07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 26, 2008

தமிழ் வலையில் கூட்டுப் பதிவுகள்

தமிழ்ப் பதிவர்களிடையே உள்ள நல்லுறவுகள் பெருமிதம் கொள்ளத்தக்கவை. இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது குழுப் பதிவுகள். இன்று கூட்டுப் பகுதிகள் பற்றி பார்க்கலாமா?

வ.வா.சங்கம்

கலக்கலான கூட்டுப் பதிவு இது. பல வருத்தப்படாத வாலிபர்கள் (?) இணைந்து உருவாக்கியது. காமெடியின் உச்சகட்ட பதிவுகள் இங்கு கிடைக்கும். அதே வேளையில் நல்ல சிந்தனைகளும் கிடைக்கும். மாதம் ஒரு பதிவரை அட்லஸாக ஆக்கி பதிவிடச் சொல்வது சிறப்பிற்குரியது. போன மாதம் ரிஷான் அடவு கட்டி அடித்ததை யாரும் மறக்க இயலாது. கைப்புள்ள காமெடிகள் தூள் கிளப்பும். சமீபத்தில் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நான்கு மாதமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

PIT (புகைப்படக்கலை)

தமிழ்ப் பதிவர்கள் பலரை கேமராவைத் தூக்கிக் கொண்டு அலைய வைத்த பதிவு. புகைப்படக்கலை பற்றிய பல்வேறு தகவல்களைத் தருவதுடன் மாதம் ஒரு தலைப்பில் புகைப்படப் போட்டி நடத்துவதும் இதன் சிறப்பு. பதிவர்களின் பங்களிப்பும் அபாரமாக இருப்பது பெருமையாக இருக்கின்றது.

வேடந்தாங்கல் (கும்மி)
பாசக்காரப் பறவைகளின் சரணாலயம். வெளிநாடுகளில் தனியாக இருப்பதே தெரியாமல் இருக்கச் செய்த அன்புக் களஞ்சியம். பல நாடுகளிலும் இருக்கும் நண்பர்கள் இணைந்து ஓரிடத்தில் பின்னூட்ட கும்மி அடிக்கும் இடம். சில நேரங்களில் கும்மிக்காக தனியாக பதிவுகள் போடுவது கூட உண்டு. நகைச்சுவைப் பதிவுகள், பதிவர் கும்மிகள், வாழ்த்துக்கள், மொக்கைகள் என இடம்பெறுகின்ற இடம்.

பயமறியா பாவையர் சங்கம்

பெண்களால் பெண்களைக் கொண்டு கலாய்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் ப.பா.சங்கம். வ.வா.சங்கத்திற்கு ப.பா.சங்கம் அளித்த விருந்து, லூட்டிகள், கலாய்த்தல்கள் என நிறைந்து காணப்படும்.

தேன் கிண்ணம்
பல தமிழ் வலைப்பதிவர்களும் இணைந்து சிறப்பாக நடத்தி வரும் ஒரு பதிவு. தமிழ் திரைப்படப் பாடல்களை தொகுத்து வழங்கி வருகின்றனர். நேயர் விருப்பம், குறிப்பிட்ட கலைஞரின் வாரம்,பாடல்களைத் தேடும் வசதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இது ஒரு தமிழ் பாடல்களின் என்சைக்கிளோபீடியாவாக மாறும் என்பதில் ஐயமில்லை.

விக்கி பசங்க

தமிழ்ப் பதிவர்கள் இணைந்து தகவல்களைத் தருவதற்காக உருவாக்கப்பட்ட வலைப்பதிவு. பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்வது, மின்னலின் வேகம், ப்ளாஷ் உபயோகம், போன்ற உபயோகமான பதிவுகள் வந்தன. உறுப்பினர்கள் அனைவரும் ஆக்டிவாக இருந்தாலும் சமீப காலமாக வராத பதிவுகள் மீண்டும் வரும் என எதிர்பார்க்கலாம்.

11 comments:

 1. //சமீபத்தில் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நான்கு மாதமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.//


  :))

  ReplyDelete
 2. கலக்கல் தொகுப்பு

  ReplyDelete
 3. ///வேடந்தாங்கல் (கும்மி)
  பாசக்காரப் பறவைகளின் சரணாலயம். வெளிநாடுகளில் தனியாக இருப்பதே தெரியாமல் இருக்கச் செய்த அன்புக் களஞ்சியம். பல நாடுகளிலும் இருக்கும் நண்பர்கள் இணைந்து ஓரிடத்தில் பின்னூட்ட கும்மி அடிக்கும் இடம்///

  ரொம்ப நாளாச்சுல்ல...;)

  ReplyDelete
 4. ///வேடந்தாங்கல் (கும்மி)///

  யாராவது சூப்பரா ஒரு மொக்கை சாரி... பதிவு போடுங்கப்பா...:)

  ReplyDelete
 5. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  super collection
  well done///
  நன்றி அண்ணே!

  ReplyDelete
 6. ///நிஜமா நல்லவன் said...

  //சமீபத்தில் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நான்கு மாதமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.//


  :))////
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 7. ///கானா பிரபா said...

  கலக்கல் தொகுப்பு///
  கானா அண்ணே நன்றி!

  ReplyDelete
 8. ///தமிழன்... said...

  நல்ல தொகுப்பு...!///
  நன்றி தமிழன்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது