07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 27, 2008

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் ......

அன்பின் தமிழ் பிரியன் மிகக் குறைந்த கால அவகாசத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இருப்பினும் மற்ற பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, கொடுத்த பணியினை நிறைவேற்றுவதில், அதிக கவனம் செலுத்தி, அதிக உழைப்புடன், பதினைந்து பதிவுகள் போட்டு, மாறுபட்ட சிந்தனையுடன் வலைச்சரத்தினை நடத்திச் சென்று, இப்பொழுது விடை பெற்றிருக்கிறார். அவரது உழைப்பும், ஈடுபாடும் பாராட்டத்தக்கது. இட்ட பதிவுகள் அனைத்துமே அருமையான பதிவுகள். வகைப்படுத்திய விதம் நன்று. பல அரிய தகவல்கள் தந்து சென்றிருக்கிறார்.

நல்வாழ்த்துகளை நன்றியுடன் தெரிவித்து வழி அனுப்புவதில் மனம் மகிழ்கிறோம்.
==========================================================
28ம் திகதி தொடங்கும் வாரத்திற்கு அருமைச் சகோதரி நானானி ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். 17 மாத காலமாக வலைப்பூக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 140 பதிவுகள் வரை, பல்வேறு தலைப்புகளில், பல்வேறு ரசனைகளில் இட்டிருக்கிறார். மெல்லிசையிலும் கர்நாடக சங்கீதத்தீலும் ஈடுபாடு உடையவர். பழைய பாடல்களை நேசிப்பவர். வீணை மற்றும் கீபோர்டு வாசிப்பவர். பேரன் பேத்திகளின் மழலைச்சொல் கேட்பது இவருக்குப் பிடித்த பொழுது போக்கு. பார்ப்பதற்கு அதிகம் பேசாத சாது போல் இருப்பார். பேச ஆரம்பித்து, பழகிவிட்டால் இயல்பாகப் பேசுவார். முதலில் நூல் விட்டு, அது கயிறாகி, அதுவே வடமாகிவிடும். எனக்கு மிகவும் பிடித்த
ஐங்கரனுக்கு 108 போற்றிகளை ஒரு பதிவாக பல படங்களுடன் போட்டிருக்கிறார். புகைப்படத் துறையில் வல்லுனர்.

சகோதரியை வருக வருக என வரவேற்று மகிழ்கிறோம்.

Cheena ( சீனா )
----------------------

16 comments:

 1. நல்வாழ்த்துகள் தமிழ் பிரியன் - நானானி

  ReplyDelete
 2. அருமையான பதிவுகளை வழங்கும் நானானி அவர்களைப் பற்றி மிக அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள் சீனா சார்!
  வழக்கத்தை விட இன்னும் அருமையான பதிவுகளுடன் அவரது வலைச் சர வாரம் நிச்சயம் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லா வாரமாகவே இருக்கும். வாழ்த்துக்கள் நானானி!

  ReplyDelete
 3. வாங்க நனானி அம்மா, வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களுடன்

  மங்களூர் சிவா

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் நனானி அம்மா!

  ReplyDelete
 5. நாலு பின்னூட்டங்களுக்கும் ரிப்பீட்டு...

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  வாழ்த்துக்கள் நானானி அம்மா...!

  ReplyDelete
 7. வாருங்கள் நானானி அம்மா!

  உங்களின் ரசிப்பில் ஆழ்த்திய பதிவுகள் பற்றிய பதிவுகளினை பார்க்கும் ஆவலுடனாக :)

  ReplyDelete
 8. வாருங்கள் நானானி அம்மா!

  உங்களின் ரசிப்பில் ஆழ்த்திய பதிவுகள் பற்றிய பதிவுகளினை பார்க்கும் ஆவலுடனாக :)

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் நானானி

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் நானானிம்மா,

  வந்து கலக்குங்க. இல்ல இல்ல, பட்டைய கெளப்புங்க. .... :))

  ReplyDelete
 11. வாழ்த்துகள் சொன்ன சக பதிவர்கள்
  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
  இந்த...இந்த..எதிர்பார்ப்புக்குத்தான்
  பயந்தேன்..தயங்கினேன். ஆனாலும் என்னால் இயன்ற வரை திருப்தி செய்வேன் என்று நம்புகிறேன்.
  ஆதரவுக்கு மீண்டும் நன்றி!!

  ReplyDelete
 12. வாருங்கள் நானானி அம்மா!

  உங்களின் ரசிப்பில் ஆழ்த்திய பதிவுகள் பற்றிய பதிவுகளினை பார்க்கும் ஆவலுடனாக

  repeatu.

  ReplyDelete
 13. உய்....உய்....உய்.... :D :D

  நானானி அம்மா,

  எனக்கு விசில் அடிக்கத் தெரியாது. ஆனாலும் உங்களுக்காகக் கஷ்டப்பட்டு :P, கையால் விசில் அடித்திருக்கிறேன்.:)))

  வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 14. புதுத்தேனீ!!!!!!!!!!
  விசிலுச் சத்தம் காதைப் பிளக்குதே!!
  நன்றிம்மா!! அடிக்கத்தெரியாத விசிலடிச்சதுக்கு.

  ReplyDelete
 15. சீனா!
  உங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி!
  என்னையே நான் கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போல் சொல்லியிருக்கிறீர்கள்!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது