07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 21, 2013

ஆவி கொலை வழக்கு- 5 ( திரை விலகியது)                         
                             அங்கே அந்த ஸ்கார்ப்பியோவைப் பார்த்ததும் அவளிடம் தொலைந்து போயிருந்த நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது. மெதுவாய் மாடிப் படியேறி ஜீவாவின் அலுவலக கேபின் அருகே காதை வைத்து ஜீவா அறியா வண்ணம் உள்ளே நடப்பதை கேட்க முயற்சி செய்தாள். அவள் எதிர்பார்த்தபடியே ஜீவா போன் பேசுவது தெளிவாக கேட்டது. "ஸார், நாம நினைச்சிருந்த மாதிரியே அந்த நஸ்ரியா என் ஆபிசுக்கு வந்திருந்தா. நானும் நம்ம திட்டப்படி பொய்யா தயாரிச்ச அந்த போலிஸ் கம்ப்ளேயின்ட்ட அவகிட்ட காண்பிச்சேன். அவளும் குழம்பிப் போய் வெளியே போயிட்டா.. அடுத்து உங்க கிட்ட தான் வருவா கலாகுமரன் ஸார்.. நீங்க வேற உங்க இனியவை கூறல் வலைப்பூவில் ஏராளமான அறிவியல் பதிவுகள எழுதியிருக்கீங்க.. கவனமா இருங்க.."

                               பேசி முடித்ததும் மீண்டும் யாருக்கோ தொடர்பு கொண்டு "மச்சி.. நம்ப ப்ளான்படி நஸ்ரியா என்னை பார்க்க வந்துட்டா. அடுத்து கலாகுமரன் கிட்டவோ இல்ல உன்கிட்டயோ தான் வருவா.." இதை சொல்லும் போது செல்போனின் ஸ்பீக்கர் ஆன் செய்யப்பட்டு ஜீவா தண்ணீர் குடிக்கும் சப்தமும் கேட்டது. எதிர்முனையில் "வரட்டும் மச்சி.. நான் இதழில் எழுதிய கவிதை ஒண்ணு சொல்லி அசத்திடறேன்." எனவும் " சங்கவி மச்சி, நீ அவகிட்ட கொஞ்சம் கம்மியாவே பேசு.. அவ துருவி துருவி கேக்குற கேள்விகள்ல ஒரு நிமிஷம் நானே உண்மைய சொல்லிடுவேனோன்னு பயந்துட்டேன்."  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதிரடியாய் உள்ளே நுழைந்தாள் நஸ்ரியா.

                                 எதிர்பாராமல் உள்ளே நுழைந்துவிட்ட நஸ்ரியாவைப் பார்த்ததும் அதிர்வுற்ற ஜீவா தன் மேசை மேலிருந்த மயக்க மருந்து கலந்த பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து அவள் முகத்தில் அடிக்க அங்கேயே மூர்ச்சையானாள் நஸ்ரியா. பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தன் போனை எடுத்து "அண்ணே,  நான் ஜீவா பேசுறேன்.." என்றதும் "ஜீவா, இன்னைக்கு ஞாயிற்று கிழமைங்கிறதால நான் காலையில பைக் எடுத்துகிட்டு ஏஜிஎஸ் தியேட்டருக்கு போய் பார்கிங்க்ல வண்டிய நிறுத்திட்டு உள்ளே போனா இருக்கைகள் எல்லாம் காலியா இருந்தது" எனவும் "அண்ணே  செந்தில் அண்ணே, நான் நீங்க படம் பார்த்த கதைய அப்புறம் கேக்குறேன்.. இப்போ நான் ஒரு பிரச்சனைல இருக்கேன்,. " என்றபடி அவரிடம் எல்லா கதையும் சொல்ல "சரிண்ணே, அப்படியே பண்ணிடறேன்" என்று போனை வைத்துவிட்டு வேறொருவருக்கு போன் செய்தான்.

                                    "மனோ, நான் ஜீவா பேசுறேன். இந்த மாதிரி ஆயிடுச்சு. நம்ம ஆரூர் மூனா இப்படி பண்ண சொல்றாரு." எனச் சொல்ல "ஜீவா கேரளா மன்னர்களுக்காக வைராக்கியமாக நின்ற தமிழ் தூண் போல தைரியமா இரு. எல்லாம் நாம் திட்டமிட்டபடி தான் நடக்குது. குட்." என்று போனை வைத்தார். அப்போது அங்கே வந்த சுரேஷ் "ஜீவா நீங்க போன் பண்ணினதும் என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்.. சரி சரி.. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி நிக்காம ஒரு கை பிடிங்க. நம்ம கெஸ்ட் ஹவுஸுக்கு தூக்கிட்டு போயிடுவோம்" என்றவாறு மற்றவர்கள் அறியா வண்ணம் நஸ்ரியாவை தூக்கிச் சென்று ஸ்கார்ப்பியோவில் ஏற்றினர்.
                             
                                    கண்விழித்த நஸ்ரியா தான் ஒரு அறையில் அடைத்துவைக்கப் பட்டிருப்பதை உணர்ந்தாள்.  கடைசியாக தான் ஜீவாவை சந்தித்ததும் அவன் தன் மீது எதையோ தெளித்தது நினைவுக்கு வந்தது. அந்த பத்துக்கு பதினாறு அறையில் இருந்த  ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். ஆவியின் கொலை நடந்த அன்று நிகழ்ந்ததை மனத்திரையில் ஓடவிட்டாள். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நஸ்ரியாவிடம் ஆண்ட்ரியா ஓடி வந்து "நஸ்ரியா, உன்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு ஆவிப்பா எழுதி சுத்திட்டு இருந்தானே ஒருத்தன்" "ஆமா ஆவி, அதுக்கென்ன இப்போ" "இல்ல, அவனை யாரோ கொலை செய்துட்டாங்களாம். இதோ இந்த டிவி ந்யூஸ் பாரு." என ஆன் செய்ததும் செய்தி வாசிப்பாளர் "பட்டப்பகலில் பயங்கரம்.." என ஆரம்பித்து ஆவி கொலை செய்யப்பட்ட தகவலை வாசித்தார். கழுத்து அறுபட்டு இறந்த ஆவியின் உடல் காட்டப்பட்ட போது நஸ்ரியா அலறியபடி கட்டிலில் மயங்கிச் சாய்ந்தது மங்கலாய் மனக்கண்ணில் தெரிந்தது.
                             
                                     தன்னுடைய கோட் பாக்கெட்டை தொட்ட போது அங்கே ஆவியின் டைரி தட்டுப்பட்டது. அதன் பக்கங்களை புரட்டிக் கொண்டே வந்தவள் கடைசியாக எழுதப்பட்ட ஆவிப்பாவை படித்தாள்.
                                   
இயேசு கிறிஸ்து மட்டுமல்ல பெண்ணே
நீ நேசிப்பதாய் சொல்- மறுநொடி
நானும் உயிர்த்தெழுவேன்..

இதைப் படித்துவிட்டு கண்களை மூடி "ஆவி, நானும் உன்னை நேசிக்கிறேன். ஐ.. ட்ரூலி லவ் யூ. உன் கூட சேர்ந்து வாழணும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா இப்படி ஆயிடுச்சே"  என்று கூறியபடி கண்ணீர் சிந்தினாள். கண்களில் இருந்து வழிந்த நீர் கன்னத்தை தொடும்முன் யாரோ அதைத் துடைத்துவிடுவதை உணர்ந்தாள். கண்களைத் திறந்து நிமிர்ந்து பார்க்க, அவள் அமர்ந்திருந்த இருக்கையின் எதிரில் யாரோ நிற்பதை  கண்டு அதிர்ந்து பார்த்தாள்.. அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.அங்கே அவள் கண்டது ஆவியை..


தொடரும்..


40 comments:

 1. வணக்கம்
  கோவைஆவி(அண்ணா)

  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
  2வலைப்பூக்கள் புதியவை அறிமுகம் செய்துவைத்த ஆவிக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. ம்ம்ம்ம்... சூப்பர்.. ஆவி எப்படி உயிரோட வந்தார்? இதான் சாக்குன்னு நஸ்ரியா ஆவியை லவ் பண்றதா காட்டிட்டீங்க...

  ReplyDelete
  Replies
  1. யோவ் ஸ்.பை. அதைத்தான் கதை ஆரம்பத்துலேயே சொல்லிட்டனே..

   Delete
 3. எங்களாலும் நம்ப முடியவில்லை... உண்மை நாளை தெரிந்து விடும்... அசத்துங்க...

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா தனபாலன்.. நாளை எல்லாத்தையும் நிறுத்திடுவோம்.. ;-)

   Delete
 4. ஆவிக்கு உயிர் வந்தச்சா...

  தொடருங்கள்...

  ReplyDelete
 5. உயிருடன் திரும்பிய ஆவி..... :)

  இல்லை நஸ்ரியா ஆவி உலகில் ஆவியை சந்திக்கிறாரா?

  தொடரட்டும் சுவாரசியமான அறிமுகங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. நான் நேற்று ஒரு படம் பார்த்துவிட்டு தான் உலக சினிமா ரசிகனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.. நம்ப ஆடியன்ஸ் எல்லாம் நல்ல "கிரியேட்டர்ஸ்" ன்னு.. நல்ல கேள்வி.. ஒரே ஒரு நாள் பொறுத்திருங்கள் சார்!!

   Delete
 6. ‘பெண்களை காக்க உதவும் பெப்பர் ஸ்பிரே’ ...நஸ்ரியாவை தாக்க பயன்படுத்தும் முரணை ரசித்தேன்.
  ‘ஜீவா’ பெண்ணியத்திற்கு எதிரானவர் என்பதை குறியீடாக்கிய தந்திரம் புரிகிறது.

  இந்த எபிசோட் ‘ரியலி சூப்பர்’.
  தொடரிலேயே இந்த பகுதிதான் மாஸ்டர்பீஸ்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. முதல் பகுதி ஒக்கே ஸார். இரண்டாவது பகுதி (‘ஜீவா’ பெண்ணியத்திற்கு எதிரானவர் என்பதை குறியீடாக்கிய தந்திரம் புரிகிறது.)கதையின் ஓட்டத்தில் அப்படி அமைந்து விட்டது. தவிர "பெண்ணியத்திற்கும், பெப்பர் ஸ்ப்ரேவிற்கும் சம்பந்தம் இல்லை என்று சில நாட்கள் முன்பு தான் புரிந்து கொண்டேனாக்கும்.." ;P

   Delete
 7. நேத்து வெள்ளிக்கிழமை.. நடுராத்திரி.. நிம்மதியா தூங்கமுடியலை!..புரட்டாசி சனி அதுவுமா... மூலை ஆஞ்சநேயர் கோயில்ல முடி கயிறு கட்டிக்க வேண்டியது தான்!... பெருமாளே.. காப்பாத்துப்பா!...

  ReplyDelete
  Replies
  1. நேர்ல பார்த்த நஸ்ரியாவே பயப்படலே.. நீங்க என்ன பாஸ்.. சரி சரி பயப்படாதீங்க.. இது அன்பு காட்டும் ஆவி தான்!!

   Delete
 8. நான் ஊகித்து வைத்தபடியே க்ளைமாக்ஸ் அமைக்கப் போகிறாய் என்பது தெரிகிறது ஆனந்து! மிக்க மகிழ்ச்சி! இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்க கற்பனைய ஓவர்டேக் பண்ணி ஒரு கிளைமாக்ஸ் வைக்க முடியுமா??? சீனுவும் இக்கதையின் முடிவை முன்பே ஊகித்துவிட்டான்.

   நன்றி சார்..

   Delete
 9. ஆவி கொலை வழக்கு-
  குதிரை வேகத்தில் சென்று திரை விலகியது...

  அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 10. இன்றுதான் படிக்கிறேன்! கதையொடு பதிவரையும் கலந்து எழுதும் புதிய முறை!
  மிகவும் அருமை!நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா.. முதல் வருகைக்கும், கருத்திட்டமைக்கும்..

   Delete
 11. ஆவி ஆவியா வந்தாரா...இல்லே உண்மையிலேயே வந்தாரா?...கதை சூப்பர்..
  அறிமுகங்கள் அருமை..

  ReplyDelete
  Replies
  1. ஒக்கே ஒக்க திவிசம் வெயிட் பண்ணுங்க மேடம்..

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete
  2. ஆவி அகிலாக்கா சொன்ன ட்விஸ்ட் கூட சூப்பர்...

   Delete
 12. ஆவி வந்து கண்ணீரை துடைத்து விட்டாரா ? ஆத்தி அந்த பிள்ளயும் ஆவியா மாறிடிச்சோ ? அறிமுகங்கள் அசத்தல்.

  ReplyDelete
  Replies
  1. பின்னே, ஆவியப் போய் காதலிச்சா ஆப்ரிக்கன் பிரெசிடென்ட்டாவா ஆக முடியும்??

   Delete
 13. என்ன சொல்ல.... வார்த்தைகளே இல்லை...
  உங்கள் திறமை அசத்தல்! உங்கள் எழுத்தின் ஒர் ரசிகையானேன்...:)
  வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் சகோ!!
  ஹா... அப்புறம் என்னை இளமதின்னு மட்டும் சொன்னா போதுமே..
  ’மடம்’ அதெல்லாம் ஓவர்...:)

  அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. //உங்கள் எழுத்தின் ஒர் ரசிகையானேன்...:)//

   நன்றி இளமதி.. மிக்க மகிழ்ச்சி..

   Delete
 14. விறுவிறுப்பாக சென்ற தொடரின் முந்தைய பகுதி.. வாயில் நகங்களை வைத்துக் கொண்டு அடுத்த பகுதிகாக்காக காத்துள்ளேன் என்று சொன்னால் சிரிக்கக் கூடாது

  ReplyDelete
  Replies
  1. விரல்களை எல்லாம் சாப்பிட்டாச்சா?? ;-)

   Delete
 15. செம விறுவிறுப்பு ஆவி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரகாஷ்..

   Delete
 16. தொடர்கிறேன்! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்! சுவையாக செல்கிறது ஆவி கொலைவழக்கு!

  ReplyDelete
 17. ஆ(ச்சரியந்தரும்) வி(த்தியாசமான)
  விறுவிறுப்பான தொடர்...
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. 'நி'ஜமாய்
   என்'ஜா'ய் செய்து
   'மு'கம் காணா இப்பதிவருக்கும்
   'தீ'ரா பணிகளுக்கிடையில்
   பி'ன்'னூட்டமிட்ட உங்களுக்கு நன்றிகள் பல..

   Delete
 18. எனக்கு இது அப்பவே தெரியும் ... நஸ்ரியாவை அடையாமல் ஆவியின் உயிர் பிரியாது

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது