07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 19, 2010

"வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்."

நண்பர்களே வணக்கம்,இன்னைக்கு ஒரு வழியா ஐந்து அம்மிணிகளை தேடிப்பிடுச்சு உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போறேன்,எப்பவும் போல உங்க ஆதரவ வேண்டி இந்த கைப்புள்ள களமேறங்கி இருக்கேன். 

---------------------------------------------------------------------------------------------
சித்ரா: அமெரிக்காவில் வசிக்கும் வலைப்பதிவர்,தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று ஒரு காலத்தில் அழைக்க ப்பட்ட பாளையங்கோட்டையில் பிறந்தவர்,[நானும் இங்கு தான் ஆசிரிய பயிற்சி படித்தேன் ]கொஞ்சம் வெட்டிப்பேச்சு என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்.நான் ரசிக்கும் வலைப்பதிவர்.சித்ராவின் எழுத்து நடைக்கு இவருக்கு வரும் பின்னூட்டங்களே சாட்சி.சராசரியாக 60 பின்னூட்டங்கள் ஒவ்வொரு இடுகைக்கும் வருகிறது.நிறைய வலை நண்பர்கள் இவரது வலைத்தளத்தை பிரித்து மேய்கிறார்கள்,நீங்களும் கட்டாயம் மேய வேண்டிய வலைத்தளம்.போய் பாருங்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------
பிரியா:பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வலைப்பதிவர்,என் மனதில் இருந்து என்ற பெயரில் வலைப்பூ செதுக்குகிறார்.புகைப்பட கலையிலும்,ஓவியக்கலையிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கிறார்.ரசித்து வரைந்தவை,உணர்ந்து வரைந்தவை,வியந்து எடுத்தவை,என்ற தலைப்புகளில் சென்று பாருங்கள்,அங்கே பளிச்சிடுகிறதுஅவரதுதிறமை.அப்படியே சொக்கிப்போவீர்கள்.
----------------------------------------------------------------------------------------------------------------
ஸாதிகா ஹசானா:பெயரே நல்ல ரிதமா இருக்குல.எல்லாப்புகழும் இறைவனுக்கே,என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்.சென்னையில் வசிக்கிறார்,கட்டுரைகள்,அனுபவங்கள்,சமையல்,சிறுகதை,சரித்திரம்,குழந்தை வளர்ப்பு,என்று பின்னுகிறார்,கதாப்பாத்திரங்கள் என்ற தலைப்பில் நான்கு பதிவுகள் எழுதிஉள்ளார்.படித்துப்பாருங்கள்,அசந்து போவீர்கள்.ஒவ்வொரு இடுகைக்கும் அசத்தல் போட்டோக்கள் இணைத்து அசத்துகிறார்.
------------------------------------------------------------------------------------------------------------------
தேனம்மை லச்சுமணன்:சென்னையில் வசிக்கும் இவர் சும்மா என்ற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார்.எல்லாபதிவுகளையும் ரசித்து எழுதுகிறார்,இதே பெயரில் சமையல் குறிப்பிற்கான ஆங்கில வலைப்பூவும்,நடத்துகிறார்.படித்து பாருங்கள் பெயருக்கேற்றார் போல இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
பத்மா:டெல்லியில் வசிக்கிறார்,கணக்கியல் துறையில் பணிசெய்கிறார்.padma reaches என்ற பெயரில் ஆங்கில கவிதைக்கான வலைப்பூ நடத்துகிறார்.எல்லாமே ரசிக்கும் படியாய் இருக்கிறது,இனி இவர் தளத்தை தினமும் படிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு தொற்றிக்கொண்டது,வத்தக்குழம்பு என்ற பெயரில் சமையல் குறிப்புக்கான ஆங்கில வலைப்பூ நடத்துகிறார்,தமிழில் காகித ஓடம் என்ற பெயரில் வைத்துள்ளார்,முழுக்க முழுக்க கவிதைகளே இருக்கிறது,கவிதைகளுக்கு புகைப்பட தேர்வு வெகு நேர்த்தி,ஐயகோ என்ற தலைப்பில் உள்ள கவிதையை படித்து பாருங்கள்,பத்மா யாரென்று தெரியும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து வாருங்கள்,    நாளும் ...அன்பில் ..தொடர்வோம்

32 comments:

 1. நடத்துங்க.. நல்ல பகிர்வு.. எல்லாம் சக்திகள் :)

  ReplyDelete
 2. ஆகா ஆகா

  அஞ்சு அம்மிணிகளைத் தேடிப் பிடிச்சு, படிச்சு, ரசிச்சு அறிமுகப்படுட்திட்டீங்க - நன்று நன்ரு நல்ல செயல்

  தேனம்மை தவிர மற்ற அனிவர் வீடுகளூக்கும் செல்கிறேன் இப்போதே

  நல்வாழ்த்துகள் ஜெரி

  ReplyDelete
 3. அருமையான அறிமுகம்...

  ReplyDelete
 4. D.R.Ashok said...
  நடத்துங்க.. நல்ல பகிர்வு.. எல்லாம் சக்திகள் :)//

  ரிப்பீட்டு..:)

  ReplyDelete
 5. ஜெர்ரி சார், மிக்க நன்றி. வலைப்பதிவு நண்பர்கள், மற்ற பதிவர்களை உற்சாகப்படுத்தி வரவேற்கும் அன்புக்கும் வணக்கம்.

  ReplyDelete
 6. ஆஹா என்ன இது ? எதோ எனக்கு தெரிந்தவற்றை கிறுக்கி என் நண்பர்களை வலிய படிக்க சொல்லி கஷ்டப்படுத்தி கொண்டிருந்தேன் .எனக்கு இப்படி ஒரு அங்கீகாரம் தந்து விட்டீர்கள் .இந்நாள் எனக்கு ஒரு பொன்னாள்.நன்றி நன்றி

  ReplyDelete
 7. அறிமுகத்திற்கு நன்றி சார்.

  தேனம்மை அக்காவை ஏற்கனவே தெரியும்.

  ReplyDelete
 8. மாமா... இந்த ஐந்து அறிமுகங்களுக்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
  ரொம்ப சிறப்பான பணி இந்த ஐந்து நாட்களும்... நாளும் புதுப்புது எழுத்துக்களால் திளைத்து வருகிறோம்...
  எல்லா அறிமுகங்களுமே (அநேகமாக என்னைத் தவிர!) அற்புதம்....

  ஐந்து பேரின் லேட்டஸ்ட் இடுகைகளைப் படித்துவிட்டேன்.....
  உங்கள் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது... ஆறாவது பால் சிக்ஸருக்காக வெய்டிங் :)

  ReplyDelete
 9. வித்யாசமான அவஸ்மான அறிமுகங்கள். கருப்பு நிறம் இல்லாத பெண்மணிகள் இவர்கள் அத்தனை பேர்களும் கண்மணிகள். இடுகையும், இடுகைகள் எழுதுபவர்கள் இடமும் குறிப்பிடத்தக்கது. தேனம்மை வளர்ச்சியும், சேர்ந்த சேர்த்த கூட்டம் வளர்த்துக் கொண்ட திறமை பிரமிக்கத்தக்கது.

  ReplyDelete
 10. சித்ராவின் சிரிப்பலை சத்தம் நல்லா கேட்கும், ஸாதிக்காவையும் தெரியும்

  பா.ராவிலிருந்து இன்று தான் பத்மாவை பார்த்து நானும் சிறுவனானேன்.

  மற்றவர்களையும் பார்க்கிறேன்

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. .நிறைய வலை நண்பர்கள் இவரது வலைத்தளத்தை பிரித்து மேய்கிறார்கள்,நீங்களும் கட்டாயம் மேய வேண்டிய வலைத்தளம்.போய் பாருங்கள்.///

  கட்டாயம், நிறைய பின்னூட்டமிடுபவரும் கூட!

  ReplyDelete
 12. எப்படியடா மாறிப்போனேன்?
  எனக்கு இதுதான் பிடிக்கும்… இது என்னுடையது… என்றிருந்தேனே.
  என் பொருட்களை நான் உபயோகிப்பதை வேறு யார் தொட்டாலும் பிடிக்காதே… அத்தனை பிடிவாதமும் எங்கேயேடா சென்றது?
  விவரம் அறிய‌ ஆரம்பித்த வயதிலிருந்தே நான்… எனது… என்றிருந்த வார்த்தைகள் இன்று நாம் என்று மாறிப்போனதேனடா?///

  பிரியா! வாடா போடான்னு ஒரே ரகளை போங்க!!

  ReplyDelete
 13. வெறும் நாலு... பத்து ருவாயின்னு
  தங்க சோளகதிர வித்தா ......
  ஆறு கேட்டு பேரம் பேசி...
  வாங்காம போய் வயித்திலடிக்கும்....
  'கப்பு' முப்பதுனாலும் சரி
  சொன்ன விலைய சிரிச்சு கொடுத்து
  "அமெரிக்க சுவீட்கார்ன்"வாங்கி தின்னும்
  சொரண கெட்ட நம்ம சனம் .///

  பத்மாவின் வரிகள் அபாரம்!!

  ReplyDelete
 14. நல்ல பகிர்வு நண்பரே. தொடருங்கள்..

  ReplyDelete
 15. எதிர்பார்க்கவேயில்லை ஜெரி ரொம்ப இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்

  ReplyDelete
 16. அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 17. //படித்து பாருங்கள் பெயருக்கேற்றார் போல இருக்கும்.//

  ஹா ஹாஹா சும்மா இருக்கும் என்கிறீர்களா அல்லது தேன் போல இருக்கும் என்கிறீர்களா புரியவில்லை ஜெரி

  ReplyDelete
 18. நன்றி சீனா சார்

  முன்பே ஒரு முறை வானம்பாடிகள் என்னைப்பற்றி இந்த வலைச்சரத்தில் எழுதி இருக்கிறார்

  ReplyDelete
 19. நன்றி ஜோதிஜி உங்க எழுத்துக்கு முன்னாடி நாங்கெல்லாம் ஒண்ணுமே இல்லை நன்றி என்னைப் பாராட்டியதற்கு

  ReplyDelete
 20. ஜெரி, எல்லாமே அருமை. இதில் தேனம்மை, பத்மா இருவரும் ஏற்கனவே அறிமுகமான பதிவர்கள். மற்றவர்களை இன்றிலிருந்து வாசிக்கலாம். அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 21. ஜெரி, எல்லாமே அருமை. இதில் தேனம்மை, பத்மா இருவரும் ஏற்கனவே அறிமுகமான பதிவர்கள். மற்றவர்களை இன்றிலிருந்து வாசிக்கலாம். அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 22. புதிதாக சிலரை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்... இனிமேல்தான் படிக்கணும்... நன்றிங்க சார்...

  ReplyDelete
 23. அருமையான பகிர்தல் ஜெரி!நன்றி.

  ReplyDelete
 24. ஜெரி சார் , கலக்கிட்டீங்க போங்க ...

  ஐந்து சாதனையாளர்களை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி ..
  எனக்கு இவர்கள் தளத்துக்கு தினமும் போயிட்டு வருபவன் . அதிலும் தேனம்மை அக்கா நல்ல கவிஞர் , சாதனையாளர் .

  நான் இவர்கள் எழுத்துக்கு ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன் .

  ReplyDelete
 25. பின்னூட்டம் வழியாக என்னை ஆதரித்த அனைத்து நண்பர்களையும் வணங்குகிறேன்,நன்றி,நாளும் ...அன்பில் ...தொடர்வோம்

  ReplyDelete
 26. அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. //தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று ஒரு காலத்தில் அழைக்க ப்பட்ட //

  இப்பவும் ஆக்ஸ்போர்டுதான்...

  நெல்லையை குறைச்சு மதிக்காதீங்க சாரே....

  நல்ல அறிமுகம்.. சிலரை படித்திருக்கிறேன். மற்றவர்களையும் இனி தொடர்ந்து படிக்கிறேன்

  ReplyDelete
 28. புதிய அறிமுகங்களுக்கு நன்றி ஜெரி.

  சித்ரா, தேனாம்மைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. ஏற்கனவே உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களை மேலும் உயர்த்த வழி சேர்க்கும் இந்தப் பதிவு சிறப்பானது.

  தங்கை சித்ராவையும், தேனம்மையையும் நான் ஏற்கனவே அறிவேன். மற்ற மூவரின் படைப்புகளையும் இன்று முதல் வாசிப்பேன்.

  ReplyDelete
 30. சகோதரர் ஜெரி ஈசானந்தா,என்னை தங்கள் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி.மகிழ்ச்சி.தங்களின் இந்த அறிமுகப்படலம் என்னை இன்னும் உத்வேகத்துடன் வலைஉலகில் செயல்படத்தூண்டும் என்பதும் உண்மை.மீண்டும் நன்றி!பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது