07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 3, 2007

ஒரு விடுபட்ட கவியும் சில புதிய பதிவர்களும்

தூரன் குணா - கொரங்காடு
வலைக் கவிகள் பதிவில் விடுபட்ட செறிவான கவிஞர்.அபூர்வமாய் வலைபதியும் குணா தற்போது தன் கவிதைகளை தொடர்ந்து பதிவிக்க தொடங்கி இருக்கிறார் கவனிக்கப்பட வேண்டிய கவிஞர்.இவரின் சில கவிதைகள் ப்ரியத்தின் பொங்குகள், பாழை அடைகாப்பவன் நீ , கூடற்ற பறவை


காயத்ரி
பாலைத்தினை என இலக்கியமாய் உள்ளே வந்திருப்பவர் ஒரே மாதத்தில் 40 இடுகைகளுக்கு மேல் எழுதி தள்ளிவிட்டார் .இவரின் பரட்டை என்கிற அழகு சுந்தரம் விமர்சனம் படித்து இன்னொரு நகைச்சுவை பதிவர் என முத்திரை குத்தும்முன் கவிதைகளாய் எழுதி இன்னொரு பரிணாமம் காட்டுகிறார்.எல்லா கவிதைகளும் நன்றாய் வந்திருக்கிறது.புறக்கணிப்பின் வலிகள், மரபுடைக்க முடியாமையின் துயர் மிகச் சரியாய் சொல்லப்பட்டிருக்கிறது.வந்த உடனேயே பரவலான கவனம் பெற்றிருக்கிறார்.

அருண் சிவா - குட்டிப்பிசாசு
அட்டகாசமான பேர் :) உள்ள நுழைந்த உடனே நேராய் கிடேசன் பார்க்கில் துண்டு போட்டு இடம் பிடித்து பாசக்கார குடும்பத்தின் கொ.ப.செ பதவியையும் வாங்கிட்டார். நகைச்சுவை,திரைப்படம்,கவிதை ன்னு இந்த பிசாசு நல்லா எழுதுது serigo leone பற்றிய இடுகை நல்லா வந்திருந்தது.கம்மங்க்கூழு வித் கவுண்டமணி செம காமெடி
எழுத்துருவ மாத்து பிசாசு.


கீர்த்தனாவின் - +ள் விகுதி
உள்ள வரும்போதே நண்பர்கள் புடைசூழ வந்திருக்காங்க பெரிய பதிவர்களின் தோழியா இருப்பங்கன்னு நெனக்கிறேன்.இவங்களோட எண் முறை இல்த்திரனியல் புதுமையான அபூர்வமான இடுகை.கரப்பான், ஆண் சிலந்திகள் , போன்ற கவிதைகள் சிறப்பாக இருந்தது.

கதிரவன் - வாழ்க்கைப் பயணம்
தன் பயணங்களை பகிர்ந்து கொள்ளும் கதிரவனின் இப்பதிவு செறிவாய் இருக்கிறது.இஸ்ரேல் பற்றிய வரலாற்றுப் பூர்வமான தகவல்களை இங்கே பெறலாம்

கோகிலவாணி - துவக்கம்
குழந்தைகளுக்கான படைப்புகள் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் வலைப்பதிவில் இல்லை.அக்குறை தீர்க்க குழந்தைகளுக்கான பாடல்களை சுமந்து வந்திருக்கிறார்.சிங்க ராஜாவும் சின்ன பெண்ணும் , கோழியும் மயிலும் இந்த பாடல்கள் இனிமையாக் இருக்கிறது.
பொன்ஸ் இவங்களை கவனிங்க குழந்தைகளுக்கான் வலைத்தளத்துல பயன்படுத்திக்கலாம் :)

சிமோன்தி
இந்த வலைப்பக்கம் இன்னும் தமிழ்மணத்தில் இணைக்கப்படவில்லை என நினைக்கிறேன் மூன்று கவிதைகளும் மிக சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.காலத்தின் மீது மரணத்தால் எழுதுதல்,கனதியான பொழுதுகளில் அழியும் இருப்பு

திரைவெளி - மணிதர்ஷா
இவரது ஒசாமா திரைப்படபதிவு நன்றாக வந்திருக்கிறது.சரிநிகர் இலக்கிய இதழில் வெளிவந்த விமர்சனம் மிகச் சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.மற்ற இரண்டு படங்களும் two woman , turtles can fly வெகு சிறப்பாய் எழுதப்பட்டிருக்கிறது.இவரின் வரவு என் போன்றவர்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்.

தனிமடலில் சிமோன் தி மற்றும் மணிந்தர்ஷா பதிவின் சுட்டிகளை தந்த ABV VBA (என்ன பேர்னு கூட தெரியலிங்க மடல் ஒண்ணு வந்தது) க்கு நன்றிகள்

5 comments:

  1. ஆகா! என் பெயர் தானா அது? ஐயா! என் ப்ளாக்கில் உள்ள 4 கவிதைகள் மட்டும் தான் நான் கவிதைகள் என்று எழுதியது. நிஜமாகவே அவை கவிதைக்குரிய இலக்கணத்துடன் இருக்கின்றனவா? இவை இரண்டும் என் குழந்தைக்காக எழுதியது. மிக்க நன்றி!

    ReplyDelete
  2. ஆகா, என் பதிவையும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி அய்யனார் :-)

    நிறைய எழுதணும்கற ஆசையில ஆரம்பிச்சவன், என்னோட சமீபத்திய அனுபவமான இஸ்ரேல் வாழ்க்கையைப் பதிய ஆரம்பிச்சிருக்கேன்.

    இதுவரை எழுதியதில் இஸ்ரேல் பற்றி அதிகம் எழுதியிருப்பதால்,ஒரு சிலர் என்னை இஸ்ரேல் ஆதரவாளனாகவே மட்டுமே பார்ப்பதாகப் படுகின்றது.

    நான் ஒரு அப்பாவி நடுநிலைப்பார்வையாளன் என்பதை வரும் பதிவுகளில் தெளிவுபடுத்திடறேன் :-)

    உங்களோட ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி !!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. உண்மைதான்.. எனது நண்பர்கள் சிலர் நீண்ட காலமாய் வலைப்பதிபவர்கள்.
    :-)

    எனது நேரப்பற்றாக்குறையும் சோம்பேறித்தனமும் தான்.. நான் இவ்வளவு பிந்தி வந்தமைக்கு காரணம். :-)

    பாராட்டுக்கு நன்றி அய்யனார்.

    ReplyDelete
  5. கதிரவன்,

    //இதுவரை எழுதியதில் இஸ்ரேல் பற்றி அதிகம் எழுதியிருப்பதால்,ஒரு சிலர் என்னை இஸ்ரேல் ஆதரவாளனாகவே மட்டுமே பார்ப்பதாகப் படுகின்றது.//

    :-)))

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது