07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 25, 2008

உலகே பற்றி எறியும் போது சாட்டிங்கா..... என்ன கொடுமப்பா

இன்றைய அறிவியல் வளர்ச்சியால் அனைத்தும் சுலபமாகி விட்டாலும் அதற்கு நாம் கொடுத்த விலை கொடுமையானது. களங்கமில்லாத நமது பூமி கடுமையான கட்டங்களை சந்திக்க வேண்டி உள்ளது. சுற்றுப்புற சூழல் சீர்கேடு, புவி வெப்பமடைதல் போன்ற மனிதனால் உண்டான கொடுமைகளை நமது பூவுலகம் சந்திக்கின்றது.

இதைப் பற்றி பல பதிவுகள் எழுதப்பட்டாலும் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதை மனதில் கொண்டு அது பற்றிய சில சுட்டிகளை தருகிறேன்.

தெக்கிக்காட்டான் எழுதிய குளோபல் வார்மிங் உண்மையா? என்ற கட்டுரையில் உலகமயமாக்கல் எப்படி புவி வெப்பத்தை அதிகரிக்கும் காரணியாக மாறிவிட்டது என விளக்குகிறார்.

வெளிகண்டநாதரின் உஷ்ணமாகும் உலகத்தை எப்படி குளிர்விக்கலாம் என்ற பதிவில் தெளிவாக புவி வெப்பமடைவதைப் பற்றி விளக்கி அதை எப்படி தடுப்பது என்றும் தெளிவாக நமக்கு சொல்கிறார்.

வித்யா கலைவாணியின் புவி வெப்பமடைதலில் முக்கிய பங்கு வகிக்கும் CFC எனப்படும் வாயுவைப் பற்றி விளக்கி அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தருகின்றார்.

அருள் Global Warming என்ற பதிவில் கடல் சார்ந்த பகுதிகளின் பாதிப்புகளை விளக்கி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

மாயன் தனது பார்வையில் புவி வெப்பமாகுவதை விளக்குகிறார்.

கண்மணி டீச்சரின் பார்வையில் ஓசோன் படலத்தை விளக்கிச் சொல்கிறார்.

தஞாவூரார் ஊருக்கு உபதேசம் செய்யும் அமெரிக்காவை ஒரு பிடி பிடிக்கிறார்.

மண், மரம், மழை வின்சென்ட் தனது பதிவில் புவி வெப்பமடைதலில் இருந்து நமது உலகைக் காக்க அருமையான 20 ஆலோசனைகளை வழங்குகின்றார்.

இவைகளை சாதாரணமாகக் கருதாமல் முடிந்த அளவு இதில் உள்ளவைகளை மனதில் கொண்டு உலகைக் காக்கலாம் வாருங்கள்.

11 comments:

 1. ஒன்னும் பெருசா செய்ய வேண்டாண்ணே. வீட்டுக்கு ரெண்டு மரம் வச்சு ஒழுங்கா வளர்த்தாலே போதும்

  ReplyDelete
 2. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  ஒன்னும் பெருசா செய்ய வேண்டாண்ணே. வீட்டுக்கு ரெண்டு மரம் வச்சு ஒழுங்கா வளர்த்தாலே போதும்//  வீட்டுக்கு ரெண்டு மரம் வைக்காவிட்டாலும் பரவா இல்லை இருக்கிறதை அழிக்காம இருந்தா சரி.

  ReplyDelete
 3. //பாரதி said...
  //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  ஒன்னும் பெருசா செய்ய வேண்டாண்ணே. வீட்டுக்கு ரெண்டு மரம் வச்சு ஒழுங்கா வளர்த்தாலே போதும்//  வீட்டுக்கு ரெண்டு மரம் வைக்காவிட்டாலும் பரவா இல்லை இருக்கிறதை அழிக்காம இருந்தா சரி.//  ரிப்பீட்டேய்...!

  ReplyDelete
 4. ரொம்ப நல்ல விசயம்ணே...

  ReplyDelete
 5. நல்ல சுட்டிகள்...

  நன்றி...!

  ReplyDelete
 6. ///புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

  ஒன்னும் பெருசா செய்ய வேண்டாண்ணே. வீட்டுக்கு ரெண்டு மரம் வச்சு ஒழுங்கா வளர்த்தாலே போதும்///
  அப்படியே மரம் வளர்க்க சிட்டி நடுவுல இரண்டு சென்ட் நிலமும் கொடுத்தா நல்லா இருக்கும்.. சும்மா காமெடிக்கு... உண்மை தான் அண்ணே!

  ReplyDelete
 7. ///பாரதி said...
  //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  ஒன்னும் பெருசா செய்ய வேண்டாண்ணே. வீட்டுக்கு ரெண்டு மரம் வச்சு ஒழுங்கா வளர்த்தாலே போதும்//
  வீட்டுக்கு ரெண்டு மரம் வைக்காவிட்டாலும் பரவா இல்லை இருக்கிறதை அழிக்காம இருந்தா சரி.///
  இதுக்கு கவிஞர் வேண்டும் என்று சொல்வது....... :)))

  ReplyDelete
 8. ///நிஜமா நல்லவன் said...
  //பாரதி said...
  //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
  ஒன்னும் பெருசா செய்ய வேண்டாண்ணே. வீட்டுக்கு ரெண்டு மரம் வச்சு ஒழுங்கா வளர்த்தாலே போதும்//
  வீட்டுக்கு ரெண்டு மரம் வைக்காவிட்டாலும் பரவா இல்லை இருக்கிறதை அழிக்காம இருந்தா சரி.//
  ரிப்பீட்டேய்...!///
  அண்ணே அதான் சொல்லிட்டாங்கள்ள அப்புறம் என்ன ரிவிட்டே,,, சசீச்ச்சீ ரிபிட்ட்ட்டே

  ReplyDelete
 9. ///தமிழன்... said...

  ரொம்ப நல்ல விசயம்ணே...///
  ஆமாண்ணே!

  ReplyDelete
 10. ///தமிழன்... said...

  நல்ல சுட்டிகள்...

  நன்றி...!///
  நன்றி!

  ReplyDelete
 11. இந்த பதிவையும், இணைக்கப்பட்டுள்ள பதிவுகளின் தலைப்புகளையும் பார்க்கும்போது.. கொஞ்சம் வெட்கமாக இருந்தது. நானும்தான் போடுகிறேனே பதிவு 'தங்கமணி வைக்கும் குழம்பில் உப்பு இல்லை' என்று.! நன்றி தமிழ் பிரியன்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது