07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, July 15, 2008

கதை கதையாம் சிறுகதையாம்

பொதுவாக கதைகள், கவிதைகள் படிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்ததிலை... ஆனாலும் ஹைக்கூ கவிதைகள் அதிகமாகவும் ஒரு பக்க கதைகள் கொஞ்சமாகவும் பிடிக்கும். ஸோ... அதன் மீது எனக்கு வெறுப்பு இல்லை.. மாறாக நீட்டி முழக்கிக் கொண்டு போகும் போது சுவாரஸ்யம் போய் கொஞ்சம் சோர்வு வந்து விடுகிறது.

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.
- நன்றி : விக்கிபீடியா

நான் நண்பர்களின் வலைப்பூக்களில் நான் ரசித்த கதை கதையாம் சிறுகதைகளில் சில....
நண்பன் ரிஷானின் அக்கக்காக் குஞ்சி என்ற தலைப்பில் தன் சிறுகதைகள் வலைப்பூவில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த வலைப்பூவில் அவர் சிறுகதைகள் மட்டுமே எழுதுகிறார் என்பதால் அந்த பதிவை கதை என்று நம்ப வேண்டி இருக்கிறது. ஒரு குட்டி பெண்ணுடனும் ஒரு குருவிக் குஞ்சுடனும் ஆரம்பித்து அந்த குட்டி பெண் பெரியவளாகி அவள் வாழ்க்கைபடும் முறையை நீட்டி முழக்காமல் இரண்டு வரிகளில் சொல்லி ஆழமான சோகத்துடன் முடித்திருக்கிறார். உண்மையில் அதை படிக்க படிக்க எதோ நிஜ சம்பவம் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. பின்னூட்டங்களை பார்த்து அது கதை தான் என்பதை உறுதிபடுத்த வேண்டியதாகிவிட்டது. :)
^^^()^^^^^^()^^^^^^()^^^^^^()^^^
தனக்கு சைக்கிள் கிடைத்தவுடன் நாயகன் நன்றாக படிக்கிறார். ஆசிரியர்களுக்கும் செல்லப் பிள்ளை ஆகிறார். இதை கண்டு அவர் பாட்டி சைக்கிள் வந்த ராசி தான் பேரன் நன்றாக படிப்பதாக சொல்கிரார். பிறகு அதே சைக்கிளில் சென்ற தன் மகன் இறந்துவிடுவதால் சனியன் புடிச்ச சைக்கிள் தன் மகன் உயிரை வாங்கிவிட்டதே என சாடுகிறார். ஒரு கிராமத்து பாட்டியின் மனநிலையை அழகாக சொல்லி , அந்த சைக்கிளை விற்பதற்காக ஓட்டி செல்லும் போது அது வழக்கம் போல சத்தமிடாமல் இருப்பதாக சொல்லி நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் நண்பர் நிலாரசிகன் தன் சைக்கிள் சிறுகதையில்.

^^^()^^^^^^()^^^^^^()^^^^^^()^^^

கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் கவலை வேண்டாம்.. அதன் பிறகு எப்போதும் சந்தோஷம் தான் என்று அரிய கருத்தை மையமாக வைத்து கவிநயா கொஞ்சம் கலகலப்பாகவும் ரொமாண்டிக்காகவும் எழுதி இருக்கும் சிறுகதை இடுக்கண் வருங்கால்... புது மணத் தம்பதிகள் படிக்கும் போது கொஞ்சம் ரொமாண்ட்டிக்காக ஃபீல் பண்ணலாம். :P

^^^()^^^^^^()^^^^^^()^^^^^^()^^^

நம் நட்பு வட்டாரங்களில் சிறுகதையில் பெரிதும் கலக்குபவர் நண்பர் வினையூக்கி. பேய்க்கதை , ரொமாண்டிக் கதை, சமூக சிந்தனையுள்ள கதை என்று அனைத்து வகையிலும் பின்னி பெடலெடுப்பார். உணவை வீணாக்குவதென்பது உண்மையில் மிகப் பெரும் குற்றம். ரம்யாவிற்கு இது சுத்தமாக பிடிக்காத விஷயம். மதிய உணவிற்கு வருவதாக கூறிய நண்பர்கள் சிலர் வராததால் மீதமான உணவை நினைத்து கவலைப் படும் போது அதை வழக்கமாக பெரும்பாலானோர் செய்வது போல் கீழே கொட்டிவிடாமல் ஒரு கட்டிடத் தொழிலாளியின் குடும்பத்துக்கு குடுத்து அவர்கள் சந்தோஷமாய் உண்பதை பார்த்து திருப்தி அடையும் போது நாயகி ரம்யா மிக உயர்வாய்த் தெரிகிறார்.

^^^()^^^^^^()^^^^^^()^^^^^^()^^^

கதை என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர்களில் நம்ம திவ்யா மாஸ்டரும் ஒருவர். அவர் கதைகளை படித்தாலே மனசுக்குள் மத்தாப்புகள் ஜொலிக்கும்.அவர் எங்கோ படித்ததை சில மாற்றங்களுடன் அவர் ஸ்டைலில் கொஞ்சம் ரகளையாக கதையை கணிக்கமுடியாத வகையில் எழுதிய கண் பேசும் வார்த்தை புரிவதில்லை.... இவரது ஸ்பெஷலே கதைக்கு பொருத்தமாய் இடையிடையே கவிதைகளையும் சொருகிவிடுவார். அது கதைக்கு இன்னும் அழகூட்டும்.

............. சொல்வதற்கு இன்னும் ஏராளமாக இருக்கிறது. ஆனால் இந்த பதிவு பெரிதாக இருப்பதாக உணர்ந்தால் யாரும் படிக்க மாட்டீங்க என்ற உண்மை எனக்கு தெரிந்தபடியால் இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :))


.....இப்பத்திக்கு அப்பீட்டு.. வர்ட்டா :))

30 comments:

 1. இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்..

  avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

  ReplyDelete
 2. அன்பின் சஞ்சய்,

  எனது சிறுகதையான 'அக்கக்காக் குஞ்சினை' வலைச்சர வாசகர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி நண்பரே :)

  உங்கள் சேவை தொடரட்டும்...!

  என்றும் அன்புடன்,
  எம்.ரிஷான் ஷெரீப்

  ReplyDelete
 3. // இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :)) //

  எல்லாத்துக்கும் ரெடியாகதான் இருக்கோம்

  ReplyDelete
 4. //குசும்பன் said...
  // இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :)) //

  எல்லாத்துக்கும் ரெடியாகதான் இருக்கோம்//

  ரிப்பீட்டேய்....!

  ReplyDelete
 5. // இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :)) //

  இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா பாஸு நாங்க

  ReplyDelete
 6. /
  .....இப்பத்திக்கு அப்பீட்டு.. வர்ட்டா
  /

  சரி ரைட்டு

  ReplyDelete
 7. // இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :)) //

  எல்லாத்துக்கும் ரெடியாகதான் இருக்கோம்

  ReplyDelete
 8. // இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :)) //

  இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா பாஸு நாங்க

  ReplyDelete
 9. //புதுகைத் தென்றல் said...

  இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்..

  avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv//

  என்னாதிது.. சின்னபுள்ளத் தனமா? :)

  ReplyDelete
 10. //எம்.ரிஷான் ஷெரீப் said...

  அன்பின் சஞ்சய்,

  எனது சிறுகதையான 'அக்கக்காக் குஞ்சினை' வலைச்சர வாசகர்களுக்கு நீங்கள் அறிமுகப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி நண்பரே :)

  உங்கள் சேவை தொடரட்டும்...!

  என்றும் அன்புடன்,
  எம்.ரிஷான் ஷெரீப்//

  எனக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சிருந்தது ரிச்சு.. :) யாம் பெற்ற இன்பம்.. :)

  ReplyDelete
 11. //குசும்பன் said...

  // இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :)) //

  எல்லாத்துக்கும் ரெடியாகதான் இருக்கோம்//

  ரிஷான் கதை படிச்சிட்டிங்க போல.. :)

  ReplyDelete
 12. //நிஜமா நல்லவன் said...

  //குசும்பன் said...
  // இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :)) //

  எல்லாத்துக்கும் ரெடியாகதான் இருக்கோம்//

  ரிப்பீட்டேய்....!//
  எல்லாத்துக்கும்னா? ஆட்டோ அனுப்பவா? ரெடியா? :P

  ReplyDelete
 13. //அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :))//

  எதுக்கு இம்சை மாம்ஸ்சை
  (பின்)தொடரனும்?. நம்ம வழில தனியா கொடுமைப் படுத்தலாம்ல்ல:P


  கதை தொகுப்புக்கள் அழகு. தொடருங்க சஞ்ஜய்:)

  ReplyDelete
 14. சஞ்செய்

  நல்ல கதைகளைத் தேடி எடுத்து சுட்டியது பாராட்டத் தக்கது

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 15. புதுகைத் தென்றல் said...
  இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்..

  avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

  நான் எங்க இங்க வந்தேன்....

  ReplyDelete
 16. குசும்பன் said...
  // இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :)) //

  எல்லாத்துக்கும் ரெடியாகதான் இருக்கோம்

  என்னது இது ???

  ReplyDelete
 17. ///இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்..///

  எவ்ளோ தாங்கிட்டோம் இத தாங்க மாட்டமா என்ன...:)

  ReplyDelete
 18. ஆரம்பமே நல்ல தொகுப்பு தொடர்ந்து கலக்குங்க...

  ReplyDelete
 19. சஞ்சய்,

  என் பதிவினை வலைச்சர வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி!!

  ReplyDelete
 20. // புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  // இத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :)) //

  இதுக்கெல்லாம் பயப்படுற ஆளா பாஸு நாங்க//

  ஹாஹாஹா.. உங்கள பயமுறுத்த முடியுமா சார்.. வருகைக்கு நன்றி. :)

  ReplyDelete
 21. @ மங்களூர் சிவா : ரொம்ப ஆடாதிங்க மாமா.. மங்களம் தரும் மங்களாம்பிகை அருளால் உங்களை அடக்க ஒருத்தர் வருவாங்க.. இப்போவே கொஞ்சம் அடங்க பழகிக்கோங்க.. :D

  ReplyDelete
 22. //ரசிகன் said...

  //அடுத்த பதிவில் இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்.. :))//

  எதுக்கு இம்சை மாம்ஸ்சை
  (பின்)தொடரனும்?. நம்ம வழில தனியா கொடுமைப் படுத்தலாம்ல்ல:P


  கதை தொகுப்புக்கள் அழகு. தொடருங்க சஞ்ஜய்:)//

  ஆஹா.. கெலம்பிட்டார்யா பாண்டிச்சேரிக்காரரு.. :)

  ரசித்ததுக்கு நன்றி மாமா..

  ReplyDelete
 23. // cheena (சீனா) said...

  சஞ்செய்

  நல்ல கதைகளைத் தேடி எடுத்து சுட்டியது பாராட்டத் தக்கது

  நல்வாழ்த்துகள்//

  நன்றி சீனா சார்.. :)

  ReplyDelete
 24. //இம்சை said...

  புதுகைத் தென்றல் said...
  இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்..

  avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

  நான் எங்க இங்க வந்தேன்....//

  அண்ணே உங்க அளவுகெல்லாம் இது இம்சை இல்லைண்ணே.. எல்லாம் இந்த ஸ்ரீ மாம்ஸ் பண்ண சதி.. :)))

  ReplyDelete
 25. //தமிழன்... said...

  ///இம்சையை தொடருவேன் என பகிரம்ங்கமாக மிரட்டுகிறேன்..///

  எவ்ளோ தாங்கிட்டோம் இத தாங்க மாட்டமா என்ன...:)//

  ஹிஹி... தமிழன் ரொம்ப நல்லவரு.. :)

  --

  //ஆரம்பமே நல்ல தொகுப்பு தொடர்ந்து கலக்குங்க...//

  நன்றி தமிழன்.. :)

  ReplyDelete
 26. //Divya said...

  சஞ்சய்,

  என் பதிவினை வலைச்சர வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி!//

  இன்னும் இருக்கு ஊர்ஸ்.. தினமும் எட்டிப்பாருங்க.. :)

  ReplyDelete
 27. தங்கள் பரிந்துரையால் 'அக்கக்காக் குஞ்சு' அழகாய் மறுபடி தமிழ் மணத்தில் வலம் வர, அதைப் படித்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  ReplyDelete
 28. ரிஷானின் அந்தக்கதை எனக்கும் ரொம்பபிடிச்சகதை.. அதை இங்க
  அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி சஞ்சய்! நலல் படைப்புகளை இப்படில்லாம் மற்றவர்களும் தெரிவித்தால்தான் எல்லோர்க்கும் எல்லாமும் தெரியவரும்.நன்றி

  ReplyDelete
 29. //ராமலக்ஷ்மி said...

  தங்கள் பரிந்துரையால் 'அக்கக்காக் குஞ்சு' அழகாய் மறுபடி தமிழ் மணத்தில் வலம் வர, அதைப் படித்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.//

  ரிஷான் அதை எழுதி இருக்கும் விதம் ரொம்ப அருமை.. அதை படிக்கும் போது ஆரம்பத்தில் கதை என்றே தோன்றாது. அவ்வளவு இயல்பாய் இருக்கும்.

  நன்றி லக்ஷ்மியக்கா.. :)

  ReplyDelete
 30. //ஷைலஜா said...

  ரிஷானின் அந்தக்கதை எனக்கும் ரொம்பபிடிச்சகதை.. அதை இங்க
  அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி சஞ்சய்! நலல் படைப்புகளை இப்படில்லாம் மற்றவர்களும் தெரிவித்தால்தான் எல்லோர்க்கும் எல்லாமும் தெரியவரும்.நன்றி//

  நன்றி ஷைலஜா மேடம்... வலைசரத்தின் நோக்கமே அது தானே. :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது