07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 11, 2012

சமூகம் ...


மனிதர்கள் சந்தோசத்தில் இருக்கும் போது தங்கள் உண்மை நிலையினை அறிவதில்லை , அதுவே ஏதாவது ஒரு துக்கம் அவர்களை தாக்கும் போது மட்டுமே இந்த சமூகத்தின் மேல் அளவு கடந்த கோபம் வருகிறது ... கோபங்கள்  அதிகமாகும் போது நாமும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம் தானே என்பதையே மறந்துவிடுகின்றோம் ... ஆனால் அப்படியில்லாமல் இவர்களது எழுத்துக்களில் சமூக பொறுப்புணர்வு மேலோங்கி நிற்கும் ... 

" மரங்கள்  " தலைப்பில் 
 கவிதை வராமல் கசக்கி
எறிந்தேன்  காகிதத்தை ...

( இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ )

அறிமுகம் 1

இவர் கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் கருத்துகளை அழுத்தமாக பதியவைக்க தவறுவதேயில்லை ... சொல்ல வந்ததை சுருக்கமாகவும் , அதே சமயம் சுவையாகவும் சொல்வதில் வல்லவர் இந்த ரமணி ...  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கின்ற இவரது வலைத்தளத்தின் தலைப்பே ஒரு பொறுப்புணர்வோடு இருக்கிறது ... நான் ரசித்த ரமணியின் பதிவுகள் :
 

அறிமுகம் 2

எந்த ஒரு புது பதிவர் வந்தாலும் அவர்களுக்கு பின்னூட்டம் மூலம் உற்சாகம் அளிப்பதில் இவருக்கு இணை யாரும் இணை கிடையாது ... ப்ளாக்கில் ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனை என்றாலும் உடனே அதை நிவர்த்தி செய்வதற்கு தனக்கு தெரிந்த வழியை தானாகவே கூறுபவர் ... திண்டுக்கல் தனபாலன் 
என்று ஊருடன்  சேர்ந்து வரும்  பெயரே அழகாக இருக்கிறது ... திண்டுக்கல் தனபாலனின் சில தித்திக்கும் பதிவுகள் ... 

http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html         உங்களின் மந்திரச் சொல் என்ன 
http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_16.html        நீங்க மரமாக போறீங்க ...

அறிமுகம் 3

ஆசிரியரான இவரிடம் அதீத பொறுப்புணர்வு இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை ... அது இவரது பதிவுகளிலும் பிரதிபலிக்கும் ... இவரும் ஊரையும் ,  பெயரையும்  ஒன்றாக இணைத்துக்கொண்டவர் ...இவருடைய பதிவுகளில் சில :


நாளை மீண்டும் சந்திப்போம் ... 

இப்படிக்கு 
அன்புடன் அனந்து ... 










மேலும் வாசிக்க...

Friday, August 10, 2012

அரசியலும் , ஆன்மீகமும் ...


நம் நாட்டில் அரசியலும் , ஆன்மீகமும் ஒன்றுடன் ஒன்று நேரடியாகவோ , மறைமுகமாகவோ பின்னிப்  பிணைந்திருப்பதாகவே கருதுகிறேன் ... அரசியலில் இருப்பவர்கள் ஆன்மீகவாதிகளை நாடுகிறார்கள் , ஆன்மீகவாதிகளில் பலரோ  பொய் , பித்தலாட்டம் என்று அரசியல் செய்கிறார்கள் ... கடவுளே இல்லை என்று சொல்லி அரசியல் செய்பவர்களும் ஆன்மீகத்துக்குள் அடக்கம் , ஏனெனில் கடவுள் இல்லை என்கிற வாதம் ஒன்றும் புதிதல்ல , பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே இந்து மத ரிஷிகளால் அது பேசப்பட்டிருக்கிறது ... இன்று நாம் தன் பதிவுகள் மூலம் ஆன்மீக ஒளி பரப்பும் ஒருவரையும் , அரசியல் , ஆன்மிகம் இரண்டையுமே திறம்பட கையாளும் இருவரையும் பார்க்கப் போகிறோம் ...

கடவுளே இல்லை 
சொன்னவருக்கு சிலை வைத்தான் 
பகுத்தறிவுவாதி ... 

( இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ ) 

அறிமுகம் 1

அநேகமாக பதிவுலகில் உள்ள பெரும்பான்மையோருக்கு இவரை தெரிந்திருக்கும் ... மூன்றாம் கோணம் நடத்திய கட்டுரை போட்டியில் முதல் பரிசு இவருக்கு கிடைத்ததன் மூலம் நான் இவரை அறிந்து கொண்டேன் ... இவரின் பதிவுகளை படித்தாலே உலகில் உள்ள நிறைய ஆலயங்களை தரிசனம் செய்த திருப்தி கிடைக்கும் ... நம்மூரில்  நமக்கே  தெரியாத பல ஆலயங்களை நமக்கு http://jaghamani.blogspot.com அறிமுகப்படுத்துவது ராஜேஸ்வரி அவர்களின் சிறப்பம்சம் . நான் படித்துப் பரவசமடைந்த சில பதிவுகள் இதோ :

http://jaghamani.blogspot.in/2012/06/blog-post_30.html       ஓம் சிவோஹம் 
http://jaghamani.blogspot.in/2012/06/blog-post_20.html       சுதர்சன சக்கரம் 
http://jaghamani.blogspot.in/2012/05/blog-post_06.html       மதுரை அரசாலும் மீனாட்சி 

அறிமுகம் 2

குருஜியாக இருந்து கொண்டு ஆன்மீக விளக்கங்களோடு நின்று விடாமல் அரசியலையும் அலசிப் பார்ப்பது உஜிலாதேவியின் சிறப்பம்சம் ... மதங்களை பற்றிய விளக்கங்கள் கொடுக்கும் இவர் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை ... உஜிலாதேவியின் மனதை கவர்ந்த சில பதிவுகள் ...

http://www.ujiladevi.in/2012/06/blog-post_15.html           என்னை ஜனாதிபதி 
http://www.ujiladevi.in/2012/03/blog-post_22.html           கலைஞர் வழியில் 
http://www.ujiladevi.in/2012/05/blog-post_18.html           சிவப்பழமான ஆஞ்சநேயர் 

அறிமுகம் 3

பத்மன் பதிவுலகிற்கு புதியவராக இருக்கலாம் , ஆனால் தான் எழுதிய " மூன்றாவது கண் " என்ற முதல் புத்தகத்திற்கே தமிழக அரசின் விருது பெற்றதால் எழுத்துலகில் பரிச்சயமானவர் , அத்தோடு பத்திரிக்கை , மீடியா உலகில் இருபத்தைந்து வருட அனுபவம் பெற்றவர் ... சில காலங்களில் பதிவுலகிலும் பரிச்சயமாவர் என்பது என் அபிப்ராயம் ... பத்மனின் நற்கூடல்  தளத்தில் மீண்டும் படிக்க வைக்கும் சில பதிவுகள் ...


நாளை மற்ற மூவருடன் மீண்டும் சிந்திப்போம் ... 

இப்படிக்கு
அன்புடன் அனந்து ... 





மேலும் வாசிக்க...

Thursday, August 9, 2012

கவிதைகள் பலவிதம் ...

நான் கவிதை எழுத காரணமாய் இருந்தவர் மகாகவி பாரதி ... 7 வது படிக்கும் போது பேச்சுப் போட்டியில் முதல் பரிசாக பாரதியார் கவிதைகள் கொடுத்தார்கள் ... இன்று வரை அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதன் பிறகு என்னை மேலும் உற்சாகப்படுத்தி எழுத வைத்தவர் என் அண்ணன் ...கவிதை எழுதுவதற்கு காதல் முக்கிய காரணமாய் அமைந்து விடுகிறது என்றே நம்புகிறேன் ... இன்று நாம் பார்க்கப்போகும் மூவரும் காதல் கவிதையால் நம்மை உருக்குபவர்கள் , சில சமயம் சோகத்தால் இதயத்தை  நனைப்பவர்கள் ...

தொலைந்த என்னை தேடுகிறேன் 
நீ கொடுத்த உன் 
திருமண அழைப்பிதழில் ...

( ஜூன் 2010 இல் எழுதியது ) 

அறிமுகம் 1 

என்னை தொடர்ந்து தமிழ் வலைப்பத்திரிக்கையான மூன்றாம் கோணத்தில் எழுத வைப்பவர் ... இவர் எழுதும் " வாசிக்கலாம் வாங்க"மூன்றாம் கோணத்தில் பிரபலம் ... சாதாரண கவிதைகளிலிருந்து இவருடைய எழுத்துக்கள் சற்றே மாறுபட்டிருக்கின்றன என்றே சொல்லலாம் ... இவருடைய சில கவிதைகள் சில தடவைக்கு மேல் படித்த பிறகு தான் எனக்கு புரிந்தன ...ஷஹி யின் கவிதைகளை வாசிக்கலாம் வாங்க ... இவருடைய  ப்ளாக் முகவரி http://asainila.blogspot.in

நான் ரசித்த ஷஹியின் சில கவிதைகள் ...


அறிமுகம் 2


என் கவிதைக்கு பின்னூட்டம் இட்டதன் மூலம் ஹேமாவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது ... இலங்கைத் தமிழரான இவரின் எழுத்துக்களில் தமிழ் விளையாடும் ...வானம் வெளித்த பின்னும். என்கிற இவருடைய வலைத்தளத்தின் தலைப்பே கவிதை போல இருக்கும் போது கவிதைகளை பற்றி சொல்லவா வேண்டும் ? கீழே பார்க்கவும் ...




அறிமுகம் 3
  • இவரும் பின்னூட்டம் மூலம் அறிமுகமானவரே ... இவருடைய  கரடி பொம்மை என்கிற ப்ளாக் தலைப்பே வித்தியாசமாக இருக்கவே உள் நுழைந்தேன் ... தலைப்பு மட்டுமல்ல அவருடைய கவிதைகளும் சுவாரசியாமாகவும் , வித்தியாசமாகவும் இருக்கும் ... லாலியின் கவிதைகள் இதோ ...





மேலும் வாசிக்க...

Wednesday, August 8, 2012

சினிமா சினிமா ...


சினிமா எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையாதகவே இருக்கிறது ... சினிமாவை பழிப்பவர்கள் கூட யாராவது ஒரு நடிக , நடிகையரை மானசீகமாக ரசிக்கிறார்கள் .. டி.வி, இணையம் , செல்போன் என்று தொழில்நுட்பம் வளர்ந்தாலும் இவை மூன்றையும் ஆக்ரமிக்கும் ஊடகமாக சினிமாவே இருக்கிறது ... சினிமா விமர்சனங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பதிவுகள் மூலம் என்னை கவர்ந்த சிலரை இன்று அறிமுகம் செய்கிறேன் ... 

தியேட்டர் சண்டையில் 
வாயில்  ரத்தம் வருத்தப்பட்டேன்
விசிலடிக்க முடியாமல் போனதற்கு ...

( இந்த பதிவிற்காக எழுதிய ஹைக்கூ ) 

அறிமுகம் 1

சினிமா விமர்சனங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு நடை இருக்கும் ... ஆனால் சில விமர்சனங்களில் உள்ள சில கருத்துக்களில் எங்கள் இருவரின் நடையும் ஒத்துப்போனத்தில் ஆச்சர்யமே ... இரண்டு முறை சினிமா பார்க்க என்னை அழைத்தும் இவருடன் போக முடியாமல் போனதில் எனக்கு வருத்தமே ... 
அடுத்த முறை நிச்சயம் செல்வோம் என்ற நம்பிக்கையில்  உங்களுக்கு பிரபாகரனின் தத்துபித்துவங்கள்  என்கிற இவரது தளத்தை அறிமுகம் செய்கிறேன்.

அவருடைய தத்துபித்துவங்களில் எனக்கு பிடித்த சில ...


அறிமுகம் 2

பிரபலமான பதிவராக இருப்பதோடு தன் எழுத்தில் சில புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார் ... படத்தை மட்டும் விமர்சனம் செய்யாமல்  அதோடு தொடர்புடைய விஷயங்களையும் வகைப்படுத்துவதில் வல்லவர் யுவகிருஷ்ணா ...

அவருடைய விமர்சனங்களில் எனக்கு பிடித்த சில ... 


அறிமுகம் 3

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்களையும்  விமர்சனம் செய்பவர் இவர் ... விமர்சனங்களை விட  கமல் பற்றி இவர் நடுநிலை தவறாமல் எழுதிய பதிவு எனக்கு பிடித்தது ...

ராஜ் அவர்களுடைய பதிவுகளில் எனக்கு பிடித்த சில ...

City of God-(2002)-கேங்ஸ் ஆப் பிரேசில் -15+

எதிர்பார்பை எகிற வைக்கும் ஹாலிவுட் படங்கள்- 2012


நாளை மற்ற மூவருடன் மீண்டும் சந்திக்கலாம் 

இப்படிக்கு 
அன்புடன் அனந்து ... 

மேலும் வாசிக்க...

Tuesday, August 7, 2012

3 - மூன்று பேர் ...


3 என்ற தலைப்பை பார்த்ததும் பட  விமர்சனமோ என்று பயந்து விடாதீர்கள் ... மூன்று என்ற இலக்கம் எல்லோர் வாழ்விலும் நன்றாக பிணைந்து விட்டது ... சின்ன  வயதிலிருந்தே எது செய்தாலும் முக்கா முக்கா மூணாவது ஆட்டம் என்று நிறைய பேர் கேட்டுப்  பழகியிருப்போம் ...  உலகின் முக்கியமான மதங்கள் மூன்று , இந்து மதத்தில் சிவன் , பிரம்மா , விஷ்ணு என்று முக்கிய கடவுள்கள் மூன்று , அதில் சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உட்பட கண்கள் மூன்று , ஆண் , பெண் , திருநங்கை என மனித இனத்தின் வகைகள் மூன்று , நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இது வரை இந்தியா வாங்கியுள்ள பதக்கங்கள் மூன்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ... அத்தோடு நான் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையும் மூன்று என்பதால் தினமும் மூவரை அறிமுகம் செய்யலாம் என்று முடிவு செய்தேன் ... இதனை அறிமுகம் என்று சொல்வதை விட பகிர்ந்து கொள்ளுதல்  என்றே சொல்லலாம் , ஏனெனில்  இதில் பெரும்பாலானோர் உங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருக்கலாம் ...

தீண்டாமை பெருங்குற்றம் 
தவறாக புரிந்து கொண்டார்கள்
விளைவு எயிட்ஸ் ...

( கல்லூரி காலத்தில் தினமலர் இதழில் வெளியான எனது ஹைக்கூ ) 

அறிமுகம் 1

உங்களில் எத்தனை பேர் எஸ்.ரா எழுதிய " கதாவிலாசம் " படித்திருப்பீர்கள் என்று தெரியாது , ஆனால் நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களுள் அதுவும் ஒன்று ... பாரதியார் உட்பட தமிழுலகின் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களையும் , அவர்களுடைய எழுத்துக்கள் பற்றியும் தனது அனுபவ நடையில் அருமையாக தந்திருப்பார் எஸ்.ரா ... அதே போன்றதொரு சிறப்பான பணியை இணையத்திலும் செய்து வரும் சிறப்பான வலைத்தளமே அழியாச்சுடர்கள் ...  இதை நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம் என்றே சொல்லலாம் .


எனக்கு அதில் இடம்பெற்றிருந்ததில் மிகவும் பிடித்த சில கதைகள் 


அறிமுகம் 2

எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வலைத்தளத்தில் எழுதி வருகிறோம் , ஆனால் அதில் ஏதாவதொரு தொழில்நுட்ப கோளாறு வந்தால் நாம் அனைவரும் பதறி விடுவோம் ... அந்த வகையில் எனக்கு சில பிரச்சனைகள் வந்த போது அதனை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது  ப்ளாக்கர் நண்பன்

அதிலிருந்து சில முக்கியமான பதிவுகள் இதோ : 


அறிமுகம் 3

பளாக் மட்டுமின்றி கணினி , கைபேசி போன்ற தொழில்நுட்ப சாதனங்களை பற்றிய பதிவுகளோடு மருத்துவம் , சுற்றுலா பற்றிய தகவல்களையும் தரக்கூடியவர் 

தங்கம்பழனி    அவர் தளத்தில் இடம்பெற்ற உபயோகமான  சில பதிவுகள் 


கணினியில்டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...


நாளை மற்ற  மூவருடன்    மீண்டும் சிந்திப்போம் ...

இப்படிக்கு 
அன்புடன் அனந்து ... 






Search Results








மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது