07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 17, 2008

ஹைக்கூ மேளா..சேல்ஸ் மேளாக்களை பார்த்து பார்த்து பழக்க தோஷத்தில் இப்படி தலைப்பு வைக்க வேண்டியதாகிவிட்டது...:P

ஹைக்கூ (Haiku) மூன்று வரிகளில் முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் என 17 அசைகளைக் கொண்டு அமைக்கப்பெறும் இயைபற்ற ஜப்பானியக் கவிதை வடிவம். ஹைக்கூ மிகக்குறைந்த சொற்களைக்கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிகம் வெளிப்படுத்துகிறது. 17ம் நூற்றாண்டில் பாஷோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக உயர்த்தியபோது இவ்வடிவம் தனித்தன்மையடைந்தது. இது ஜப்பானின் மிகப்பிரபலமான கவிதை வடிவாக இருந்து வருகிறது. விவரணக்கவிஞர்களும் ஏனையோரும் இதனை ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் பின்பற்றியுள்ளனர். - நன்றி : விக்கிபீடியா

வேலை தேடினேன்..உடனே கிடைத்தது...
என்னை தொலைத்து விட்டேன்
இன்னும் தேடுகிறேன்...


நல்லா இருக்கா? இதே மாதிரி நான் ரசித்த ஹைக்கூக்கள் நீங்களும் ரசிக்க...

அம்மா இங்கே வா வா
குரல்கள் ஒலிக்கின்றன
அனாதை இல்லத்திலிருந்து.

- இவள்...விஞ்ஞானம் பொய்த்தது

நீரின்றி மீன்கள்

அவள் விழிகள் !

- காவேரி


நேரம் தவறாமல்
இலக்கை அடைகிறது
கடிகார முள்..
````
இல்லாததை சொல்லிக்காட்டியது
பாத்திரமட்டத்தை தேய்க்கும்
கரண்டி...
- நவீன்

பலவருடப் பரிச்சயமெனினும்
இதழில் இறுக்கம்
உடன் சந்தேகக் கணவன்.

~~~~ தெரிந்தே தவறு செய்கிறார் மதுபானக்கடை முதலாளி..

- ராகவன்


பால் குடிக்கும் கன்று
ஏக்கமாய் பார்க்கும்
புட்டிப்பால் குழந்தை!
~~~~
ஜனனமும் மரணமும்
அழகுதான்,
சூரியன்!
~~~~
மேல் இமையில் நீ இருக்கிறாய்
கீழ் இமையில் நான் இருக்கிறேன்
நம் இமைகள் இப்படியே மூடிக்கொள்ளக்கூடாது!

- தனா


கடவுளுக்கு
காணிக்கை
கடனில் ஏழை.....
~~~~

நடிகனுக்கு
கட்-அவுட்
நடுத்தெருவில் ரசிகன்.....
~~~
அவளின் ஆடைகள்
மேலும் கிழிக்கப்பட்டன
அவர்களின் பார்வைகளால்.....

- மில்டன்


மேலும் ரசிக்க... நிலா ரசிகன், ரசிகவ் ....

இப்பத்திக்கு அப்பீட்டு.... :-))


32 comments:

  1. ஒகே நானே பர்ஸ்ட்டு!

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஹா ஹா
    நான் இப்ப செகண்டா தேர்டா அல்ல பர்ஸ்டா தெரில
    ஹைக்கூ எல்லாமே அருமை அழகு எளிமை

    5 7 5 - இது ஹைக்கூவா

    ReplyDelete
  3. எல்லா ஹைகூவும் அருமை!எனக்கு பிடித்த ஹைகூ ஒன்னு...

    பிம்பங்களற்ற தனிமையில்
    ஒன்றில் ஒன்று முகம்பார்த்தன
    சலூன்கடை கண்ணாடிகள்!
    நா.முத்துக்குமார்

    ReplyDelete
  4. எல்லாம் சூப்பர்.

    எனக்குப் பிடித்த பல ஹைக்கூக்கள் உள்லன.

    சாம்பிளுக்கு,,

    அந்தக் காட்டில்
    எந்த மூங்கில்
    புல்லாங்குழல்?
    -அமுதபாரதி

    ReplyDelete
  5. //அம்மா இங்கே வா வா
    குரல்கள் ஒலிக்கின்றன
    அனாதை இல்லத்திலிருந்து.
    - இவள்... //

    :(!

    தொகுப்பு அருமை சஞ்சய்!

    ReplyDelete
  6. நிஜமா நல்லவன் நிஜ்ஜமா வல்லவன்
    "மீ த பர்ஸ்ட்டு?"னு வர்றதில!
    [பதிவ படிப்பீங்களா வல்லவன்:))?]

    ReplyDelete
  7. /
    இப்பத்திக்கு அப்பீட்டு
    /

    இந்த இரண்டு வார்த்தை ஹைக்கூவை மிகவும் ரசித்தேன்!

    ReplyDelete
  8. ஒத்தை வார்த்தை ஹைக்கூவால் உன்னை பாராட்டவேண்டும் என நி. நல்லவர் அடம்பிடிக்கிறார்
    கொய்ய்ய்ய்ய்ய்யால

    ReplyDelete
  9. மேல இருக்கிறது ஸ்மைலி ஹைக்கூ

    ReplyDelete
  10. கண்கள் இரண்டால்
    உன் கண்கள் இரண்டால்
    என்னைக் கட்டி பிடித்தாய் -இழுத்தாய்

    ReplyDelete
  11. போதாதென
    சின்னச் சிரிப்பில்
    ஒரு கள்ளச் சிரிப்பில்
    என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்

    ReplyDelete
  12. பேச எண்ணி சில நாள்
    அருகில் வருவேன்
    கப்பு தாளாமல்
    நகர்வேன் ஏமாறி

    ReplyDelete
  13. /
    நிஜமா நல்லவன் said...

    மீ த பர்ஸ்ட்டு?
    /

    மீ

    பர்ஸ்ட்டு?


    இப்பிடி போட்டிருந்தா இதே கவிதையா ஆகியிருக்கும்ல??

    ReplyDelete
  14. /
    cheena (சீனா) said...

    5 7 5 - இது ஹைக்கூவா
    /
    32
    36
    34

    இதுதான் ஹைக்கூவாம் சஞ்சய் சொன்னாப்டி
    :))))

    ReplyDelete
  15. //நிஜமா நல்லவன் said...

    ஒகே நானே பர்ஸ்ட்டு!//

    பாக்கறேன்.. எத்தனை காலத்துக்கு ஃப்ளிக்கர்ல பொழப்பு ஓட்டறிங்கனு.. :P

    ReplyDelete
  16. //cheena (சீனா) said...

    ஹா ஹா ஹா ஹா ஹா
    நான் இப்ப செகண்டா தேர்டா அல்ல பர்ஸ்டா தெரில
    ஹைக்கூ எல்லாமே அருமை அழகு எளிமை

    5 7 5 - இது ஹைக்கூவா//

    வேணாம்.. நிஜமாவே ஹைக்கூ எழுதறவங்க அழுதுடுவாங்க.. :(

    ReplyDelete
  17. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    எல்லா ஹைகூவும் அருமை!எனக்கு பிடித்த ஹைகூ ஒன்னு...//

    நன்றி தலைவரே.. :)

    // பிம்பங்களற்ற தனிமையில்
    ஒன்றில் ஒன்று முகம்பார்த்தன
    சலூன்கடை கண்ணாடிகள்!
    நா.முத்துக்குமார்//
    ஆஹா.. அற்புதம்.. பகிர்வுக்கு நன்றி.. :)

    ReplyDelete
  18. //பரிசல்காரன் said...

    எல்லாம் சூப்பர்.//

    நன்றி கேகே.. :)

    //எனக்குப் பிடித்த பல ஹைக்கூக்கள் உள்லன.

    சாம்பிளுக்கு,,

    அந்தக் காட்டில்
    எந்த மூங்கில்
    புல்லாங்குழல்?
    -அமுதபாரதி//

    அழகான ஹைக்கூ.. நன்றி.. :)

    ReplyDelete
  19. //ராமலக்ஷ்மி said...

    //அம்மா இங்கே வா வா
    குரல்கள் ஒலிக்கின்றன
    அனாதை இல்லத்திலிருந்து.
    - இவள்... //

    :(!

    தொகுப்பு அருமை சஞ்சய்!//

    ரசித்தமைக்கு நன்றி லக்ஷ்மியக்கா.. :)

    ReplyDelete
  20. //மங்களூர் சிவா said...

    /
    இப்பத்திக்கு அப்பீட்டு
    /

    இந்த இரண்டு வார்த்தை ஹைக்கூவை மிகவும் ரசித்தேன்//

    அம்புட்டும் கொழுப்பு.. :(

    ReplyDelete
  21. //மங்களூர் சிவா said...

    ஒத்தை வார்த்தை ஹைக்கூவால் உன்னை பாராட்டவேண்டும் என நி. நல்லவர் அடம்பிடிக்கிறார்
    கொய்ய்ய்ய்ய்ய்யால//

    ஆஹா.. அருமையான பாராட்டு.. நன்றி மாமா...

    இருங்கடி.. 2 பேரும் என்கிட்ட மாட்டாமலா போய்டுவீங்க? :)

    ReplyDelete
  22. // மங்களூர் சிவா said...

    கண்கள் இரண்டால்
    உன் கண்கள் இரண்டால்
    என்னைக் கட்டி பிடித்தாய் -இழுத்தாய்//

    அடங்கவே மாட்டிங்களா மாம்ஸ்..:)

    //போதாதென
    சின்னச் சிரிப்பில்
    ஒரு கள்ளச் சிரிப்பில்
    என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு ஓடி மறைந்தாய்//

    ஜனங்களே.. இதெல்லாம் சினிமா பாட்டு... :)

    ReplyDelete
  23. //மங்களூர் சிவா said...

    /
    நிஜமா நல்லவன் said...

    மீ த பர்ஸ்ட்டு?
    /

    மீ

    பர்ஸ்ட்டு?


    இப்பிடி போட்டிருந்தா இதே கவிதையா ஆகியிருக்கும்ல??//

    அடடா.. ஆஹா ஓஹோ ஐடியா மணிகள்ல சேக்க வேண்டிய மேட்டராச்சே.. :))

    ReplyDelete
  24. //மங்களூர் சிவா said...

    /
    cheena (சீனா) said...

    5 7 5 - இது ஹைக்கூவா
    /
    32
    36
    34

    இதுதான் ஹைக்கூவாம் சஞ்சய் சொன்னாப்டி
    :))))//

    கொய்ய்ய்ய்ய்ய்யால :P

    ReplyDelete
  25. ஹைக்கூ எனக்கும் பிடிக்கும்...!

    ReplyDelete
  26. சிவாவும் நீங்களும் ஆடியிருக்கிங்க...

    ReplyDelete
  27. நன்றி இம்சை அண்ணா..:)
    நன்றி தமிழன்..:)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது