07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 3, 2008

இவர்களுக்குள்ளும் கவிதைகள்!!!

வலையுலகில், நம் சக பதிவர்களை நாம் பல்வேறு கோணங்களில் பார்த்திருப்போம். சிலர் பதிவுகளில் கவிதைகளைப் பார்ப்பது அத்திப் பூத்தது போன்று அரிதாக என்றாவது மலரும். அப்படி பூக்கும் கவிதைகள் அத்தனை இனிமையாய்,நம்மை ஆச்சர்யப் படுத்துவதாய் இருக்கும்.அப்படி என்னைக் கவர்ந்த, சில பதிவர்களின் வலைப்பூக்களை மகிழ்வுடன் இன்று உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன்.

பாலபாரதி -"தலை" என்று பதிவர்களால் மரியாதையோடு அழைக்கப்படுபவர். பா.க.ச பதிவுகளில் மிகவும் பிரபலமான நம்ம தல, அன்றாடும் தான் சந்திக்கும் நிகழ்வுகளை அழகாய் தொகுத்து நமக்கு அவரது விடுப்பட்டவை வலைத்தளம் மூலம் நமக்கு வழங்கி வருகிறார்.

சமீபகாலமாய் இவரது வலைத்தளத்தில் கவிதைகள் மலருகிறது. மல்லிகைச் செடியில், ரோஜாப் பூ பூப்பது போல, என்ன புதுசா கவிதையெல்லாம் எழுதுகிறாரேன்னு ஆச்சர்யமா பார்த்தால் தல நிறைய கவிதைகளை சத்தமே இல்லாமல் பதித்திருக்கிறார். நான் தான் தாமதமாய் பார்த்திருக்கிறேன் போலும்.. இதோ உங்களுக்காக சில கவிதைகளும் இணைப்புகளும்...

அடையாளம்

”தூசுகளால் நிறைந்த
கண்ணாடி கதவில்
பெயரெழுதிச் செல்கிறது
கோடைச்சாரல்.”

இதோ காதல் கவிதைகளையும் கொஞ்சம் எட்டிப்பாருங்க

நீ நான் மற்றும் கடவுள்
நீ நான் மற்றும் முத்தம்
நீ நான் மற்றும் வெட்கம்
நீ நான் மற்றும்…
நீ நான் மற்றும் கடவுள்

எல்லாம் தெரிந்ததாய் நினைக்கும் நாம் ஒரு சில விஷயங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம் அப்படி யாராலும் கண்டுக்கொள்ளாமல் விடப்பட்ட விவசாயிகளின் பிரச்சனையை ங்கொய்யால… கவிதை மூலம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பார்...

பிரபாகரன் - அதிகம் எழுதுவதில்லை, என்றாலும் அவரது கவிதைகள் ரசிக்கும்படி இருக்கும்.அரிதாய்,அவரது பதிவுகளில் அழகாய் பூக்கும் கவிதைகள். அவரது அலுவலக பணிகளால் அதிகம் எழுத முடியவில்லை.என்றாலும் அழகாய் ரசிக்கும்படி தனது உணர்வுகளை கவிதைகளில் கொண்டு வருகிறார்.....

அவனுக்கேனும் நினைவிருக்குமா? கவிதையில், பால்யகால நட்பை அழகாய் செதுக்கி இருப்பார். இது போன்று ”அழைக்கலாமா என எத்தனிக்கையில்” கவிதையிலும் தன் உணர்வுகளை பதித்திருப்பார்... இவரது காதல் கவிதைகளும் ரசிக்கும்படி இருக்கும்....

நந்தா -தனது வலைப்பூக்களில் பல அருமையான கட்டுரைகளால் நம்மை ஈர்ப்பவர். இவரது பெண்ணிய கட்டுரைகள் இதற்கு ஒரு நற்சான்று. அது போல் இவரது திரைவிமர்சனங்களும் ரசிக்கும்படி இருக்கும்.... இப்படி அமைதியாய் இருக்கும் இவருக்குள் ஒளிந்திருக்கும் கவித் திறமை எப்போதாவது வலையுலகை எட்டிப்பார்க்கும் போது அழகான கவிதைகள் நம்மை ரசிக்க வைக்கும். அப்படி இவரது தளத்தில் ரசிக்க வைத்த கவிதைகள் சில உங்களுக்காக...

திருமணத்திற்கு பிறகு சில பெண்களின் சுதந்திரம் தடைபெறுவது பற்றி சிந்திக்கும் வகையில் பத்தினிப் பெண்கள் என்ற கவிதையின் மூலம் சிறப்பாக சொல்லியிருப்பார் அக்கவிதையில் இருந்து சில வரிகள் இதோ உங்களுக்காக..

"'அவரு', 'என் வீட்டுக்காரர்'
உன் உதடுகள்
உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு
என் பெயர்
கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு."

நந்தா காதல் கவிதைகளும் அழகாய் எழுதியிருப்பார். இதோ இவரது காதல் கிறுக்கல்கள் சில படித்து மகிழுங்கள்.....

விழியன் தன் புகைப்படங்கள் மூலம் நம் விழிகளுக்கும் விருந்தளித்து வநதவர் இப்பொழுது அவரது கவிதைகள் மூலம் நம்மை அசத்தி வருகிறார்..

இவரது செல்லப்பெயர் கவிதை நம்மை கல்லூரிக் காலத்துக்கு அழைத்து சென்று நண்பர்களுக்குள் நாம் வைத்துக் கொண்ட செல்லப் பெயர்களை நினைவிற்கு கொண்டு வந்து விடும்...

தேவதையின் தோசை கவிதையில் அப்பா மகள் பாசத்தை அழகாய் சொல்லிருப்பார்..

நண்பனாகப்பட்டவன்:
விரட்டும் நினைவுகளுடன்
குரல்வளைக்குள் ஏதோ சிக்கி தவித்தவாறு
உன் தோள் சாய்ந்து
சட்டை நனைத்து விம்முகிறேன்
யாதென கேளாமல்
ஏதும் விசாரியாமல்
தோள் தட்டி அரவணைத்தபடி
"சரி..சரி..சரியாகிடும்…"
கணத்தில் கனங்கள் கரைந்ததும்
மீண்டும் அழுகிறேன்
நீ கிடைத்ததற்கு

நம்மை மிகவும் ரசிக்க வைக்கும் ஒரு கவிதை..

இவரது க.பி கவிதைகள் 1, 2 (க.பி கவிதை என்னடா புது பெயரா இருக்கேன்னு யோசிக்கிற மாதிரி தெரியுது எதும் இல்லைங்க இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது கல்யாணத்திற்கு பின்பு அவர் எழுதும் கவிதைகள் தான் இவை!!!) சிறப்பாக இருக்கிறது..

இவரது வலைப்பூவில் புகைப்படங்களும் கவிதைகளும் நம்மை ரசனையில் திணரச்செய்கின்றன....

மேலும் இவர்கள் பல கவிதைகளை படைத்திட வாழ்த்தி வரவேற்போம்....

நாளை சந்திப்போம்!!!!

4 comments:

 1. நல்ல பதிவு.

  கவிதை எங்கயும் இருக்கும்..

  கொட்டற குழவிகிட்ட

  கத்தற கிழவிகிட்ட

  `ண்ங்'

  இதோ இந்த அடி-ல

  'ப்ப்ளார்'

  இந்த அறைல

  எங்கயும் இருக்கும்!

  நாமதான் ரசிக்கணும்!!

  ReplyDelete
 2. சாரிங்க.. ரொம்ப கிண்டலாயிடுச்சோ?

  நெஜமாவே நல்ல பதிவுங்க!!

  ReplyDelete
 3. தினமும் ஒரு தொகுப்பு மட்டுமே என்றாலும் மிகவும் அருமையான தொகுப்புகளாக மலர்கிறது.

  ReplyDelete
 4. பல புதிய பதிவுகளின் அறிமுகம் கிடைத்துள்ளது உங்கள் கவிசரத்தில், நன்றி எழில்.

  நீங்கள் ரசித்த கவிதைகளை அழகாக விமர்சித்திருப்பது பாராட்டதக்கது!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது