07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 7, 2008

அழகென்ற சொல்லுக்கு முருகா.

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!!

என்னைப் பற்றி சீனா சார் கொடுத்திருக்கும் அறிமுகமே போதுமானது.(அதான் ஹஸ்பண்டாலஜி பதிவைப் பத்தி சொல்லிட்டாரே)

கிடைத்திருக்கும் நேரத்தில் நான் ரசித்த பதிவுகளை தங்கள் அனைவரோடும்
பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்க் கடவுள் கந்தனுக்கு இருக்கும் வலைப்பூவின் அறிமுகத்தோடு
துவங்குகிறேன்.

பாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும், தமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்!

இதுதான் முருகனருள் பதிவு:
முருகனடியார்கள்
SP.VR. SUBBIAH
VSK
G.Ragavan
kannabiran, RAVI SHANKAR (KRS)
குமரன் (Kumaran)
நாமக்கல் சிபி
தி. ரா. ச.(T.R.C.) இவர்கள் இந்தப் பதிவில் கூட்டுப் பதிவர்கள்.

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா

இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நம் உள்ளம் உருகுவது
நிஜம். இதோ அந்தப் பாடலை கேட்கவும், பாடல் வரிகளை
தெரிந்துக்கொள்ளவும் இங்கே..

**********************************************************************நமனுக்கு ப்ரம்மத்தின் பொருள் உரைத்த கந்தனின் நாமத்தை
சதா ஜெபித்தவனுக்கு நற்பேறுதான்.

சரவணபவ எனும் திருமந்திரம் தனை சதா ஜபி என் நாவே
என்ற இந்தப் பாடல் கேட்டு கேட்டுத்தான் நான்
முருகனை மட்டுமே ஜபிக்கத் தொவங்கினேன்.
வலைப்பூவில் இந்தப் பாடலையும் பாடல் வரியையும்
கண்டபோது என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இதோ நீங்களும் ரசிக்க, மெய்மறக்க அந்தப் பாடல்
சரவணபவ

*************************************************************************

மலேசியவில் பத்து மலை முருகன் மிகப் பிரசித்தம்.
அதை நேரில் தரிசிக்கும் பாக்கியம் எனக்கு 3 வருடங்களுக்கு முன்பு
வாய்த்தது. வருவான் வடிவேலன் திரைப்படத்தில் அந்தப்
படத்தை கண்டதுண்டு. அந்தப் பாடலை மிக அருமையாக
தொகுத்து கொடுத்திருக்கிறார்கள் இங்கே.
மிக மிக அருமையாக இருக்குறது பாருங்களேன்.

****************************************************************************

அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில்"சேவல் கொடி பறக்குதடா"-ன்னு இந்த முருகன் பாட்டைக் கேட்டவுடன், என் மனசு ஜிவ்வுன்னு ஒரே உசரத்துக்குப் போயிடிச்சி
என்று குறிப்பிட்டு பாடல் ஆசிரியர், பாடியவர் போன்ற தகவலுடன்
பாடலுக்கு அளித்திருக்கும் விளக்கவுரையையும் பாருங்களேன்.

//தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான்! - இந்த
முப்பாட்டன் எங்களுக்குத் தலைவன் தான்!
= மிக அருமையான வரிகள்! தமிழ்க் கடவுள்-னு முருகனைச் சொன்னாலும், கடவுளையும் தாண்டி ஒரு பரம்பரைத் தலைவன் - பாட்டன் கணக்காத் தான் - எளிய மக்கள் முருகனைக் கருதறாங்க! காவடி தூக்கி ஓடியாறாங்க!//
இது போன்று மிக அழகான பொருளுரை பார்க்க.**************************************************************************
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்
இந்தப் பாடல் கேட்க பரம சுகம்.

இந்தப் பாடலைப் பற்றிய பதிவும் இந்த வலைப்பூவில் கண்டேன்.

* எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடுவது
** உன்னி கிருஷ்ணன்
*** ஜலதரங்க வாத்திய இசை
**** புல்லாங்குழல் - மாலி

இந்தப் பாடலை மேற்சொன்னவர்களின் குரலில் கேட்கவும்
பாடலின் வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.
****************************************************************

சுய தம்பட்டமாக இங்கே என் கதிர்காமம் பற்றிய நினைவுகளின் பதிவு

கதிர்காமம்

பரந்த அன்பினையே பரம்பிரம்மம் என்றவன் கந்தன்.
அன்பே சிவம் அன்பே நித்தியம்.
அன்பை நெஞ்சத்தில் நிறுத்துவதுதான் அவனுக்கு நாம் செய்யும்
தொண்டு, ஆறுகால பூஜை எல்லாம்.

ஆகவே அன்புடன் வாழ்ந்து அன்பெனும் மலர் சமர்பித்து
அவனடி பற்றுவோம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்பிரமணியத்திற்கு மிஞ்சிய
தெய்வமும் இல்லை.

25 comments:

 1. பக்திச்சரத்தோடு வந்திருக்கீங்க கலக்குங்க

  ReplyDelete
 2. வணக்கம் லிங்க் பார்த்துமே ஒரு ரைமிங்க் முதல் சரம் என்றும் முருகனுக்கேன்னு பாட்டு வந்துச்சு!

  பக்கத்துக்கு போய் பார்த்தா அழகென்ற சொல்லுக்கு முருகா :))))))))))))

  சூப்பரூ:


  கலக்குங்க அக்கா!

  ReplyDelete
 3. ஆஹா,
  வாங்க பிரபா,

  கலக்கிடுவோம். தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. வாங்க ஆயில்யன்,

  முருகனுக்கு எப்போதும் முதல் இடம்தான்.

  வாழ்த்திற்கு நன்றி.

  ReplyDelete
 5. ஆரம்பமே அசத்தலா இருக்கே!!!

  முருகா

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. வாங்க அதிஷா,

  வாழ்த்திற்கு நன்றி.

  ReplyDelete
 8. வாங்க திகிழ்மிளிர்,

  வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

  ReplyDelete
 9. வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள் கலா அண்ணி:)

  ReplyDelete
 10. நன்றி ரசிகன்.

  ReplyDelete
 11. 100ஆவது பதிவினை நோக்கிச் செல்லும் முருகனருள் பதிவுவர்களுக்கும் அதனை இங்கு சொல்லாமல் சொன்ன உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 12. வாங்க மதுரையம்பதி
  முருகனருள் வலைப்பூ 100 அல்ல ஆயிரம் பதிவுகள் போட்டு முருகனடியார்களுக்கு அருள் தொண்டு செய்ய அம்முருகன் அருள் புரிவானாகட்டும்.

  ReplyDelete
 13. திருமுருகன் திருவருளோடு மணம் பரப்பியிருக்கிறீர்கள்.

  ம்ம்ம்.... கலக்குங்க!!!!!!

  ReplyDelete
 14. வாங்க நிர்ஷான்,

  வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 15. பக்திமணம் கமழ முதல் பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. ///சுய தம்பட்டமாக இங்கே என் கதிர்காமம் பற்றிய நினைவுகளின் பதிவு///


  சுய தம்பட்டமாக இருந்தாலும் நல்ல பதிவு.

  ReplyDelete
 17. வாங்க நிஜமா நல்லவன்,

  வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

  ReplyDelete
 18. வருக வருக புதுகைத்தென்றல் - முதல் சரமே வித்தியாசமாக அருட்சரமாக - முருகனைப் பற்றிய முருகனருள் என்ற வலைச்சரத்தின் அருமை பெருமை களைப் புகழ் மணக்கப் பரப்பும் - அழகுச் சரமாகத் தொடுத்தமை பாராட்டத் தக்கது. நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 19. வாங்க சீனா சார்,

  வருகைக்கும் தங்களின் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 20. முருகு=அழகு
  புதுகைத்தென்றல்=அழகான பதிவு

  அக்கா முடிந்தால் அருணகிரிநாதர் பாடிய நம்ப ஊர் குமரமலை முருகனைப் பற்றியும் எழுதுங்க..

  ReplyDelete
 21. புதுகைத்தென்றல், முருகனைப் பற்றிய பதிவுகளின் சுட்டிகள் இத்தனையா ? ம்ம்ம் - அத்தனையும் சென்று படித்து, ரசித்து, மறுபடியும் படித்து, பாடல்கள் கேட்டு, பின்னூட்டங்கள் படித்து, அவற்றிற்கான விளக்கங்களும் படித்து, ஆன்மீக விளக்கங்கள் பலவற்றையும் படித்து இன்றைய பொழுதினை நல்ல பொழுதாக கழித்தோம். அரிய வாய்ப்பினை ஏற்படுத்திய தென்றலுக்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 22. அருணகிரிநாதர் பாடிய நம்ப ஊர் குமரமலை முருகனைப் பற்றியும் எழுதுங்க..//

  அதைத் தனியா என்னுடைய வலைப்பூவில் எழுத முயற்சிக்கிறேன் அப்துல்லா.

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 23. புதுகைத்தென்றல், முருகனைப் பற்றிய பதிவுகளின் சுட்டிகள் இத்தனையா ? ம்ம்ம் - அத்தனையும் சென்று படித்து, ரசித்து, மறுபடியும் படித்து, பாடல்கள் கேட்டு, பின்னூட்டங்கள் படித்து, அவற்றிற்கான விளக்கங்களும் படித்து, ஆன்மீக விளக்கங்கள் பலவற்றையும் படித்து இன்றைய பொழுதினை நல்ல பொழுதாக கழித்தோம்.//

  இந்தப் பாராட்டு என்னை வெகுவாக ஊக்குவிக்கிறது. மிக்க நன்றி.

  ReplyDelete
 24. வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.... நாளை மீண்டும் வருகிறேன்...

  ReplyDelete
 25. வாங்க இம்சை,

  நாளைக்கு மட்டுமல்ல இன்னும் ஒரு வாரக்காலத்துக்கு கட்டாயம் வந்து பிரசண்ட் கொடுத்திருங்க.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது