுயநினைவற்று, கோமா நிலையில் இருந்தார்! அந்தக் குண்டுகள் இன்றுவரை அகற்றப்படவில்லை! முன்பு சரளமாக இந்தி பேசக்கூடிய இவர், இப்போது அந்த ஆற்றலை இழந்திருக்கிறார்! தேசப்பற்று மிக்க பல அருமையான பதிவுகளை எழுதிவருகிறார்! 





நண்பர் நாஞ்சில் மனோ அவர்களும் எமது அணியில் முக்கியமானவர்! எப்போதும் நகைச்சுவையாக பதிவுகள் போட்டும், பின்னூட்டத்தில் செல்லமாக சண்டை போட்டும் எம்மையெல்லாம் கலகலப்பாகி விடுவார்! எமது காமெடி கும்மிக்குள் மனோ நுழைந்துவிட்டால், அவ்வளவுதான்! பின்னர் எல்லாமே ரணகளம்தான்! 

இப்படி கலகலப்பான மனோவின் தனிப்பட்ட வாழ்க்கை?   அவ்வளவு சோகம் நிறைந்தது! இவர் ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார்! காதலை குடும்பத்தார் ஏற்க மறுத்தனர்! வாக்குவாதங்கள் தொடர்ந்தன! விளைவு - அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்! அந்தத் துயரத்தில் இருந்து மீண்டுவர மனோவுக்கு நீண்டகாலம் எடுத்தது! இந்த வலையுலகம் அவரை கலகலப்பாக வைத்திருக்கிறது! சோகங்களை மறக்க வைத்திருக்கிறது! 

நண்பா - நாம் இருக்கிறோம்! பார்த்துக் கொள்வோம்!! 





கோமாளி செல்வா இன்னுமொரு காமெடி புயல்! மொக்கைகளின் அரசன்! மாஸ் மீடியாவில் டிப்ளோமா முடித்தவர்! வானொலி அறிவிப்பாளராக வரவேண்டும் என்பது இவரது கனவு! அந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்! விரைவில் காற்றலையில் இவரது குரல் ஒலிக்கும்! வாழ்த்துக்கள்!! 






நண்பர் சதீஸ்குமார் வலையுலகில் துணிச்சல்மிக்க ஒருவர்! எதிர்வுகூறல்கள் பலவற்றிற்கு சொந்தக்காரர்! இவர் ஒரு ஆற்றல் மிக்க ஜோதிடர்! ஜோதிட ரீதியாகவும், தர்க்கரீதியாகவும் கணிப்புக்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார்! எமது வட்டத்தின் மூத்த உறுப்பினர் இவர்தான்!! 




நண்பர் உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள் , ஒரு உணவு பரிசோதகர்! இவரது வலைப்பூவில் உள்ள அத்தனை விஷயங்களும் பயன்மிக்கவை! தொழில்ரீதியாக உயர்ந்த இடத்தில் இருந்தாலும், மிக இயல்பாக எம்முடன் பழகுவார்! இவர் தனது வேலை - இன்டர்வியூவுக்காக தனது எழுபது வயது தந்தையுடன் செங்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்த போது, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்படுகிறார்! இதனால் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுகின்றன! இவர பத்து கிலோமீற்றர் தூரம் தனது தந்தையுடன் நடந்து சென்றே அந்த வேலையினைப் பெற்றுக்கொண்டார்! இது தனது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்!!





நிரூபன்! வலையுலகில் சுனாமி! மிகக்குறுகியகாலத்தில் இவ்வளவு உச்சிக்கு வந்தவர் இவராக மட்டுமே இருக்கமுடியும்! நண்பர்களின் பதிவுகளைப் படித்து கமென்ட் போடுவதில் கில்லாடி! யாருமே தொடத் துணியாத பல விஷயங்களை தனது ப்ளாக் இல் எழுதிவருகிறார்! டாய்லெட்டில் இருந்து ராக்கெட் வரை அத்தனை துறைகளிலும் ஈடுபாடு! தீவிரமான தேடல் மிக்கவர்! மிகவும் பிரகாசமான எதிர்காலம் நிரூபனுக்கு இருக்கிறது! 

அதிபுத்திசாலியை இலங்கை பேச்சு வழக்கில், " மண்டைக் காய் " என்று அழைப்பார்கள்! மண்டைக் காய் என்று பேர் வாங்குவது அவ்வளவு சுலபம் இல்லை! என்னைப் பொறுத்தவரை வலையுலகில் நிரூபன் ஒரு " மண்டைக் காய் " 





ஹேமாவுக்கு என்று சில சிறப்பியல்புகள் உள்ளன! பெண்பதிவர்களுக்குள் மிகவும் துணிச்சல் மிக்கவராக இவரையே சொல்வேன்! ( யாரும் கோபிக்க மாட்டீர்களே ) இவர் எழுதும் கவிதைகளாகட்டும், இதர படைப்புகளாகட்டும் அத்தனையும் ஆழமான அர்த்தம் கொண்டவை!   துணிச்சல் மிக்கவை! பெண்ணியம் சார்ந்த சில பல கட்டுக்களை உடைத்தெறிந்திருக்கிறார் ஹேமா! 

இந்தத் துணிச்சல்காரிக்கு எனது வாழ்த்துக்கள்!! 


சரி நண்பர்களே! இவ்வளவு சொல்கிறேனே, என்னைப் பற்றி ஏதாவது சொல்லவா? வேண்டாமா? சொல்லலாம்! நிறையவே இருக்கிறது சொல்வதற்கு!! ஆனால் பாதுகாப்பு பிரச்சனை முன்னால் உள்ளது! இது இலங்கையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சனை தானே! 

வாழ்க்கையில் மறக்கமுடியாத பல சம்பவங்களில் ஒன்றைச் சொல்கிறேன்! - ஐ நா செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களுடன் ஐந்து நிமிடங்கள்  உரையாட வாய்ப்பு  கிடைத்தது! உரையாடினேன்!! ( நம்புங்கள்! இது காமெடி அல்ல )! 

சரி நண்பர்களே! இப்போது விடைபெறுகிறேன்! நாளைமுதல் மாத்தியோசியில் சந்திக்கலாம்! இந்த வாய்ப்பினை வழங்கிய சீனா ஐயா அவர்களுக்கு, எனது இதயபூர்வமான நன்றிகள்!! 

            
            வாழ்லைச்ம்!!!


.  ( நண்பர்களே! வேலைப் பளு காரணமாக மிகவும் அவசரமாக எழுதப்பட்ட பதிவு! தவறுகள் இருப்பின் உடன் சுட்டிக்காட்டவும் ) 


 நண்பர்களின் பெயரினைக் கிளிக் பண்ணுவதன் மூலம், அவர்களின் வலைகளுக்கு நீங்கள் செல்ல முடியும்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது