07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 8, 2008

இசைத் தமிழ் வலைப்பூக்கள்.

இசையை வெறுப்பவர் யாரேனும் உண்டா???!!!
இசை கேட்பதும் சுகம். இசை பாடுவதோ பரமசுகம்.


இசை இன்பம் இந்த வலைப்பூவை பற்றி பார்ப்போம்.

இசைப் பாடல்கள்
இசைக் கருவிகள்
நடனம்
நாட்டுப்புறப் பாடல்
திரைப்படம்
தொகுப்பிசை-Fusion-Album
சுவையான தகவல்கள் இவைகளைப் பற்றிய பதிவுகளை
இங்கே காணலாம்.

அன்பர்கள்
* தி.ரா.ச (T.R.C)

* Kannabiran, RAVI SHANKAR (KRS)

* சுதா ப்ரசன்னா(Dubukku Disciple)

* CVR
* ஜீவா (Jeeva Venkataraman) இவர்கள் தான் இங்கே
பங்களிப்பு.

கல்யாணத் தேன் நிலா யேசுதாஸ் குரலில் மதிமயக்கும் பாடல் என்ன ராகம்
தெரியுமா? மேலே சொடுக்கினால் தெரிந்து விடப் போகிறது. அதே
ராகத்தில் வந்திருக்கும் வேறு சில பாடல்களும் இருக்குங்க.
அவற்றையும் அந்தப் பதிவில் பார்க்கலாம்.

************************************************************

தீராத விளையாட்டுப் பிள்ளை மகாகவி பாரதியின் இந்தப் பாடலை
அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்தப் பாடல் இராகமாலிகையில் அமைந்துள்ளது.
இராகமாலிகை என்றால், இராகங்களின் மாலை - அதாவது
ஒன்றுக்கும் மேற்பட்ட இராகங்களால்
கோர்க்கப்பட்ட கீதமாலை! இங்கே, சிந்துபைரவி,
கமாஸ், சண்முகப்பிரியா, மாண்டு
ஆகிய இராகங்களால் அமைந்துள்ளது.இந்தக் கண்ணன் பாடலை எத்தனையோ முறை
எத்தனையோ பேர் பாடிக் கேட்டிருப்போம்.
இந்த எளிய பாடலை, ஒரு எடுத்துக்காட்டாக
எடுத்துக்கொண்டு, வெவ்வேறு இசைக்கருவிகளில்
வாசிக்கக் கேட்போமா?

கண்டிப்பா கேட்டுப் பாருங்க.
*******************************************************


ஆனாப் பொதுவா மோகனம்-னா அது காதலுக்கு உரிய
ராகம்-னு ஆகிப் போச்சுது! அதுவும் மயக்கும்
மாலை/இனிக்கும் இரவு நேர ராகம்-னா
அது மோகனம் தான்!

இப்படி மோகன ராகத்தை பத்தி அழகா
சொல்லியிருக்காங்களே! மோகன
ராகத்தில் அமைந்திருக்கும் திரைப்படப் பாடல்கள்
எதுன்னு தெரிஞ்சிக்க வேணாம்.
சும்மா ஒரு எட்டு போயி பாத்துட்டு வாங்க.

**************************************************************
தக தீம் த தீம் தில்லானா!

நடனத்தில் தில்லானா ஆடுவது பெரிய மேட்டருங்கோ.

தில்லானா மோகனாம்பாள் படத்தில்
சிக்கல் சண்முகமாக சிவாஜி தில்லானா வாசிக்க
தானே மயக்கும் மோகனமாகி பத்மினி தில்லானா
ஆடுவாங்களே!
அதே மாதிரி வேற படத்தில் அவங்க ஆடினது,
பாம்பே ஜெயஸ்ரீ பாடிய தில்லானாவையும் கேட்க
இங்கே இங்கே தான் சும்மா பாருங்க.

********************************************

இசையோடு இந்தநாள் துவங்கட்டும்.
இசைமயமாக இருக்கட்டும்

4 comments:

 1. காலையிலேயே சங்கீதத்துல குளிக்க வச்சுட்டீங்க! இன்னைக்கு எத்தனை பதிவு போடறதா அய்டியா?

  ReplyDelete
 2. வாங்க அப்துல்லா,
  காலை வணக்கம். மீ த பர்ஸ்டா
  கலக்குங்க.

  ReplyDelete
 3. எத்தனைப் பதிவுங்கறத ஆண்டவன் சொல்றான் இந்தப் புதிகை தென்றல் செய்வாள்.

  அம்புட்டுதேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது