07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 1, 2013

சே.குமார் கபீரன்பனிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சகபதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் கபீரன்பன் தான் ஏற்ற பொறுப்பினை, கடும் பணிச்சுமைக்கு நடுவினிலும் மிகுந்த ஈடுபாட்டுடனும், கவனத்துடனும், பொறுப்புடனும்  சரிவரச் செய்து , மிகுந்த மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                                         : 007
இவர் அறிமுகப்படுத்திய பதிவர்கள்               : 037
இவர் அறிமுகப்படுத்திய பதிவுகள்                  : 073
இவர் பெற்ற மறுமொழிகள்                                 : 099
இவரது பதிவுகளைப் படித்தவர்கள்                 : 631


இவர் ஒவ்வொரு பதிவினை அறிமுகப் படுத்தும் போதும் தளத்தினைப் பற்றியும், பதிவினைப் பற்றியும் வேறு வண்ணத்தில் ஒரு சிறு குறிப்பு தருகிறார். படிக்கும் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். 

கபீரன்பனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆரவத்துடனும் இசைந்துள்ளார் நண்பர் சே.குமார். 


இவர் தேவகோட்டைக்கு அருகில் பரியன் வயல் என்ற சிறுகிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.  படித்தது எம்.சி.ஏ., 
திருமணம் செய்தது மதுரையில்... மனைவி நித்யா,  ஸ்ருதி, விஷால் என இரண்டு செல்லங்கள். 

சொந்தமாக கணிப்பொறி மையம், கல்லூரியில் வேலை, தினமணியில் வேலை எனச் சுற்றிவிட்டு தற்போது மையம் கொண்டிருப்பது அபுதாபியில்.

கதை, கவிதைகள் பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது தாமரையில் இவரது கவிதை வெளிவந்தது. பொன்னீலன் அவர்களால் பாராட்டப் பெற்றார். மனசு வலைத்தளத்தில் நான்கு வருடத்துக்கு மேலாக எழுதி வருகிறார். இவரது கருத்தப்பசு என்ற கதை வம்சி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பில் வந்திருக்கிறது. 
சிறுகதை தொகுப்பும் குறும்படமும் செய்ய ஆசைப்படுகிறார்....... ஆசை நிறைவேற நல்வாழ்த்துகள். 

நல்வாழ்த்துகள் கபீரன்பன்

நல்வாழ்த்துகள் சே.குமார்

நட்புடன் சீனா

பி.கு : நாளை 02.09.2013  திங்கள் அன்று எங்களது நாற்பதாவது ( 40 ) திருமண நாள்.   நட்புடன் சீனா. 

23 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
  Replies
  1. திருமணநாள்- மனங்கனிந்த வாழ்த்துகள்.

   Delete
  2. திருமண நாளில் வணங்குகிறேன் ஐயா... உங்கள் அழைப்பை ஏற்று என்னால் முடிந்தளவு நிறைவாய் செய்ய முயற்சிக்கிறேன்.

   Delete
 2. சீனா ஐயா...

  தங்கள் 40வது திருமணநாள் குறித்து சந்தோஷம்...
  வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்...
  நன்றி...

  ReplyDelete
 3. சீனா அவர்களுக்கு மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 4. தங்களுக்கு என் இனிய மணநாள் வாழ்த்துகள்!

  வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள், குமார்!

  கபீரன்பன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா...
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 5. சீனா ஐயாவுக்கு நாற்பதாவது மணநாள் வாழ்த்துக்கள்...
  அடுத்தவாரம் வலைச்சரப் பொறுப்பேற்றிருக்கும் நண்பர் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 6. திருமண நாள் வாழ்த்துககள் சீனா ஐயா \\\\

  வாழ்த்துககள் சே. குமார் கலக்குங்க

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 7. Replies
  1. வாழ்த்துதற்கு வயதில்லை ஐயா!..மங்கலகரமான மனையறம் வாழ்க பல்லாண்டு!..

   திரு. கபீரன்பன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!..

   அடுத்து பணியேற்கும் திரு. சே. குமார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

   Delete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 8. திரு.கபீரன்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
  திரு. சே.குமார் அவர்களுக்கு நல்வரவு!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 9. திரு. சீனா ஐயா அவர்கள், தம்பதியராய்
  மகிழ்வோடு இணைந்திருக்க எனது வாழ்த்துக்கள்.
  -கலையன்பன்.

  ReplyDelete
 10. நல்வாழ்த்துக்கள் சிறப்பாக வலைச்சரப்பணி ஆற்ற வரும் குமார் அண்ணாவுக்கு.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் இருவருக்கும் .தொடரவிருக்கும் பணியும் சிறப்பாகத்
  தொடரட்டும் .

  ReplyDelete
 12. திரு . சீனா ஐயா அவர்களுக்கு,
  திருமண நாளுக்கு மனக்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
  அடுத்த வாரம் பொறுப்பேற்கும் திரு. குமாருக்கும், பணியை சிறக்க முடித்து விடைபெறும் திரு. கபீரன்பனுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. இன்று (02.09.2013 திங்கட் கிழமை) நாற்பதாவது ( 40 ) திருமண நாள். காணும் அன்பின் சீனா அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. சீனா அவர்களுக்கு மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள். வலைச்சரப் பொறுப் பேற்றிருக்கும் நண்பர் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது