07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 13, 2008

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்தல்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக சகோதரி புதுகைத் தென்றல் புயலாக வீசிச் சென்றார். இதுவரை உள்ள வலைச்சரப் பதிவுகளின் எண்ணிக்கைச் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்து விட்டார். நாற்பத்து ஐந்து பதிவுகள் ஒரு வார காலத்தில் பல்வேறு பணிகளுக்கிடையேயும் பதிந்துள்ளார் எனில் அது வியக்கத்தக்க சாதனை அல்லவா ?

அது மட்டுமா, புதிய முயற்சியாக, வித்தியாசமான சிந்தனையாக, ஒரு படப் பாடல் போல், ஒரு பதிவரைப் பற்றியும், அவரது பதிவுகளைப் பற்றியும் உள்ள செய்திகளை மட்டுமே பதிவுகளாகப் படைத்து விட்டார். வழக்கமாக துறை வாரியாக பதிவுகள் படைப்பதற்கு பதிலாக பதிவர் வாரியாக பதிவுகள் படைத்து விட்டார். இது புதுமை அன்றோ !

தேர்ந்தெடுத்த பதிவர்களோ வலைப்பதிவுகளின் ஜாம்பவான்கள். அவர்களின் சிறப்பினைச் சிறப்பாகச் சொல்லி விட்டார்.

அவருக்கு நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றியினைத் தெரிவித்து வலைச்சரத்தின் சார்பினில் வழியனுப்புகிறோம். வாழ்க வளமுடன் !

-------------------------------------------------------------------------------------------

14.08.2008 முதல் தொடங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியராக அருமை நண்பர் சஞ்செய் பொறுப்பேற்கிறார். இவர் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையை உடையவர். கடலை, கும்மி, மொக்கை தவிர தனக்கு வேறு ஒன்றும் தெரியாது எனப் பிரகடனப் படுத்துபவர். ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்களை வைத்திருப்பவர். சக பதிவர்களிடையே மொக்கையின் மூலமாக பெயர் பெற்றவர்.

புதுகைத்தென்றலின் சாதனையை முறியடிக்க நண்பர்கள் தூண்டி விடுகிறார்கள். ஆனால் இவரது பணிச்சுமை காரணமாக இவரால் முறியடிக்க முடியாது எனவும் நண்பர்கள் பேசுகிறார்கள். பொறுத்திரூந்து பார்ப்போம்.

வருக வருக சஞ்செய் - தருக தருக அருமையான பதிவுகளை.

நல்வாழ்த்துகள்

சீனா

17 comments:

 1. //புதுகைத்தென்றலின் சாதனையை முறியடிக்க நண்பர்கள் தூண்டி விடுகிறார்கள்.//

  உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடறாய்ங்கய்யா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

  ReplyDelete
 2. ஆஹா சஞ்சய்,

  நீங்களா? கலக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடறாய்ங்கய்யா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((


  இதுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்டூ...

  :)

  ReplyDelete
 4. வாப்பா வாப்பா தம்பி வந்து சோதனை எதும் பண்ணாம சாதனை எதாச்சும் பண்ணு பாப்போம்!

  :))

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் சஞ்சய்காந்தி.

  ReplyDelete
 6. உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடறாய்ங்கய்யா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((


  இதுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்டூ...

  :)

  ReplyDelete
 7. புதுகைத்தென்றலின் சாதனையை முறியடிக்க வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 8. //மங்களூர் சிவா said...
  புதுகைத்தென்றலின் சாதனையை முறியடிக்க வாழ்த்துக்கள் நண்பா.//


  புதுகைத்தென்றல் அக்காவின் சாதனை என்றும் முறியடிக்கபடாது.

  ReplyDelete
 9. /
  14.08.2008 முதல் தொடங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியராக அருமை நண்பர் சஞ்செய் பொறுப்பேற்கிறார். இவர் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையை உடையவர். கடலை, கும்மி, மொக்கை தவிர தனக்கு வேறு ஒன்றும் தெரியாது எனப் பிரகடனப் படுத்துபவர்.
  /

  ஆமாம் ஆமாம்!!
  :))

  ReplyDelete
 10. தமிழ் வலை உலகிற்கு அமாஸ் என்றொரு புது வார்த்தையை கொடுத்த பொடியன் வலைச்சரத்தில் என்ன புதுமை படைக்கப்போகிறாரோ?

  ReplyDelete
 11. ஏம்பா சிவா - அதென்ன கடலை பெரிசா இருக்கு - அணுப்பாவை தமிழரசி ??? ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 12. புதுகைத் தென்றலின் சாதனையை முறியடிக்க வாழ்த்துகள் - உசுப்பேத்தினாத்தான் உருப்பட முடியும்

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் சஞ்சய். நி.ந வும் ம.சி. யும் இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை, பதிவுகளை அள்ளி வீசுங்கள். பிடிக்க, ... இல்லை இல்லை, படிக்கக் காத்திருக்கிறோம் :)))

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் சஞ்சய்...

  ReplyDelete
 15. @ முத்தக் கவி வித்தகர்
  மங்களூர் சிவா...


  ///உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடறாய்ங்கய்யா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((


  இதுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்டூ...

  :)////

  நானும்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது