அனுசுயா - வருத்த படாத வாலிபர் சங்கம்
இந்த படத்தை பற்றிய விளம்பரத்தை பார்த்த உடனே கட்டாயம் பார்த்தே
தீரனுமுன்னு தோணிடுச்சு. காரணம் இதே போல பெண்களை சங்க உறுப்பி
னர்களா கொண்ட பயமறியா பாவையர் சங்கம் என்பதை இணையவெளியில் http://papaasangam.blogspot.in/-நாங்களே நடத்தியிருக்கோம். அந்த பொற்காலத்தில் பிறரை கலாய்ப்பதும்,காலைவாரி விடுவதுமாக பட்டாம் பூச்சி பருவமாக வாழ்க்கையே வண்ண மயமாக
இருந்தது. அந்த நாள் நியாபகம் இந்த நாளிலும் வந்ததே.. :) :)
பாலைத் திணை என்ற பெயரில் எழுதி வருபவர் காயத்ரிசித்தார்த். சிறந்த இலக்கிய ஆர்வலரும், கவிதாயினியும் ஆவார். அவருடைய சில முக்கிய பதிவுகள் குறுந்தொகை - அறிமுகம் - 1 , குறுந்தொகை - அறிமுகம் -2 , அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்,ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்
இம்சைஅரசி என்று அறியபடுபவரும் அதே பெயரில் வலைபதிவினை எழுதுபவர். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு கலக்குபவர். அவருடைய சில முக்கிய பதிவுகள்.. அத்தை மகனே! அத்தானே!! , எடுத்த சபதம் முடிப்பேன் , கவிதை
மேலும் வாசிக்க...
சீரியஸான கதையெல்லாம் வைச்சு நம்மை குழப்பாமல் எளிமையாக
காதலித்து திருமணம் செய்து கொள்வதான கதை. வெட்டி ஆபிசருங்களா
சுத்திட்டு இருக்கும் நாயகன், பள்ளியிறுதியை கூட தாண்டாத நாயகியை மணம்
செய்யும் எளிய கரு. நாயகனாக வருபவரும், தோழனாக அதாவது சங்கத்தின்
செயலாளராக வருபவரும், நாயகியின் தகப்பனாக வரும் நம்ம குசும்பு சத்யராஜ்
போன்றவர்களின் யதார்த்த நடிப்பு மிக அருமை. அதிக செலவு இல்லாத கதை
நகர்த்தல் மூலமாக தொய்வின்றி செல்லுகிறது கதை. மற்றபடி இந்த படத்தை
பற்றிய விமர்சனத்தை திரை வித்தகர்கள் விரிவாக விமர்சித்து இருப்பார்கள்.
நமக்கு அந்தளவு திரைஞானம் கிடையாது.
ஊர் கூட்டத்தில் ரகளை செய்து ரீட்டாவின் நடனத்திற்க்கு ஒப்புதல்
வாங்குவதும், நிகழ்ச்சி துவக்கத்தில் மைக் பிடித்து அலப்பறை செய்வதும்
இன்றைக்கு ஒரு மாதிரியான விசயமாக இருந்தாலும் அந்த இளமை கால கட்டத்தில்
அதெல்லாம் ஒரு ஜாலி என்றே எடுத்துக்கனும். ஒரு கட்டத்தில் சங்கத்தில்
தகராறு வந்து சங்கமே பிளவுபட்டு போட்டி சங்கம் உருவாகும் காட்சியும் மிக
முக்கியமானது. இந்த சமயத்தில் எங்கள் பயமறியா பாவையர் சங்கத்தின்
உறுப்பினர்களை அறிமுக படுத்தி வைப்பது அவசியம் இல்லேன்னா எங்க சங்கமும் உடைஞ்சிடுமே...
பாலைத் திணை என்ற பெயரில் எழுதி வருபவர் காயத்ரிசித்தார்த். சிறந்த இலக்கிய ஆர்வலரும், கவிதாயினியும் ஆவார். அவருடைய சில முக்கிய பதிவுகள் குறுந்தொகை - அறிமுகம் - 1 , குறுந்தொகை - அறிமுகம் -2 , அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்,ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்இம்சைஅரசி என்று அறியபடுபவரும் அதே பெயரில் வலைபதிவினை எழுதுபவர். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு கலக்குபவர். அவருடைய சில முக்கிய பதிவுகள்.. அத்தை மகனே! அத்தானே!! , எடுத்த சபதம் முடிப்பேன் , கவிதை
G3 என்று அனைவராலும் அன்புடன் அழைக்க படும் காயத்ரி. பிரவாகம் பெயரில் வலைபதிவினை எழுதி வருகிறார். இவருடைய முக்கிய பதிவுகள்கவிதை முயற்சி , பாடல்கள்
MyFriend அவர்கள் எங்கள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். இவருடைய சொந்த வலைபதிவினை விட முக்கியமாக கூற வேண்டியது தேன்கிண்ணம் வலைபதிவாகும். காலத்தால் அழியா பாடல்களை நமக்காக தொகுத்து வழங்கி வருகிறது. என்றும் இதிலிருந்து நமக்கு தேவையான தேனினும் இனிய பாடல்களை பருகி மகிழலாம்.
MyFriend அவர்கள் எங்கள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். இவருடைய சொந்த வலைபதிவினை விட முக்கியமாக கூற வேண்டியது தேன்கிண்ணம் வலைபதிவாகும். காலத்தால் அழியா பாடல்களை நமக்காக தொகுத்து வழங்கி வருகிறது. என்றும் இதிலிருந்து நமக்கு தேவையான தேனினும் இனிய பாடல்களை பருகி மகிழலாம்.
சரி சரி படத்திலே வரும் மற்றொரு காட்சியையும் விளக்கியே தீரனும்.நாயகன்
ஊர் பஞ்சாயத்தில் வந்து அலப்பறை செய்யும் போது சத்யராஜ் சொல்லுவார்
நாங்களும் ஒரு காலத்தில் இப்படி மாப்பிளைகளா ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்
தான் என்று பழையதை பேச்சுவாக்கில் சொல்லுவார். அது போல தான் எங்கள்
பயமறியா பாவையர் சங்கமும் ஒரு காலத்தில் சுறுசுறுப்பா இருந்தது. இப்ப அது
பொலிவிழந்து Old id Gold..!!



