07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 30, 2008

என் முதுகில் எனக்கு நானே கொடுத்துக்கொண்ட ஷொட்டுகள்!!

என் மனதுக்குள் பொங்கி பிரவாகமாகப் பெருகியதை எல்லாம் பதிவுகளாகப் பதியப் பதிய
விஷயங்கள் தூர் வாரிய கிணறு போல் ஊற்றுப் பெருகி நிரம்பியது.

அவற்றையெல்லாம் வலையுலக மக்களோடு பகிர்ந்து, அவர்களும் அதை ரசித்து பின்னோட்டமிடுவதைப் பார்த்து மனம் மகிழ்ச்சியால் பூரித்திருக்கிறது. இதுவரையில்லாத அளவு நண்பர்களும் நண்பிகளும் சகோதர சகோதரிகளும் பேரன் பேத்திகளுமாக என் வலையுலகக் குடும்பம் அழகாக பின்னப்பட்டிருக்கிறது. இதுவே எனக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் தருகிறது. என்னை புதுப்பித்துக்கொள்ள ஒரு களமாகவும் இருக்கிறது.
அதற்கு என் மனமார்ந்த நன்றியை எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் எழுதியதில் எனக்குப் பிடித்தவைகளை உங்களுக்குப் பரிமாறுகிறேன். என் முதுகை நானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறேன். நான் சமைத்த சாப்பாட்டை நான் ருசியே
பாக்க மாட்டேன். எப்படியிருந்தாலும் அது சாப்பிடுபவர்கள் பாடு. அனேகமாக அது நல்ல
பாடாகவே இருக்கும்.

'ராஜாதிராஜ மக ராஜ வீரப் பிரதாபன்...'ன்னு ஒரு ஆணாயிருந்தால் ஆரம்பிக்கலாம். ஆனால் எனக்குத் தோதாக, 'தங்கச்சரிகைச் சேல எங்கும் பளபளக்க தனியாளா வந்தேனய்யா..!' என்று எனக்கு நானே பாடிக்கொண்டு ப்ளாக்குக்குள் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தேன்.

அது நல்ல ரம்பம்பம்பம்....ஆரம்பம்!!மடமடவென்று வந்துவிழுந்த பதிவுகளிலிருந்து
எனக்கும் அது புரிந்தது. மனசும் கைகளும் பரபரக்கவாரம்பித்தது.'ஊருக்கு ஊர் என்ன பிரசித்தம்' என்ற பதிவு எனக்குப் பிடித்ததில் ஒன்று. பதிவு வெளியானதும்...எங்க ஊரில் அது பிரசித்தம்...எங்க ஊரில் இது கிடைக்கும்...இதை விட்டுட்டீங்களே...அதை சொல்லலையே?' என்று குமிந்த பின்னோட்டங்களைப் பார்த்ததும்
உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது மனம். என்னோட கருத்துக்களும் நிறைய பேரைச் சென்றடைந்திருக்கிறதே!!!!
இங்கே பாருங்கஅமெரிக்க சென்று வந்த போது அங்கே நான் கண்டது கேட்டது ரசித்தது எல்லாம்
ஒவ்வொன்றாக பதிவிடும் போது...எங்கே ரொம்ப பீத்திக்கிறா...அலட்டிக்கிறா...என்பார்களோ
என்று சிறிது யோசித்தேன். ஆனால் பிறர் பதிவுகளைச் சென்று படித்தபோது எல்லோரும் இதுபோல் பீத்திக்கிறாங்க....அலட்டிக்கிறாங்க என்று அறிந்தபோது அப்பாட! என்றிருந்தது.
அப்புரம் என்னங்க? நாம் பெற்ற பேறு..இன்பம்..அனுபவம்..பிறரோடு பகிர்ந்து கொள்வதில்
இருசாராருக்கும் மகிழ்ச்சிதானே!!

'நயாகரா என் நெஞ்சினிலே' நயாகரா நீர்வீழ்ச்சியை இன் காமெரா லென்ஸ் வழியே
காட்டியிருக்கிறேன். அங்கு கடற்புறாக்களுக்கு ஓடிஓடி தீனி இறைத்துப் போட்டது
மறக்க முடியாதது.
அது இங்கே


செயிண்ட் லூயிஸ் நகருக்கு அருகிலுள்ள "மெரமெக் கேவன்ஸ்" குகைக்குள் நுழைந்து
வெளிவந்தது ஒரு மெய்சிலிர்க்க வைத்த அனுபவம்! படங்களோடு பகிர்ந்து கொண்டதில் திருப்தி.
பாருங்க


'திருப்பதி தரிசனம்' அனுபவம் இறுதியில் விழுந்துவிழுந்து சிரித்தாலும் தெய்வ தரிசனம்
எங்களை கொஞ்சம் உய்ய வைத்ததென்னமோ நிதரிசனம்!!
தரிசனம் இங்கேமதர் மேரி அலெக்ஸ்! எனக்கு பேபிக் கிளாசிலிருந்து பள்ளிப் படிப்பு முடியும் வரை தலைமையாசிரியராக இருந்து எங்களையெல்லாம் நல்வழிப் படுத்தியவர். சமீபகாலம் வரை அவரது
பிறந்தநாளன்று சென்னை சிறுமலர் கான்வெண்டில் ஓய்விலிருக்கும் அவரைச் சென்று வாழ்த்தி ஆசிபெற்று வருவோம். அவரை கௌரவப்படுத்த ஒரு பதிவு.
மதர்

வல்லி அழைப்புக்கிணங்க நான் போட்ட 'எட்டுக்கு எட்டு'...எட்டும்வரை எட்டியிருக்கிறேன்.
ஆழ்மனதில் சுழன்று கொண்டிருந்த நினைவுகளையெல்லாம் வழித்தெடுத்து தொகுத்திருக்கிறேன்.
இங்கே எட்டுங்க

'வா வாத்யாரே வீட்டுக்கு' என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை, எனக்கே முடிவில்
சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. நல்ல தமிழும் சென்னைத் தமிழும் நிகழ்த்திய போட்டியில் இறுதியில் சென்னைத் தமிழே வென்றதை வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறேன்.
தலைப்பைப் படித்துவிட்டு அது சரியில்லையே...'வா வாத்யாரே வூட்டாண்ட!' என்றல்லவா
இருக்கவேண்டும்? என்று பின்னோட்டங்கள் வந்தன. ஒரு பாதி சென்னைத்தமிழ் மறுபாதி
நல்ல தமிழ் என்று விளக்கினேன்.
இங்க பாரு வாத்யாரே

வெத்தல போட வாறீங்களா? மறந்து போன ஒரு கலாச்சாரம் பத்தி வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்புச் சுவையோடு எழுதிய பதிவு, பிடித்ததில் ஒன்று.
வெத்தல போடுங்க


குங்குமம் செய்யலாமா? சமையல் குறிப்புகளே போட்டுக்கொண்டிருந்தால் எப்படி? எங்க வீட்டில்..அம்மாவும் பிறகு அப்பாவும் வீட்டிலேயே தயார் செய்யும் குங்குமம் செய்யும் முறையை பெற்றோர் நினைவாக பதிவாகப் போட்டிருந்தேன். அப்பாவிடமிருந்து நான் நேரடியாகக் கற்றுக் கொண்டது மறக்க முடியாதது.
குங்குமம் எடுத்துக்குங்க

என்னை நானே ஷொட்டிக்கொண்டே இருந்தால் ஷொட்டிக்கொண்டே போகலாம்!
இங்கன நிறுத்திக்கிறேன்.

39 comments:

 1. அன்பின் நானானி,

  இங்கு குறிப்பிட்ட பதிவுகளைப் படித்த நினைவு இருக்கிறது - இருப்பினும் மறு முறை படிக்க வேண்டும் என ஆவலி அதிகரிக்கிறது. படித்து விடுகிறேன்

  ReplyDelete
 2. மீ த பர்ஸ்டா - ஆகா - ஒரு மணி 27 நிமிடங்கள் ஆகியும் மீ த பர்ஸ்டா

  சரி சரி - நண்பர்களே - எங்கேப்பா இருக்கீங்க

  ReplyDelete
 3. cheena (சீனா) said...
  //மீ த பர்ஸ்டா - ஆகா - ஒரு மணி 27 நிமிடங்கள் ஆகியும் மீ த பர்ஸ்டா//

  இதோ வந்துட்டேன்:)))!

  ReplyDelete
 4. நானானி தங்கள் வலைப்பூவில் நான் ரசித்து மகிழ்ந்த இதழ்கள் இவை. அவற்றை மறுபடி நினைவூட்டி, சீனா சார் சொன்ன மாதிரி எல்லோரையும் மறுபடி படிக்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறீகள். படிக்காதவர்கள் கண்டிப்பாகப் படித்து மகிழ வேண்டிய பதிவுகள்.

  ReplyDelete
 5. //சரி சரி - நண்பர்களே - எங்கேப்பா இருக்கீங்க
  //

  இந்தா! இந்தா! இந்தா! வந்துட்டோம்!
  உய்...உய்....உய்.......

  ReplyDelete
 6. ஊருக்கு ஊர் பிரசித்தம்...

  அல்வாத் தொண்டையிலேக் கரையுதே...

  போளி..ம்ம்ம்...இனிக்குது.

  வெள்ளரிக்கா....Yes....ஊர்ப்பக்கம் பிஞ்சாய்க்கிடைக்கும் தான்....

  இவை எல்லாம் நினைவூட்டிய , 'ரொம்ப நல்ல', 'வள்ளல் குணமுடைய' நானானி அம்மா :D :D,

  நம்ம எல்லாருக்கும் டிக்கெட்டும் எடுத்து, இது எல்லாம் வாங்கியும் கொடுப்பார்கள். :P

  சரி தானே அம்மா....;))))

  நல்ல நடை.படிக்கும் போது, ஊர் கண் முன்னால்த் தெரிகிறது.

  ReplyDelete
 7. நயாகரா....

  //நயாகரா......அருவியல்ல... ஆற்றின் கரையோரம்!!!!!
  //

  ஓ!! இப்படி ஒரு ரகசியம் இருக்கா...போகும் வாய்ப்புக் கிடைத்தால், இங்கேயும் ரகசியமாப் போயிடுவோம். :)))

  ReplyDelete
 8. //'யூ..நாட்டி நானானி!'//

  'மதர்' கிட்டப் பேசினா நிறைய விசஹ்யங்கள் வெளில வ்ரும் போல :P.

  அருமையான் பதிவு. தன் தலைமையாசிரியரை, இன்னமும், ஆசையோடு பார்க்கச் செல்லும் மாணவி.:)

  வாழ்த்துகள் அம்மா!

  ReplyDelete
 9. இனிப்பில் (அல்வாஆஆஆஆ) கொடுத்து வரவேற்று,

  இறுதியில் வெற்றிலைப்பாக்கு, குங்குமத்தோடு டா...டா

  ஷொட்டுகள் ஷூப்பர்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஜூப்பர்.

  :))

  ReplyDelete
 10. ராமலக்ஷ்மி அப்பவேஏஏஏஏஎ, அனானியாகக் கவிதைப் பின்னூட்டம் போட்டு இருக்காங்க போல....

  ராமலக்ஷ்மி! கவிதை நன்று! :))

  ReplyDelete
 11. இன்றைக்கு நானே லேட்.எல்லாம் படிச்சிட்டு சொல்லுங்க சீனா! செல்விக்கும் வலைச்சரத்தில் ஒரு முழம்
  வச்சிருக்கேன்.எங்கே காணோம்?

  ReplyDelete
 12. நீங்களும் லேட்டா ராமலஷ்மி?
  வாங்க..வாங்க.

  ReplyDelete
 13. எனக்கு இப்பத்தான் புதன் கிழமை காலை. அதனால இன்னிக்கு நாந்தான் ஃபர்ஸ்ட்.
  நயகரா பதிவும்,குங்குமப் பதிவும்,அப்பா ஆத்தங்கரைல உட்கார்ந்திருக்கும் பதிவும் மறக்கவில்லை நானானி.

  நல்ல எழுத்து இன்னும் மேலும் வளரட்டும்.

  ReplyDelete
 14. பதிவுகளின் சுட்டிகள் அருமை. ஏற்கனவே பல படித்துள்ளோம்.

  ReplyDelete
 15. cheena (சீனா) said...
  //மீ த பர்ஸ்டா - ஆகா - ஒரு மணி 27 நிமிடங்கள் ஆகியும் மீ த பர்ஸ்டா//

  இதோ வந்துட்டேன்:)))!

  ReplyDelete
 16. NewBee said...
  //ராமலக்ஷ்மி அப்பவேஏஏஏஏஎ, அனானியாகக் கவிதைப் பின்னூட்டம் போட்டு இருக்காங்க போல....
  ராமலக்ஷ்மி! கவிதை நன்று! :))//

  அட, கண்டு பிடிச்சிட்டீங்களே நான்தான் என்று:)! வலை உலகில் எனது வலது காலை வைத்து 'தொபுக்' எனக் குதித்தது நானானி அம்மாவுக்கு பின்னூட்டமிடத்தான். [எங்க ஊர்க்காரரேச்சே! கொஞ்ச காலம் ஆர்தி(RT) என்ற பெயரிலும் தொடர் பின்னூட்டமிட்டேன் அவருக்கே தெரியாமல் விளையாட்டுக் காட்டி:))!]அப்போ விழுந்த நான் வெளியேற மனமின்றி தங்கி விட்டேன் வலையிலேயே:))!

  NewBee said...
  //அருமையான் பதிவு. தன் தலைமையாசிரியரை, இன்னமும், ஆசையோடு பார்க்கச் செல்லும் மாணவி.:)//

  இதெல்லாம் அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள். அவரது "உறவில்லாத மறக்க முடியாத பெண்மணிகள்" படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதன் ஆரம்பமாக முன்னரே தனிப் பதிவாக மதர் அலெக்ஸ் அவர்களுக்கு மரியாதை செய்திருக்கிறார்கள்.

  NewBee said...
  //இனிப்பில் (அல்வாஆஆஆஆ) கொடுத்து வரவேற்று,

  இறுதியில் வெற்றிலைப்பாக்கு, குங்குமத்தோடு டா...டா//

  ரசித்தேன் புது வண்டு. இது எங்க ஊர் பாரம்பரியமாக்கும்.

  வண்டு zzzz-னு
  ரீங்காரமிடும்.
  உற்சாகம் வந்தா
  நம்ம ஃப்ரண்டு
  புது வண்டு
  "உய் உய்ய்ய்.."னுதான் ரீங்காரமிடும்:))!

  ReplyDelete
 17. வலைச் சரத்தின் வார ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.தங்கள் எழுத்தும் நடையும், தூறு வாரின கிணறு அல்ல ,பொங்கி வரும் புதுப் புனல்.இதில் தூறு வாரவேண்டிய அவசியமே இல்லை தினமும் ஊற்றென தமிழ் புனல் புறப்பட்டு அனைவரது தமிழ் வேட்கையைத் தணித்துக் கொண்டே வருகிறது .

  ReplyDelete
 18. இப்ப தான் அறிமுகம் நடக்குதா?.... சீக்கிரமா வெற்றி நடை போட்டு வாங்கம்மா... தினமும் இரண்டு மூன்று பதிவு போட்டு தாரை தப்பட்டை எல்லாம் கிழிய வேண்டாமா?..

  ReplyDelete
 19. ///NewBee said...
  //சரி சரி - நண்பர்களே - எங்கேப்பா இருக்கீங்க
  //
  இந்தா! இந்தா! இந்தா! வந்துட்டோம்!
  உய்...உய்....உய்.......///
  புது தேனீ! விசில் சத்தமெல்லாம் பலமா சூப்பராகீதுமா.... :))

  ReplyDelete
 20. விசிலடிச்சான் தேனீயே பறந்து வா!
  உன் விசிலுச் சத்தம் காதுக்குள்ளேயே
  ரீங்காரமிடுதே!

  ReplyDelete
 21. உனக்கெத்றகு டிக்கெட் புதுத்தேனீ?
  நான் ஊருக்குப் போகும் போது என்னோடயே பறந்து வாயேன்!
  தேனீக்கு டிக்கெட் எடுக்கலையானு
  யாரும் என்னைக் கேக்க முடியாது.

  ReplyDelete
 22. கட்டாயம் போய் வா! தேனீ!
  பர்க்க வேண்டிய இடம்.

  ReplyDelete
 23. ஒரு தாயாக எங்களை வழி நடத்தியவர். சென்னை வந்ததும் என் தங்கைதான் அவர் இருக்குமிடம் அழைத்துச் சென்றாள். அது முதல்
  சகோதரிகள் நாங்கள் நால்வரும் ஒவ்வொரு வருடமும் போய் வருவோம். பழங்கதைகள் பேசி
  மகிழ்ந்திருப்போம். இப்போது 90 வயதிருக்கும் ரொம்ப மறதி இருப்பதாக தங்கை போன வருடம் போனவள் சொன்னாள். வருத்தமாயிருந்தது.

  ReplyDelete
 24. ஒரு தாயாக எங்களை வழி நடத்தியவர். சென்னை வந்ததும் என் தங்கைதான் அவர் இருக்குமிடம் அழைத்துச் சென்றாள். அது முதல்
  சகோதரிகள் நாங்கள் நால்வரும் ஒவ்வொரு வருடமும் போய் வருவோம். பழங்கதைகள் பேசி
  மகிழ்ந்திருப்போம். இப்போது 90 வயதிருக்கும் ரொம்ப மறதி இருப்பதாக தங்கை போன வருடம் போனவள் சொன்னாள். வருத்தமாயிருந்தது.

  ReplyDelete
 25. அதுதானே முறை தேனியே!
  தெரிந்து கொள்!

  ReplyDelete
 26. அனானியாக கொஞ்சநாள் என்னைக் கலக்கிக் கொண்டிருந்தாள். தேனி!

  ReplyDelete
 27. வாங்கப்பா! வல்லி! இதெல்லாம்
  உங்களுக்குப் புடிச்சதுன்னு எனக்குத்தான் தெரியுமேப்பா!
  சந்தோசம்!!

  ReplyDelete
 28. நன்றிகள்!! ம.சிவா!

  ReplyDelete
 29. நீங்கெல்லாம் வராம எங்கே போய்டுவீங்க? மங்களூர் சிவா?
  சரிதானே?

  ReplyDelete
 30. கொஞ்சநாள் என்னை....யே கலாய்ச்சிட்டையே, ராமலஷ்மி!

  ReplyDelete
 31. மிக்க நன்றி! கோமா!

  ReplyDelete
 32. எனக்கும் நிறைய பதிவுகள் போட ஆசைதான், தமிழ்பிரியன்!
  வீட்டு வேலைகளுக்கிடையே நாளொன்றுக்கு ஒரு பதிவுக்கே
  உருண்டு புரண்டு வருகிறேன். ஒத்துக்கொண்டதை செம்மையாக
  செய்ய வேண்டுமன்றோ? பார்ப்போம்
  உங்கள் விருப்பத்தையும் மனதில் கொள்கிறேன்.

  ReplyDelete
 33. சீனா அவர்களே!
  புதுத்தேனீ சுத்தி சுத்தி வந்து போட்ட
  பின்னோட்டங்களுக்கு பதில் கொடுத்து விட்டு மூச்சிறைக்க உங்களுக்கு
  பதிலிட வந்தேன். தாமதத்துக்கு
  பொறுக்கவும்.
  நீங்கள் கொடுக்கும் உற்சாகம் என்னை
  தேத்திடுச்சுன்னு நினைக்கிறேன்.
  நன்றிகள் பல!!!

  ReplyDelete
 34. அன்பின் நானானி

  அனைத்துப் பதிவுகளுக்கும் சென்று பொறுமையாக சில மணி நேரம் மகிழ்வாகச் செலவிட்டு, திருப்தியாக நீண்ட மறு மொழிகளும் இட்டு ( ஏற்கனவே மறு மொழிகள் இட்ட பதிவுகள் தவிர), இப்பொழுது இங்கு மறுமொழி.

  அழகான பதிவுகள் - நகைச்சுவை ததும்பத் ததும்ப எழுதி இருக்கிறீர்கள். சும்மா சொல்லக்கூடாது - சுத்திப் போட்டுக்கங்க

  ஆமா - இரு சுட்டிகள் - தரிசனம் இங்கே யும் இங்க பாரு வாத்யாரேயும் சரியான பதிவுகளுக்கு அழைத்துச் செல்ல வில்லையே - சரி பாருங்கள்.

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 35. பொழுது புலர்ந்தது. பொற்கோழியும் கூவியது வந்து பார் வலைச் சரத்தை முதல் வேலையாய் என. பார்த்து விட்டுப் போகவில்லை...ஆவலுடன் காத்திருக்கிறேன்:)!

  ReplyDelete
 36. என்ன நானானி

  இன்னும் துயில் எழ வில்லையா - ரங்க்ஸ் காலைக்காப்பி இன்னும் தயார் செய்து வந்து எழுப்ப வில்லையா

  என்ன ஆயிற்று

  விருந்தினர்களா - காலைப் பணி அதிகமா

  இணையத்தொடர்பு இல்லையா

  கணினி வேலை செய்ய வில்லையா

  ம்ம்ம்ம்ம்ம்

  காத்திருக்கிறேன்

  ReplyDelete
 37. என் பதிவுகளுக்கெல்லாம் போய், படித்து பின்னூட்டமிட்ட சகோதரர் சீனாவுக்கு நன்றிகள் பல பல!!

  ReplyDelete
 38. ராமலஷ்மி!, சீனா! தினமும் இரவு வெகு நேரம் கண்விழித்து மறுநாளைக்கான பதிவை ஸேவ் செய்து வைத்துவிட்டுத்தான் தூங்கப்போவேன். காலையில் ஆறு மணிக்கு பிரசுரித்தும் விடுவேன். இன்று காலை கணினி கொஞ்சம்
  தகராறு செய்துவிட்டது...கண்பட்டுடுச்சோ என்னவோ?....என்னவோ போங்க!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது