07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 18, 2008

காசே தான்... டண்டனக்கா..

உருப்படியா எழுதற எல்லோரும் உருப்படியான வேலையா இருக்காங்களே.. இவன் கிட்ட மேட்டர் இல்லைனாலும் வேலை வெட்டி இல்லாம இருக்கானே.. ஆள் கிடைக்காத இந்த ஒரு வாரம் இவன வச்சி ஒப்பேத்தலாம்னு நெனைச்சி போனா போகுதுனு ஒரு வாய்ப்பு குடுத்தா இவன் ஓவர் சீன் போடறானே.. ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட கூடவா இவனுக்கு வலிக்கிது.. ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது தம்பி என்று சீனா சார் திட்டும் முன்பு இன்றைய கணக்கிற்கு ஒரு பதிவு.. ஏய் இந்தா.. ஏய் இந்தா.. ஏய் இந்தா....:)


பணம்
என்பது, பொருட்களதும் சேவைகளதும் பரிமாற்றத்துகு உதவுவதும் , சேமிப்புப் பெருமதியை கொண்டதுமான ஒரு பரிமாற்ற அலகாகும். சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெருமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது கூடுதலாக நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நன்றி : விக்கிபீடியா

இப்போ காசு சம்பாதிக்கவும் சம்பாதித்ததை விடவும் சரியான இடம் என்றால் அது பங்கு சந்தை தான். ஆனால் பங்கு சந்தை என்றால் வெறும் சூதாட்டாம் தான் என்பது போன்ற எண்ணம் இன்னும் நீங்கியதாக தெரியவில்லை. பங்கு சந்தை என்றால் என்ன? அதன் புள்ளிகள் எப்படி கணக்கிடப் படுகின்றன... என்பது போன்ற விவரங்களை நண்பர் வவ்வால் மிக தெளிவாக சுருக்கமாக விளக்கி இருக்கார். sensex- ஒரு பார்வை! ..போய் பாருங்க. மேலும் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு என்ன காரணம் மற்றும் சந்தை சம்பந்தப் பட்ட பல தகவல்களை sensex- பங்கு சந்தை பரமபத விளையாட்டு! என்ற பதிவில் சொல்லி இருக்கார்.

^^^^^^^^()^^^^^^^^^^^^^^^()^^^^^^^^^^

பங்கு சந்தையில் லாபம் பெருவது எப்படி என்ற வெற்றியின் ரகசியங்கள் மற்றும் பங்கு சந்தை பற்றிய தினசரி தகவல்களை நண்பர் சாய் கணேஷ் எளிமையாக விளக்கி இருக்கிறார். வாங்க/விற்க பரிந்துரையும் செய்கிறார். ஆப்ஷன்ஸ் பற்றிய பதிவு ரொம்ப உபயோகமானது.

^^^^^^^^()^^^^^^^^^^^^^^^()^^^^^^^^^^

தமிழில் பங்கு சந்தை பற்றிய செய்தி என்றாலே நண்பர் சரவணகுமாரை தெரியாமல் இருக்க முடியாது. தமிழில் பங்கு வணிகம் என்ற தலைப்பில் அவர் எழுதும் வலைப்பூ மிகவும் பயனுள்ளாது.

^^^^^^^^()^^^^^^^^^^^^^^^()^^^^^^^^^^
நம் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் வீக் எண்ட் ஜொள்ளு வித்வான் மங்களூர் சிவா நம்மை போன்ற பாமரர்களுக்கும் புரியற மாதிரி எளிமையாக பங்கு சந்தை பற்றிய தகவல்களை தருகிறார். அவரின் இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 1 மற்றும் இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் 2 ஆகியவை பங்கு சந்தையில் புதிதாக நுழையும் அல்லது அதை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் உள்ள அனைவரும் படிக வேண்டிய பதிவுகள். பங்குகள் மற்றும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கு டிமேட் கணக்கு அவசியம். அதை எப்படி தொடங்குவது என்று டீமேட் தொடங்குவது எப்படி என்ற பதிவில் சொல்லி இருக்கிறார். அந்த வலைப்பூ முழுவதும் இன்னும் ஏராளமான தகவல்கள் இருக்கு. போய் பாருங்கோ..

இதை எல்லாம் நல்லா படிச்சி நெறைய பணம் பண்ணுங்க... :))

அம்புட்டு தான்.. இப்பத்திக்கு அப்பீட்டு.. வர்ட்டா..

29 comments:

 1. இன்வஸ்ட்மெண்ட் எல்லாம் எங்க வீடல ஒன்லி தங்கமணி ஏரியா...நான் ஒதுங்கிக்கறேன்.

  ReplyDelete
 2. மேட்டர் இல்லைனாலும் வேலை வெட்டி இல்லாம இருக்கானே.. ஆள் கிடைக்காத இந்த ஒரு வாரம் இவன வச்சி ஒப்பேத்தலாம்னு நெனைச்சி போனா போகுதுனு ஒரு வாய்ப்பு குடுத்தா இவன் ஓவர் சீன் போடறானே.. ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட கூடவா இவனுக்கு வலிக்கிது.. ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது தம்பி என்று சீனா சார் திட்டும் முன்பு இன்றைய கணக்கிற்கு ஒரு பதிவு.. ஏய் இந்தா.. ஏய் இந்தா.. ஏய் இந்தா....

  ennathithu?

  :))))))))))

  ReplyDelete
 3. இன்வஸ்ட்மெண்ட் எல்லாம் எங்க வீடல ஒன்லி தங்கமணி ஏரியா,

  hai, abdullaa ungaveetlayum thangamanithana.

  Ingeyum nanthan.

  ReplyDelete
 4. ஆஹா..சூப்பர்..
  கையில மிச்சம் மீதி இருந்தா எனக்கு அனுப்பிடுங்க..உங்க வரவு செலவெல்லாத்தையும் நானே பார்த்துக்குறேன் சஞ்சய் அங்கிள் :P

  ReplyDelete
 5. ஹாய் சஞ்செய்

  பங்குச் சந்தை பற்றிய பதிவுகளா - ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - எட்டி நின்று பார்ப்பேன் - பக்கத்தில் வரமாட்டேன்

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 6. பங்குச் சந்தையின் அரிச்சுவடியில் ஆரம்பித்து வெற்றியின் ரகசியங்கள் வரை..அத்தனைக்கும் சுட்டிகள் கொடுத்திருப்பது அருமை.

  //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  இன்வஸ்ட்மெண்ட் எல்லாம் எங்க வீடல ஒன்லி தங்கமணி ஏரியா//

  எங்க வீட்ல கூட [வீட்ல அட்வைஸ் வாங்கிட்டு அதன்படி என்றாலும் கூட] அது என் ஏரியாதான் என்றால் மங்களூர் சிவா நம்பவா போகிறார்:(!?

  ReplyDelete
 7. /
  மேட்டர் இல்லைனாலும் வேலை வெட்டி இல்லாம இருக்கானே.. ஆள் கிடைக்காத இந்த ஒரு வாரம் இவன வச்சி ஒப்பேத்தலாம்னு நெனைச்சி போனா போகுதுனு ஒரு வாய்ப்பு குடுத்தா இவன் ஓவர் சீன் போடறானே.. ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட கூடவா இவனுக்கு வலிக்கிது.. ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது தம்பி என்று சீனா சார் திட்டும் முன்பு இன்றைய கணக்கிற்கு ஒரு பதிவு.. ஏய் இந்தா.. ஏய் இந்தா.. ஏய் இந்தா....
  /


  இது ஜூப்பர்

  ReplyDelete
 8. ஹிஹிஹி நமக்கும் இதுக்கும் நிறைய தூரம்.... :)))

  ReplyDelete
 9. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  இன்வஸ்ட்மெண்ட் எல்லாம் எங்க வீடல ஒன்லி தங்கமணி ஏரியா...நான் ஒதுங்கிக்கறேன்.///
  அண்ணே! அப்ப நீங்க டம்மி அப்துல்லாவா..... ;)))))))))))

  ReplyDelete
 10. hai, abdullaa ungaveetlayum thangamanithana.

  Ingeyum nanthan.//

  எல்லார் வீட்லயும் அதுதான்க்கா.என் வாழ்க்கை திறந்த புத்தகம்.நா ஒப்பனா சொல்லிட்டேன்.நம்ப தமிழ்பிரியன் மாதிரி ரொம்ப ஆளு மறச்சு சீன் போடுவாங்க..

  ReplyDelete
 11. //
  எங்க வீட்ல கூட [வீட்ல அட்வைஸ் வாங்கிட்டு அதன்படி என்றாலும் கூட] அது என் ஏரியாதான் என்றால் மங்களூர் சிவா நம்பவா போகிறார்:(!?//

  நம்ப யோசனைய முதல்ல கேட்டாங்க.அப்புறம் உங்க யோசனைக்கு ஆப்போசிட்டா பண்ணுனாதாங்க ராசியா இருக்குன்னாங்க.அத்தோட போல்ட் ஆயிட்டேன்.

  ReplyDelete
 12. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  இன்வஸ்ட்மெண்ட் எல்லாம் எங்க வீடல ஒன்லி தங்கமணி ஏரியா...நான் ஒதுங்கிக்கறேன்.///

  அண்ணே! அப்ப நீங்க டம்மி அப்துல்லாவா..... ;)))))))))))


  தமிழ்ப்பிரியன் அண்ணே!" சேர்த்த பணத்த சிக்கனமா,செலவு பண்ண பக்குவமா அம்மா கையில குடுத்து போடு" அப்படின்னு அந்தக் காலத்துலேயே சொல்லிட்டாங்க. அம்மாவோ,தங்கமணியோ அதுக்கெல்லாம் அவங்கதான் சரி...

  (என்ன சாமாளிச்சாலும் டம்மிங்கறத மறைக்க முடியலயே அவ்வ்வ்வ்வ்வ்)

  ReplyDelete
 13. இந்த வாரத்தில் எல்லா பதிவிலும் பின்னூட்டம் போட்டுவிட்டு இந்த பதிவில் போடவில்லை என்றால் நல்லா இருக்காது என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இந்த பின்னூட்டம்:)

  ReplyDelete
 14. இந்த மாட்டரும் பின்நவீனத்துவம் மாதிரி புரியறதே இல்லை அண்ணாச்சி...;)

  ReplyDelete
 15. இது பத்தி நம்ம ஸ்டார் கிட்ட விளக்கமா கேட்டு தெரிஞ்சுக்கணும் சுட்டிகளுக்கு நன்றி முயற்சிக்கிறேன்...

  ReplyDelete
 16. எனக்குத் தூக்கம் வருது.நான் அப்புறமா வந்து பணம்,பங்குச்சந்தை,வெற்றி இன்னும் பல அடிக்கோடிட்ட பக்கங்களைப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 17. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  இன்வஸ்ட்மெண்ட் எல்லாம் எங்க வீடல ஒன்லி தங்கமணி ஏரியா...நான் ஒதுங்கிக்கறேன்.//

  ஹாஹா.. பல வூட்ல இதான் நடக்குது போல..:))

  ReplyDelete
 18. //புதுகைத் தென்றல் said...

  இன்வஸ்ட்மெண்ட் எல்லாம் எங்க வீடல ஒன்லி தங்கமணி ஏரியா,

  hai, abdullaa ungaveetlayum thangamanithana.

  Ingeyum nanthan.//

  ஹாஹா.. நிதி நிர்வாகம் பத்தி ஏன் இன்னும் பதிவு போடல? :)

  ReplyDelete
 19. //எம்.ரிஷான் ஷெரீப் said...

  ஆஹா..சூப்பர்..
  கையில மிச்சம் மீதி இருந்தா எனக்கு அனுப்பிடுங்க..உங்க வரவு செலவெல்லாத்தையும் நானே பார்த்துக்குறேன் சஞ்சய் அங்கிள் :P//

  கைக்கு மீறிய கடன் இருக்கு.. லிஸ்ட் அனுப்பிடவா ராசா? :)

  ReplyDelete
 20. //cheena (சீனா) said...

  ஹாய் சஞ்செய்

  பங்குச் சந்தை பற்றிய பதிவுகளா - ம்ம்ம்ம்ம்ம்ம்ம் - எட்டி நின்று பார்ப்பேன் - பக்கத்தில் வரமாட்டேன்

  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

  ஒரு வங்கி உயர் அதிகாரி பேசற பேச்சா இது? :(

  ReplyDelete
 21. // ராமலக்ஷ்மி said...

  பங்குச் சந்தையின் அரிச்சுவடியில் ஆரம்பித்து வெற்றியின் ரகசியங்கள் வரை..அத்தனைக்கும் சுட்டிகள் கொடுத்திருப்பது அருமை.

  //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  இன்வஸ்ட்மெண்ட் எல்லாம் எங்க வீடல ஒன்லி தங்கமணி ஏரியா//

  எங்க வீட்ல கூட [வீட்ல அட்வைஸ் வாங்கிட்டு அதன்படி என்றாலும் கூட] அது என் ஏரியாதான் என்றால் மங்களூர் சிவா நம்பவா போகிறார்:(!?//

  அவர் என்ன நம்பறது.. நான் நம்பறேன்க்கா.. :)

  ReplyDelete
 22. //மங்களூர் சிவா said...

  /
  மேட்டர் இல்லைனாலும் வேலை வெட்டி இல்லாம இருக்கானே.. ஆள் கிடைக்காத இந்த ஒரு வாரம் இவன வச்சி ஒப்பேத்தலாம்னு நெனைச்சி போனா போகுதுனு ஒரு வாய்ப்பு குடுத்தா இவன் ஓவர் சீன் போடறானே.. ஒரு நாளைக்கு ஒரு பதிவு போட கூடவா இவனுக்கு வலிக்கிது.. ஓவர் சீன் ஒடம்புக்கு ஆகாது தம்பி என்று சீனா சார் திட்டும் முன்பு இன்றைய கணக்கிற்கு ஒரு பதிவு.. ஏய் இந்தா.. ஏய் இந்தா.. ஏய் இந்தா....
  /


  இது ஜூப்பர்//

  இதுக்கு மட்டும் கரெக்டா வந்துடுவீங்களே.. :(

  ReplyDelete
 23. // தமிழ் பிரியன் said...

  ஹிஹிஹி நமக்கும் இதுக்கும் நிறைய தூரம்.... :)))//

  எத்தினி கிலோமீட்டர் சாமி? :P

  ReplyDelete
 24. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  hai, abdullaa ungaveetlayum thangamanithana.

  Ingeyum nanthan.//

  எல்லார் வீட்லயும் அதுதான்க்கா.என் வாழ்க்கை திறந்த புத்தகம்.நா ஒப்பனா சொல்லிட்டேன்.நம்ப தமிழ்பிரியன் மாதிரி ரொம்ப ஆளு மறச்சு சீன் போடுவாங்க..//

  எப்டி தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ.. த.பி அண்ணாச்சி.. மாட்டிக்கிட்டிங்களா? :))

  ReplyDelete
 25. //நிஜமா நல்லவன் said...

  இந்த வாரத்தில் எல்லா பதிவிலும் பின்னூட்டம் போட்டுவிட்டு இந்த பதிவில் போடவில்லை என்றால் நல்லா இருக்காது என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இந்த பின்னூட்டம்:)//

  இதற்கெல்லாம் வரலாறு பதில் சொல்லும். :)

  ReplyDelete
 26. // தமிழன்... said...

  இது பத்தி நம்ம ஸ்டார் கிட்ட விளக்கமா கேட்டு தெரிஞ்சுக்கணும் சுட்டிகளுக்கு நன்றி முயற்சிக்கிறேன்...//

  நன்றி தமிழன். :)

  ReplyDelete
 27. // ராஜ நடராஜன் said...

  எனக்குத் தூக்கம் வருது.நான் அப்புறமா வந்து பணம்,பங்குச்சந்தை,வெற்றி இன்னும் பல அடிக்கோடிட்ட பக்கங்களைப் பார்க்கிறேன்.//

  தூங்கி எழுந்துட்டிங்களா நடராஜன்? :))

  ReplyDelete
 28. சஞ்சய்,

  வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள், எனது பதிவுகளையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  -----------

  அப்துல்லாண்ணே,

  // சேர்த்த பணத்த சிக்கனமா,செலவு பண்ண பக்குவமா "அம்மா" கையில குடுத்து போடு" //

  ஹி...ஹி உங்களால கூட அய்யா கையில கொடுக்க சொல்ல முடியலையே ...அவ்வ்வ் :-))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது