07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 11, 2010

இவர்கள் எனக்கு புதியவர்கள்..!!!

பெருந்துறையில் வேலை பார்த்து வந்த வரை, பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இடுவது என்பது, எனக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. ஹாஸ்டல் வாழ்க்கை. கல்லூரியிலும், விடுதியிலும் எந்நேரமும் இணைய வசதி இருக்கும். எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாய் படித்து பின்னூட்டங்கள் இட முடியும். பதிவு எழுதி விட்டு பின்னூட்டங்களுக்காக ஆவலுடன் காத்துக் கிடப்பது எத்தனை கஷ்டமானது என்பதை நான் அறிந்தவன். எனவே புதிதாக எழுத வரும் நண்பர்களை தேடிப்பிடித்து வாசித்து ஊக்குவிக்க முடிந்தது.

ஆனால் வேலை மாற்றலாகி மதுரைக்கு வந்த பின் நிலைமை மாறிப்போனது. பிரவுசிங் சென்டரில் இருந்து பதிவெழுத நேரம் இருக்குமே தவிர, பொறுமையாக வாசித்து கருத்துரைகள் எழுத முடியாமல் போனது. அதே போல புதிதாக எழுத வந்தவர்கள் யார் என்பதும் அவ்வளவாகத் தெரியவில்லை. இப்பொழுது எனக்கான கணினியை வாங்கியுள்ள நிலையில்தான் புதிய மக்களை தேடித் பிடித்து படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். இவர்கள் ரொம்ப நாளாக எழுதுபவர்களாக இருக்கலாம்... ஆனாலும் எனக்குப் புதியவர்கள் என்பதை இங்கே நினைவுறுத்த விரும்புகிறேன். சமீப காலமாக நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களைப் பற்றியதுதான் இந்த இடுகை.

பல நண்பர்களுடைய தளத்தில் இருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாகவே நண்பர் அக்பரின் அறிமுகம் கிடைத்தது. சிநேகிதன் என்கிற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். சமீபமாக சினிமா பற்றியும் நிறைய எழுதி வருகிறார். தனி மனித உணர்வுகள் பற்றி பேசும் முகமூடி என்கிற இந்த இடுகை எனக்கு ரொம்பவே பிடித்தது.

பலாபட்டறை என்ற பெயரில் எழுதி வந்தவர்தான் இப்போது ஷங்கராய் உருமாறி நிற்கிறார். நிறையவே கவிதைகள் எழுதுகிறார். கூடவே சமூகம் சார்ந்த விஷயங்களையும் நாசூக்காக சொல்லி செல்கிறார். யாசகம் வேண்டும் மனிதரிடம் இருந்து கூட மார்க்கெட்டிங் யுக்தியை கற்றுக்கொள்ள முடியும் என வித்தியாசமாக சிந்திக்கிறார். அவருடைய சின்ன சின்ன கவிதைகள் உங்கள் பார்வைக்கு..

திறந்து பாருங்கள் என்று நமக்கு அழைப்பு விடுக்கிறது பேநா மூடியின் வலைத்தளம். திருப்பூரில் இருப்பதாக தெரிகிறது. கொஞ்சமாக கவிதைகளும், நிறையவே சினிமாவைப் பற்றியும் எழுதுகிறார். அநாதை குழந்தை என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கும் ஒரு இலக்கிய வாடை வீசும் கவிதை உங்கள் பார்வைக்கு..

சமீப காலமாக நகைச்சுவையாக எழுதுவதில் பட்டையைக் கிளப்பி வருகிறார் நண்பர் சேட்டைக்காரன். பதிவுலகின் சூதுகளை நிறையவே புரிந்து கொண்டிருப்பார் போல. எல்லா நண்பர்களுடைய தளத்திலும் இவருடைய பின்னூட்டங்களைப் பார்க்க முடிகிறது. என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவருடைய இடுகை - ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.

வெகு நாட்களாகவே எழுதி வந்தாலும் இப்போதுதான் என் கண்களில் தட்டுப்பட ஆரம்பித்து இருக்கிறார் வீடு திரும்பல் - மோகன் குமார். கலந்து கட்டி அடிக்கும் விஷயங்களை வானவில் என்ற பெயரில் தொகுத்து எழுதுகிறார். பல விஷயங்களை ஒரு நூலில் கோர்க்கும் வானவில்லின் அழகான ஒரு துண்டு நீங்கள் பார்த்து ரசிக்க..

பவானியை சேர்ந்தவர் நண்பர் சங்கமேஸ்வரன். சங்கவி - உங்களில் ஒருவன் என்கிற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். உடல்நலம் பேணுவதற்கான மருத்துவம் சார்ந்து பல நல்ல விஷயங்களை எழுதுகிறார். நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயங்களில் கூட இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றனவா என்னும் ஆச்சரியம் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. வெற்றிலையின் மருத்துவ குணம் பற்றிய நண்பரின் இடுகை இங்கே..

நிலா அது வானத்து மேல என்கிற அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார் நண்பர் ஸ்டார்ஜன் (Starjan ). உயோரோடை சிறுகதைப் போட்டியில் முதல் முறையாக இவருடைய பதிவை படித்ததாக ஞாபகம். கவிதை, சினிமா, அரசியல் என்று எல்லாப் பக்கமும் புகுந்து புறப்படுகிறார். காந்தி ஜெயந்தி அன்று அவர் எழுதி இடுகை இங்கே..

நகைச்சுவை, சமூகப் பொறுப்பு என்று நம் உள்ளம் கவர்கிறார் நாஞ்சில் பிரதாப். இவருடைய தளம் - நாஞ்சில் எக்ஸ்பிரஸ். அவ்வப்போது மலையாளப் பட விமர்சனங்களும் எழுதுகிறார். என்னது? ச்சே ச்சே.. அது இல்ல.. எல்லாம் அருமையான கதையம்சம் கொண்ட மலையாளப் படங்கள் பத்திதான்ப்பா.. பசுநேசனை வைத்து வார்னர் பிரதர்ஸ் படம் தயாரிச்சா எப்படிம் இருக்கும்கிற அவருடைய கற்பனையை வாசிச்சு சிரிங்க..

டெரராக எழுதி வாசிப்பவர்களை டரியல் ஆக்குகிறார் புலவன் புலிகேசி. கதைகள், கவிதைகள் என எல்லாம் கலந்து எழுதுகிறார். கடவுளை எங்கெல்லாம் தன்னால் பார்க்க முடிகிறது என அவர் சொல்லும் இந்த இடுகை கொள்ளை அழகு.

அஸ்ஸாமில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் நண்பர் தேவராஜ் விட்டலன். எஸ்ராவின் ரசிகர் என்ற ஒரு காரணம் போதுமே.. நான் இவரை வாசிப்பதற்கு. உணர்வுப்பூர்வமாக கட்டுரைகள் எழுதக் கூடியவர். நல்ல கவிஞர். சொந்தமாக ஒரு கவிதை தொகுதியும் வந்திருக்கிறது.தொலைந்து வரும் கடிதங்கள் எழுதும் பழக்கம் பற்றிய அவரது ஆதங்கம் இங்கே இடுகையாய் வெளிப்படுகிறது.

இது போல இன்னும் பலர் இருக்கிறார்கள். தினம் தினம் புதிது புதிதாக எழுத வரும் பதிவர்களாலேயே நம் பதிவுலகம் வெகு ஆரோக்கியமாக இயங்கி வருகிறது என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

புத்தகம்

நாணல் பைத்தியம்

அகநாழிகை இதழில் வெளியான மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் மூலம் எனக்கு அறிமுகம் ஆனவர் - எஸ்.ஷங்கரநாராயணன். சில நாட்களுக்கு முன்பு நூலகத்தில் துழாவிக் கொண்டிருந்தபோது எதேச்சையாக இந்த புத்தகம் கிடைத்தது. மனநிலை பாதிக்கப்பட்டோரை கதையின் மாந்தராகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. படித்து முடிக்கும்பொழுது நம் மனதில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கணம் சேர்ந்து கொள்கிறது. நம் வாழ்வில் இது போல நாம் சந்தித்த பல மனிதர்கள் பற்றிய கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறது. மனதை உருக்கும் புத்தகம்.

வெளியீடு - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், தஞ்சை
விலை - ரூ. 75/-

உலக சினிமா

Pulp Fiction

குவிண்டின் டொராண்டிநோவின் மிகச் சிறந்த படம் என்று பல்ப் பிக்ஷனை சொல்லலாம். திரைக்கதை வடிவத்தில் ஒரு புது புரட்சியை உண்டு பண்ணிய படம். 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. படம் பற்றி நண்பர் ஹாலிவுட் பாலா எழுதிய விரிவான விமர்சனம் இங்கே..

24 comments:

 1. நீங்கள் அறிமுகப்படுத்திய அனைவரும் நல்ல இடுகையாளர்கள் . அவர்களில் நானும் ஒருவன் என்னும்போது பெருமையாக உள்ளது கார்த்திக் .

  வாழ்த்துக்கள் , தொடரட்டும் தங்கள் கலைப்பணி .

  ReplyDelete
 2. ஹைய்யா நாந்தான் முதல்லயா ...


  ரொம்ப நன்றி கார்த்திக் சார் .

  ReplyDelete
 3. அப்பாடா, நீங்க ஒருத்தராவது மறுமொழி போட்டீங்களே.. ராத்திரி பதிவு போடுறதுல பெரிய இம்சையே இதுதான்..இனிமேல நிம்மதியா தூங்கலாம்..:-))

  நன்றி நண்பா..

  ReplyDelete
 4. பதிவு வழக் கலக்.

  அப்பறம், பிப்-14 வாழ்த்துகள் தல..!

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அறிமுகத்திற்கு நன்றி சார்.

  நீங்கள் அறிமுகப்படுத்தியவர்களில் சிலரைத்தவிர அனைவரும் அறிந்தவர்கள்தான்.

  தாங்கள் அறிமுகப்படுத்திய விதம் அருமை.

  ReplyDelete
 7. அனைவரும் அருமையான அறிமுகங்கள்

  அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 8. நன்றி சார்
  தேவராஜ் விட்டலன்
  அஸ்ஸாம்
  http://vittalankavithaigal.blogspot.com

  ReplyDelete
 9. கார்த்தி

  புதிய பதிவர்களைத் தேடிப் ப(பி)டித்து, அறிமுகம் செய்தமை நன்று

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 10. புதியவர்களை வரவேற்போம்!!

  ReplyDelete
 11. //♠ ராஜு ♠ said...
  பதிவு வழக் கலக். அப்பறம், பிப்-14 வாழ்த்துகள் தல..!//

  நன்றி டக்கு

  //விஜய் said...
  வாழ்த்துக்கள்//

  நன்றி பாசு..

  //அக்பர் said...
  அறிமுகத்திற்கு நன்றி சார்.நீங்கள் அறிமுகப்படுத்தியவர்களில் சிலரைத்தவிர அனைவரும் அறிந்தவர்கள்தான்.தாங்கள் அறிமுகப்படுத்திய விதம் அருமை.//

  நன்றிங்க.. எனக்கு புதுசா கண்ணுல பட்ட மக்கள் நீங்க எல்லாம்.. இன்னும் நல்லா எழுத வாழ்த்துகள்..

  ReplyDelete
 12. // பிரியமுடன்...வசந்த் said...
  அனைவரும் அருமையான அறிமுகங்கள்
  அனைவருக்கும் வாழ்த்துகள்//

  நன்றி தல..

  ///vittalan said...
  நன்றி சார்
  தேவராஜ் விட்டலன்
  அஸ்ஸாம்//

  :-)))))))

  ReplyDelete
 13. // cheena (சீனா) said...
  கார்த்தி புதிய பதிவர்களைத் தேடிப் ப(பி)டித்து, அறிமுகம் செய்தமை நன்று
  நல்வாழ்த்துகள்//

  உங்க மூலமா எனக்கு நிறைய புது அறிமுகங்கள் ஐயா.. நன்றி

  //தேவன் மாயம் said...
  புதியவர்களை வரவேற்போம்!!//

  அதேதான் டாக்டர் சார் :-))))

  ReplyDelete
 14. மிக்க நன்றி கார்த்தி.. நீங்க என்னை படிக்கிறீர்கள் என்பதே இப்போ தான் தெரிந்தது. (இதுவரை என் பதிவில் நீங்கள் பின்னூட்டம் இட்டதில்லை). பதிவர்கள் அனைவரும் பின்னூட்டம் எதிர் பார்ப்பார்கள் என நீங்கள் எழுதிய விதம் அருமை.

  நான் முன்பு அவ்வபோது தான் எழுதினேன். நவம்பர் 09 முதல் தமிழிஷ், தமிழ் மணம் இவற்றில் எனது ப்ளாகை இணைத்தேன். அதன் பின் நிறைய பின்னூட்டம் வர துவங்க, ஆர்வமுடன் தற்போது வாரம் சில பதிவுகளாவது எழுதுகிறேன். மிக்க நன்றி

  ReplyDelete
 15. வழக்கமான வாழ்த்துக்கள் பாண்டியன்..இதில் சங்கவி நண்பரே இன்னும் சிலரையும் அறிவேன்...சங்கவி பதிவுகள் பெரும்பாலும் பயனுள்ள பதிவுகள் எந்த நிகழ்வையும் உபயோகமா பயன்படுத்தி பதிவெழுதுவதில் இவருக்கு நிகர் இவரே...ஷங்கர் அவரா இவர்..பெயர் மாற்றம் நல்லது..அறிமுகங்களை அறியவைத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் புது நண்பர்களுக்கு....

  ReplyDelete
 16. அருமையான அறிமுகங்கள் கார்த்திக். அக்பர், ஸ்டார்ஜன், மோகன் குமார், நாஞ்சில் பிரதாப், தேவராஜ் விட்டலன், புலவன் புலிகேசி, சங்கவி அனைவரும் என் நண்பர்கள். மற்ற நண்பர்களையும் இனி வாசிக்கிறேன்.

  ReplyDelete
 17. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. ஸ்டார்ஜன், அக்பர், பேநா மூடி ஆகியோரின் எழுத்துக்களை ஏற்கெனவே ரசித்திருக்கிறேன்...
  மற்றவர்கள் இன்றுதான் அறிமுகமாகிறார்கள்...
  படித்து ரசித்தப் பதிவுகள் மட்டுமின்றி அவற்றுள் ரொம்பக் கவர்ந்த இடுகைகளின் லிங்க் கும் கொடுத்திருப்பது ரொம்ப சிறப்பு நண்பா.....
  அருமையான பகிர்வு... :)

  ReplyDelete
 19. நிறையப் பதிவர்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 20. //மோகன் குமார் said...
  மிக்க நன்றி கார்த்தி.. நீங்க என்னை படிக்கிறீர்கள் என்பதே இப்போ தான் தெரிந்தது. (இதுவரை என் பதிவில் நீங்கள் பின்னூட்டம் இட்டதில்லை). பதிவர்கள் அனைவரும் பின்னூட்டம் எதிர் பார்ப்பார்கள் என நீங்கள் எழுதிய விதம் அருமை. //

  தொடர்வது கிடையாது எனும்போதும் கண்ணில் படும்போதெல்லாம் படிக்கிறேன் நண்பா

  //தமிழரசி said...
  வழக்கமான வாழ்த்துக்கள் பாண்டியன்..//

  நன்றி தமிழ்..

  //செ.சரவணக்குமார் said...
  அருமையான அறிமுகங்கள் கார்த்திக். அக்பர், ஸ்டார்ஜன், மோகன் குமார், நாஞ்சில் பிரதாப், தேவராஜ் விட்டலன், புலவன் புலிகேசி, சங்கவி அனைவரும் என் நண்பர்கள். மற்ற நண்பர்களையும் இனி வாசிக்கிறேன்.//

  ரைட்டு நண்பா.. நன்றி

  ReplyDelete
 21. // Chitra said...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

  :-))))

  //பிரபு . எம் said...
  ஸ்டார்ஜன், அக்பர், பேநா மூடி ஆகியோரின் எழுத்துக்களை ஏற்கெனவே ரசித்திருக்கிறேன்...
  மற்றவர்கள் இன்றுதான் அறிமுகமாகிறார்கள்...படித்து ரசித்தப் பதிவுகள் மட்டுமின்றி அவற்றுள் ரொம்பக் கவர்ந்த இடுகைகளின் லிங்க்கும் கொடுத்திருப்பது ரொம்ப சிறப்பு நண்பா.அருமையான பகிர்வு... :)//

  நல்லது நண்பா.. தொடர்ந்து எல்லொரையும் படியுங்கள்..

  //ஜெஸ்வந்தி said...
  நிறையப் பதிவர்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். நன்றி.//

  அடடா.. கவிதைகள் மற்றும் கவிஞர்கள் பற்றி எழுதும்போது உங்களை எப்படி மிஸ் செய்தேன்?

  ReplyDelete
 22. அக்பர், ஷங்கர் ,ஸ்டார்ஜன் ,புலிகேசி ,
  மோகன் குமார், சங்கவி என்ற என் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ...!!!இவர்களைப்பற்றித் தொகுத்த கார்ர்த்திகைப் பாண்டியன் அவர்களுக்கு நன்றி ...!!!

  ReplyDelete
 23. நண்பரே என்னை அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது