07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 28, 2014

நிறைவு முகம். ( ஏழாம் நாள் )




ஆளுமைகளின் வலைப்பூக்கள் ஆளுமைகளின் வலைப்பூக்கள் : வணக்கம். இன்று ஏழாம் நாள். என்னுடன் பயணித்த வலைச்சரத்திற்கு மிக்க நன்றி. புதுக்கோட்டை கணினிப் பயிலரங்கம் சார்ந்த செய்திகளை முன்னொரு இடுகையில் கூறியிருந்தேன். நாங்கள் வலைப்பூவில் இவ்வளவு அளவளாவக் காரணம் எங்களுக்குக் கருத்தாளர்களாக வந்த வலைப்பூ ஆளுமைகள் எனலாம். இவ்விறுதி நாளில் அவர்களை அறிமுகப்படுத்துவது உங்களுக்குப் புதிதில்லை எனினும் நன்றியின் மேல் எங்களுக்கு என்றுமே மிகுந்த மதிப்புண்டாகையால் அவர்களின் பெருநகர்வுகளைப் பற்றி அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன். எட்வின் மாற்றுச்சிந்தனை முகம். மனிதர்களை நேசிக்கத்தெரிந்த கலை. வாசிக்கத் தெரிந்த கண்கள். இவரின் வரிகளில் தெரியும் இயல்பும் யாருக்கும் புலப்படாத இன்னும் கொஞ்சமும். வேலையில்லை மொடாக்குடியன் கஞ்சா உறிஞ்சி பொறுக்கி எல்லாம் சரி யாரிடம் இல்லை சரியாயிடும் பையன் நல்லவனா சொல்லுங்க? வாழ்வியல்பின் யதார்த்தங்கள் திரு. எட்வினுக்கே வந்த கலை. http://www.eraaedwin.com/ கரந்தை ஜெயக்குமார் என்னுடைய வலைப்பூவின் ஒரே வாசிப்பாளர் இவர் மட்டும் தான். ஒரு கணித ஆசிரியராக இருக்கும் இவரின் தமிழறிவு காணவியலாதவை. இவரின் வலைப்பூ சார்ந்த புத்தகத்தை வாசித்திருக்கிறேன். எழுத்தின் வல்லமை இவரிடம் இயல்பாய் அமைந்திருப்பது இவருக்குக் கிடைத்த பெரும் வலிமை. இவர் எனக்கு முன்னெழுத்து. இராமநாதபுரம் சீமையும், சிவகங்கைச் சீமையும் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் கொடுமைகளை, வேதனைகளைத் தாங்கள் அறிவீர்கள். எனது கணவரை வஞ்சகமாக, வெள்ளையர்கள், மறைந்திருந்து கொன்றதையும் தாங்கள் அறிவீர்கள். என்னைப் பற்றித் தாங்கள் அறிந்ததை விட, தங்களைப் பற்றி அதிகமாகவே நான் அறிவேன். வேலு நாச்சியார் பற்றீ இவர் எழுதி வரும் பதிவு மிக்க சுவையாய் உள்ளது. ஒரு ஆசிரியனாய் இவரின் கருத்துகளை வகுப்பறையில் ஆழ்வதுண்டு. http://karanthaijayakumar.blogspot.com/2014/12/5.html#more திண்டுக்கல் தனபாலன் . வலைப்பூச் சித்தர். இது நாங்கள் வைத்த புனைப்பெயர். பேருந்து நிலையத்திலிருந்து நான் தான் இவரை பயிலரங்கக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் பெருமை எனக்குக் கிட்டியது, ( ஐயா நிலவனுக்கு நன்றி ) பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டோம். இவரின் வகுப்பை முழுமையாகக் கவனிக்க இயலவில்லை. என் வலைப்பூவைச் செப்பனிட இவரைத் தான் அழைத்துள்ளேன். அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் - அறிவுடைமை - 421 - இக்குறள்பாவிற்கு டிடி தரும் அறிவின் செய்தி வியக்க வைக்கிறது. http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Intellect-Part-1.html#more முனைவர் ஜம்புலிங்கம் மிகப்பெரிய எழுத்தாளுமை கொண்டவராக இருந்தாலும் துளிக்கூட அறிவின் கர்வம் இவரிடம் இருந்ததில்லை. முனைவர். அருள்முருகன் ஐயா அவர்களின் ஆய்வறிமுகத்தில் இவரின் எதிர்வினை கண்டு புருவம் உயர்த்தியதுண்டு. மிகவும் எளிமையானவர். எழுத்திலும் கூட ஆழமானவர். துளிர்விடும் விதைகள் பற்றிய இவரின் அறிமுகவெழுத்துகள் அருமை. http://drbjambulingam.blogspot.com/ டி.என்.முரளீதரன் ஒரு கல்வி அதிகாரி இலக்கியத் தளங்களில் இயங்குவது மிக அரிதானது. ஏனெனில் இது நெருக்கடிகளின் நொடிகள் அதற்கெல்லாம் விதி விலக்காக சிலர் இலக்கியத் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை ( எங்கள் புதுகை மு.க.அ.போல் ) இவரின் எழுத்தாழம் என்னை வெகுவாய்க் கவர்ந்தது. வைரமுத்துவின் வரிகளை அவர் எடுத்துக்கூறி அதில் உடன்பாடிலா வரிகள் காணுமாறு அழைத்திருந்தமை அருமை. இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின் எடைகாட்டி இன்பம் இழைப்பாள்-மடையா கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை விலைமகள் ஆசை விடு ஐயா , எனை உறுத்திய வரிகள் இதுவென எண்ணுகிறேன். http://www.tnmurali.com/2014/12/aids-awareness-vairamuthu-kavithai.html தமிழிளங்கோ ஒரு வங்கி அதிகாரி இவ்வளவு தமிழாளுமை கொண்டு இயங்குவது உயர்விலும் உயர்வு. இவரின் ஒளியோவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தது. கணக்கிலாக் கணக்குகள் பற்றிய அவரின் பதிவு விழிப்புணர்வின் நிழல். மிக்க நன்றி ஐயா. http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_19.html sumazla இதையும் சற்று நேரம் கிடைத்தால் பாருங்கள். ஒரு பெண் பதிவரின் மிகச்சிறந்த வலைப்பூ. இவர் எழுதிய வலைப்பூ பற்றிய புத்தகமே என் வலைப்பூவிற்கான விதை. நல்ல வலைப்பூக்களுள் இதுவும் ஒன்று. http://sumazla.blogspot.com/ அன்புடன், சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி )
மேலும் வாசிக்க...

Friday, December 26, 2014

கூடுதல் முகம் 3 ( நிறைவு முகத்திற்கு முன்னாக)


அன்பானவர்களே வணக்கம். இதுகாறும் சிறப்பான ஆதரவினை எனக்கு நல்கிய அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள். பாண்டியன், விஜீ ஐயா ஆகியோரின் வரவு எனக்கு மிக்க மகிழ்வூட்டியது, இருப்பினும் இன்னும் சில தளங்களை பதிவிட்டு விட்டு நிறைவு செய்யலாமென என்ணுகிறேன். இளஞ்சாரல் வாழ்வை எரித்தது நேசம் அந்த நேசத்தை எரித்திடாது சாம்பலை இட்டுக்கொண்டேன் நெற்றியில் என்ற கவிஞர் சுஜந்தியின் கவிதை வரிகளில் அக்னிப்பிழம்பின் ஒலி கண்டேன். தொடரட்டும் அவரின் கவிதைப்பக்கம். வால்பையன் “ முதல் நாளில் இருந்தே நான் தயாராகிக் கொண்டிருந்தேன், சொதப்பிற கூடாது என்பதற்காக பலவாறு என்னை தயார் படுத்தினேன், கண்ணாடி முன் நின்று எனக்கு நானே நடிச்சு பார்த்தேன். கஜினியில் சத்யம் சொதப்பியது போல் சொதப்பிடுற கூடாது என்பதற்காக, ஹாய் ஐயாம் சஞ்சய் ராமசாமி என நூறு முறையாக சொல்லியிருப்பேன்.” இவ்வாறாக தன் அனுபவங்களைச் சுவைபடக் கூறியிருக்கும் வால்பையனின் இடுகைகள் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எதிர்வினை செய்து நீள்கிறது. வால்பையன் வால்பையன் தான்! பார்வையில் ஒருவர் இந்துவாக இருந்து கிறுஸ்துவராகவோ அல்லது இஸ்லாமியராகவோ ஆவதற்கு மூளைச் சலவை என்பதற்கும் மேலாக இந்து மதத்தின் குறைபாடுகள் என்பது ஒரு முக்கிய காரணம். இந்துத்துவா மதமாற்றம் என்ற விவாதத்தைத் தொடங்க அழைக்கிறார் இப்பதிவர். அரசியல் சார்ந்த விவாதங்களைத் தாங்கள் இவரிடம் விவாதிக்கலாம். இவரின் கருத்துகளை நியாயப்படுத்த அவர் அழைப்பதாக நாம் எண்ண வேண்டாம். எதிர்வினைக்கும் இடமுண்டு. ஆதலால் தான் வௌவாலைத் தேடுகிறாரோ? பார்வையில் லேகாவின் பார்வையில் ஒரு சமூகமாற்றத்திற்கான விதை தெரிகிறது. சுகிர்தராணியின் கவிதையை பகிர்ந்துகொண்ட அவரின் அக்கறை என்னை வெகுவாய்க் கவர்ந்தது.பாருங்களேன் அவரின் பகிர்தலை // அப்பாவின் தொழிலில் ஆண்டுவருமானம் சொல்ல முடியாமல் வாதியாரிடம் அடி வாங்குவேன் -- சுகிர்தராணியின் வலியின் துணிவில் லேகாவின் விழிதிறத்தல் அபாரம் @ தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு தமிழில் விக்கிபீடியாவின் பங்கு நாம் அறிந்ததே ! பல பயனுள்ள தகவல்கள் நம் விழிப்புணர்வைத் தூண்டுவதாய் அமைந்துள்ளது. மருந்துகளின் தமிழ்ப்பெயர்கள் சார்ந்த இத்தளத்தின் பதிவு பயனுள்ளது. பாருங்கள். பகிருங்கள். மூலிகை வளம் குடற்புண்ணுக்கு மணற்தக்காளி நல்ல மருந்தென்று தெரியும். ஆனால் அதன் தாவரவியல் வகைப்பாட்டியலை அழகாகச் சொல்லிச் செல்கிறது இத்தளம். இயற்கை மருத்துவம் மீளெள நாம் இது போன்ற தளங்களைப் பார்த்தல் நலம். அன்புடன், சி.குருநாதசுந்தரம் (பெருநாழி )
மேலும் வாசிக்க...

பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் - 2


கூடுதல் முகம் - 2 வலைப்பூ உறுப்பினர்களுக்கு வணக்கம். இது எனக்கு ஒன்பதாவது இடுகை என நினைக்கிறேன். இதுவரை என்னை ஊக்கம் அளித்துத் தோள் தட்டியமைக்கு மிக்க நன்றி. இப்பொழுதும் இவ்விடுகையில் ஆறு வலைப்பூக்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்துள்ளேன். சித்திரக்கூடம் பயணங்கள் தவிர்க்க முடியாதவை. சில பயணங்கள் அத்தியாவசியமானதாக இருக்கும். சில பயணங்கள் அற்புதமானவையாக இருக்கும். அவ்வகையில் தன் பயணச் சுவடுகளை சுவைகாகப் பதிவு செய்துள்ள சந்தனமுல்லைக்குப் பாராட்டுகள். நீங்களும் சென்றால் கல்கத்தாவைக் கண்டு களிக்கலாம். புதுகைத்தென்றல் 2015 ஆம் ஆண்டின் நிறம் என்னவாக இருக்கும் என்ற வியப்பான பதிவொன்றைக் காண நேர்ந்த்து. ஆட்டின் வருடமாக கொள்ளப்படுகிற இவ்வாண்டில் நீங்கள் இருக்க வேண்டியது சமையற்கூடமாம். வித்தியாசமான பதிவு. போய்ப் பார்த்து விட்டு வாருங்கள். புதியவன் பக்கம் பொதுவாகப் புத்தகங்கள் படிப்பது மிகவும் குறைந்து விட்ட்து. நானும் ஐயா முத்துநிலவனின் புத்தகம் ஒன்றை இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். என் மதிப்பிடுகையை எதிர்பார்த்து அவரும் சோர்ந்து போனார். ஆனால் ஷாஜஹானிரகுமானின் புத்தக மதிப்புரை என்னை வெகுவாய்க் கவர்ந்த்து. கருணாகரனின் காகிதப்படகில் சாகசப் பயணம் என்ற புத்தகத்தை நான் வாங்குவதெனத் தீர்மானித்துவிட்டேன். நீங்கள் ? தீதும் நன்றும் பிறர் தர வாரா "கரையது உயர்ந்து நன்றாய் இருபுறம் இருக்க நீரும் சிறையது பட்டாற் போல அடங்கியே நடத்தல் போல வரையரை ஒன்றை நீயும் வகுத்தபின் வார்த்தை தன்னை சிறையிட நினைத்தால் போதும் சிலநொடி கவிக்குப் போதும் “ கவிதை எழுதும் இயல்பினை நற்கவிதையில் கூறிய இரமணியின் இன்கவி பெறலாம் யாரும் என்னை மிகவும் கட்டிப்போட்டது. மரபின் பக்கமும் கொஞ்சம் இளைப்பாறுதல் நம் கடமையென்றே கருதுகிறேன். விஜயநகரம் இப்படியும் இருக்கலாம் ஒரு ஆங்கில படத்தில் வருமே. ஒரு மனித குரங்கு ஒரு பெண்ணை விரும்பி அவளுக்காக நகருக்கு வந்து உயிரை விடுமே. அது போல் இதுவும் எதாவது காதல் விவகாரமோ என்னவோ? எதற்கும் இதற்கு ஒரு விசாரணை கமிசன் அமைக்கலாம். சமீபத்தில் ஒரு பள்ளியில் சிறுத்தை ஒன்று புகுந்ததை இப்படி வேடிக்கையாகச் சொல்லும் பொன்னியின் செல்வன் கார்த்திகேயனின் பதிவு வேடிக்கையாக மட்டுமல்ல. நகையாகவும் இருந்த்து. இளைப்பாற இங்கே செல்லலாம். ஊமைக்கனவுகள் திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் என்கிற தகவல் பற்றிய மாற்றுப் பார்வை ஒன்றை முன்வைக்க விஜீவால் தான் முடியும். இலக்கிய முரண்களை எடுத்தாண்டு தீர்வை நோக்கிய பயணத்திற்கு தமிழை இட்டுச்செல்லும் பாங்கிற்குப் பாராட்டுகள். திருக்குறள் உரையாசிரியர்களின் காலவரலாற்றை நானும் புரட்டிப்பார்த்து அவரின் வினாவிற்குத் தீர்வு சொல்லக் கிளம்பிவிட்டேண். நீங்களும் தானே? அன்புடன், சி.குருநாதசுந்தரம்.( பெருநாழி )
மேலும் வாசிக்க...

கூடுதல் முகம் - குருநாதன்.

வணக்கம். இன்று அறிமுகப்படுத்தும் வலைப்பூக்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம் . இருப்பினும் அதில் என்னைக் கவர்ந்த சில இடுகைகளின் பால் நான் ஈர்க்கப்பட்டேன். அத்தகு வலைப்பூக்கள் சிலவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன் அன்புடன் விளையாட்டு, அரசியல் என இரு விடயங்களைப்பற்றி எழுதி வருகிறார், இவ்வாண்டு உலகக்கால்பந்துக் கழகத்தின் பலோன் டி.ஓ. விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீர்ர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்களை தமது இடுகையில் கூறியிருக்கும் இவரது விளையாட்டுச் செய்தி என்னைக் கவர்ந்தது. தமிழா தமிழா தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடல்களை வெளியிட்டு அதற்கான பொருளையும் கூறியுள்ள பாங்கு போற்றத்தக்கது. பக்குடுகை நன்கணியாரின் உலக வீடுபேறு அடையும் வழி பற்றி ஏங்கும் பாடலைப் பதிவு செய்த பதிவர் அதைக் கண்ணதாசனோடு ஒப்பிட்டமை சிறப்பு. மணிஜி தான் சந்தித்த பெண் ஓட்டுநரிடமிருந்து சில அனுபவங்களைப் பெறும் மனிஜியின் ஆகாயத்தாமரை மிகச் சிறப்பு, அதிலும் தன் பெயரும் அவளின் கணவனின் பெயரும் ஒன்றாகவே இருந்த இணையின் வியப்பிலிருந்து மீள்வதற்குள் அனுபவம் முடிந்து விடுகிறது. பெண்களின் வலி ? மண் மரம் மழை மனிதன் பாசுமதி அரிசி, மேல்தட்டு மக்களுக்கான உணவின் ருசி. ஆனாலும் அதன் தாவரவியல் அறிவினைத் தந்திருக்கும் இவ்வலைப்பூ என்னைக் கவர்ந்தது, காரணம், இதன் தலைப்பை மீண்டும் ஒருமுறை பாருங்களேன். இன்னும் நிறைய மூலிகைகளை நீங்கள் இங்கு முகரலாம். TamilFuser இருசக்கர வாகனத்தின் எரிபொருள் நிரப்பும் தருணங்களில் அரசியலை நான் நினைப்பதுண்டு, அந்த அரசியல் அன்று மட்டும் பேசப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த எரிபொருள் அரசியல் பற்றி ஆழமாகப் பதிவிட்டிருக்கும் சதுக்க பூதம் என்னைக் கவர்ந்து விட்டார். பெட்ரோல் அரசியல் உங்களுக்கும் பிடிக்கும்.
மேலும் வாசிக்க...

இயல்பு முகம் ;

குருநாதனின் இயல்பு முகம் :


       ( அனைவரும் நீண்ட பதிவாக எழுதுகிறீர்கள். சுருக்கமாக எழுத வேண்டுமென்று கேட்டார்கள். என்னால் இயல்வில்லையய்யா. பொறுத்தருள்க. இன்னும் ஒருநாள் தான் )

          அனைவருக்கும் வணக்கம். இன்று வலைச்சரப் பொறுப்பேற்று ஆறாம் நாள். காலையில் தோழர் கஸ்தூரி தொலைபேசியில் அழைத்தார். நல்லா எழுதுறீங்க, ஆனால்என இழுத்தார். என்ன நண்பரே ? எனக் கேட்பது போல் அமைதியாக இருந்தேன். தமிழ்மணத்துல ரெண்டு தான் போயிக்கிட்டு இருக்குது? என்ன பண்றீங்க? என்றார். எனக்குப் புரியவில்லை. இடுகைகளில் த.ம. 1 என்பதை தமிழ் மணக்கட்டும் என்ற பின்னூட்டமாகவே நான் கருதினேன். தமிழ்மணம் சார்ந்து இன்னும் எனக்கு அவ்வளவாகப் புரிதல் இல்லை. வலைச்சரத்தின் வாக்குகள் முக்கியம் நண்பரே , என்று கூறிவிட்டுப் பரவாயில்லை. என்று தொலைபேசியை வைத்து விட்டார். இந்த வாரத்தில் வலைச்சரத்தின் வெளி பரவலாக்கப்படவில்லையோ என எனக்குள் மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டது. நான் ஆசிரியராக இருந்து இத்தளத்தின் வடிவச்சாயல் பாழ்பட்டுவிட்டதோவென என்னுள்ளே எண்ணங்கள் வதைத்துக்கொண்டேயிருந்தன. தோழர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களிடம் என் இயலாமைக்காய் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

        பயன்பாட்டுல இருக்குற தளத்த அறிமுகப்படுத்துங்க சகோ என்ற யோசனையை முன்வைத்துவிட்டுச் சென்ற கஸ்தூரிக்கு என் நன்றிகள். அறிமுகப்படுத்திய தளங்களை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டுமென்று போகும்போது சொல்லிவிட்டுச் சென்றதும் எனக்கு ஒரு புள்ளிக்கான அறிமுகம் கிடைத்தது. (  வாக்கு ரொம்ப முக்கியம் )



        தமிழகத் தமிழாசிரியர் கழகம் புதுக்கோட்டைமாவட்டக்கிளை கடந்த ஆண்டு அக்டோபர்த் திங்களில் முனைவர். அருள்முருகன், கவிஞர். முத்துநிலவன், ஐயா திருப்பதி , புலவர். மகாசுந்தர் , இயல்பெழுத்தாளர் கஸ்தூரி ஆகியோரது முன்னிலையில் கணினித்தமிழ்ப் பயிலரங்கம் ஒன்றை நடத்தியது. அதில் நாற்பதுக்கும் மேற்பட்டபுதியவர்களும், இருபதுக்கும் மேற்பட்ட மூத்த வலைப்பதிவர்களும் கலந்து கொண்டனர். கருத்துகளை வழங்கிச் சென்றனர்.

          அதில் கலந்துகொண்ட வலைப்பதிவர்களை இன்று அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன். அதில் எங்களுக்கெல்லாம் மிகுந்த மேலதிகமான தொழிநுட்பங்களை வழங்கிய நண்பர்கள் திரு. திண்டுக்கல் தனபாலன், கரந்தை ஜெயக்குமார், முனைவர்.ஜம்புலிங்கம், மூங்கில்காற்று முரளிதரன், எட்வின், ஊமைக்கனவுகள் விஜீ, தமிழிளங்கோ போன்றோரை மறக்கமுடியவில்லை. அவர்களின் கருத்துகளின் பால் ஈர்க்கப்பட்ட நாங்கள் மலரை மொய்க்கும் வண்டாய் வலைப்பூவிற்குள் சுற்றத்தொடங்கி விட்டோம் என்றால் மிகையாகாது.
அறிமுகத்தைத் தொடங்குவோமா?


             இவருக்கு மட்டும் ஒருநாளைக்கு இருபத்துநான்கு மணி நேரத்தைவிட அதிகம் கிடைத்திருப்பதாக நான் நினைப்பதுண்டு. புருவம் வியந்த்துண்டு.என்னை விட இவர்  அதிகத் தளங்களில் இயங்கினாலும் தன் வலைப்பூவில் எழுதத் தயங்கியதே இல்லை. சமுகச் சிந்தனைகளில் அவரது ஈர்க்கும் கருத்துகள் பல என்னை மிகவும் சிந்திக்க வைத்த்துண்டு. சமீபத்தில் மலேசியா போன்ற வெளிநாடுகளெல்லாம் சென்று வந்த இந்த்த் இளமைத்தமிழின் தெனாலிராமன் கதையின் இறுதிவரிகள் என்னை வெகுவாய்க் கவர்ந்துவிட்ட்து.

நம் பிள்ளைகள் படிப்பாளியாக வரவேண்டுமா? சிந்தனை வாதியாக வரவேண்டுமா?
வகுப்பறை இன்னும் மௌனமாகவே உள்ளது ஐயா. என்ன செய்ய இயலும் ? என்ற வினாவைத் தவிர ….ஐயா முத்துநிலவன் என்னைக் கவர்ந்த வலைப்பூவேர்.


         எங்களின் தமிழாய்வு வழிகாட்டி இவர்தான். ஒரு மனிதன் தன்னை எவ்வாறு பல தளங்களில் ஈடுபடுத்திக்கொள்ளல் வேண்டுமென்ற நல்வழி வழங்கி வருபவர். இலக்கியத் தளங்களிலும் நிருவாகத் தளங்களிலும் இணைகோடுகளாய் இவர் பணியாற்றும்  பாங்கு கண்டு பொறாமையுற்றிருக்கிறேன். இவருடன் பல கல்விசார் செயல்திட்டங்களில் பணியாற்றிய பேறு எனக்குண்டு. இவரின் வருகைப்பதிவுகள் என்ற ஆவணப்பதிவு ஆய்வாளர்கள் மட்டுமல்ல நாமும் வரலாற்றின் தடம் அறியும் பாதையாகவே அமையும்.

            கலைமகள் கல்லூரி உயர்நிலைப் பள்ளியின் பார்வையாளர் பதிவேடு இங்கு வருகை தந்த/ கடிதம் எழுதிய உ.வே.சா. முதலிய ஜாம்பவான்களின் கருத்துகள், பாடசாலையின் அமைப்பு, பாடத்திட்டம், பிற செயல்பாடுகள், கற்பித்த ஆசிரியர்கள், கல்வி பயின்ற பெண்மணிகள் முதலிய தகவல்களை அறிவதற்கான குறிப்பிடத்தக்க ஆவணமாக விளங்குகிறது. - கொஞ்சம் இப்பதிவையும் படித்துப்பாருங்கள் !


        நான் வியந்த வியந்து கொண்டிருக்கிற ஒரு சிறந்த ஆசிரிய ஆளுமை இவர். இவரின் இயலெழுத்துகண்டு நான் என்னையே கோபித்துக்கொள்வதுண்டு. ஒரு தமிழாசிரியனாக நான் என்ன செய்ய வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேனோ அதை அவர் திறம்படச் செய்து கொண்டிருக்கிறார். இவரின் சமூகம் சார்ந்த கோபங்கள் ஆழமானவை. ஒரு ஆசிரியரின் சமூகக் கோபம் புதிய தலைமுறையில் எழுச்சியை உருவாக்குமென்ற பொதுப்புத்தியில் இவரின் பணி போற்றுதற்குரியது.
பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதை வாரி வழங்கிய பெரும் சமூகப் போராளி , சமூகச் சிற்பி கிறிஸ்துவம்இவரின் இந்தப் பதிவு என் மனத்தில் கிறிஸ்துவத்தின்பால் எனக்கிருந்த எண்ணஎதிர்வினை அகற்றியிருக்கிறது 
கொஞ்சம் போய்ப்பாருங்கள் .இந்த ஆசிரியரின் சமூகப்பொறுப்பினைப் போற்றுங்கள்.


         இவரை நான் சில தருணங்களில் மட்டுமே சந்தித்ததுண்டு. ஆனால் இவரின் எழுத்துகள் இயல்பானவை மட்டுமல்ல. ஒரு தேர்ந்த எழுத்தாளனின் பக்குவப்பட்ட எழுத்துகளாகவே பரிணமிக்கின்றன. இவரும் ஓர் ஆசிரியர். வகுப்பறைச் சுவர்களில் பாடப்புத்தகத்தின் எழுத்துகளை மட்டும் பதிவு செய்யும் இயல்பான ஆசிரியர்கள் மத்தியில் இவர் வேறுபட்டு நிற்கிறார். இவரின் எழுத்துகள் எங்களைப்போன்ற தமிழாசிரியர்களின் இயலாத்தன்மையை சுட்டிக்காட்டுவதாகவே நான் எண்ணுகிறேன். என்னை மேலும் எழுதத்தூண்டும் முன்னெழுத்துகளில் இவரும் ஒருவர்.
 “பட்டாம்பூச்சிகளின் சிறகுபிய்த்து, காலொடித்து
  பால்யம் கடந்தவர்களுக்குத்தான் வாய்க்குமோ 
   பள்ளிகூடங்களில் குண்டுவைக்கும் மனம் “ -  கவிதையின் வரிகளில் காணப்படும்     சமுக முரண்களின் மூலம் என்னைப் பாதித்த்து. நீங்களும் சென்று பாருங்கள். எழுத்தோவியத்தில் மயங்கலாம்.


          என்னிடம் துணிவும் உண்டு. தென்றலும் உண்டு. என்பதான முன்னுரையோடு வலைப்பூவில் வலம் வரும் இவர் எங்களது பயிலரங்கத்தின் மூலமாக வந்தவர். ஆனால் எங்களை விட்டு எங்கோ சென்று விட்டார் ( பதிவுகளில்) இவரை இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சந்தித்ததுண்டு. போராளியாகத் தன்னை வடிவமைத்துக்கொள்ளூம் கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். சமூகத்திற்குச் சாட்டையடி தருவதில் இவர்களைப் போன்றவர்கள் இல்லையெனில் சமூகத்தின் முடைநாற்றம் இன்னும் சகிக்கமுடியாதபடியாகிவிடும். சிறந்த எழுத்தாளுமை கொண்ட இவரின் சமீபத்திய வேலுநாச்சியார் பற்றிய இடுகையில் உயிர்த்துப்போனேன். வகுப்பறைக் கற்றலில் இவரின் பல கவிதைகளை ஆட்கொள்வதுண்டு. இவர் கவனிக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல பின்பற்றப்படுபவரும் கூட.


        என் அறிமுகத்தில் குறிப்பிட்டதைப் போல என்னை இலக்கியத் தளங்களில் அறிமுகப்படுத்திய நால்வருள் இவர் முக்கியமானவர். சிறந்த படைப்பாளி மட்டுமல்ல. இவர் கைதேர்ந்த நடிகரும் கூட. கல்வித் தளங்களில் இவருடம் பணியாற்றிய தருணங்கள் மறக்கமுடியாதவை. என்னைப்போல தொழில்நுட்பம் இவருக்குப் பிரச்சனை என்றாலும் இவரின் எழுத்துகளில் ஓர் ஆழம் உண்டு. சிலம்பு பற்றிய இவரின் கட்டுரையும் , பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாடம் சார்ந்து இவர் எழுதிய கட்டுரையும் பேசப்படுபவவை. சிறந்த சொல்வித்தகர். வெல்லாற்றல் மிக்கவர். சிறந்த ஆசிரியப் படைப்பாளியான இவரின் பாரதி பற்றிய அறுசீர்விருத்தம் பாரதியின் புகழ் பரப்பும் மணிமகுடங்களில் ஒன்று.
முடங்கியே கிடந்தி ருந்த
       மொழியினைச் சிகரம் ஏற்றி.. என்ற வரிகளில் தெரிகிறது இவரின் ஆளுமை.


       நான் வியந்து நிற்கும் ஆசிரிய ஆளுமை கவிஞர் சுவாதி. தன் பள்ளியை ஒரு முன்மாதிரிப்பள்ளியாக மாற்றுவதில் இவர் கொண்டுள்ள அக்கறை நம்மையெல்லாம் சிலிர்க்க வைக்கிறது.நல்ல ஆசிரியராகவும் சிறந்த படைபாளியாகவும் வலம் வருகிற இவரது தளத்தின் இடுகைகள் சிறப்பானவை. நான் படித்த இராசயனக்கலவையெனும் கட்டுரை சூழல் மாற்றத்தில் அவர் கொண்டுள்ள அக்க்றையைப் பதிவு செய்திருக்கிறது. இவரின் எழுத்துகளில் சமூக அக்கறை தெரிகிறது இவரின் பல புத்தகங்களும் நான் வாசித்த்துண்டு. இவரின் தளம் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை.


       பயிலரங்க வலைப்பதிவர்களுள் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாளுமை நிரம்பியவர். இளைஞ்ர். எங்களின் பாசமிகு இளையர்.என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு இவரின் சுறுசுறுப்பு முன்மாதிரியாக்க் கூட இருந்த்து எனலாம். இவரின் வெண்பா என்னை ஈர்த்த்து.
உலகம் விழிப்பதற்கு முன்னே விழித்தெழுந்து
நலமாகும் நற்பணி செய்வீர் -பெண்கள் பற்றிய இவரின் வரிகள் எனைக் கட்டிப்போட்டது. வலைப்பூச் சிகரங்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்.


                             ( தொடர்ந்து வருகிறேன் மாலையில் .. )
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது