07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 15, 2009

வலைச்சரத்தில் இரண்டாம் நாள்


அசோகமித்திரன்(1)அறிமுகம்(14)ஆத்மநாம்(4)எஸ்.ராமகிருஷ்ணன்

(2)

புகைப்படங்கள்(2)புதுமைப்பித்தன்(16)மகாகவி பாரதியார்(1)மனுஷ்யபுத்திரன்(1)மௌனி(12) லா.ச. ராமாமிருதம்(3)லா.ச.ரா(3)வ.வே.சு ஐயர்(2)

நாகர்கோவிலை சேர்ந்த நண்பர் ராம்பிரசாத். மெளனி என்ற பெயரில் இணையத்தில் எழுதிவருகிறார்.அரசியல், லஞ்சஎதிர்ப்பு போன்றவற்றை எழுதினாலும், அழியாச்சுடர்கள் என்ற தலைப்பில் ஜாம்பவான்களின் எழுத்துக்களை வலையேற்றி இருக்கிறார். அவரின் இந்த முயற்சியை பாராட்டுவோம். நீங்களூம் வாசித்து பரவசம் அடையுங்கள்.

பொக்கிஷம்

சமையல் குறிப்புகள், காதல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள் என்று இல்லாமல் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மிகவும் துணிச்சலான தளம். நிச்சயம் முற்போக்கானவிஷயங்கள். மகளிர் மட்டும் என்றில்லை. அனைவரும் ரசிக்கும்படி எழுதியிருக்கிறார் இந்த புதுமைப்பெண். ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் “ஆப்பரசி”


மற்றொரு தோழியின் வலைத்தளம்.

“கவிதை உலகம் கொஞ்சும்” என்று கவி பாட தூண்டுகிறது இவரது தளம். சிக்கலில்லாத மொழி நடை. அமைதியான நதியில் நீந்தும் அன்னமாய் பயணிக்கிறது வார்த்தைகள். வாழ்த்துக்கள் தோழி.


பார்ப்பதற்கு மதுரை ரூரல் டிஎஸ்பி போன்ற தோற்றம். பைபாசில் நின்று லாரி மடக்கினால் கேள்வி கேட்காமல் மாமூல் மழை பெய்யும். இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு உள்ள அருமையான மனிதர். கவிதைகளும், கட்டுரைகளும் எழுதுகிறார். அரசியல் எள்ளலும் உண்டு. சமூக அக்கறையும் நிறையவே. செர்ரீ போல் சுவை மிக்க நண்பர்.

கையில் பிரம்பு உண்டு. அதுவும் கவிதை எழுதுமா என்று 20 ஆம் தேதி ஈரோட்டில் வைத்து கேட்க உத்தேசம். வாழ்த்துக்கள் ஈசானந்தா.


19 comments:

 1. அண்ணே... முதல்லே பேரெல்லாம் போட்டிருக்கீங்களே... அவங்கல்லாம் உங்க மாணவர்களா..

  ReplyDelete
 2. நன்றி மணிஜீ..(இது நம்ம தளத்த மீண்டும் அறிமுகம் செய்ததுக்கு)

  //சமையல் குறிப்புகள், காதல் சார்ந்த கவிதைகள், சிறுகதைகள் என்று இல்லாமல் ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் மிகவும் துணிச்சலான தளம்//

  உண்மையிலேயே துணிச்சலான தளம்.. அறிமுகத்துக்கு நன்றி..

  //பார்ப்பதற்கு மதுரை ரூரல் டிஎஸ்பி போன்ற தோற்றம். பைபாசில் நின்று லாரி மடக்கினால் கேள்வி கேட்காமல் மாமூல் மழை பெய்யும்.//

  நக்கல் கலக்கல் :)

  ReplyDelete
 3. மௌனி (ராம் பிரசாத்) அறிமுகத்திற்கு நன்றி. Very useful.

  மற்றவர்களின் தளத்திற்கும் சென்று பார்க்கிறேன். தூள் கெளப்புங்க மணிஜி.

  அனுஜன்யா

  ReplyDelete
 4. //நையாண்டி நைனா said...
  அண்ணே... முதல்லே பேரெல்லாம் போட்டிருக்கீங்களே... அவங்கல்லாம் உங்க மாணவர்களா.//

  :))))))))))))))))))))))))))))

  ReplyDelete
 5. ஜெர்ரி ஈஷானந்தா அறிமுகம் அருமை.

  ReplyDelete
 6. தோழியின் கவிதைகளை வாசித்தேன். இயல்பான எளிமையான மொழி நடை.
  அறிமுகத்திற்கு நன்றி,

  ReplyDelete
 7. மௌனி பற்றி ஏற்கனவே தெரியும். புதிதாக எழுதும் அனைவருக்கும் பயனுள்ள தளம்,

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 8. //ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் “ஆப்பரசி”//

  அ(ஆ)ப்போ ஆண்களுக்கு எதிரியா?

  மணிஜி,
  இதேபோல பெண்ணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் ஆப்பரசன் ஒருவரையாவது நாளை அறிமுகப்படுத்துவீர்களா?

  ReplyDelete
 9. /அகநாழிகை said...
  //ஆணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் “ஆப்பரசி”//

  அ(ஆ)ப்போ ஆண்களுக்கு எதிரியா?

  மணிஜி,
  இதேபோல பெண்ணாதிக்கத்துக்கு ஆப்பு வைக்கும் ஆப்பரசன் ஒருவரையாவது நாளை அறிமுகப்படுத்துவீர்களா?
  December 15, 2009 9:34:00 AM GMT+05:30//

  உனக்கும்,எனக்கும் அறிமுகம் தேவையா?

  ReplyDelete
 10. //20 ஆம் தேதி ஈரோட்டில் வைத்து கேட்க உத்தேசம்.//

  நானும் கேட்கிறேன்

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள். தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 12. இரெண்டாம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

  அறிமுகங்களும் அபாரம்!

  ReplyDelete
 13. அண்ணா வணக்கம், எப்டி இருக்கிங்க?
  உங்க தொலைபேசி எண் கொடுங்கண்ணா.... murli03@gmail.com

  ReplyDelete
 14. அழியாச் சுடர்கள் வலைப் பக்கத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி. பெரும் பேறு பெற்றேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 15. வலையில் சிக்கவைத்த ..முத்துச்சரமே,மணியே,மாணிக்கதேரே வணக்கம்,
  தண்டோராப்போட்டு "சக படைப்பாளிகளோடு என்னையும் அறிமுகப்படுத்தியது என் வாழ்நாள் பெருமை."

  ReplyDelete
 16. வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு என் இதயம் இனிக்கும் நன்றிகள். நாளும் அன்பில் தொடர்வோம்,வளர்வோம்.

  ReplyDelete
 17. /முரளிகுமார் பத்மநாபன் said...
  அண்ணா வணக்கம், எப்டி இருக்கிங்க?
  உங்க தொலைபேசி எண் கொடுங்கண்ணா.... murli03@gmail.com//

  93400 89989

  ReplyDelete
 18. அடேயப்பா, இவ்ளோ படிக்கிறிங்களா?

  ReplyDelete
 19. ஆதரவளித்து ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு என் அன்பும்,நன்றியும்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது