07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 2, 2008

ரசிக்க வைத்த அனுபவங்கள்!!!!

ஒரு சில அனுபவங்கள் வாழ்க்கையில் என்று நினைத்தாலும் பசுமையாய் நினைவுகளில் காட்சியளிக்கும்... அதுவும், நம்மோடு பயணிப்போரது அனுபவங்களை அவர்கள் நம்மோடு பகிர்ந்துக்கொள்ளும் பொழுது எழும் மகிழ்ச்சியே தனி சுகம் தான். அப்படி நான் ரசித்த பதிவர்களின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துக் கொள்ளப்போகிறேன்.

"C.V.R" இவர் அமெரிக்கா சென்று தனது கார் ஓட்டும் திறமையின் மூலம் மாமாவிடம் மாட்டிக்கொண்டு விழித்த அனுபவத்தை "நான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை" பதிவில் மிகவும் அற்புதமாய் பகிர்ந்துயிருப்பார். படிக்கும் நமக்கும் அவர் விழித்துக் கொண்டிருந்த நிமிடம் கண் முன் வந்து போகும்...... சார் தாய் நாடு திரும்பும் பொழுது,அவரை, ஒரு அம்மா தன் குழந்தைக்கு பூச்சாண்டியாக்கிய அனுபவத்தை மிக அருமையாய் போன மச்சான் திரும்ப வந்தான் பதிவில் அருமையாய் பகிர்ந்துக் கொண்டிருப்பார்.... அமெரிக்காவில் அவரது மேனேஜர் வீட்டு விழாவில் பாட்டு பாடி டேமேஜ் ஆன கதையை பாட்டு பாடவா பதிவில் ரசிக்கும் விதத்தில் சொல்லியிருப்பார். இவரது எழுத்து நடை ரசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கும்...

தமிழ்மாங்கனி, என்னதான் இவர் அம்மா, நான் schoolக்கு போகல... ன்னு கத்தினாலும் இவரால் பள்ளிக்கு போகமுடியாது. ஏன் என்றால் ? இவர் கல்லூரி படிக்கும் மாணவி. இவர் எப்படிங்க பள்ளிக்கு போக முடியும்?. இவர் கல்லூரி விடுமுறையில் 4 புது விஷயங்களை கற்றிருக்கிறாய் அவர் அப்படி என்ன கற்றுக் கொண்டார் என்பதை அவரது இநதப் பதிவைப் பார்த்தாலே நமக்கு புரிந்து விடும்..

"இவர் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் இசையமைப்பாளர்களை பயத்திற்கு உள்ளாக்கி உள்ளது என்பது முக்கியச்செய்தி...."

இம்சை அரசி, தனது திருமணத்தின் பொழுது அவரது மேக்-அப் அனுபவங்களை ரசிக்க ரசிக்க பகிர்ந்துக்கொண்டிருப்பார்

"கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் சொன்ன விஷயம் என்னன்னா உனக்கு 'மேக்-அப்' ரொம்ப நல்லா பண்ணி விட்டிருந்தாங்க. நீயும் ரொம்ப அழகா இருந்தே (ஐஸ் வைக்கலிங்க.நெசமாத்தான்). ஆனா எந்த 'மேக்-அப்'பும் இல்லாம எப்பவும் ஸ்மைலோட இருந்த உன் வீட்டுக்காரர் உன்னை விட அழகா இருந்தார்னு சொன்னாங்க. போட்டோஸ் வந்ததும் எங்க வீட்டுலயும் இதே கமெண்ட்தான் குடுத்தாங்க"

அது என்னமோ நிஜம்தாங்க என்னதான் பொண்ணுங்க மேக்கப் போட்டு போஸ்க் கொடுத்தாலும் மேக்கப்பே போடாம மாப்பிளைங்க பெயரை அள்ளிக்கிட்டு போய்டுராங்க....

இம்சை அரசி கடைசியாய் அழகாய் ஒரு விஷயம் சொல்லிருப்பார் "தலைல இருந்த கால் வரைக்கும் ரொம்ப நல்லா பண்ணின மேக்-அப் தர அழகைவிட முகத்துக்கு ஒரு சின்ன ஸ்மைல் தர அழகு இருக்கே. அதை எந்த மேக்-அப்பாலயும் தர முடியாது. " மிகவும் உண்மையான வார்த்தைகள்....

வலையுலகில் புதியதாய் தடம் பத்திருக்கும் கார்த்திக் தன் வானவில் வீதி மூலம் தனது சென்னை அனுபவங்கள ரசிக்கும் விதத்தில்
பதித்து வருகிறார்.. தனது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையை தொடங்குகிறார்.. இவரது சிங்காரமா ஊரு...சென்னையின்னு பேரு பதிவில் தன் முதல் சென்னை அனுபவத்தையும் குடும்பத்தை பிரியும் அந்த கடைசி நிமிட நெகிழ்ச்சியான தருணங்களையும் அழகாய் சொல்லியிருப்பார்... இவர் மென்மேலும் தன் தடங்களை பதிக்க வாழ்த்தி வரவேற்போம்!!!

இதுபோல் நான் மிகவும் ரசித்த ஒரு மறக்கமுடியாத அனுபவ பதிவு அருட்பொருங்கோவின் ஒரு சின்ன கால்குலேட்டருக்காக இத்தன ரணகளமா? பதிவு கல்லூரி கால நினைவுகளை நம் கண்முன் நிறுத்தி சிரிக்க வைக்கும் பதிவு......

என்னங்க அனுபவம்லாம் எப்படி இருந்தது..... சரி இப்போ நீங்க ரசித்த சில அனுபவங்களை சொல்லுங்க பார்ப்போம்....

13 comments:

 1. எழில்

  அழாகாக, ரசித்த பதிவுகளை, பழைய, புதிய பதிவுகளைத் தேடிப் பிடித்து பதிவில் சுட்டிய விதம் நன்று நன்று - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. ரசிக்கும் படியான அனுபவங்கள்.நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 3. நன்றி சீனா அய்யா!!!

  ReplyDelete
 4. அழகான அனுபவ பதிவுகள்,
  நாங்களும் படித்து ரசிக்க பதிவுகளை சரம் கோர்த்து பார்வைக்கு கொண்டு வந்துள்ளீர்கள், நன்றி எழில்!!!

  நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 5. தொகுப்பு நல்லா இருக்கு. ஆனா நான் இதில் ஒரு பதிவு கூட படிச்சதில்லையே:(. இனிமேலாவது படிச்சிட வேண்டியது தான்.

  ReplyDelete
 6. நன்றி நல்லவன்!!!

  சீக்கரம் படிங்க

  ReplyDelete
 7. மிக அழகான பதிவு எழில்பாரதி.
  தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 8. ஒவ்வொரு லிங்கிற்கும் போய் படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எழில்பாரதி. நல்ல பதிவு. வாழத்துகள்.

  ReplyDelete
 9. //சினிமா நிருபர் said...
  ஒவ்வொரு லிங்கிற்கும் போய் படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது எழில்பாரதி.//

  அப்படியா ஏன்?


  //நல்ல பதிவு. வாழத்துகள்.//

  நன்றி சினிமா நிருபர்!!

  ReplyDelete
 10. ரசிக்க வைத்த அனுபவங்களை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் மிகவும் ரசித்துத் தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் எழில்பாரதி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது