07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 24, 2008

தமிழ் வலையில் பெண்கள் - சிறப்பு பதிவு

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!

பெண்கள் பதிவுலகில் நிறைய வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கின்றது. இன்று தமிழ் வலையுலகில் கோலோச்சும் பெண்களைப் பற்றி சில அறிமுகங்கள்.

கண்மணி டீச்சர்
முதன் முதலில் தமிழ்ப் பதிவுகளுக்கு வந்த போது டீச்சரின் எழுத்துக்கள் ஒரு ஊக்கமாக இருந்தது. கண்மணி பக்கத்துக்கு சொந்தக்காரர். எங்கள் வேடந்தாங்கலின் தலைவி. அசத்தலான பதிவுகள் எழுதுபவர். அவரது பதிவுகளில் நகைச்சுவையைப் பலரும் ரசித்தாலும் சிறந்த படைப்புகள் படைக்கக் கூடிய ஆற்றல் மிக்கவர். அவ்வப்போது கவிதைகளும் எழுதுவாங்க. டீச்சர் என்பதால் விழிப்புணர்வு பாடங்களும் வரும். தமிழ்மண நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தும் சூப்பராக இருந்தது. ஆனாலும் டீச்சரிடம் மாணவன் என்ற முறையில் தமிழ், அறிவியல், மற்றும் சமூகம் சார்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம். இடுகைகள் வருங்கால வரலாறுகள்... :)

நானானி
நெல்லைக்காரர். ஒவ்வொரு பதிவுக்கும் தனி லேபிள் போட்ருவாங்க... :) படம் போட்டு சமையல் குறிப்பெல்லாம் எழுதுவாங்க... கஞ்சி காய்ச்சி, கேசரி போட்டு, தோசை எல்லாம் காட்னாங்க ஆனா சாப்பிடத் தான் முடியலை. அழகான திண்ணைகளை சிறப்பா காட்டினாங்க. மறக்க இயலாத பெண்கள் நெகிழ்ச்சியானது. பாளையங்கோட்டை சின்ன ஊர் என்ற ‘உண்மையைச்' சொன்னதும் பொங்கி வந்துட்டாங்க....

மங்கை
சமூக சீர்திருத்தத்தை எழுத்தில் மட்டுமல்லாது செயலிலும் காட்ட வேண்டும் என்று முனைகிறார். வலிகளைப் பகிர்ந்த போது சில தினங்கள் வலிக்கவே செய்தது. எய்ட்ஸ் பற்றிய பல புரிதல்களை இவரது பதிவில் காணலாம்.

டாக்டர் கவிதாயினி காயத்ரி
டாக்டர் ஈரோடு கவிதாயினி காயத்ரி கவிதைகளில் வல்லவர். டெல்பினம்மா போல் ஊசி போடும் டாக்டரில்லை. தமிழ் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். பாலைத்திணையில் அவ்வப்போது சில வரிகளில் பெரும் பொருளைத் தரக்கூடியவர். பதிவு முழுவதும் கவிதைகளை கொட்டி வைத்திருக்கிறார். சில நேரங்களில் அவர் எழுதும் திரை விமர்சனங்கள் கலக்கலாக இருக்கும்.

புதுகைத் தென்றல்
இரண்டு வாரத்திற்கு முன் வலைச்சரத்தில் புயலாக வீசிச் சென்றவர். கடந்த எட்டு மாதங்களுக்குள் கலக்கலான 200 க்கும் மேற்ப்பட்ட பதிவுகளை எழுதியுள்ளார். நிஜமா நல்லவன், புதுகை அப்துல்லா ஆகிய சிறந்த பதிவ்ர்களை தமிழ் பதிவிற்குள் அழைத்து வந்தவர். (ஆப்பு வச்சிட்டீங்களேக்கா.... அவ்வ்வ்வ்வ் ). கூகுள் ரீடரில் படிப்பதோடு சரி. அவரது பதிவிற்குள் நம்ம நெருப்பு நரி நுழைய அடம்பிடிப்பதால் அப்பீட்டாகிக்கிறேன்.இன்னும் பல சிறந்த பெண் பதிவர்கள் இருந்தாலும் நேரம், நீளம் கருதி முடித்துக் கொள்கிறேன்.

29 comments:

 1. சிறந்த பெண் பதிவர்களைச் சுட்டிக் காட்டிய விதம் மகிழ்சியைத் தருகிறது.
  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 2. ஆஹா என்னையையும் இந்த லிஸ்டில் சேர்த்து பெருமை படுத்திவிட்டீர்கள் தமிழ் பிரியன்.

  இன்னும் 200 அடிக்கலை. 172 தான்.

  சீக்கிரம் அடிச்சிடலாம்.

  ReplyDelete
 3. இங்கு குறிப்பிட்டுள்ள பெண் பதிவர்கள் சிலர் மட்டும் இன்னும் சிறப்பாக வலைப்பதிவுகளில் வலம் வந்துகொண்டிருக்கும் இந்நாளில்,இருக்கும் இன்ன பிற பதிவர்களும் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடரவேண்டும் தம் வலைபதிவுகளை என்ற வேண்டுக்கோளினையும் விடுத்துச்செல்வோம்!

  ReplyDelete
 4. புதுகைத் தென்றல்

  கடந்த எட்டு மாதங்களுக்குள் கலக்கலான 200 க்கும் மேற்ப்பட்ட பதிவுகளை எழுதியுள்ளார்.
  //

  எங்க குருவை பெருமைப்படுத்திய உங்களுக்கு என் நன்றி.

  ReplyDelete
 5. // புதுகைத் தென்றல் said...

  இன்னும் 200 அடிக்கலை. 172 தான்.///
  அக்கா! வலைச்சரத்துல அடித்த சுனாமியை மறந்திட்டீங்களா?..... :))

  ReplyDelete
 6. அக்கா! வலைச்சரத்துல அடித்த சுனாமியை மறந்திட்டீங்களா?..... :))


  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 7. எங்க குருவை பெருமைப்படுத்திய உங்களுக்கு என் நன்றி.


  இது வேறயா!!!

  ஒரு முடிவோட குருப்பாத்தான் கிளம்பியிருக்கீக.

  நல்லா இருங்க.

  ReplyDelete
 8. அக்கா! வலைச்சரத்துல அடித்த சுனாமியை மறந்திட்டீங்களா?.....

  அதெல்லாம் கணக்குல சேர்த்துட்டீங்களா?

  ReplyDelete
 9. எங்க மதி அக்கா எங்க???

  ReplyDelete
 10. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  புதுகைத் தென்றல்

  கடந்த எட்டு மாதங்களுக்குள் கலக்கலான 200 க்கும் மேற்ப்பட்ட பதிவுகளை எழுதியுள்ளார்.
  //

  எங்க குருவை பெருமைப்படுத்திய உங்களுக்கு என் நன்றி.///


  ரிப்பீட்டேய்......

  ReplyDelete
 11. /
  டாக்டர் கவிதாயினி காயத்ரி
  டாக்டர் ஈரோடு கவிதாயினி காயத்ரி கவிதைகளில் வல்லவர். டெல்பினம்மா போல் ஊசி போடும் டாக்டரில்லை. தமிழ் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்.
  /

  இப்பிடி எல்லாம் ஊருக்குள்ள தவறான தகவல் பரவிகெடக்கா??

  .::மை ப்ரெண்ட்::. பிலிஸ் ஹெல்ப் மீ, வந்து தமிழ் எம்.ஏ பத்தி கொஞ்சம் எடுத்து சொல்லுங்க!!

  :))

  ReplyDelete
 12. தமிழ் வலையில் சிறப்பான பதிவுகளைத் தந்துள்ள பெண்களின் வலைப் பூக்களைக் கோர்த்தளிக்கிறது உங்களது இச் சிறப்பு பதிவு.

  வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.

  ReplyDelete
 13. \\\
  இங்கு குறிப்பிட்டுள்ள பெண் பதிவர்கள் சிலர் மட்டும் இன்னும் சிறப்பாக வலைப்பதிவுகளில் வலம் வந்துகொண்டிருக்கும் இந்நாளில்,இருக்கும் இன்ன பிற பதிவர்களும் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடரவேண்டும் தம் வலைபதிவுகளை என்ற வேண்டுக்கோளினையும் விடுத்துச்செல்வோம்!
  ///

  ரிப்பீட்டு...:)

  ReplyDelete
 14. நல்ல தொகுப்பு தமிழ் பிரியன்...

  ReplyDelete
 15. இன்னும் நிறைய பதிவர்கள் இருக்காங்க புதுசாவும் வந்துகிட்டிருக்காங்க...

  ReplyDelete
 16. இருக்கிறவங்களை பாராட்டி வாழ்த்துறதோட புதுசா வந்தவர்களுக்கு வாழ்த்துக்களையும் சொல்லிக்கறோம்...

  ReplyDelete
 17. ///cheena (சீனா) said...

  சிறந்த பெண் பதிவர்களைச் சுட்டிக் காட்டிய விதம் மகிழ்சியைத் தருகிறது.
  நல்வாழ்த்துகள்///
  நன்றி சீனா ஐயா!

  ReplyDelete
 18. ///புதுகைத் தென்றல் said...

  ஆஹா என்னையையும் இந்த லிஸ்டில் சேர்த்து பெருமை படுத்திவிட்டீர்கள் தமிழ் பிரியன்.///
  உண்மை தானே தென்றலக்கா!

  ReplyDelete
 19. ///ஆயில்யன் said...

  இங்கு குறிப்பிட்டுள்ள பெண் பதிவர்கள் சிலர் மட்டும் இன்னும் சிறப்பாக வலைப்பதிவுகளில் வலம் வந்துகொண்டிருக்கும் இந்நாளில்,இருக்கும் இன்ன பிற பதிவர்களும் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடரவேண்டும் தம் வலைபதிவுகளை என்ற வேண்டுக்கோளினையும் விடுத்துச்செல்வோம்!////
  வழி மொழிகிறேன் ஆயில்யன்!

  ReplyDelete
 20. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  புதுகைத் தென்றல்
  கடந்த எட்டு மாதங்களுக்குள் கலக்கலான 200 க்கும் மேற்ப்பட்ட பதிவுகளை எழுதியுள்ளார்.
  //
  எங்க குருவை பெருமைப்படுத்திய உங்களுக்கு என் நன்றி.///
  உங்களுக்கு என்றால் எங்களுக்கும் சேர்த்து தானே அண்ணே!

  ReplyDelete
 21. /// புதுகைத் தென்றல் said...

  எங்க குருவை பெருமைப்படுத்திய உங்களுக்கு என் நன்றி.
  இது வேறயா!!!
  ஒரு முடிவோட குருப்பாத்தான் கிளம்பியிருக்கீக.
  நல்லா இருங்க.///
  நல்லா இருக்க வாழ்த்தியதற்கு நன்றி!

  ReplyDelete
 22. ///பகீ said...

  எங்க மதி அக்கா எங்க???///
  அவங்க சிறப்பா வந்து இருக்காங்க!

  ReplyDelete
 23. /// நிஜமா நல்லவன் said...

  ரிப்பீட்டேய்......///
  ரிப்பீட்டேய்......

  ReplyDelete
 24. மங்களூர் சிவா said...

  /
  டாக்டர் கவிதாயினி காயத்ரி
  டாக்டர் ஈரோடு கவிதாயினி காயத்ரி கவிதைகளில் வல்லவர். டெல்பினம்மா போல் ஊசி போடும் டாக்டரில்லை. தமிழ் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்.
  /

  இப்பிடி எல்லாம் ஊருக்குள்ள தவறான தகவல் பரவிகெடக்கா??

  .::மை ப்ரெண்ட்::. பிலிஸ் ஹெல்ப் மீ, வந்து தமிழ் எம்.ஏ பத்தி கொஞ்சம் எடுத்து சொல்லுங்க!!

  :))///
  ஹா ஹா ஹா ஹா

  ReplyDelete
 25. ///ராமலக்ஷ்மி said...

  தமிழ் வலையில் சிறப்பான பதிவுகளைத் தந்துள்ள பெண்களின் வலைப் பூக்களைக் கோர்த்தளிக்கிறது உங்களது இச் சிறப்பு பதிவு.

  வாழ்த்துக்கள் தமிழ் பிரியன்.///
  நன்றி ராமலக்ஷ்மி அக்கா!

  ReplyDelete
 26. ///தமிழன்... said...

  நல்ல தொகுப்பு தமிழ் பிரியன்...///
  நன்றி அண்ணே!

  ReplyDelete
 27. ///தமிழன்... said...

  இருக்கிறவங்களை பாராட்டி வாழ்த்துறதோட புதுசா வந்தவர்களுக்கு வாழ்த்துக்களையும் சொல்லிக்கறோம்...///
  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

  ReplyDelete
 28. தமிழ்பிரியன், என்னைப் பத்தி நல்லாவே சொல்லீட்டு கடேசிலே
  வெச்சிட்டீங்களே ஆப்பு! //பாளையங்கோட்டை சின்ன ஊர் என்ற 'உண்மை'யை//
  இதானே வேணாங்குறது?

  ReplyDelete
 29. ///நானானி said...

  தமிழ்பிரியன், என்னைப் பத்தி நல்லாவே சொல்லீட்டு கடேசிலே
  வெச்சிட்டீங்களே ஆப்பு! //பாளையங்கோட்டை சின்ன ஊர் என்ற 'உண்மை'யை//
  இதானே வேணாங்குறது?////
  ஹிஹ்ஹிஹிஹிஹி..... அம்மாகிட்ட விளையாடாம வேற யார்கிட்ட விளையாடப் போறோம்... :)))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது