07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 7, 2013

மனசு பேசுகிறது – கிராமத்து வைத்தியம்

எல்லாருக்கும் வணக்கம்.

எப்படியிருக்கீங்க.. நேற்றைய பகிர்வு உங்களைக் கவர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். கழுத்துவலி உங்கள் அன்பால் இப்போது பரவாயில்லை... இருந்தும் இன்னும் வலி இருக்கிறது. நாளை முதல் ஓய்வுதானே... இன்னும் ஒரு பதிவுதானே... சமாளிச்சிடலாம்.. சரி வாங்க இன்றைய பதிவர்கள் சிலரைப் பார்த்து வாழ்த்தி வருவோம்....ன்னடா கிராமத்து வைத்தியத்தைப் பத்தி சொல்லப் போறானேன்னு நினைக்கிறீங்களா... கழுத்து வலிக்கு படியை வைத்துப் படுத்தால் நல்லது என ராஜராஜேஸ்வரி அக்கா சொல்லியிருந்தாங்க. உண்மைதான்... அப்படியெல்லாம் ஊரில் இருக்கும் போது செய்து சரி பண்ணியிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பிருந்த கிராமத்து வைத்திய முறைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டன.

கழுத்து வலி வந்தால் தலையணை வைக்காமல் நிலைப்படிக்கல்லில் தலைவைத்துப் படுக்கச் சொல்வார் அம்மா. அப்படி செய்தால் காலையில் எழுந்திருக்கும் போது வலி பறந்து போயிருக்கும். வறட்டு இருமலாக இருக்கிறதா கொஞ்சம் மிளகை எடுத்து காரம் அதிகமாக தெரியாமல் இருக்க அரிசியுடன் சேர்த்து மென்று வாய்க்குள் வைத்துக் கொள்ளச் சொல்வார்கள். மூச்சுக்குத்துப் பிடித்துக் கொண்டால் எங்க ஊர் மெய்யரு வீட்டிற்கு வந்து முதுகில் உலக்கையை வைத்து உருட்டி ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து கந்தர் சஷ்டி கவசமோ மாரியம்மன் தாலாட்டோ கொஞ்சம் வாய்க்குள் முணுமுணுத்து அந்த சொம்பை ஒரு சாப்பாட்டுத் தட்டில் கவிழ்த்து வைத்துவிடும், தட்டோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சொம்பு தட்டை விட்டுப் பிரியும் போது மூச்சுக்குத்தும் பறந்துவிடும்.

எங்க வீட்டில் எங்க அக்காக்கள், அண்ணன்களின் பிள்ளைகள் எல்லாருக்கும் பிறந்திருக்கும் போது காலையில் உடலெல்லாம் நல்லெண்ணை தேய்த்து கண்ணுக்குள் எண்ணைய் ஊற்றி வெயிலில் கொஞ்ச நேரம் வைத்திருப்பார்கள். காலையில் வேப்பிலைக் கொழுந்தைப் பறித்து நன்றாக இடித்துச் சாறெடுத்து ஒரு சங்கு புகட்டி விடுவார்கள். ஆனால் எனது குழந்தைகள் பிறந்த போது இந்தச் சோப்புதான் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் குறித்துக் கொடுத்துவிட்டார்கள். பாட்டி வைத்தியம் எல்லாம் கிடைத்தாலும் இன்றைய சூழல் அதை விரும்பவில்லை.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது... நாங்கள் என்றால் நான், எங்க அக்கா, தம்பி... ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்ததும் அம்மா மூவருக்கும் அரைடம்ளர் வீட்டில் ஆட்டி எடுத்த வேப்பெண்ணையை குடிக்கச் சொல்லிக் கொடுப்பார். வாயில் ஊற்றிவிட்டு சீனியை அள்ளி கொட்டிக் கொள்வோம். குடிக்கவில்லை என்றால் அடிதான். மாதம் ஒருமுறை தமிழ் மருந்துக்கடையில் பேதி மாத்திரை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து ஊரணிக்கும் வீட்டுக்கும் நடக்க வைத்துவிடுவார்கள். பாவக்காய், பூண்டுக் குழம்பெல்லாம் சாப்பிட்டே ஆகவேண்டும். இப்ப எனது பிள்ளைகள் இரவில் நூடுல்ஸ் சாப்பிடுகிறார்கள்.

பழைய சாதம், வெங்காயம், எருமைத் தயிர் இருந்தால் போதுமெனக்கு... கல்யாணத்துக்கு முன்பு வரை நானும் அம்மாவும் மட்டுமே வீட்டில் எனக்காக காலையில் பலகாரம் போடமாட்டார்கள். அவனுக்கு கஞ்சிதான் பிடிக்கும் என்று அவர்களும் எனக்காக கஞ்சி குடிப்பார்கள். ஆனால் இப்போ இங்கு கஞ்சி வைக்க முடிவதில்லை... ஊருக்குப் போனாலும் ஒட்டல் முதலாளி மகள் காலை இரவு டிபன் போட்டு நம்மையும் அதையே சாப்பிட வைத்துவிடுவார். கஞ்சி என்றால் நல்லா வளர்த்திருக்காங்க கஞ்சி கஞ்சியின்னு அப்படின்னு சொன்னதும் இட்லியோ தோசையோ கஷ்டப்பட்டு உள்ள போகும். ஒரே சந்தோஷம் பாப்பாவும், விஷாலும் அப்பா போல கஞ்சிப் பிரியர்கள்தான்... விஷால் சோறு மோரு என்று அடம் பண்ணி சாப்பிட்டு விடுவான்.


“அவனும் கெட்டிக்காரன்.கஷ்டம் தெரிஞ்சவன். நன்னாப் படிச்சு ஃபர்ஸ்ட் கிளாஸில பாஸ் பண்ணினான்.ஏதோ பரிட்சை எழுதி தில்லி செகரடே ரியட்ல வேலையும் கெடச்சது.நான் அவன்கிட்ட சொல்லிட்டேன் நான் தில்லிக்கெல்லாம் வரமாட்டேன்னு.பாவம் கொழந்த.தனியாய தானே பொங்கிச் சாப்பிட்டிண்டு 5 வருஷம் ஓட்டினான்.எனக்கும் மாசா மாசம் பணம் அனுப்பிசிண்டிருந்தான்அப்பறம்தான் எழுதினான் அவன்கூட வேலை பாக்கிற மாலதியை லவ் பண்றதா. நல்ல வேளை,அவா பிராமணாதான்னும் எழுதியிருந்தான்…”

எழுத்தாளரின் பெயர்
சென்னைபித்தன்
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்... சொல்ல முடிந்தது அதில் கொஞ்சம் எனச் சொல்லும் ஐயாவின் பகிர்வுகள் ரசனையாகவும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் நகைச்சுவையாகவும் இருப்பது சிறப்பு. அவரது பகிர்வுக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். நீங்களும் ஐயாவை வாசித்துப் பாருங்கள்.“சில நொடிகள் யோசித்தாள். இந்த இளைஞனை நம்பலாமா? குழந்தையை கடத்தும் கும்பல் இப்படி டீக்காக உடை அணிந்து கடத்த ஆரம்பித்து விட்டார்களோ? முகத்தை பார்த்தால் நம்பலாம் போல தான் இருக்கிறது. ஆனால்?? இந்த காலத்தில் யாரைத்தான் நம்புவது என்றே தெரியவில்லையே. எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, தன் ரெயின் கோட்டை சுதா மீது சுற்றிவிட்டான். “வேண்டாம் சார். உங்களுக்கு எதற்கு சிரமம்…

எழுத்தாளரின் பெயர்
உமாநாத் (விழியன்)
வலைப்பூ
கவர்ந்த பதிவு
வரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள் இது என்று சொல்லும் இவர் பல தொகுப்புக்களுக்குச் சொந்தக்காரர். கவிதைகள், கதைகள், சிறுவர்கதைகள் என எல்லாம் எழுதுகிறார். இவர் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவர். வாசியுங்கள் விழியனின் பக்கத்தைவிட்டு உங்கள் விழிகள் அகலாது.

****** 
“இருவரும் நிறைய கனவு கண்டார்கள், ஆனால் அதில் ஒரு பகுதிதான் பலித்திருக்கிறது. பெண் ஜெயித்து ஆண் தோற்பது மிகவும் துக்கமானது. அவனால் இதை சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவன் வென்று அவள் தோற்றிருந்தால் அவள் அலட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று தோன்றியது. ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியாக இருப்பதும் மதிப்பிற்குரியதுதானே!...”

எழுத்தாளரின் பெயர்
வித்யா சுப்ரமணியம்
வலைப்பூ
கவர்ந்த பதிவு
1984 ஆம் ஆண்டு மங்கையர் மலரில் 'முதல் கோணல்' நெடுங்கதை மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமான வித்யா அம்மா அவர்கள், இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள் இதழ்களில் எழுதியிருக்கிறார். அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது, தமிழக அரசு விருது, பாரத ஸ்டேட் வங்கி விருது, கோவை லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது, இலக்கிய சிந்தனை விருது என விருதுகளை வாங்கிக் குவித்திருகிறார். இவரின் படைப்புக்களைப் படித்துப் பாருங்கள்… கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துப் போகும்.
"எட்டத்தில் இருப்பவை கிட்டத்தில் வரட்டுமே
நட்டத்தில் இருப்பவர் லாபத்தைப் பெறட்டுமே
வட்டத்தில் இருப்பவர் வானத்தில் எழட்டுமே
கட்டத்தைக் கடக்கவே திட்டத்தை தருகவே...."

எழுத்தாளரின் பெயர்
அண்ணாகண்ணன்
வலைப்பூ
கவர்ந்த பதிவு
மரணத்தின் கண்களில் மையெழுதுவேன் நான் வரிகூட்டி வாசிக்க வைப்பேன் - இருட்டினைப் பொய்யுண்ணும்; பொய்யை மரணமுண்ணும்; அஃதினை மெய்யுண்ணும்; மெய்யினையோ நானுண்ணுவேன் என்று சொல்லும் அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் இதழ்களின் முன்னாள் ஆசிரியரும் யாஹூ தமிழ்த் தளத்தின் ஆசிரியருமான இவர் கவிதைகள் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

******

"ஊற்றுக்கள் கொடுக்கும் உயிரில்
உடலாகி ஊரும் கிளைகள்
இசைக்கருவு அற்றுப்பாடி
இலைகளில் தாளம் போட்டு
எழுப்பிடும் சலசல சப்தம்
என்றேனும் ஓய்ந்தது இல்லை..."

எழுத்தாளரின் பெயர்
பிரியா
வலைப்பூ
கவர்ந்த பதிவு
எழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான் என்று சொல்லும் இவரின் கவிதைகள் ஆழமான அழகான கருத்துச் செறிவு கொண்டவை.
“மகேஷின் அம்மாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், எப்போ போனாலும் யய்யா தம்பி சாப்புடுய்யா சாப்புடுய்யான்னு கொஞ்சும், ஆனாலும் நான் சாப்பிட்டதில்லை, இதை என் அம்மாவிடம் அவர்கள் சொல்லக்கேட்டு என் அம்மா பெருமிதம் அடைவதை பார்த்திருக்கிறேன்...”

எழுத்தாளரின் பெயர்
நாஞ்சில் மனோ
வலைப்பூ
கவர்ந்த பதிவு
நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம் என்று சொல்லும் மனோ அண்ணன் ஒரு பிரபல பல்சுவைப் பதிவர். எல்லாப் பக்கமும் கலந்து கட்டி எழுதுவார். இவருக்கும் மலையாளக்கரை ரொம்பப் பிடிக்கும் என்பது பதிவிலேயே தெரிகிறது. முகநூலில் இப்ப அண்ணன்தான் சூப்பர் ஹீரோ... முகநூல் அப்டேட்ஸ் அள்ளிக் கொட்டிக் கொண்டே இருப்பதால் வலைத்தளம் கொஞ்ச நாள் வறட்சியாய் இருக்கிறது. விரைவில் துளிர்க்கும்.... படிச்சுட்டு பின்னூட்டம் போட்டுட்டு வாங்க இல்லேன்னா அருவாளைத் தூக்கிருவாரு...
“எந்த வகை சாதம், குழம்பாக இருந்தாலும்  ஊறுகாய் என்று ஓன்று இருந்தாலே போதும். சாதாரணமாக எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய்களை வீட்டில் போடுவார்கள். பூண்டு ஊறுகாயை கடைகளில் வாங்குவார்கள். அதில்  பூண்டு வேகாமல் நறுக்கென்று இருக்கும். நாமே பூண்டு ஊறுகாய் செய்யும் முறையை சொல்கிறேன்…”

எழுத்தாளரின் பெயர்
அகிலா
வலைப்பூ
கவர்ந்த பதிவு
இந்தத் தளத்தின் ஆசிரியர் அகிலா அவர்கள் சில வாரங்களுக்கு முன்னர் வலைச்சரத்தை அலங்கரித்தவர் என்பதால் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இவரின் தளங்கள் மொத்தம் 9 என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் தீனி போட்டு கட்டிக்காக்கும் இவரின் திறமை பாராட்டப்பட வேண்டியது. சமையல் குறிப்புக்களுக்கு தாராளமாக அடுப்படிகுள் நுழையலாம்.
“கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கை தொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே!..”

எழுத்தாளரின் பெயர்
துரை செல்வராஜூ
வலைப்பூ
கவர்ந்த பதிவு
அறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும் எனச் சொல்லும் ஆசிரியர் அவர்கள் ஆன்மீகப் பதிவுகளை அழகாகப் பகிர்கிறார். ஆன்மீகம் விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூ இது.
“கிரிக்கெட் மிகச் சிறந்த விக்கட் காப்பாளர்களில் ஒருவராக கருதப்படும் கில்கிறிஸ்ட் டெஸ்ட் போட்டிகளில் 416 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு அதிக ஆட்டமிழப்புகளை செய்த விக்கெட் காப்பாளர்களில் இரண்டாம் நிலையிலும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 472 ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக ஆட்டமிழப்புகளை மேற்கொண்ட விக்கட் காப்பாளராக திகழ்கின்றார்.துடுப்பாட்ட வீரராகவும் விக்கட் காப்பாளராகவும் அணித்தலைவராகவும் பல துறைகளில் சாதித்த கில்கிறிஸ்ட் தனது இறுதிப்போட்டியில் பந்துவீசி முதல் பந்திலேயே விக்கட் வீழ்த்தி பந்துவீச்சாளராகவும் பதிய பரிமாணம் எடுத்துள்ளார்.”

எழுத்தாளரின் பெயர்
டினேஷ்சாந்த்
வலைப்பூ
கவர்ந்த பதிவு
விருப்பு வெறுப்புக்கு அப்பால் விதி தந்த பாதையிலே நகர்ந்திடும் பல கோடிப் பேரில் நானும் ஒருவன் என்று சொல்லும் இந்த யாழ்ப்பாணத்து மாணவர், விளையாட்டு பற்றிச் சொல்லச் சொன்னதால் அவரையே சொல்லிவிட்டேன்.. மற்றபடி தமிழ் இலக்கியம் அறிவியல் என எல்லாச் சுவையிலும் எழுதுகிறார். படியுங்கள்... நீங்களும் ரசிப்பீர்கள்.

  “குழந்தையின் மூளையானது பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதன் விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவறையில் தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்-படுத்தப் பட்டவை. தான்தோன்றித் தனமாக அல்ல..”

எழுத்தாளரின் பெயர்
சந்திரவதனா
வலைப்பூ
கவர்ந்த பதிவுகள்
தாய்ப்பால் முதல் முதலுதவி வரை எல்லாவற்றையும் இந்தத் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். குழந்தைகள் பற்றிய கட்டுரைகளுக்கு படிக்க வேண்டிய தளம், இது.


கோவில் வீடும் ரேசன் கார்டும்

கண் மூடி கை தொழுது
நிற்பவளின் பெயர் எக்ஸ்
எனக் கொள்ளுங்கள்.

கை தொழுது கண் மூடாமல்
அவளைப் பார்ப்பவனின் பெயர்
ஒய் என எடுக்கலாம்.

அடப்பாவி என ஒய்யை
இருட்டுக்குள் இருந்து வெறிப்பவனை
நான் சொல்ல வேணாம்..

நீங்களே சொல்லி விடுவீர்கள்
வீணாப்போன கடவுளென.
கவிஞர். பா.ராஜாராம்
வலைப்பூ : கருவேல நிழல்
சிவகங்கை மாவட்டம்
'எழுத்து என்னும் கருவறை' என்ற தலைப்பில் திரு. வைகோ அவர்களின் பேச்சு. கேட்டுப்பாருங்கள்... கண்டிப்பாக ரசிப்பீர்கள்...ஆந்தை அலறினால்
அபசகுணமாம்...
அப்பா நண்பரிடம்
சொல்லிக் கொண்டிருந்தார்...
சிணுங்கிய என்
அலைபேசியில்
ஆந்தையின் குரல்..!

இன்றைய அறிமுகங்கள் அனைவரின் தளங்களுக்கும் சென்று இங்கு சொன்ன பதிவை மட்டுமன்றி அவர்களது எல்லாப் பதிவுகளையும் படித்து உங்கள் கருத்தைத் தெரிவித்து சந்தோஷமாய் மீண்டும் வாருங்கள்... அதற்குள் நானும் சென்று இன்னும் சில பதிவர்களோடு வருகிறேன்...

நன்றி.

மனசு தொடர்ந்து பேசும்.

-'பரிவை' சே.குமார்.

18 comments:

 1. என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு,அதுவும் பிரபலம் என்ற தலைப்பில்,நன்றிகள் குமார்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

   Delete
 2. அனைத்தும் சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

   Delete
 3. பழைய, புதிய அறிமுகங்களைத் தந்தமைக்கு
  நன்றி சார்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. தஞ்சையம்பதியை அறிமுகம் செய்வித்தமைக்கு மிக்க நன்றி!.. தளிர் நடையிடும் சிறு குழந்தையைப் போல உணர்கின்றேன்!... மகிழ்ச்சி!.. மீண்டும் நன்றியுடனும் அன்புடனும்.. துரை செல்வராஜூ.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை!. பிரபலம், கதை, கவிதை, பல்சுவை, ஆன்மீகம், சமையல், அறிவியல், விளையாட்டு, குழந்தைகள் நலம் - என பன்முகம் காட்டிப் பிரகாசிக்கின்றது - தங்களின் தொகுப்பு!..வாழ்க.. வளர்க!..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. எனது குழந்தைகள் பற்றிய தளத்தை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி குமார்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. சந்திரவதாவின் மனஓசை தளம் ஒருகாலத்தில் அதிகம் படிப்பேன் இப்போது போதிய நேரம் இல்லை அறிந்தவர்களின் அறிமுகத்திற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. மிக்க நன்றி நண்பா என்னையும் பிரபல வதிவர்கள் வரிசையில் சேர்த்தமைக்கு மிக்க நன்றி....

  தாமதத்திற்கு மன்னிக்கவும்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. மிக்க நன்றி என் வலைப் பூவை அறிமுகப் படுத்தியதற்க்கு...தாமதமாய் கருத்திட்டதிற்க்கு மன்னிக்கவும்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது