07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 23, 2013

அனுசுயா - வருத்த படாத வாலிபர் சங்கம்

            இந்த படத்​தை பற்றிய விளம்பரத்​தை பார்த்த உட​னே கட்டாயம் பார்த்​தே தீரனுமுன்னு ​தோணிடுச்சு. காரணம் இ​தே ​போல ​பெண்க​ளை சங்க உறுப்பி னர்களா ​கொண்ட பயமறியா பா​வையர் சங்கம் என்ப​தை இ​ணைய​வெளியில் http://papaasangam.blogspot.in/-நாங்​க​ளே நடத்தியிருக்​கோம். அந்த ​பொற்காலத்தில் பிற​ரை கலாய்ப்பதும்,கா​லைவாரி விடுவதுமாக பட்டாம் பூச்சி பருவமாக வாழ்க்​கை​யே வண்ண மயமாக இருந்தது. அந்த நாள் நியாபகம் இந்த நாளிலும் வந்த​தே.. :) :) 

    ​          சீரியஸான க​தை​யெல்லாம் ​வைச்சு நம்​மை குழப்பாமல் ​எளி​மையாக காதலித்து திருமணம் ​செய்து ​கொள்வதான க​தை. ​வெட்டி ஆபிசருங்களா சுத்திட்டு இருக்கும் நாயகன், பள்ளியிறுதி​யை கூட தாண்டாத நாயகி​யை ​மணம் ​செய்யும் எளிய கரு. நாயகனாக வருபவரும், ​தோழனாக அதாவது சங்கத்தின் ​செயலாளராக வருபவரும், நாயகியின் தகப்பனாக வரும் நம்ம குசும்பு சத்யராஜ் ​போன்றவர்களின் யதார்த்த நடிப்பு மிக அரு​மை. அதிக ​செலவு இல்லாத க​தை நகர்த்தல் மூலமாக ​தொய்வின்றி ​செல்லுகிறது க​தை. மற்றபடி இந்த படத்​தை பற்றிய விமர்சனத்​தை தி​ரை வித்தகர்கள் விரிவாக விமர்சித்து இருப்பார்கள். நமக்கு அந்தளவு தி​ரைஞானம் கி​டையாது.

                 ஊர் கூட்டத்தில் ரக​ளை ​செய்து ரீட்டாவின் நடனத்திற்க்கு ஒப்புதல் வாங்குவதும், நிகழ்ச்சி துவக்கத்தில் ​மைக் பிடித்து அலப்ப​றை ​செய்வதும்​ இன்​றைக்கு ஒரு மாதிரியான விசயமாக இருந்தாலும் அந்த இள​மை கால கட்டத்தில் அ​தெல்லாம் ஒரு ஜாலி என்​றே எடுத்துக்கனும். ஒரு கட்டத்தில் சங்கத்தில் தகராறு வந்து சங்க​மே பிளவுபட்டு ​போட்டி சங்கம் உருவாகும் காட்சியும் மிக முக்கியமானது. இந்த சமயத்தில் எங்கள் பயமறியா பா​வையர் சங்கத்தின் உறுப்பினர்க​ளை அறிமுக படுத்தி ​வைப்பது அவசியம் இல்​லேன்னா எங்க சங்கமும் உ​டைஞ்சிடு​​​மே... 
                பாலைத் திணை என்ற ​பெயரில் எழுதி வருபவர் காயத்ரிசித்தார்த். சிறந்த இலக்கிய ஆர்வலரும், கவிதாயினியும் ஆவார். அவரு​டைய சில முக்கிய பதிவுகள் குறுந்தொகை - அறிமுகம் - 1 , குறுந்தொகை - அறிமுகம் -2 , அலையின் பாடல் - கலீல் ஜிப்ரான்,ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்

          இம்​சைஅரசி என்று அறியபடுபவரும் அ​தே ​பெயரில் வ​லைபதிவி​னை எழுதுபவர். எ​தையும் எளிதாக எடுத்துக்​கொண்டு கலக்குபவர். அவரு​டைய சில முக்கிய பதிவுகள்.. அத்தை மகனே! அத்தானே!! , எடுத்த சபதம் முடிப்பேன் , கவிதை 

           G3 என்று அ​னைவராலும் அன்புடன் அ​ழைக்க படும் காயத்ரி. பிரவாகம் ​பெயரில் வ​லைபதிவி​னை எழுதி வருகிறார். இவரு​டைய முக்கிய பதிவுகள்கவிதை முயற்சி , பாடல்கள்

            MyFriend அவர்கள் எங்கள் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். இவரு​டைய ​சொந்த வ​​லைபதிவி​னை விட முக்கியமாக கூற ​வேண்டியது ​தேன்கிண்ணம் வ​​லைபதிவாகும். காலத்தால் அழியா பாடல்க​ளை நமக்காக ​தொகுத்து வழங்கி வருகிறது. என்றும் இதிலிருந்து நமக்கு ​தே​வையான ​தே​னினும் இனிய பாடல்க​ளை பருகி மகிழலாம்.
   

           சரி சரி படத்தி​லே வரும் மற்​றொரு காட்சி​யையும் விளக்கி​யே தீரனும்.நாயகன் ஊர் பஞ்சாயத்தில் வந்து அலப்ப​றை ​செய்யும் ​போது சத்யராஜ் ​சொல்லுவார் நாங்களும் ஒரு காலத்தில் இப்படி மாப்பி​ளைகளா ஆர்ப்பாட்டம் ​செய்தவர்கள் தான் என்று ப​ழைய​தை ​பேச்சுவாக்கில் ​சொல்லுவார். அது ​போல தான் எங்கள் பயமறியா பா​வையர் சங்கமும் ஒரு காலத்தில் சுறுசுறுப்பா இருந்தது. இப்ப அது ​பொலிவிழந்து Old id Gold..!!

25 comments:

 1. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... அறிமுக தளங்களுக்கு சென்று வருகிறேன்...

  ReplyDelete
 2. பயமறியா பா​வையர் சங்கம், பிரவாகம் ​- இரு தளங்களும் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் சார், உங்களுக்கு தெரியாத தளங்களும் இருக்கிறதா...ஆச்சரியமான விசயம்தான்..

   Delete
 3. கலக்கல் துவக்கம்.."பயமறியா பாவையர்கள்" பேரே அசத்தலா இருக்குங்க.. சூப்பர்.. தொடர்ந்து கலக்குங்க..

  ReplyDelete

 4. ஆரம்பமும் அறிமுகங்களும்
  இனிதான வாரமாக இவ்வாரம் இருக்கும்
  என் கட்டியம் கூறிப்போகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. திண்டுக்கல் தனபாலன் , கோவை ஆவி , Ramani S - வர​வேற்ற அ​னைவருக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் அனுசுயா...புதிய தளங்களை தொடர்கிறேன் ..நன்றி...

  ReplyDelete
 7. பயமறியா பாவையர் சங்கமா???

  பின்னூட்டம் போடவே பயமா இருக்குங்க!

  ReplyDelete
 8. புதுமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  உனகளுக்குப் பாராட்டு.

  ReplyDelete
  Replies
  1. திருத்தம்: ‘உனகளுக்கு’>’உங்களுக்கு’.

   Delete
 9. 👍👍👍👍 கலக்குங்க.. எங்க இருந்தாலும் நம்ப சங்கத்து மக்க சப்போர்ட் பண்ண வந்துட்டோம்ல

  ReplyDelete
 10. புதுமுகங்களுக்கு வாழ்த்துகள்.புதிய தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete
 11. வணக்கம்
  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள்
  தொடர்கிறேன்

  -நன்றி-
  அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. ////
  அந்த ​பொற்காலத்தில் பிற​ரை கலாய்ப்பதும்,கா​லைவாரி விடுவதுமாக பட்டாம் பூச்சி பருவமாக வாழ்க்​கை​யே வண்ண மயமாக இருந்தது. அந்த நாள் நியாபகம் இந்த நாளிலும் வந்த​தே.. :) :)
  /////
  சரிங்க பாட்டி.

  மீள் பிரவேசம் செய்திருக்கும் சகோதரியாருக்கு வரவேற்புகள்

  ReplyDelete
 13. நிசமாவே பொலிவிழந்து தாங்க இருக்குது. உங்க சங்கம்.

  அந்த பிரவாகம் என்ற பதிவுக்கு சென்றால்,
  ஜி 3 அப்படின்னு காயத்ரி என்று பெயரா ?

  லிட்டில் ஜாய்ஸ் ஆப் லைப் என்ற கவிதை
  மிகவும் அழகு.

  அதை தமிழாக்கம் செய்வோம் என்று கூட நினைத்தேன்.

  டி. எஸ். எலியட்டை நினைவு படுத்தும் நடை.

  அது சரி, உங்கள் வலைப் பதிவு எங்கே?

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 14. அனுசுயா அவர்கள் வழங்கிய - இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 15. இன்றைய உங்கள் அனைத்து அறிமுகங்களும் அருமை
  அனுசூயா அவர்களே!

  ReplyDelete
 16. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. அழகிய புதிய அறிமுகங்கள்.

  இன்றைய பதிவு இன்னும் காணவில்லையே?

  ReplyDelete
  Replies
  1. அனுசுயா - தாராசுரம் - http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_2417.html

   Delete
 19. சிறப்பான அறிமுகங்கள்... பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 20. புதிய அறிமுகங்கள் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது