07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 19, 2008

குளோபல் வார்மிங் - இனி எல்லாம் பயமே

இயற்கை பாதிப்புகள் என்றால் நாம் நன்றாக அறிந்த வரையில் புயல், வெள்ளம், சூறாவளி, எரிமலை குமுறல் போன்றவை தான் தெரியும். அதையும் தாண்டி புனிதமானதாக இல்லாமல் அபாயமானதாக சில இயற்கை பாதிப்புகளும் இருக்கின்றன. அவைகளுக்கு காரணம் மகா ஜனங்களாகிய நாம் தான் என்பது தான் முக்கியம்.

நாம் செய்யும் சில செயல்களால் பீமி வெப்பமடைகிறது. புவி வெப்பம்னா என்ன.. அதனால் என்ன பாதிப்பு என்பதை கொஞ்சம் நக்கலாக விளக்கி இருக்கிறார் மாயன். பார்க்க உலகத்துக்கு பால் ஊத்திடாதீங்க....

குளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை என்ற பதிவில் நம்ம கண்மணி அக்கா தலைப்புல இருக்கிற சமாச்சாரங்களை பத்தி சுருக்கமாவும் தெளிவாவும் சொல்லி இருக்காங்க.


"அண்டார்டிகாவில் 33 சதம் பென்குயின் பறவைகளின் எண்ணிக்கை குறைந்தும், தென் அமெரிக்கக் காடுகளில் இருந்து 20 வகைக்கும் மேற்பட்ட தவளை மற்றும் தலைப்பிரட்டை இனங்கள் அழிந்தும் உள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகின் சிறந்த பவளப் பாறைகள் 25%-க்கும் மேலாக அழிந்துள்ளன. 1990 முதல் 2002 வரை உள்ள ஆண்டுகளில் 1998, 2001 மற்றும் 2002 ஆகிய மூன்று ஆண்டுகள், கடந்த 143 ஆண்டுகளில் அதிக அளவு ஆண்டு சராசரி வெப்பநிலையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது." இப்படி சொல்லி அநியாயத்திற்கு பயமுறுத்தறார் சித்தாமுரளி. http://www.muthamilmantram.com/ என்ற இணையதளத்தின் உதவியுடன்.

"பசுமைக் குடில் வாயுவான கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, புவியின் வெப்பநிலையும் அதிகரித்துக் கொண்டே செல்லும், இதுவே ஒரு காலத்தில் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமியை மாற்றி விடும் என்பது திண்ணமே!" என்று மிரட்டுகிறார் ஜிம்ஷா.

"ஒவ்வொரு தொழிற்சாலைகளும் ஏராளமான மரங்களை வளர்க்க வேண்டும். நம்மால் ஏற்பட்ட உலக வெப்பத்தை குறைக்க ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். அதற்கு, இப்போதே மரம் வளர்க்க தொடங்குங்கள். கணியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை." என்று புவி வெப்பம் பத்தி சொல்வதோடு அதில் இருந்து தப்பிக்கும் வழியையும் சொல்கிறார் Kricons.( என்ன சாமி பேர் இது? )

மனிதன் உலகை மாற்றுகின்றானா? என்ற பதிவில் மாதவன், பில் க்ளிண்டன் ஆகியோரை மேற்கோள் காட்டி புவி வெப்பமாதல் பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பார்தி.

மேலும் பார்க்க


மற்ற பதிவுகள் மாதிரி பதிவை மட்டும் படிக்காம :P இதுல இருக்கிற சுட்டிகளை தயவு செய்து பாருங்க. அவ்ளோ முக்கியம் இது.

ஆகவே மக்களே.. மரம் வளர்ப்போம்.. பூமியை காப்போம்.. அடுத்த சந்ததியினரை நிம்மதியாய் வாழ விடுவோம்.

இப்பத்திக்கு அப்பீட்டேய்....:))



மேலும் வாசிக்க...

Friday, July 18, 2008

காசே தான்... டண்டனக்கா..

உருப்படியா எழுதற எல்லோரும் உருப்படியான வேலையா இருக்காங்களே.. இவன் கிட்ட மேட்டர் இல்லைனாலும் வேலை வெட்டி இல்லாம இருக்கானே.. ஆள் கிடைக்காத இந்த ஒரு வாரம் இவன வச்சி ஒப்பேத்தலாம்னு நெனைச்சி போனா போகுதுனு ஒரு வாய்ப்பு குடுத்தா இவன் ஓவர் சீன் போடறானே.. ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட கூடவா இவனுக்கு வலிக்கிது.. ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது தம்பி என்று சீனா சார் திட்டும் முன்பு இன்றைய கணக்கிற்கு ஒரு பதிவு.. ஏய் இந்தா.. ஏய் இந்தா.. ஏய் இந்தா....:)

பணம்
என்பது, பொருட்களதும் சேவைகளதும் பரிமாற்றத்துகு உதவுவதும் , சேமிப்புப் பெருமதியை கொண்டதுமான ஒரு பரிமாற்ற அலகாகும். சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெருமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது கூடுதலாக நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நன்றி : விக்கிபீடியா

இப்போ காசு சம்பாதிக்கவும் சம்பாதித்ததை விடவும் சரியான இடம் என்றால் அது பங்கு சந்தை தான். ஆனால் பங்கு சந்தை என்றால் வெறும் சூதாட்டாம் தான் என்பது போன்ற எண்ணம் இன்னும் நீங்கியதாக தெரியவில்லை. பங்கு சந்தை என்றால் என்ன? அதன் புள்ளிகள் எப்படி கணக்கிடப் படுகின்றன... என்பது போன்ற விவரங்களை நண்பர் வவ்வால் மிக தெளிவாக சுருக்கமாக விளக்கி இருக்கார். sensex- ஒரு பார்வை! ..போய் பாருங்க. மேலும் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு என்ன காரணம் மற்றும் சந்தை சம்பந்தப் பட்ட பல தகவல்களை sensex- பங்கு சந்தை பரமபத விளையாட்டு! என்ற பதிவில் சொல்லி இருக்கார்.

^^^^^^^^()^^^^^^^^^^^^^^^()^^^^^^^^^^

பங்கு சந்தையில் லாபம் பெருவது எப்படி என்ற வெற்றியின் ரகசியங்கள் மற்றும் பங்கு சந்தை பற்றிய தினசரி தகவல்களை நண்பர் சாய் கணேஷ் எளிமையாக விளக்கி இருக்கிறார். வாங்க/விற்க பரிந்துரையும் செய்கிறார். ஆப்ஷன்ஸ் பற்றிய பதிவு ரொம்ப உபயோகமானது.

^^^^^^^^()^^^^^^^^^^^^^^^()^^^^^^^^^^

தமிழில் பங்கு சந்தை பற்றிய செய்தி என்றாலே நண்பர் சரவணகுமாரை தெரியாமல் இருக்க முடியாது. தமிழில் பங்கு வணிகம் என்ற தலைப்பில் அவர் எழுதும் வலைப்பூ மிகவும் பயனுள்ளாது.

^^^^^^^^()^^^^^^^^^^^^^^^()^^^^^^^^^^
நம் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூர் சிவா நம்மை போன்ற பாமரர்களுக்கும் புரியற மாதிரி எளிமையாக பங்கு சந்தை பற்றிய தகவல்களை தருகிறார். அவரின் இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 1 மற்றும் இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 2 ஆகியவை பங்கு சந்தையில் புதிதாக நுழையும் அல்லது அதை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் உள்ள அனைவரும் படிக வேண்டிய பதிவுகள். பங்குகள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கு டிமேட் கணக்கு அவசியம். அதை எப்படி தொடங்குவது என்று டீமேட் தொடங்குவது எப்படி என்ற பதிவில் சொல்லி இருக்கிறார். அந்த வலைப்பூ முழுவதும் இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கு. போய் பாருங்கோ..

இதை எல்லாம் நல்லா படிச்சி நெறைய பணம் பண்ணுங்க... :))

அம்புட்டு தான்.. இப்பத்திக்கு அப்பீட்டு.. வர்ட்டா..

மேலும் வாசிக்க...

Thursday, July 17, 2008

ஹைக்கூ மேளா..



சேல்ஸ் மேளாக்களை பார்த்து பார்த்து பழக்க தோஷத்தில் இப்படி தலைப்பு வைக்க வேண்டியதாகிவிட்டது...:P

ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம். ஹைக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிகம் வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாஷோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்பிரபலமான கவிதை வடிவாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர். - நன்றி : விக்கிபீடியா

வேலை தேடினேன்..உடனே கிடைத்தது...
என்னை தொலைத்து விட்டேன்
இன்னும் தேடுகிறேன்...


நல்லா இருக்கா? இதே மாதிரி நான் ரசித்த ஹைக்கூக்கள் நீங்களும் ரசிக்க...

அம்மா இங்கே வா வா
குரல்கள் ஒலிக்கின்றன
அனாதை இல்லத்திலிருந்து.

- இவள்...



விஞ்ஞானம் பொய்த்தது

நீரின்றி மீன்கள்

அவள் விழிகள் !

- காவேரி


நேரம் தவறாமல்
இலக்கை அடைகிறது
கடிகார முள்..
````
இல்லாததை சொல்லிக்காட்டியது
பாத்திரமட்டத்தை தேய்க்கும்
கரண்டி...
- நவீன்

பலவருடப் பரிச்சயமெனினும்
இதழில் இறுக்கம்
உடன் சந்தேகக் கணவன்.

~~~~ தெரிந்தே தவறு செய்கிறார் மதுபானக்கடை முதலாளி..

- ராகவன்


பால் குடிக்கும் கன்று
ஏக்கமாய் பார்க்கும்
புட்டிப்பால் குழந்தை!
~~~~
ஜனனமும் மரணமும்
அழகுதான்,
சூரியன்!
~~~~
மேல் இமையில் நீ இருக்கிறாய்
கீழ் இமையில் நான் இருக்கிறேன்
நம் இமைகள் இப்படியே மூடிக்கொள்ளக்கூடாது!

- தனா


கடவுளுக்கு
காணிக்கை
கடனில் ஏழை.....
~~~~

நடிகனுக்கு
கட்-அவுட்
நடுத்தெருவில் ரசிகன்.....
~~~
அவளின் ஆடைகள்
மேலும் கிழிக்கப்பட்டன
அவர்களின் பார்வைகளால்.....

- மில்டன்


மேலும் ரசிக்க... நிலா ரசிகன், ரசிகவ் ....

இப்பத்திக்கு அப்பீட்டு.... :-))


மேலும் வாசிக்க...

எந்தையும் தாயும்..


அம்மாவும் அப்பாவும் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.. கேட்டவுடன் கிடைக்கும் எதையுமே நாம் சரியாக மதிப்பதில்லை. அதன் மதிப்பு அப்போது நமக்கு சரியாக தெரிவதும் இல்லை. அல்லது தெரிய முயற்சிப்பதும் இல்லை. அது நட்பாக இருந்தாலும் சரி. தாய் தந்தையர் பாசமாக இருந்தாலும் சரி. அவர்கள் நம்மை விட்டு பிரிந்த பின் தான் அவர்களை முழுமையாக உணர்கிறோம். சிலர் இருக்கும் போதே தங்கள் உணர்வை பகிர்ந்து கொள்கிறார்கள்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
கோவி கண்ணன் அவர்களின் அப்பா இன்னும் சாகவில்லை....! என்ற பதிவில் தன் தந்தையின் நினைவை மிக நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார். கடைசியாக தன் தந்தையின் முகத்தை கூட பார்க்காமல் போன வலியை அதில் நம்முடன் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். தான் தந்தையான பின்பும் இன்னும் தன் கனவில் வரும் அப்பாவை நினைத்து கண்ணீர் வருகிறது என தன் அப்பா பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இறந்த பின்பு நினைத்து பார்ப்பதைவிட முடிந்தால் இப்போதே உங்கள் அப்பாவை கட்டியணைத்து உங்கள் பாசத்தை காட்டிவிடுங்கள் என் சொல்கிறார்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
இந்த சாப்ட்வேர் உலகினில் நண்பர்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு கூட அப்பாவை யாரும் ஞாபகத்தினில் வைத்திருப்பதில்லை. எல்லா நிமிடங்களும் ஞாபகத்தில் வைத்திருக்கும் என் அப்பாவின் ஞாபகமாக ஓர் கவிதை இதோ.. என்ற முன்னுரையுடன் நண்பர் ரசிகவ் தன் தந்தைக்கு எழுதிய கவிதை அப்பாவுக்காய் ஒரு கடிதம்.
"நீ
கோடையில் நின்றாலும் - எனக்கு
குடை வாங்கிக் கொடுத்தாய்...

உன்
வியர்வை விற்ற காசில் - எனக்கு
குளிர்சாதனப்பெட்டி!

உன் சைக்கிள் சுழற்சிதான் - எனக்கு
பைக் வாங்கிக் கொடுத்தது..."

இது ரசிகவின் தந்தைக்கு மட்டுமல்ல. இந்த வரிகளை இரவல் வாங்கி நாமும் மரியாதை செலுத்தலாம். நம்மில் பெரும்பாலானோருக்கும் பொருந்தும் வரிகள்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
தான் பல்வேறு காரணங்களால் அம்மாவை விட்டு சில ஆண்டுகளாக பிரிந்திருந்தாலும் தன் முதல் தோழியான தன் அம்மாவை பற்றி மிக நெகிழ்வாக பதிவிட்டு்ருக்கிறார் நண்பர் தமிழன்.
"நான் என்ன சொல்லி
உன்னை வாழ்த்த அம்மா...
என் ஆசை தீர உன்னை அம்மா
என்றழைப்பதைத் தவிர...
தன் பிள்ளை நிலைபெற்று விட்டான்
என்கிற திருப்பதியை
உனக்கு கொடுப்பதை தவிர..."
சும்மா நச்சினு சொல்லி இருக்கார்ல.. போய் படிச்சி பாருங்க..
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
திவ்யா மாஸ்டர்... கதை, கவிதை என கலக்குவதோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது பல வகையான அட்வைஸ்களையும் அள்ளி வழங்குவார். இந்த கலகல அட்வைஸ்களுக்கு மத்தியில் தந்தையை இழந்தவர்கள் தன் தாயிடம் எப்படி ந்டந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லி இருப்பது மிகவும் பயனுள்ள பதிவு அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!.
தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய் நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???
என்று மிக தெளிவாக அழகாக சொல்லி இருக்கிறார்.
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
நண்பர் யாத்ரீகன் தன் அன்புள்ள அப்பாவுக்கு ரொம்பவும் வித்தியாசமான ஒரு கடிதம் எழுதி இருக்கார். கண்டிப்பான தன் அப்பாவின் தொடர்ச்சியான கடிதங்களுக்கு பதில் எழுதாது மட்டுமின்றி தொலை பேசியிலோ நேரிலோ பேசும் போது அதைபற்றி குறிபிட்டது கூட இல்லை என்று வருத்தப் படுவதோடு, தன் தந்தை தன் இறுக்கத்தை குறைத்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர் மனம் வலிக்காமல் அவ்வளவு அழகாக எழுதி இருக்கிறார். இது தந்தை மகனுக்கு எழுதிய கடிதம் என்பதைவிட இப்போது தந்தையாய் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர இதை படிக்கலாம்.
"உங்களுக்கு அறிவுரை சொல்ல முயற்சி பண்றேன்னு நினச்சிறாதீங்க, இதெல்லாம் நான் உங்க கிட்ட இருந்து, படிச்ச புத்தகங்கள் கிட்ட இருந்து, பார்த்த மனிதர்கள் கிட்ட இருந்து, கிடைத்த அனுபவாங்கல்ல இருந்து தோணியதை தான் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சதை உங்களுக்கு நியாபகப்படுத்த முயற்சி பண்ணியிருக்கேன். "
இதை விட அழகாக எபப்டி சொல்ல முடியும்?
^^^^()^^^^()^^^^()^^^^()^^^^
நண்பர் சீமாச்சுவின் இந்த பதிவையும் பாருங்க. அம்மாவை பற்றிய நினைவை எழுதிவிட்டு , அம்மாவின் நினைவாக கோவிலுக்கு பசுமடம் கட்டித் தந்ததை குறிபிட்டு"அம்மா.. நீ வந்து பாத்தியா..? உனக்குத் த்ருப்திதானே....." என்று முடிக்கும் போது நிஜமாகவே ஒரு குழந்தையின் மனது தெரிகிறது.

படம் உதவி : ஆஷ் அம்ருதா

... ஹே.. யார் மேன் அது தொங்களூர் தவா? .. தேதி எல்லாம் போட்டு இன்னைக்கு ஒரு பதிவு கூட இல்லைனு சொன்னது?.. இன்னைக்கு 2 பதிவு போட போறேன்.. :)).. ஏன்யா இப்படி சொந்த செலவுல சூனியம் வச்சிகிறீங்க? :)))

இப்பத்திக்கு அப்பீட்டு.. :-))
மேலும் வாசிக்க...

Wednesday, July 16, 2008

ஆஹா ஓஹோ ஐடியா மாமணிகள்

அட்வைஸ் பன்றது ஈசி.. அதை கடைபுடிக்கிறது தான் கஷ்டம்னு சொல்லி சொல்லியே அட்வைஸ் பண்றவங்க லிஸ்ட் குறைச்சிட்டோம். இப்போ அதுக்கும் ஆள் குறைஞ்சிட்டாங்க. ஆனாலும் இருக்கிற கொஞ்சம் ஆளுங்களும் .. அட அட.. கலக்கறாய்ங்க போங்க.

இப்படித்தான் நம்ம ( பில்லா வில்லன்) ஜக்தீஷ் ஒரு ஐடியா குடுத்திருக்கிறார்..இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சிகளில் அதிக நடன நிகழ்ச்சிகள் வந்துவிட்டதால் நடுவர்களுக்கு கொஞ்சம் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிகிறது.. இந்தப் பதிவின் நோக்கம் நல்ல நடுவர்களை உருவாக்குவதே.. என்ற முன்னுரையுடன் நல்ல நடுவராவது எப்படி? - Guide for dummies என்ற பதிவில் சூப்பரா ஐடியா குடுத்திருக்கார். வடிவேலு பாஷைல சொல்லனும்னா.. வாட்ச்சி பண்ணிட்டே இருக்காய்ங்கய்யா... :)


திரும்பவும் திவ்யா மாஸ்டர்.. :)... கல்யாணப் பெண்களுக்கு புகுந்த வீட்டில் நாத்தனார் இருப்பது பயம் அல்லது கவலையா? இனி அதற்கு இடமே இல்லை.. வாங்க நாத்தனார் கிட்ட பழகலாம்னு சொல்லி நாத்தனார்களை மயக்க அற்புதமான ஐடியாக்களை அள்ளி தெளிக்கிறங்க்ல அம்மணி நாத்தனாருக்கு....நமஸ்காரம்!!

மனைவியின் மனதை கவர்வது எப்படி??? என்று கனவர்களுக்கும் வகுப்புடுக்கிறார்.பெண்களின் மனதை கவர்வது எப்படி??? வாலிப பசங்களுக்கும் டிப்ஸ் குடுத்து அசத்தறார்.


குழந்தைகளிடன் எபப்டி பேச வேண்டும், அவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும், அவர்களிடம் அணுகும் முறை, அவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை எப்படி சரி செய்வது போன்ற ஏராளமான ஆலோசனைகளை புதுகைதென்றல் கலா அக்கா, பாசமலர் அக்கா, விஜயகுமார் அங்கிள் போன்ற மூத்தக் குடிமக்கள் :P அற்புதமாக விளக்குகிறார்கள். அவற்றை தெரிந்துக் கொள்ள பேரண்ட்ஸ்க்ளப் பக்கம் எட்டி பாருங்கள்.

மேல சொன்ன எல்லாத்தயும் தாண்டி ரொம்ப முக்கியமான் ஆலோசனைகள் தரும் ஐடியாமணிகள் எல்லாம் இருக்காங்க. மங்களூர் சிவா மாதிர் ஜொள்ளு பசங்க கிட்ட இருந்து தபிக்கிறது எப்படினு க்ளாஸ் எடுத்திருக்கார் நம்ம ஜொள்ளுநாட்டு பேரரசர் ஜொள்ளுபாண்டி.

அதையும் தாண்டி புனிதமானவர் ஒரு பெரியவர் இருக்கார். அவர் எடுக்கிற க்ளாஸ் பாருங்க .வாங்கம்மா வாங்கனு எதோ கத்தரிக்காய் விக்கிற மாதிரி பசங்க கிட்ட இருந்து எப்படி தப்பிகிறதுனு ஐடியா மழை பொழிஞ்சிருக்கார். அதானே இவர் பன்றது இவருக்கு தான தெரியும்? :P

இப்போதைக்கு இவ்ளோ போதும்... அப்புறம் நீங்க எல்லோரும் கெட்டு போய்டுவீங்க..:))
ஸோ..இப்பத்திக்கு அப்பீட்டு.. :-))
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது