07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 4, 2012

பண்டைய தமிழின் இன்றைய முகவரிகள்


தமிழர்களைப்போல மொழியை ஆராதித்து ஆனந்தமடையும் வேறு இனக் குழுக்கள் உண்டா என நான் எப்போதுமே ஆச்சரியம் கொள்வதுண்டு.
வாழ்வின் சகல அம்சங்களோடும் கலந்து பிணைந்து ஐக்கியமானது மொழி. அதனால்தான் அதனைத் தாய் என்று அழைக்கிறோம்...! ''தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்''என்று பூரித்துப் புளகாங்கிதமடைகிறோம். தமிழ்த் தாய்க்குக் கோயிலெடுத்துக் கரம் கூப்பித் தொழுகிறோம்.



‘’கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி’’[புறப்பொருள் வெண்பாமாலை]
என்று பெருமிதம் கொள்கிறோம். செம்மொழித் தகுதியை நம் மொழி அடைந்தபோது நாம் கொண்ட மகிழ்வுக்கு அளவே இல்லை....
ஆனாலும்...உணர்ச்சி பூர்வமான இந்தக் கட்டத்தோடு நம்மில் பலரின் தேடல்கள் முடிந்து விடுகின்றன.ஒரு மொழியை உணர்வுபூர்வமாக அணுகுவதென்பது  ஒரு சிறிய பகுதி மட்டுமே.... அதன் பெருமைகளை நாமும் உணர்ந்து பிறருக்கும் உணர்த்த வேண்டுமென்றால் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும் அந்தத் தமிழ்ப்பாதையில் ஒரு சில மைல்கற்களையாவது தொட்டுப்பார்க்க வேண்டும்தானே?

இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த உரைநடைப் படைப்புக்களான கட்டுரைகளையும்,கதைகளையும் அவை நமக்குப் பழக்கமான சொற்களிலும்,நடையிலும் அமைந்திருப்பதால் ஓரளவு எளிமையாக அணுகி விட முடிகிறது.பழந்தமிழ் இலக்கியம் என்றால் மட்டும் பதவுரை பொழிப்புரைக்கு ஆள் தேடி சற்று மலைத்துப் போய் நின்று விடுகிறோம். எந்த ஒரு உலக மொழியிலும் கால ஓட்டத்தில் சொற்கள் வெவேறு வகையாக மாற்றமடைவதும் புதுப்புதுச் சொற்கள் வந்து சேர்வதும் - ‘’பழையன கழிதலும் புதியன புகுதலும்’’ இயற்கை. 2000 ஆண்டுக்கால நெடிய பயணத்தில் எத்தனை இலட்சம் சொற்களின் ஊடாகத் தமிழ் பயணப்பட்டிருக்கும் என்பதைச் சற்றே எண்ணிப்பார்த்தால் அது குறித்த பெருமை மட்டுமே நம்மில் மேலோங்கி எழ வேண்டும்.

பழந்தமிழைப் பொறுத்தவரையிலும் கூட  நம்மை மலைப்படைய வைப்பவை அந்தச் சொற்களே. சொற்களைத் தாண்டிக்கொண்டு பாடல்களுக்குள் சென்றுவிட்டால் இன்றைய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அதே உணர்வுகளின் கணங்களைத்தான் அன்றைய புலவர்களும் தரிசனப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எளிதாகப்புரிந்து கொண்டு விடலாம்.

”யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”
 – செம்புலப் பெயல்நீரார்
[என் தாயும், உன் தாயும் - என் தந்தையும், உன் தந்தையும்,  ஒருவருக்கொருவர் எந்த வகையில் உறவினர்? நானும் நீயும் இதற்கு முன் ஒருவரையொருவர் முன் அறிந்தது கூட இல்லையே? ஆனாலும் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைவதைப்போல அன்புடைய நம் நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டன.]
என்ற குறுந்தொகைப்பாடலில் இடம் பெற்றிருக்கும் ஒரு குறிப்புத்தான் 
இன்றைய திரைப்பாடலில்,
‘’உன் பேரும் என் பேரும் அறியாமலே உள்ளங்கள் இடம் மாறுதே’
[‘’கண்ணாளனே...’’பம்பாய்-வைரமுத்து]
என்ற இலகுவான சொற்களில் சொல்லப்பட்டு எல்லோராலும் முணுமுணுக்கப்படுகிறது;விரும்பப்படுகிறது.

’’இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு
நோய் நோக்கு; ஒன்று அந் நோய் மருந்து’’

என்ற திருக்குறளைத்தான் கொஞ்சம் வேறுவகையாக மாற்றி,
’’நீ ஒரு முறை பார்த்தாய்
என் உள்ளத்தில் முள் பாய்ந்தது
எங்கே இன்னொரு முறை பார்..
முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்’’ 
என்று புதுக்கவிதையாக எழுதிப்பார்த்தார் கவிஞர் மீரா.

வாழ்க்கையோடும்,வாழ்க்கையின் சில தருணங்களோடும் இணைத்துப் பார்க்கும்போதும் வாசிக்கும்போதும், சங்கக்கவிதைகள் அடிக்கரும்பாய் இனிப்பதை....என்றென்றும் அழியாத பல நிலைத்த உண்மைகளை நமக்குச் சொல்லிக்கொண்டே இருப்பதைக் கண்டு கொள்ளலாம்.

சங்க இலக்கியம் படிக்க வேண்டும்..அது பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இன்று பல இளம் தலைமுறையினரிடம் புதுப்பிக்கப்பட்டிருப்பதை நான் பெருமகிழ்வோடு அவதானித்து வருகிறேன். தமிழிலக்கியத்தோடு சம்பந்தப்படாத பிற துறை சார்ந்தவர்கள்.... தமிழிலக்கியம் கற்காதவர்கள் எனப் பலரிடமும் இந்த எழுச்சி மேலோங்கிக் கொண்டிருக்கிறது.அவர்களது ஆர்வத்துக்குத் தீனி போடும் வகையில்...
பண்டைத் தமிழ்ப்பாக்களைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் சில தளங்களும் பதிவுகளும் இன்றைய பார்வைக்கு....

’’பழந்தமிழ் இலக்கியங்களின் பழமை அவற்றின் வயதில் இருக்கிறதேயன்றி அவை காட்டும் வாழ்க்கையில் இல்லை’’ என்று சொல்லும் காயத்ரியும் அவரது கணவர்  சித்தார்த்தும் இணைந்து எழுதும் அணிலாடு முன்றில் என்னும் தளம் சங்க இலக்கியத்தோடு கை குலுக்க விரும்புவோருக்கு அற்புதமான வாசிப்பனுபவங்களை விரித்தளிக்கும் தளம். இன்றைய வாழ்வியலோடு இணைத்து சங்கக்கவிதைகளை விளக்க முயலும் இந்தத் தளத்தில்..குறுந்தொகைப்பாடல் சார்ந்த
'உறக்கமற்ற காத்திருப்புஎன்னும் பதிவும்,


புறநானூற்றுப்பாடலை ஒட்டிய
போர்க்களத்தில் பூத்திருக்கும் ஒற்றைப் பூ!வும் என் பரிந்துரைகள்.

மாயக்கூத்தனின் சொல்வனப்பதிவான 'முத்தொள்ளாயிரத்தில் யானைகள்'  ஒரு கருத்தை மையமாகக் கொண்ட செய்தியைக் குறிப்பிட்ட இலக்கியத்தின் அடிப்படையில் ஆழமாக முன் வைக்க முயலும் ஆக்கம்

சங்க இலக்கியம் குறித்த பதிவுகளைத் தங்கள் தளங்களில் அடிக்கடி வெளியிடும் பேராசிரியர் குணசீலனின் முத்தொள்ளாயிரம் மற்றும் புறநானூறு சார்ந்த  'பிடிநாண...'என்னும் பதிவு,சங்க இலக்கியத்தின் மீது ஆறாக் காதலை நம்முள் கிளர்த்தக்கூடியது.
சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களின் பட்டியலைத் தொகுத்துத் தந்திருக்கும் பேராசிரியரின் பதிவு பெண்கல்வி தழைத்திருந்த சங்கச் சமுதாயத்தின் மேன்மைக்குக் கட்டியம் கூறுவதோடு ஆய்வாளர்களுக்கும் பயன் தரத்தக்கது.

இந்தத் தலைமுறையைத் தாண்டி அடுத்து வரும் தலைமுறைக்கும் சங்க இலக்கியத்தைக் கொண்டு செல்லும் மிக அருமையான முயற்சி, ஐந்திணைப்பதிப்பகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களை எளிய கவிதை நடையில் அப்பதிப்பகத்தார் கொண்டு வந்திருப்பதையும் கல்பனா சேக்கிழார்  தன் அண்மைப்பதிவான முல்லைப் பாட்டில் சுட்டியிருக்கிறார். எளிமையான அந்தக்கவிதை வரிகளையும் பதிவில் ஏற்றியிருக்கிறார்.தமிழிலக்கியம் கற்ற பேராசிரியர்களைக் கூட மலைக்க வைக்கும் கடுமையான நடை கொண்ட முல்லைப்பாட்டை எளிய கவிதை நடையில் வாசிக்க வைத்து உதவும் இவ்வகை முயற்சிகளே தமிழை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லக் கூடியவை.அவ்வகையில் அது பெரிதும் பயனுள்ள ஒரு பதிவாகிறது.
சங்க இலக்கியத்தின் வித்தியாசமான சொல்லாட்சிக்குச் சான்றாகும் பெரும் பிறிதாதல்’என்னும் கல்பனாவின் பதிவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.


பூவிடைப்படுதல் என்னும் தலைப்பிலான ஜெயமோகனின் ஐந்து தொடர் கட்டுரைப் பதிவுகளும் தீவிர இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமன்றிப் பண்டை இலக்கிய தாகம் கொண்டோர் அனைவருக்குமே குறுந்தொகை குறித்த மிக அற்புதமான திறப்பை அளிக்கக்கூடியவை. அக்கட்டுரையின் காணொளியும் கூடக் கிடைக்கிறது.



பின் குறிப்பு;
பண்டை இலக்கியம் படிக்கக் கை வசம் நூல் இல்லையே, உரை இல்லையே என்று சாக்குப்போக்குச் சொல்லி அதைப் படிப்பதன் இன்பத்தை ஒத்திப்போட்டுவிடத் தேவை இல்லாதபடி, பாடல்களின் மூலம், உரை எல்லாம் கொஞ்சம் முயன்று பார்த்தால் இணையத்திலேயே கிடைக்கிறது.
அவ்வாறான சில தளங்கள்
http://sangailakkiyam.blogspot.in/
http://www.tamilvu.org
http://ilakkiyam.com/
http://www.thoguppukal.in/ என்னும் தளமும் பண்டை இலக்கியங்களின் அறிமுகத்துக்கு மிகவும் பயன்படும் இன்னொரு தளம்.




மேலும் வாசிக்க...

Monday, December 3, 2012

மாய உலகில் ஒரு சஞ்சாரம்


வலைச்சரத்துக்கு என் வணக்கம்.

வலைச்சரத்தில் நான் அறிந்து இருமுறை என் பதிவுகளும் தளமும் அறிமுகமாகியிருக்கின்றன. முதல் முறை இலக்கியத் தமிழ் என்னும் பிரிவில் வேர்களைத் தேடும் பேராசிரியர் குணசீலனால்.... அடுத்து மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் என்னும் தலைப்பில் தேவியர் இல்லத்தின் காவலர் திருப்பூர் ஜோதிஜி அவர்களால்.(ஒரு வேளை வேறு சிலரும் அறிமுகம் செய்து நான் தவற விட்டிருந்தால் பிழை பொறுக்க!)

தற்போது என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக  அழைத்து வந்து, நான் ரசித்துப் படித்த தளங்கள்...,வியந்து பாராட்டிய பதிவுகள், பலரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பும் இணைப்புக்கள் எனப் பலவற்றையும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறார் திரு சீனா அவர்கள்.
அவருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை கணினியைக் கையாள்வதும்,...அதற்குள் உலவுவதென்பதும் ஏதோ ஒரு மாய உலகத்தின் சஞ்சாரம் போலவும், நிறைவேறாத, நிறைவேற்றிக்கொள்ள முடியாத  ஒரு கொடுங்கனவு போலவுமே எனக்குத் தோன்றி வந்திருக்கிறது.பணிக்காலத்தில் அதற்கான வாய்ப்பும் நேரமும் எனக்கு வாய்க்கவுமில்லை.சங்கம் முதல் சமகாலப்படைப்புக்கள் வரை தமிழிலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் நான் கொண்டிருக்கும் தீராத தாகம்...தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியான இணையத் தமிழை நோக்கி என்னை உந்தித் தள்ளியது. தீவிர இலக்கிய வாசிப்புக்கான வாய்ப்பு அச்சில் குறைந்து இணையத்தில் பெருகத் தொடங்கியிருந்த காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

 நவீன இலக்கியத்தைப்பொறுத்தவரை ஜெயகாந்தனுக்குப் பிறகு என்னைப்பெரிதும் பாதித்த எழுத்தாளர் திரு ஜெயமோகன் இணையத்தில் புனைவுகளாகவும், அபுனைவுகளாகவும் பதிவுகளை எழுதிக் குவிக்கத் தொடங்கியிருந்தார்.

அவற்றை உடனுக்குடன் வாசிக்க வேண்டுமென்பதற்காகவே இணையத்தில் உலவவும், மின் அஞ்சல் அனுப்பவும் நான் முதலில் கற்றுக் கொண்டேன். அப்போதும் கூடப் பிடித்த பதிவுகளுக்கான பின்னூட்டங்களைத் தமிங்கிலிஷில்தான் எழுத முடிந்ததே தவிரத் தமிழிலேயே நேரடியாக எழுதுவது வசப்பட்டிருக்கவில்லை.நான் அனுப்பிய கருத்துரைகளைக்கண்ட திரு ஜெயமோகன், மற்றும் எஸ்.ரா இருவரும் ஒரே நேரத்தில் நானும் ஒரு வலைப்பூ எழுத வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டனர்; அதற்கு ஏற்ற உதவிகளைக் கவிஞரும் எழுத்தாளருமான நிழல்கள்’ ஹரன்பிரசன்னாவைக் கொண்டு நண்பர் ஜெயமோகன் செய்து தர, நவ.2008இல் என் வலைப்பூ பிறந்தது. எனக்கு முற்றிலும் புதிதான புதிதான ஒரு தளத்தில் ஒரு பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்பிய என்னைப் பங்கேற்பாளராக்கிய முழுப்பெருமையும் ஜெயமோகனையே சாரும்.அதற்கு என் நன்றிகள் என்றென்றும் அவருக்கு...!

சமகாலத் தமிழின் நீரோட்டத்தோடு இணைய வேண்டுமென்பதற்காகவே இணையத்திற்குள் தொடர்ந்து நிலைப்பட நான் எடுத்த முயற்சிகள்,அதற்கு உறுதுணையாக நின்றவர்கள் பற்றிய குறிப்புக்கள் ஆகிய அனைத்தையும் ஏற்கனவே வலைப்பூ என்னும் வரம் என்னும் பதிவிலும் நுழைவாயிலிலும்  விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.குறிப்பாகத் தட்டச்சே தெரியாத எனக்குத் தமிழ் எழுதியை எளிமையாக்கிச்சொல்லி என்னை ஊக்குவித்த என் பேராசிரிய நண்பர்கள் குணசீலன்,கல்பனா சேக்கிழார் 
ஆகிய இருவரின் பொறுமை கலந்த அன்புக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன்.

கற்பித்தல் என்னும் காலகட்டம் என் வாழ்வில் ஒரு முடிவுக்கு வந்து விட்டாலும் கற்றல் என்பதை ஒரு போதும் நிறுத்தி விடாமல் இருப்பதற்கு....இந்த இணையமும் வலை எழுத்தும் நாள்தோறும் எனக்கொரு போதிமரமாய் எதையாவது கற்பித்துக் கொண்டே இருக்கின்றன.

இதழியல்துறையில் ஈடுபட்டு இயங்க வேண்டும் என்று என்றோ கண்ட கனவை நிறைவேற்றிக் கொள்ள..., இலக்கியம்,திறனாய்வு, சமூகம்,திரைப்படம்,பயணம் எனப்பல வகை எழுத்துக்களை முயன்று பார்க்க இந்த வலைத் தளம் எனக்கு வாகனமாகியிருக்கிறது. ஒத்த அலை வரிசையிலும்...நேர்மாறான திசையிலும் பயணப்படும் நண்பர்கள் பலரைப்பரிச்சயம் செய்து கொள்ளவும், அவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்வதன் வழி என் எழுத்தைக் கூர் தீட்டிக் கொள்ளவும் இந்த வலை எழுத்து எனக்கு உதவியிருக்கிறது. இதனால் கிடைத்த நல்ல தோழமைகள்,பாசத்தைப்பொழியும் உள்ளங்களோடான உறவாடல்கள் என் வாழ்க்கைக்கு மேலும் பொருள் சேர்த்துக்கொண்டிருக்கின்றன.

தினமணி நாளிதழில் (1.1.2010)-திரு மணிகண்டன் அவர்கள் எழுதியுள்ள 
வலையுலகப் படைப்பாளிகள்என்னும் கட்டுரையிலும்,
ஆனந்த விகடனின் -13.06.12 -வரவேற்பறை பகுதியிலும் 
உலகத் தமிழ்ப் படைப்பாளிகளை இணைக்கும் தளம் ஆகியவற்றிலும் இந்த வலைத் தளம் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருக்கிறது.தமிழ்ச்சிறுகதைகளைத் தொகுக்கும் சிறுகதைகள்’என்னும் தளத்தில் என் சிறுகதைகள் பலவும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும்....,கிட்டத்தட்ட நானூறு பதிவுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கூட ஒவ்வொரு பதிவை எழுதும்போதும் புதிதாக எதையோ எழுதிப்பார்க்கும் முயற்சியாகத்தான் அது தோன்றுகிறதே தவிர முழுமையான நிறைவு இன்னும் ஏற்படவில்லை. சுருதி மீட்டுவதிலேயே காலம் போகிறதோ என்று தாகூர் சொன்னது போல....சுருதியை மீட்டிக் கொண்டே இருக்கிறேன்...நாதத்தின் தரத்தைக் காலம் கணிக்கட்டும் என்றபடி....!

வலைச்சரத்தின் வாசகர்கள் பலரும் என் தளத்துக்குப் புதியவர்கள் அல்லர் என்றபோதும் அறிமுகப்பதிவில் என் பதிவுகளைப்பகிர வேண்டும் என நண்பர் சீனா கேட்டுக் கொண்டதால். எனக்கு ஆர்வமுள்ள துறைகளில் நான் பகிர எண்ணும் சில பதிவுகள்.கீழே..;
சிறுகதை
1979 முதல் சிறுகதை எழுதி வரும் நான் இதழ்களில் வெளியான கதைகளில் பலவற்றை அவ்வப்போது வலையேற்றிக்கொண்டும் வருகிறேன்.அவற்றில் பரவலான வாசிப்புப்பெற்றது பொம்பளை வண்டி..என்றாலும் நான் உங்கள் வாசிப்பைக்கோருவது இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான நேரமில்லை..யை ...[இன்னும் நேரமிருப்பவர்கள் பிற கதைகளையும் படித்தால் எனக்கு மகிழ்ச்சிதான்]
சங்கம்
சங்கப்பாடல் அறிமுகத்தில் காமர் மந்தியும்,காதல் தலைவியும் பலரையும் கவர்ந்தாலும் தீராக்காதலனையும் அன்றைய காதலுக்கும் இன்றைய காதலுக்குமான வேறுபாடு காட்டும் சங்கக்காதலையும் சற்றுப்படித்துப் பார்க்கலாம்.
பயணம்
பயணம் சார்ந்த பல பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வரும் எனக்கு மனநிறைவும் மகிழ்வும் தந்த பதிவு பத்ரிநாத் பயணம் பற்றி இமயத்தின் மடியில் என நான் எழுதிய தொடர்ப் பதிவுகளும்,அவற்றில் இடம் பெற்றிருந்த  (நான் எடுத்த)இமயத்தின் புகைப்படங்களும்தான். அதே போல இன்னொரு பயண அனுபவத்தில் கிடைத்த செய்தியே சிற்பியின் நிழல் பதிவுக்கு வித்தாக அமைந்தது.
திரைப்படம்
நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்யும் என் பதிவுகளில் ஆஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட மலையாளப்படமான ஆதாமிண்ட மகன் அபு பற்றி எழுதப்பட்ட   இவன்தான் மனிதன்,  இயக்குநர் வசந்தபாலனின் அங்காடித்தெருவுக்கு எழுதிய விமரிசனம் ஆகியன எனக்கு உவப்பானவை.
சமூகம்
சமூக அவலம் கண்டு கொள்ளும் அறச்சீற்றம் என் கதைகள் பலவற்றுக்குக் கருப்பொருளானதைப்போன்றே என் பதிவுகளுக்கும் அடிப்படையாகியிருக்கிறது.அவற்றில் குறிப்பிடத்தகுந்தவையாய் நான் நினைப்பவை இரண்டு பெண்கள் மற்றும் யாருக்கும் வெட்கமில்லை.
புத்தகப்பார்வை
நல்ல நூலைப்படித்ததும் உடன் அதை அறிமுகப்படுத்தி விட நான் தவிப்பதற்கு ஏற்ற வடிகால் என் வலைப்பூ.அந்த  விமரிசனங்களுக்குச் சில சான்றுகள் முதல்சபதமும்,ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதமும்

இன்றைய பதிவை நிறைவு செய்வதற்கு முன் இறுதியாக ஒன்று.
பதிவுலகத்தில் மிகப்பரவலாக அறியப்பட்டவரும்,அத் துறையில் மிகச்சிறப்பாகத் தன் முத்திரையைப்பதித்து வருபவருமான ’சும்மா’ தேனம்மை லட்சுமணன் மதுரையில் என் மாணவியாக இருந்தவர் என்பதும் 

அவரது வளர்ச்சியில் அணிலாக என் பங்கும் உண்டு என்பதும்தான் அந்தச் செய்தி.! தம்மில் தம் மக்கள் அறிவுடைமை காண்பதுதானே ஈன்றோர்க்கும்,வளர்த்தோர்க்கும் பெருமிதம் தருவது?அந்தப்பெருமிதப்பூரிப்புடன் எங்கள் பாசப்பிணைப்பு பற்றி நான் எழுதிய பதிவு  மகளாய்..மாணவியாய்.....

இந்த அனுபவப்பதிவோடு என் கதையை முடித்துக் கொண்டு....தொடரும் அடுத்தடுத்த பதிவுகளில் நான் பரிந்துரைக்க விரும்பும் தளங்களையும்,பதிவுகளையும் அறிமுகம் செய்கிறேன்.

மேலும் வாசிக்க...

Sunday, December 2, 2012

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

ரிஷபன் வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை சுசீலாவிடம் ஒப்படைக்கிறார். 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ரிஷபன் தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடன் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் அறிமுகப் படுத்த வேண்டிய பதிவுகளைத் தேடிப் படித்து, தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார். அத்தனையும் அருமையான பதிவுகள். 

இவர் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், மழை, மனிதர்கள் என்ற தலைப்புகளில் ஏழு பதிவுகள் இட்டு - முன்னூற்றுப் பதினைந்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.   

இவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 75
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 79

ரிஷபனின் பணியினைப் பாராட்டி, வாழ்த்தி, சென்று வருக என வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் சகோதரி சுசீலா அவர்கள். 

கல்லூரியில் இளநிலைப்படிப்பில்-B.Sc.,-வேதியல் படித்தாலும் இலக்கிய ஆர்வத்தால் தமிழ் முதுகலைக்குள் புகுந்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.மதுரை பாத்திமாக்கல்லூரியில் 1970-2006வரை, 36 ஆண்டு காலப் பேராசிரியப்பணி. 

தற்போது ஓய்வு பெற்று, மைய அரசுப்பணியிலிருக்கும் மகள் குடும்பத்தாரோடு தில்லியில் வாசம். அடுத்து அவர்களுக்கு எங்கே மாற்றல் வருகிறதோ அங்கு செல்லும் நாடோடி வாழ்க்கையே இனி என்பதால் ‘யாதும் ஊர்..யாவரும் கேளிர்’ என்ற கொள்கையை உடையவர். 

சங்ககாலம் முதல் சமகாலம் வரையிலான தமிழிலக்கியத்தின் சகல துறைகளிலும் ஆர்வமுடையவர். 

சிறுவயதிலிருந்தே கதை எழுதும் ஆர்வம் உண்டென்பதால் அதற்கேற்ற முதிர்ச்சி ஓரளவு கை கூடியபிறகு 100 சிறுகதைகள் வரை எழுதி இருக்கிறார். அவற்றில் 70க்கும் மேற்பட்டவை பிரசுரமாகியிருக்கின்றன. சில கதைகள் பரிசுகளையும் பெற்றிருக்கின்றன.

சிறுகதைத் தொகுப்புக்களும், இலக்கியம், பெண்ணியம் ஆகிய துறை சார்ந்த 2 கட்டுரைத் தொகுப்புக்களும்  நூல்வடிவிலான இவரது பங்களிப்புக்கள்.

பணி ஓய்வு பெற்றபின் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயெவ்ஸ்கியின் உலகப்புகழ்பெற்ற இரு பெரும் நாவல்களை [குற்றமும் தண்டனையும், அசடன்] ஆங்கிலவழி தமிழாக்கம் செய்திருக்கிறார். அவை மதுரை பாரதி புத்தக நிலையத்தாரால் பதிப்பிக்கப்பெற்று முன்னணி எழுத்தாளர்களாலும், விமரிசகர்களாலும் அங்கீகாரத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

2008 இல் கணினியைக் கையாளக் கற்று நவ.2008 முதல் வலைப்பூ எழுதி வருகிறார்.  இலக்கியக்கூட்டங்களிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் சொற்பொழிவாற்றியதும் உண்டு.

பயணம் செய்வதும் இவருக்குப் பிடித்தமானதென்பதால் இந்தியாவில் உள்ள இடங்களோடு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை,மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 

இவரது எழுத்தாற்றல், பேச்சாற்றல், படைப்பாற்றல் அனைத்தும் வலைச்சரத்தில் இவ்வார முழுவதும் வெளிப்படும் என  நினைத்து, இவரை வருக வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 

வருக ! வருக ! வளமான கருத்துகளைத் தருக  சகோதரி சுசீலா ! 

நல்வாழ்த்துகள் ரிஷபன் !

நல்வாழ்த்துகள் சுசீலா !

நட்புடன் சீனா 
மேலும் வாசிக்க...

சப்தப்ராகாரம் - மனிதர்கள்


அன்புள்ள வலைச்சரம் நண்பர்களே..

உறவு என்றொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும்.. என்ற பாடல் நினைவில் ஆடுகிறது இப்போது.

இந்த வாரம் போனதே தெரியவில்லை.! பதிவர்களைத் தேடிப் படிக்கும் ஆனந்தம்.. பின்னூட்டங்களில் கிட்டிய உற்சாகம்.. புதிதாய் அறிமுகமான நண்பர்கள்.. வாழ்க்கை இன்னும் சுவாரசியப் படுத்திக் கொண்டிருக்கிறது இப்போது.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் வரிசையில் மழையைக் கொண்டு வந்தேன்.. நீரில் அதுவும் அடக்கம் என்றாலும்.  மழை குறித்த காதல் எப்போதும் மனதில் .. சிறுதூறல்.. பெருமழை.. எதுவாயினும்.. நனைத்துப் போகிறது அதன் போக்கில்..

இதோ முடிவாய்.. மனிதர்கள்..

எவராயினும்..எந்தப் படைப்பாயினும்.. மனிதம் பேசாத எழுத்து ஜீவனற்றது.. சொல்லப் போனால் மனிதனா.. எழுத்தா என்றால் முன்னுரிமை மனிதனுக்குத்தான். மனித நேயம் பகிர எழுத்தும் ஒரு வடிகாலாய்..

கை குலுக்கிக் கொள்வோம்.. அன்பாய். சிரிப்புடன். அவரவர் சிந்தனைகளில் இருக்கும் வேறுபாட்டை ஒரு ஓரமாய் உட்காரவைத்துவிட்டு. எதையும் விட மேலானதாய் நம் பிரியம்..



மனித நேயம் என்று சொல்லும் போது ஞாபகம் வரும் இருவர்..
ஸ்ரீரங்கம் கோவிலில் ஐக்கியமான இருவர் ..  ஆண்டாள்,.. திருப்பாணாழ்வார்.  

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதனைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே.

என்று பாடி ரெங்கனோடு கலந்து விட்டவர் திருப்பாணாழ்வார்.




ஆண்டாளோ பிரேமையின் சொரூபம். இந்நாட்களில் நாம் சொல்லும்
143  ( I love you) வைக் கண்டுபிடித்த அந்த நாள் சுட்டிப் பெண். 
143 பாசுரங்களில் அவள் சொன்ன தமிழை இனி யாரும் விஞ்சப் போவதில்லை..

இப்போது இன்றைய பதிவர்கள்..

வேணுவனம்  இலக்கிய ஆர்வலர்கள் ரசிக்கக்கூடிய பதிவுகள்.. அப்படியே நம்மை வேறுலகம் கொண்டு போய் விடும்..

மின்மினிப்பூச்சிகள் சக்திப்ரபாவின் இந்த வலைத்தளம் தீவிர எழுத்துக்களுக்கு உறைவிடம். இவரும் அதிகம் எழுதுவதில்லை. எழுதியவை நிச்சயமாய் வித்தியாசமானவை.

துளசிதளம் துளசிகோபாலின் பிரமிக்க வைக்கிற பதிவுகளின் சங்கமம். 5 வலைத்தளங்களுடன்.. புகைப்படங்கள், தகவல்கள், பயணங்கள் என இவர் பதிவுகளில் ஏகத்துக்கு சுவாரசியங்கள்.

கரடி பொம்மை காற்றைக் கொண்டு கவிதை பேசும் ஒரு இலையின் பக்கங்களில் கவிதை கலந்த ரசனை கொட்டிக் கிடக்குது.. கூடவே மனித நேயமும்

சிறகுகள்   உலகத்தின் எந்த கோடிக்கும் உடனே பறந்து சென்று, இயற்கை சீற்றங்களினால் கஷ்டப்படும் யாருக்கும் உதவ, இயற்கையை ரசிக்க, நதியோடும், அருவியோடும், காடுகளோடும், பறவைகளோடும் கலந்து ஓடிக்கொண்டே இருக்க சிறகுகள் வேண்டி, என்னை தடுக்கும் மாயச்சுவர்களை எப்போதும் தகர்த்துக்கொண்டே...இருந்த இடத்திலேயே நான்! 
-இவங்களை இதற்குப் பிறகும் பிடிக்காமல் போகுமா என்ன.. எழுதுங்க.. முடிஞ்சப்ப..அதைத்தான் சொல்ல முடியும்..

திவ்யா ஹரி இவரும் எப்பவாச்சும் எழுதறார்.. ஆனா ஒரு ஸ்பார்க் இருக்கு.. 

காவ்யாவின் தமிழ்வனம் மொழியின் ஆளுமை கொண்ட இவரும் ஏன் எழுதுவதில்லை அவ்வப்போதாவது.???

சிதறல்கள் இவரும்தான்.. எழுதலாமே மாசம் ஒண்ணாவது..

சிறு முயற்சி  அழகிய பதிவுகளுக்கு சொந்தக்காரர். வாழ்த்துகள் முத்துலெட்சுமி மேடம்.

இந்த ஏழு நாட்களில் நான் ரசித்த.. ரசிக்கிற சிலரை உங்களோடு சேர்ந்து இன்னும் ஒரு முறை ரசித்தேன்.. நேர நெருக்கடியில் இன்னும் பலரை என்னால் குறிப்பிட முடியவில்லை..

எனக்கு வாய்ப்பளித்த திரு. சீனா ஸார்.. வலைச்சர குழு.. ஒவ்வொரு நாளும் வந்து என்னையும் ரசித்த நீங்கள்.. எல்லோருக்கும் இதய ஆழத்திலிருந்து அன்பின் நன்றி.

வாழ்க்கை மகத்தானது.. அது ஒரே அலைவரிசையில் கொண்டு வந்து சேர்த்து விடும் நேசத்துக்குரியவர்களை..

சந்திப்போம் இன்னொரு சமயம்.. இன்னும் உற்சாகமாய்..

பேரன்புடன்
 ரிஷபன்.    
மேலும் வாசிக்க...

Saturday, December 1, 2012

சப்தப்ராகாரம் - மழை



மழை.. எத்தனை அற்புதமான விஷயம்.. மழை குறித்த கவிதைகள் நிறைய படித்திருக்கிறோம்.  (போட்டோ ஸ்ரீரங்கம் ஒரு மழை நாளில்)

மழை என்றதும் எனக்கு உஷாராணி அவர்களின் நினைவு வரும். மழையை ரசித்து அவர் எழுதும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆச்சர்யம்.. அந்த மழையைப் போலவே.

மழையை ஏந்திச் செல்லும் அழகி

குடைக்குள்
பதுங்கிச் செல்பவர்களுக்கு
ஊடே
மழையுடன் ஏதோ
பேசியவாறே
உள்ளங்கைகளில் மழையை ஏந்தி
புன்னகைத்துக் கொண்டே
சாலையைக் கடக்கிறாள் 
அப்பைத்தியம்...
ஒரு போதும்
பகிர முடியாத
அவமானங்களையும்,
துயரங்களையும்,
தன்னில் தரித்தபடி பெருத்த சோகத்துடன்
அவளை ஏந்திப் போகிறது
அவளின் அழகு.

---   பா. உஷாராணி

மழையில் நனைவது ஒரு தனி சுகம். தற்செயலாய் கையில் குடை இல்லாமல் வரும் போது திடீர் மழையில் மாட்டிக் கொண்டால்தான் நம்மில் சிலர் நனைகிறோம்.. அப்படியும் ஒதுங்க இடம் கிடைக்குமா என்கிற பரிதவிப்பு..

சின்ன வயசில்.. எந்த பயமும் இல்லாமல்.. சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே வீடு திரும்பி.. அம்மாவிடம் திட்டு வாங்கிய நாட்கள்..





இப்போதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் பெரிதாய் மழை என்றில்லாமல் போய் விட்டது. வெய்யில்.. குளிர்.. நடுவில் போனால் போகிறதென்று சில நாட்களில் தூற்றல்.. பெருமழையில்லாமல் தூறலும் இல்லாமல் நடுவாந்தரமாய் ஒரு வர்ஷிப்பு..

ஸ்ரீரெங்கநாதருக்கு (உற்சவருக்கு) குளியலே சூடு பொறுக்கிற வென்னீரில் தான். மேகம் மூட்டம் போட்டால் அன்றைய புறப்பாடு ரத்தாகி விடும். அவர் வீதியுலா கிளம்பினால் கூடவே ஒரு மூடு பல்லக்கும் போகும்.. மழை வருமோ என்கிற அச்சம் இருக்கிற நாட்களில். அவர் போர்த்திக் கொண்டு போகிற அழகே தனி.

இனி இன்றைய பதிவர்கள்...

அம்பாளடியாள் கவிதைகளில் ஒரு அழகு சந்தம் இருக்கு.. ரசனையும் ஆர்வமும் அவரது படைப்புகளில் தெரிகிறது..

திருமதி பக்கங்கள் - கோமதி அரசு அவர்களின் பயணக் கட்டுரைகள் ஒரு சுவாரசியம் என்றால் குடும்பம் சார்ந்த பதிவுகளில் என்ன ஒரு நெருக்கம்...

வேர்களைத் தேடி முனைவர் குணசீலனின் பதிவுகளில் ஆராய்ச்சி சார்ந்து
விரிவான அலசலில் சுவாரசியமும் தெளிவும் தெரிகிறது.

குட்டிப்பையா வின் இந்தப் பதிவைப் பாருங்கள்.. அந்த நூலை வாங்கத் தூண்டுகிறது அல்லவா..  என்னமோ தெரியவில்லை.. எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டார்.. கொஞ்சமாய் எழுதினாலும்.

Gee Vee இந்தப் பதிவைப் பாருங்களேன்.. மழையும் மனசும் என்னமாய் இழைகிறது ஒன்றாய்.

மதுரை சரவணன் புரட்டிப் போடுகிற கவிதைகளை அனாயசமாய் எழுதுகிறார்.

என் நடை பாதையில் ராம் அடிக்கடி எழுதாத, ஆனால் மிகவும் திறமைகளை உள்ளடக்கியவர்..

தக்குடு பெயரைப் படிக்கும்போதே கும்மாளி போடுதா மனசு.. இவரது பதிவுகளிலும் ஒரு நக்கல் இழையோடும்.

பூச்சரம் பூங்குழலி, மழை குறித்த இந்தக் கவிதையைப் படிக்கலாமா.. மொழிபெயர்ப்பிலும் இவருக்கு அலாதி ஈடுபாடு.

நிறைய பதிவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.. முன்பே சொன்னது போல இவரகளை நானும் உங்களோடு சேர்ந்து ரசிக்கிறேன்..

தொடர்வோம்..


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது