07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 19, 2013

ஆவி கொலை வழக்கு- 3 ( பின்தொடரும் மர்ம நபர்)
                               "இன்னொரு அதிர்ச்சியான தகவலும் இருக்கு, ஆவியின் பிரேதத்தை பார்த்து ஏதாவது தடயம் கிடைக்குமான்னு பார்க்கப் போன இடத்துல ஆவியின் உடலைக் காணோம். விசாரித்தா எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு அலட்சியமா பதில் சொல்றாங்க" என்று ஆண்ட்ரியா கூறக் கேட்ட நஸ்ரியா இடிந்து போய் உட்கார்ந்தாள். "இப்படி ப்ளான் பண்ணி ஒவ்வொரு விஷயத்தையும் செய்கிறவர்கள் யாராக இருக்கும்" அவள் மனம் குழம்பியது. தன் கையிலிருந்த ஆவியின் டைரியை புரட்டினாள்.. தனக்காய் ஆவி எழுதிய ஆவிப்பாவைப் படித்தாள்.

பிரிதல் மிகுதியானால்
புரிதல் தோன்றலாம்
புரிதல் மிகுதியானால்
பிரிதலும் தோன்றுமோ?

                                       அவள் கண்களில் நீர் வழிந்தது. தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு கோவை செல்ல ஏர்போர்ட் நோக்கி டாக்சியில் சென்றாள். வழியில் தென்றல் சசிகலா மற்றும் அவர் தோழி  அலமு மாமியும் சென்று கொண்டிருப்பதை பார்த்து வண்டியை நிறுத்தி அவர்களிடம் ஆவியைப் பற்றி விசாரிக்க அவர் பதிவர் சந்திப்பின் மகிழ்வான தருணங்களை  அலமு மாமியுடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டதுடன்  நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க நஸ்ரியா அவர்களிடம் விடைபெற்று மீண்டும் டாக்சியில் ஏறி அமர்ந்தபடி கண்ணாடியில் பார்க்க அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்து கொள்வதைப் பார்த்தாள்.  யாரை சந்தேகிப்பது, யாரை நம்புவது என்ற  குழப்பத்தோடே டாக்சி நகர யோசித்தபடியே கோவை வந்தடைந்தாள்.

                                        இனி யாரிடமும் தன்னை பற்றியோ ஆவியைப் பற்றியோ சொல்லாமல் விசாரணையை தொடர்வது என முடிவு செய்தாள். முதலில் அவள் சென்று பார்த்தது உலகசினிமா ரசிகனை. "ஸார், நானும் ஒரு பதிவர் தான். நான் உங்களோட பதிவுகளை தவறாமல் படிப்பேன். குறிப்பா ஹேராம் படத்தை அக்கு வேறு ஆணி வேறாக விளக்கி இருந்தீர்களே.. சினிமா ரசிகர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பதிவுகள் அவை. " என்றதும் "உங்களுக்கு சினிமா மேல இருக்கிற ஆர்வம் எனக்கு ஆச்சர்யத்த கொடுக்குது. என் பதிவுகளை ரசித்ததற்கு நன்றி" என்றார். "உங்களை மாதிரியே கமல் மீதும் சினிமா மீதும் ஆர்வம் கொண்ட இன்னொரு பதிவர் ஆவி இருந்தாரே. அவர் ஏன் இப்போ எழுதறதில்லை?" என்று நஸ்ரியா கேட்கவும் அவர் முகம் சற்று மாறியது. "ஆவி இப்போ எழுதறது இல்லை.. போதுமா.. இனி அவரைப் பற்றி எதுவும் கேட்காதீங்க.." என்று கூறியபடி எழுந்து சென்றார்.

                                        அவர் வெளியே செல்லவும் போன் அடிக்கவும் சரியாக இருந்தது. வெளிநாட்டு நம்பராக இருக்கவே கொஞ்சம் யோசனையுடன் அதை எடுக்க, "நான் குவைத்திலிருந்து மஞ்சுபாஷினி பேசறேன்ப்பா.. நஸ்ரியா தானே.. உன்னைப் பற்றி என் தம்பி ஆவி நிறைய சொல்லியிருக்கான். அவன் முதன் முதலா உன் படத்தை காண்பிச்சதும், பொண்ணு ரொம்ப அழகா இருக்காப்பான்னு சொன்னேன்." இடைமறித்த நஸ்ரியா "அக்கா, என்கிட்டயும் உங்கள பத்தி ஆவி சொல்லியிருக்கார்.. உங்க பக்தமீரா தொடருக்கு நான் அடிமை" "ரொம்ப சந்தோஷம்பா. நீ ஆவி பற்றி தகவல் சேகரிக்க கோவை சென்றதாய்க் கேள்விப்பட்டேன். பதிவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கணும்னா இன்னைக்கு ஒரு புத்தக கண்காட்சிக்கு போனா போதும்" என்று சொல்ல மகிழ்ச்சியுடன் போனை வைத்துவிட்டு அங்கே சென்றாள்.

                                       அங்கு சென்றதும் எதேச்சையாய் பார்ப்பது போல் "நீங்க நிகழ்காலம் வலைப்பூ எழுதும் எழில் மேடம் தானே? நான் உங்க  ரசிகை. உங்க பெரியாரின் சிந்தனைத் துளிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்"  என்றாள். அவரோ "நஸ்ரியா, உங்களுக்கு ஆவி பற்றி எங்ககிட்டே கேள்வி கேக்கணும் அப்படித்தானே?" என்று கூறியதும் ஆச்சர்யத்தில் விரிந்த கண்கள் மூடாமல் "நான் நஸ்ரியான்னு எப்படித் தெரியும் உங்களுக்கு? " "வெரி சிம்பிள், ஆவி இருந்தவரை உன் போட்டோவ தினமும் போட்டுட்டே இருப்பார். இப்போ நீங்க வரும்போது மாறுவேஷத்துக்காக மரு கூட ஒட்டிக்கலை" என்று கூற இருவரும் சிரித்தனர்.
                             
                                         அப்போது அங்கே வந்த தோழி சரளா "நான் கோவை சரளா" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள "சினிமால நடிக்கிராங்களே, அந்த கோவை சரளாவா?" எனவும் சின்னதாய் கோபம்  தெறிக்க, "இல்லங்க.. நான் ஒரு கவிதாயினி. பெண் எனும் புதுமை ங்கிற வலைப்பூவில் எழுதிட்டு இருக்கேன். பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றி நிறைய கவிதை எழுதியிருக்கேன்."  "பெண் வடிவில் ஒரு பாரதின்னு சொல்லுங்க" என்றபடி நகர அங்கே கண்காட்சிக்கு வந்திருந்த வண்ணத்துப்பூச்சி ஜீவன் சுப்புவைப் பார்த்து "என்ன சுப்பு, கலவரக்காரனாய் மாறி காதல் கடிதம் எழுதியிருந்தீங்க.. பொண்ணு செட் ஆயிடுச்சா" என்று கேட்க "குடும்பத்துல கொழப்பத்த உண்டு பண்ணிராத தாயி"  என்று சிரித்துக் கொண்டே கூற அதே சமயம் தன்னை யாரோ பின்னாலிருந்து கவனிப்பது போல் தோன்ற சட்டென திரும்பி பார்த்தாள். அங்கே யாரோ ஒருவர் வேகமாக முகம் காட்டாமல் அங்கிருந்து வெளியேற முயல, அவரைப் பின்தொடர்ந்து நஸ்ரியா வெளியே செல்ல, அந்த நபர் ஒரு வெள்ளை நிற ஸ்கார்ப்பியோவில் ஏறி வேகமாக அவ்விடத்தை விட்டு மாயமானார்.

தொடரும்..50 comments:

 1. வணக்கம்
  கோவை ஆவி(அண்ணா)

  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
  எல்லாத் தளங்களும் அறிந்தவை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன்!!

   Delete
  2. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன் என் தளத்தில் வந்து தெரியப்படுத்தியமைக்கு....

   Delete
 2. உங்கள் வலைச்சர அறிமுகங்கள் செய்யும் விதம் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க.. வருகைக்கும் கருத்துக்கும்..

   Delete
 3. சஸ்பென்ஸ் சுவாரஸ்யமாக தொடர்கிறது... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்.

   Delete
 4. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்த நண்பர் ஆ.விக்கும்...
  ‘ஆ.வியின் ஆவி’ நஸ்ரியாவிற்கும் நன்றி.

  ‘துப்பறியும் தொடரில்’ கிளைமாக்ஸ் அறிய...ஆவல் வந்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களை போன்ற பிரபல பதிவர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நான் பெருமை சேர்த்துக் கொண்டேன் என்பதே சரி..

   க்ளைமாக்ஸ் அறிய இன்னும் இன்னும் இரண்டு நாட்கள் பொறுங்கள்!!

   Delete
 5. ஆகா.பட்டைய கிளப்புதே..
  இதுல ஸ்கார்பியோ வேற இருக்கா..அய்யயோ..

  ReplyDelete
  Replies
  1. ஆமா மாம்ஸ்.. நமக்கு தெரிஞ்சு யாராவது ஒயிட் ஸ்கார்ப்பியோ வச்சிருக்காங்களா?

   Delete
 6. விறுவிறுப்பா போகுதே..சீக்கிரம் நாட்கள் போகனுமே.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் ரெண்டே நாள்தான் மாப்பு!!

   Delete
 7. அறிமுகப்படுத்தும் முறை முற்றிலும் புதியது.

  வரிக்கு வரி சுவை கூடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. உங்க பெயர் கொஞ்சம் விவகாரமா இருந்தாலும், எனக்கு நல்ல கமென்ட் தான் போட்டிருக்கீங்க.. தொடர்ந்து வாங்க "காமக்கிழத்தன்"

   Delete
  2. என் வலைப்பதிவின் முகப்பில், ’நானும் என் பெயரும்’ என்று தலைப்பிட்டு விளக்கம் தந்துள்ளேன். படியுங்கள் ‘ஆவி’[உங்கள் பெயர் பயமுறுத்துகிறதே!].

   என் பெயர் மட்டுமல்ல; என் பதிவுகளில் சில[பல?]வும் விவகாரமானவைதான். படித்து ரசியுங்களேன்.

   Delete
 8. ஆவியின் உடலைக் காணோம். ///

  அவர்தான் ஆ...வி...யாக வந்து வலைச்சரம் தொடுத்துக் கொண்டிருக்கிறாரோ,,!

  அருமையன அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி அம்மா!! வலைச்சரத்தின் மூலம் பல புதிய நட்புகளை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி..

   Delete
 9. இதுவரை நான் கண்டிராத அளவில் வித்தியாசமான அறிமுக வாரம்... அறிமுகங்களை அறிவதில் இருக்கும் ஆர்வம் கதையிலும் இருக்கிறது... வாழ்த்துக்கள் நண்பா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்.பை.. என் இன்ஸ்பிரேஷன் நீங்கதான்.. நீங்க வலைச்சரம் ஆசிரியரா எழுதும் போது ரத்தம் பார்க்கின்ன்னு ஒரு க்ரைம் தொடரை தனியா எழுதிகிட்டு இருந்தீங்க.. அப்போ இந்த இரண்டையும் இணைத்தால் என்ன என்று தோன்றிய எண்ணம் தான் இன்று உங்கள் முன்னே..!! ஹிஹிஹி..

   Delete
 10. ஆவி என்பதே அடிவயிற்றில் புளி கரைத்த உணர்வெனக்கு... இதில் கொலை வழக்கு என்று தொடர்வேறு....
  எப்படி இங்கு வந்து தொடர்வதென மிரண்டு போயிருந்தேன்... :).. இருந்தும் இத்தனை பேர்வருகிறார்களே என்று எட்டிப்பார்த்தேன்...:)).

  நல்ல கதை கற்பனைகளுடன் பதிவர்களை அறிமுகம் செய்யும் பாங்கு மிகவும் அருமை சகோ!
  உங்களுக்கும் அறிமுகமாகும் அனைத்துப் பதிவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இளமதி அவர்களே!!

   சும்மா உள்ளே வாங்க.. பேய் தான் பயங்காட்டும். ஆவி அன்பு தான் காட்டும்..

   தொடர்ந்து வாங்க..

   Delete
 11. நஸ்ரியா பெரியாரின் சிந்தனைத் துளிகளை படிக்கறாங்கப்பா.... இதை நாளை தினத் தந்தியில தலைப்புச் செய்தியா போடுங்கப்பா.... பெரியாரை தெரியாதவங்க தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்.... முக நூலில் என்னையும் அறிமுகப்படுத்தியிருக்கேன்னு சொன்னதும் எங்களையும் சந்தேக லிஸ்ட்ல சேர்த்திட்டீங்களேன்னு கொஞ்சம் பயந்திட்டேன்... அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நஸ்ரியாவின் சந்தேக லிஸ்டில நீங்க இருக்கீங்களான்னு எனக்கு தெரியாது.. ஆனா பதிவுலகத்துல நீங்க மக்கள் மனதில் இருக்கீங்கங்கிறது மட்டும் தெரியும்!! ஹிஹிஹி..

   அவங்க டிடக்டிவ் நஸ்ரியா.. எல்லா வகையான புத்தகங்களும் படிக்கும் பழக்கமுள்ளவர்..

   Delete
  2. எழில் அமைதியான பிள்ளையாச்சே.. அப்புறம் சந்தேக லிஸ்ட்ல சேர்ப்பதாவது :)

   Delete
 12. இதெல்லாம் ஓவரு நஸ்ரியா ? நானும் அலமு மாமியும் இப்படித்தான் எதையாவது பேசி சிரிச்சிட்டு இருப்போம் அதற்காக எங்களை இப்படி திட்டுவது சரியில்ல.. (சும்மாங்க)
  நகைச்சுவையாக சிறப்பாக இருந்தது அறிமுகங்கள்.
  தென்றலின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. பாருங்களேன், சிரிச்சா கூட சந்தேகப்படுற தேசமா போச்சு இது!! என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்..

   அது சரி நீங்க ஏன் சிரிச்சீங்க அப்போ??

   Delete
 13. இன்றைய வலைச்சரத்தில் என் தளம் அறிமுகப்படுத்தி இருந்ததை வந்து எனக்கு தெரிவித்த ரூபன் 2008 கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

  ஹேப்பா ஆனந்த்... செம்ம வித்தியாசமான பகிர்வுப்பா... முதல்ல கைவலி எப்படி இருக்கு அதைச்சொல்லு...

  கைவலியா? அக்கா என் பதிவை பார்த்து படிச்சப்பின்னுமா அப்டின்னு நீ கேக்கறது எனக்கு புரியறதுப்பா...

  ரொம்ப சுவாரஸ்யமான அறிமுகப்படுத்தல்....

  இன்றைய அறிமுகங்கள் நிறையப்பேரை நான் அறிவேன்...

  எத்தனை நகைச்சுவையும் க்ரியேட்டிவிட்டியும் கற்பனைத்திறனும் இருந்தால் இத்தனை அட்டகாசமா எழுதி இருப்பே நீ?

  ஆசிகள் ஆனந்த் உனக்கு.. எப்போதும் எப்படி நீ எல்லோரையும் சந்தோஷமாக சிரிக்க வைக்கிறியோ அதேபோல் நீயும் எப்போதும் சந்தோஷமாக சிரித்து நலமுடன் இருக்க அன்பு வாழ்த்துகள்பா..

  ஆமாம் நஸ்ரியா ஆண்ட்ரியா அக்கப்போர் இன்னும் ஓயலையா என்ன? :)

  ரசித்து வாசித்தேன்பா....

  ReplyDelete
  Replies
  1. கை வலி போயே போச் அக்கா!!இன்னும் மூணு மாசத்துக்கு வெயிட் மட்டும் தூக்க வேண்டாம்னு சொல்லியிருக்காங்க.. அதனால கொஞ்ச நாளைக்கு வெயிட் லிப்டிங் காம்பிடேஷனுக்கு போகறதை தவிர்த்துட்டேன்!! ;-)

   உங்க வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா! நீங்க முதல் நாளே வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்!! :-(

   Delete
 14. அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பர்களுக்கும் நிறைவான அன்பு வாழ்த்துகள்...

  ReplyDelete
 15. எப்படியோ கோவை சரளான்னு சொல்லி என்னை கிண்டல் பண்ண நினைத்த உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிவிடீர்கள் ......சஸ்பென்ஸ் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சேச்சே..அது நஸ்ரியாங்கிற கதாப்பாத்திரம் சொன்னது.. தவிர,முன்னரே சொன்ன மாதிரி இதில் வரும் கதாப்பாத்திரங்கள் நிஜம். ஆனால் இது ஒரு கற்பனைக் கதை மட்டுமே.. இது யாரையும் புண்படுத்த அல்ல.. அதையும் மீறி புண்பட்டிருந்தால் அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் "கொல்லுகிறோம்"

   Delete
 16. நல்ல கதை கற்பனைகளுடன் பதிவர்களை அறிமுகம் செய்யும் பாங்கு மிகவும் அருமை சகோ!

  ReplyDelete
 17. நச்ரியா...ஆவி பாடி எங்க தான் போச்சு...


  விருவிருப்பான அறிமுகம்...

  ReplyDelete
  Replies
  1. ஆவி பாடி மீன்பாடி வண்டில போனதா கேள்வி.. ஹஹஹா..

   Delete
 18. பரபரப்பாக மர்மம் தொடர்கின்றது!..சுவையான விதத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி..

   Delete
 19. இணையம் சதி செய்தமையால் இரண்டு தினங்கள் வர முடியவில்லை! அறிமுகங்கள் அசத்தல்! வித்தியாசமாய் தொகுப்பது சுவாரஸ்யமாக உள்ளது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பா.. உங்க வரவை எதிர்பார்த்திருந்தேன்..

   Delete
 20. நீங்க கலக்குங்க தலைவரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா.. அடிக்கடி வாங்க..

   Delete
 21. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  ReplyDelete
 22. அன்பின் ஆவி - தமிழ் மண வாக்கு 3 - அறிமுகங்கள் அருமை - சென்று பார்க்கிறேன் - மறுமொழிகள் இடுகிறேன் - மஞ்சு பாஷினி நஸ்ரியாவிடம் அலைபேசியில் பேசி இருக்கிறார். ஏன் ?

  பல நாட்களாக எல்லாரும் மறந்து விட்டிருந்த "ஆவி கொலை வழக்கை" துப்பறிய வந்திருந்த டிடெக்டிவ் நஸ்ரியாவிடம் பதிவர்கள் தொடர்பு கொள்வது சரியல்ல - நஸ்ரியாவும் மஞ்சுவிற்கும் அவரது பக்த மீரா தொடருக்கும் அடிமை எனக் கூறி இருப்பது ஒரு தலைப் பட்சமாக இல்லையா ? ஒரு கொலை வழக்கைத் துப்பறியும் நிபுணர்கள் ஒரு தலைப் பட்சமாக இருக்க்லாமா ?

  நல்வாழ்த்துகள் ஆவி - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. ஐயா, கதையை மேலோட்டமாக படித்துவிட்டுப் போகாமல் அதைக் கூர்ந்து கவனித்த உங்க ரசனைக்கு நான் தலைவணங்குகிறேன்.

   //பல நாட்களாக எல்லாரும் மறந்து விட்டிருந்த "ஆவி கொலை வழக்கை" துப்பறிய வந்திருந்த டிடெக்டிவ் நஸ்ரியாவிடம் பதிவர்கள் தொடர்பு கொள்வது சரியல்ல//

   இதற்கான பதில் நான் "கடைசி பதிவில்" சொல்கிறேன்.. அது நிச்சயம் லாஜிக் மீறலாக இருக்காது என நம்புகிறேன்.

   //நஸ்ரியாவும் மஞ்சுவிற்கும் அவரது பக்த மீரா தொடருக்கும் அடிமை எனக் கூறி இருப்பது ஒரு தலைப் பட்சமாக இல்லையா ? //

   இந்த கேள்வி எனக்குள்ளும் உதித்ததால் தான் கீழ்வரும் வரிகளையும் சேர்த்தேன்..
   "இனி யாரிடமும் தன்னை பற்றியோ ஆவியைப் பற்றியோ சொல்லாமல் விசாரணையை தொடர்வது என முடிவு செய்தாள். "

   உங்களுக்கு இந்தப் பதில் திருப்தி அளித்திருக்குமா என்று தெரியவில்லை.. ஆனால் இனிவரும் இரண்டு மூன்று நாட்களில் உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்..:-)

   Delete
 23. ஒரே கோவை பதிவர்களா இருக்க மாதிரி இருக்கே... :-)

  பக்தமீரா தலைப்பே நல்லா இருக்கு நானும் படிக்க ஆரம்பிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. டேய், அசட்டு அம்பி, டிடக்டிவ் நஸ்ரியா கோவைல இருக்காடா.. கோவையில இருந்துண்டு கோவா-வுல இருக்கறவாளயா விசாரிக்க முடியும்.. லாஜிக் இடிக்காதோன்னோ?

   Delete
  2. மஞ்சு அக்கா எழுதறது சூப்பரா இருக்கும். என்ன, சீனுவோட பதிவுகள படிக்கனும்னா எப்படி ஹாப் டே லீவ் போடணுமோ அப்படித்தான் அவங்களோட பதிவுகளும்.. ஹிஹிஹி..

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது