07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 14, 2011

வலைச்சரத்தில் திங்கள்.


வணக்கம்

வலைச்சரத்தில் என்னை ஆசிரியர் பணிக்கு அழைத்த திரு சீனா ஐயா அவர்களுக்கும், என்னை பரிந்துரை செய்த திரு கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற கொடுக்கப்பட்டுள்ள நாட்கள் ஏழு. 7--.இந்த எண் நம் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்துள்ள ஒன்று. ஆம், நம் கண்களுக்கு விருந்தளிக்கும் வானவில்லின் நிறங்கள் ஏழு, காதுகளுக்கு விருந்தளிக்கும் சங்கீத ஸ்வரங்களும் ஏழு, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் உலக அதிசயங்களும் ஏழு தான். அதுபோலவே நாம் காலத்தை எளிதாக கணக்கிட ஏற்படுத்தபட்டுள்ள வாரத்திற்கும் நாட்கள் ஏழு.

திங்கள்.

File:Lunar libration with phase Oct 2007 450px.gifவாரத்தின் முதல் நாள். திங்கள் என்பது சந்திரனை குறிக்கும். சந்திரன் நமது பூமியை சுற்றிவரும் இயற்கை கோள். இது பூமியிலிருந்து சுமார் 3 இலட்சத்து 85 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன் ஈர்ப்புவிசை பூமியின் ஈர்ப்பு விசையினைவிட சுமார் 6 மடங்கு குறைவு. மனிதன் முதலில் காலடி பதித்த வேற்று கிரகம் இதுதான். இந்த அறிவியல் தகவல்களை ஒதுக்கிவிட்டு பார்த்தோமானால், சந்திரன் அல்லது நிலா என்றவுடன் நமக்கு நினைவுக்கும் வருவது அது தரும் குளிர்ச்சிதான். இரவு நேரத்தில் வானத்தில் கம்பீரமாக உலாவரும் இந்த அழகிய வெண்ணிலவை பாடாத கவிஞர்களே கிடையாது எனலாம்.


அப்படிப்பட்ட நிலவைக் குறிக்கும் திங்களன்று சுய அறிமுகம்.

எனக்கு எழுதுவதைவிட படிப்பது மிகப்பிடிக்கும். படிப்பது என்பது சுவாசிப்பது மாதிரி. எப்படிப்பட்ட புத்தகம் என்பது இல்லை, கையில் கிடைக்கும் நல்ல விஷயம் யாவற்றையும் படித்துவிடுவேன். அப்படி மற்றவர்களின் பதிவுகளை படித்துப்பார்த்த பொழுது நாமும் ஒரு பதிவு ஆரம்பித்து நம்முடைய எண்ணங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றவே நான் ஆரம்பித்த பதிவுதான் மதுரகவி. இதன் பெயர் காரணத்தினை இங்கே குறிப்பிட்டு உள்ளேன்.
அப்படி நான் எழுதிய பதிவுகளில் எனக்கு பிடித்த பதிவுகள் சில:

இப்பதிவை எழுதிவிட்டு படித்து பார்த்தபொழுது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது, என்னாலும் 10 வரிகள் தொடர்ச்சியாக எழுத முடியுமா என்று.அது,--சொந்த ஊரைப்பற்றி யாராவது கேட்டால் எல்லோருக்குமே சந்தோஷமான உணர்வு வரும். ஊரில் உள்ள குறைகள்,கஷ்டங்கள் ஆகியவற்றை பெரிது படுத்தாமல் நம் ஊரைப்பற்றி பெருமை அடித்துக்கொள்வோம். அப்படி நாம் பெருமை பேசிய ஊர் பற்றிய பதிவு.---


கிரிகெட்டுக்கு தரும் ஆதீத முக்கியத்தினை குறைத்து மற்ற விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று என் ஆதங்கத்தினை வெளிபடுத்த எழுதிய பதிவு—
விளையாட்டு..


அண்டை மாநிலமான கர்நாடக மக்கள் தமிழர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதினை என் அனுபவத்தில் உணர்ந்து நான் இட்ட பதிவு—
தமிழன் என்று சொல்லடா....


சிறு வயதில் பண்டிகை என்றால் எவ்வளவு சந்தோஷம் என்றும், எப்படி கொண்டாடுவோம் என்றும், என் சிறு வயது பண்டிகை நினைவுகளை பகிர்ந்த பதிவு--
கோகுலாஷ்டமி/கிருஷ்ணஜயந்தி.


கையில் எழுதுவது குறைந்து விட்டது என்று நான் வருத்தப்பட்டு எழுதிய பதிவு—
கையெழுத்து..நல்ல எண்ணங்களே நல்ல செயல்களாகும் என்பதினை அறிவுறுத்தி நான் எழுதிய பதிவு.—
எண்ணம்..செயல்...என்னுடைய பதிவுகளில் எனக்கு மிகப் பிடித்த ஆன்மீக பதிவு—

என்னுடைய முதல் கதை, நான் சவால் சிறுகதை 2011க்காக எழுதிய--என்னுடைய சுய புராணத்தை இத்துடன் முடித்துக்கொண்டு நாளை சந்திக்கிறேன்.

நன்றி.
ரமாரவி.

48 comments:

 1. அறிமுகம் சூப்பர்.

  கலக்குங்க.

  \\சுந்தர கண்டம்\\

  மாத்திடுங்க. நன்றி

  ReplyDelete
 2. மிக்க நன்றி கோபி..

  (//சுந்தர காண்டம்// --சரி செய்து விட்டேன் நன்றி)

  ReplyDelete
 3. மிக அழகான சுய அறிமுகம்...யதார்த்தமாக சொன்ன விதம் அருமை. உங்கள் பதிவுகள் படிக்க தொடங்கிவிட்டேன்...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மிகுந்த மகிழ்ச்சி ராம்வி. அசத்துங்க இந்த வாரம்

  ReplyDelete
 5. அறிமுகப்படலத்தையே
  அருமையாக,
  அசத்தலாக,
  புதுமையாக,
  புத்துணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக பொலிவுடன் தொடங்கியுள்ளீர்கள்.

  வாழ்த்துக்கள். சிறப்பாகப் பணியாற்றிட என் அன்பான ஆசிகள். vgk

  ReplyDelete
 6. வாழ்த்துகள் கோபி சார்
  சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துகள் ராம்வி.

  ReplyDelete
 7. இந்த வாரம் ராம்வியுடனா? மதுரமான அறிமுகங்களைத் தர வாழ்த்துக்கள், ராம்வி.

  ReplyDelete
 8. கலக்குங்க, தொடர்கிறேன்

  ReplyDelete
 9. அழகான நிலவுப் படத்தோட அருமையான சுய அறிமுகம்.. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 10. மிக்க நன்றி கெளசல்யா..

  ReplyDelete
 11. மிக்க நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 12. மிக்க நன்றி மாதவி.

  ReplyDelete
 13. மிக்க நன்றி ஐயா..

  ReplyDelete
 14. மிக்க நன்றி,திருமதி ஸ்ரீதர்..

  ReplyDelete
 15. மிக்க நன்றி சாகம்பரி மேடம்.

  ReplyDelete
 16. மிக்க நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 17. மிக்க நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 18. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்...

  அழகான சுய அறிமுகம்...

  கலக்குங்க அக்கா.

  ReplyDelete
 19. பொறுப்பேற்ற ஆசரியருக்கு பாராட்டுக்கள்.

  இந்த வாரம் கலைகட்ட வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.. !!

  சுய புராணமாக இருந்தாலும் சுவராஸ்யமாகத் தானே இருக்கிறது..!!

  பகிர்வுக்கு நன்றி..!! வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 21. நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.


  எனது வலையில் இன்று ஒரு சுய முன்னேற்றப் பதிவு:
  காளான் வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

  நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் சகோ கலங்குங்கள் தொடர்கின்றோம்

  ReplyDelete
 23. ரமா வாங்க வாங்க அறிமுகம் நல்லா இருக்கு தொடர்ந்து சிறப்பாக ஆசிரியர் பொறுப்பை நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. அசத்தலான துவக்கம்
  அருமையான அறிமுகம்
  தொடர்ந்து வருகிறோம் ஜமாயுங்கள்
  இந்த உங்கள் வாரம்
  வலைச்சரத்தின் சிறந்த வாரமாக அமைய
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. வாங்க.. வாங்க...
  அன்பு சகோதரி...
  அழகான இயல்பான சுய அறிமுகம்..

  வலைச்சரப்பணி சிறந்து விளங்க
  அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. மிக்க நன்றி குமார்.

  ReplyDelete
 27. மிக்க நன்றி இந்திரா.

  ReplyDelete
 28. மிக்க நன்றி தங்கம்பழனி

  ReplyDelete
 29. மிக்க நன்றி K.s.s.Rajh

  ReplyDelete
 30. மிக்க நன்றி லக்‌ஷ்மி அம்மா.

  ReplyDelete
 31. மிக்க நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 32. மிக்க நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 33. மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ..தங்கள் ஆசிரியர் பணி சிறக்க..

  வாழ்த்துக்களுடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 34. அருமையான அறிமுகத்துடன் ஆரம்பித்துள்ளது வலைச்சர வாரம்...

  ஆசிரியர் பணி சிறப்பாய்ச் செய்ய வாழ்த்துகள்... வாரம் முழுதும் அசத்துங்கள்.....

  ReplyDelete
 35. மிக்க நன்றி சம்பத் குமார்.

  ReplyDelete
 36. மிக்க நன்றி, வெங்கட்.

  ReplyDelete
 37. ஆஹா!மதுரமான கவி போல் ரமாரவியின் அறிமுகம் குளிர்ச்சியான திங்களில் ஆர்வத்தை கூட்டுகிறது.இன்றே தங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் படிக்கிறேன்

  ReplyDelete
 38. வலைச்சர ஆசிரியர் ராம்விக்கு வாழ்த்துகள். கலக்குங்க.

  ReplyDelete
 39. அசத்தல் ஆரம்பம்.தொடருங்கள்.

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள் ராம்வி..

  தங்கள் நலமிக்க பதிவுகளைப் படித்தேன்.

  தங்கள் மீதுகொண்ட மதிப்பு அதிகமாகியுள்ளது...

  தங்களைப் போன்ற பதிவர்கள் பாராட்டுதலுக்கும்..
  போற்றுதலுக்கும் உரியவர்கள்.

  தொடர்ந்து எழுதுங்க ராம்வி.

  ReplyDelete
 41. சிறப்பாய்ச் செய்ய வாழ்த்துகள். அசத்துங்கள் !

  ReplyDelete
 42. மிக்க நன்றி ராஜி.

  ReplyDelete
 43. மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete
 44. மிக்க நன்றி சென்னை பித்தன் சார்.

  ReplyDelete
 45. மிக்க நன்றி முனைவர் திரு.குணசீலன்,தங்களின் வாழ்த்துகளுக்கு.

  ReplyDelete
 46. மிக்க நன்றி மாதவன் தங்களின் வாழ்த்துக்கு.

  ReplyDelete
 47. உங்களைப்பற்றிய அறிமுகங்கள் அருமை... அசத்துங்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது