07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 24, 2011

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

தமிழில் வலைப்பூக்கள் பல ஆயிரம்,நாம் தொடர்வது கூட நிறைய இருக்கும். ஆனால் சிலர் வலைப்பூவில் மட்டும் எப்போடா போஸ்ட் வரும் என்று ரஜினி பட ரீலிஸ் மாதிரி காத்திருந்து,அவர் போட்ட உடன் ஓடிப்போய் அவசர அவசரமாய் படிப்போம். ஆனால் திடீர் என்று அவர்கள் பதிவுலகம் பக்கம் வராமல் நம்மை ஏமாற்றி விடுவார்கள். நாமும் சில நாளில் மறந்து விடுவோம். அத்தகைய சிலர் பற்றிய அறிவிப்பு இங்கே. 

முதல் ஆளு, நம்ம சேட்டைக்காரன். பதிவுலகில் கிட்டதட்ட நிறைய பேர் இவரை விரும்பி படிப்பார்கள். ஆனால் திடீர் என்று  கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதிவிட்டு போய்விட்டார். மிக மிக வருத்தம் நிறைய பேருக்கு. ஆனால் எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் நம்மை சிரிக்க வைத்துள்ளார். சகோ உங்கள் துயரங்கள் எல்லாம் சரியாகும். காத்திருக்கிறோம் உங்கள் நகைச்சுவைக்கு மீண்டும், மீண்டு வாருங்கள் விரைவில். (நேற்று நான் இவரது வலைப்பூவுக்கு செல்ல முயன்ற போது இவரது வலைப்பூ நீக்கப்பட்டு உள்ளது. )

அடுத்து நம்ம பதிவுலகில் பாபு அண்ணா. என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க முடியாத ஆள். திரை விமர்சனத்தில் பெரிய கில்லாடி. அதுவும் ஆங்கில திரைவிமர்சனம் என்றால் பட்டையை கிளப்புவார். IT'S A WONDERFUL LIFE - திரை விமர்சனம் அதற்கு ஒரு உதாரணம். கிரெடிட் கார்டு பற்றிய இவரது இரண்டு பதிவுகளும் கிரெடிட் கார்டு உள்ள/வாங்க உள்ள எல்லோரும் படிக்க வேண்டியது.அத்தோடு இவரது அனுபவப்பதிவுகள் எல்லோரும் படிக்க வேண்டியது.  ஆனா அதிகமான வேலைப்பளு என்று சொல்லி பதிவுகலகம் பக்கமே காணோம். (ஒரே ஊர்ல இருக்கோம் இன்னும் பார்க்க கூட முடியல). சீக்கிரம் வாங்க அண்ணா. 


அடுத்து அண்ணன் எஸ்.கே, மிகப் பெரிய திறமைசாலி பதிவர் இவர். இவரின் மனம்+ வலைப்பூவில் அடோப் ஃபிளாஷ் பற்றிய பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாய் உள்ளன. உங்களுக்கும் கூட இருக்கலாம். ஆனால் பாதியில் நிறுத்தி விட்டார். அத்தோடு எதுவும் நடக்கலாம் என்ற வலைப்பூவில் நாவல்(BLACK RIVER), சிறுகதை என்று பட்டையை கிளப்பினார், ஆனால் அங்கே இப்போது எதுவும் நடக்கவில்லை. தொடர்ந்து எழுதுங்க அண்ணா. 


அடுத்து நம்ம சகோ சுடுதண்ணி, இவர் எழுதிய விக்கிலீக்ஸ் பற்றிய பெரிய தொடர் பதிவில் இவரிடம் சிக்கியவர்கள் என்னையும் சேர்த்து பலர். அத்தோடு, சூடாக வந்த ஸ்விஸ் வங்கி பற்றியவை மிகவும் சூடு. நல்ல பதிவர் இணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்... என்ற பதிவு பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வேண்டியது. இதுவே தற்போது இவரது கடைசி பதிவும் கூட. மே மாதத்துக்கு பின் எந்தப்பதிவும் இவர் எழுத வில்லை. இவர் கண்டிப்பாக தொடர்ந்து எழுத வேண்டும். 


அடுத்து ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி அக்கா, இவரின் (சில) ஆண்களே! (சீக்கிரம்) திருந்துங்கப்பா!! :)) ஆண்கள் எல்லோரும் படித்து, கடைபிடிக்க வேண்டியது. இளையராஜாவின் தீவிர பக்தை இவர் இளையராஜா- சில சுவாரஸ்யங்கள்..!!! பதிவில் அது தெரியும், இளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..!!! இவருக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும். அடிக்கடி கமெண்ட்களில் காணப்பெற்றாலும் பதிவு மட்டும் இல்லை. பாசக்கார மதுரையில் இருக்கீங்க, அன்போடு கேட்கிறோம் எழுதுங்க, இல்லாட்டி அருவாளோடு ஆளுங்க வருவாங்க.


அடுத்து வலையுலகில் எனக்கு முதல் நண்பர் அண்ணன் தகவல் துளிகள் மகாதேவன் V.K.  இவரது வலைப்பூ ஆனந்த விகடன் வரவேற்பறையில் வந்துள்ளது. தலைமுடியின் உன்மையான நிறம் !விமானம் பறப்பது எப்படி? போன்றவை மிக அருமையான பதிவுகள். வெளிநாட்டில் வேலை செய்யும் இவர், அதிக வேலைப்பளுவால் எழுதவில்லை. உங்கள் பதிவுகளுக்கு காத்திருக்கிறோம் அண்ணா.


அடுத்து அதிரடி சகோ தொப்பி தொப்பி, இவரைப் பற்றி தெரியாவிட்டால் உங்களைப் பார்த்து சொல்லணும் தொப்பி தொப்பினு. அவ்ளோ அருமையா எழுதுபவர். இவரது பதிவுகளில் கொள்ளைகும்பல் Amway, கொள்ளை கும்பல் AMWAY NUTRILITE-2 Jesus Calls தினகரனும் கொள்ளை கும்பலும் போன்றவை படித்தவுடன் சிந்திக்க வைக்கும்.  பங்கு சந்தை பற்றியும் கொஞ்சம் சொல்லி உள்ளார் ஆனால் பாதியில் நிற்கிறது. கிட்டத்தட்ட எல்லா பதிவுகளும் அருமை, சூடானவை. கண்டிப்பாக படிக்க வேண்டும். இவர் தொடர்ந்து எழுதவும் வேண்டும் அல்லவா?  


கெக்கேபிக்கேனு பேசுறவங்க மத்தியில் அப்படியே எழுதுபவர் அக்கா கெக்கேபிக்குணி இவரது வலைப்பூ எனக்குத் தோணினதைச் சொல்லுவேன். இவரது அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தராங்கப்பா! பயனுள்ளது,  நல்ல சிறுகதை எழுத்தாளர் இவர், நிறைய இணைய இதழ்களில் எழுதி உள்ளார். அமெரிக்காவாசி, இப்போது ட்விட்டரில் தஞ்சம் புகுந்து உள்ளார். கொஞ்சம் பதிவுலகின் பக்கமும் உங்க பார்வை படணும் அக்கா. 


அடுத்து மருத்துவம் பேசுகிறது ! வலைப்பூ, மிக மிக மிக பயனுள்ள வலைப்பூ தமிழில் ஒரு மருத்துவ வலைப்பூ என்றால் சும்மாவா? ஆனால் கடந்த ஜூலைக்கு பின் பதிவை காணோம். இதில் நீரழிவு நோயாளிகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியவை...கட்டுப்படுத்தப்பட முடியாத உணர்வுகள்-ஒரு மன நோய் என இன்னும் பல பயனுள்ள பதிவுகள் உள்ளன. தொடர்ந்து எழுதுங்க டாக்டர்.


அடுத்து சகோ ♥ நிலாகாதலி ♥ நன்றாக கவிதை எழுதுபவர் பிரிவின் ரணங்கள் மிக அருமையான கவிதை, காத்திருப்பு பெண்களின் காதல் குறித்த அருமையான குட்டி கவிதை. கடந்த பிப்ரவரிக்கு பின் காணவில்லை இவரை. சீக்கிரம் வாங்க சகோ.இவர்களில் பலர் உங்களுக்கும் பிடித்தவர் ஆக இருக்கலாம். பகிருங்கள் அவர்களைப் பற்றி. அவர்கள் எழுத்துக்கு காத்திருக்கிறோம் என்று சொல்லுங்கள்.

தொகுத்தது 
பலேபிரபு (எ) பிரபு கிருஷ்ணா 

64 comments:

 1. சேட்டைக்காரன் ஏன் தனது வலைப்பூவை நீக்கினார் என்பது புரியவில்லை! அவரது அறிவிப்பு கண்டு மிகவும் வருந்தினேன். அவர் தனது வலைப்பூவை நீக்கியது இப்போது கிடைத்த அதிர்ச்சி!

  ஆனந்தி அக்கா திரும்ப எழுத வேண்டும்! நானும் காத்திருக்கிறேன்! அப்படியேதான் பதிவுலகில் பாபுவும்!

  எஸ்.கே, தொப்பி தொப்பி இருவர் பற்றி நீங்கள் கூறியது உண்மை!
  இந்த இருவரும் நான் பதிவுலகிற்கு வந்த புதிதில், என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர்கள்!

  ReplyDelete
 2. நன்றி பலே பிரபு!

  ReplyDelete
 3. பதிவர்கள் சுடுதண்ணி, தொப்பி தொப்பி, சேட்டைக்காரன் ஆகியோரை நானும் ரொம்ப மிஸ் பண்றேன். மீண்டும் அவர்களின் எழுத்துக்களை காண காத்திருக்கிறேன்..!

  ReplyDelete
 4. Very good post. They should consider writing again. The best thing about blog is they can write at whatever intervals comfortable to them.

  ReplyDelete
 5. காணாமல் போனவர்களை திரும்ப அழைக்கும் அறிமுகப்பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. சேட்டைக்காரனின் நகைச்சுவையான கட்டுரைகளை மீண்டும் காண ஆவலோடிருக்கிறேன்.

  ReplyDelete
 7. உண்மை தான்... நான் ஒரு முயற்சிக்காக பல பேரின் முதல் பதிவில் வெளி வந்த மறுமொழியாளர்களை சென்று பார்த்த பொழுது பலர் பதிவு எழுதியதை நிறுத்தி விட்டதை உணர முடிந்தது... அனைவர் வலைபூ முகவரிகளையும் தொகுத்து கொண்டு வருகிறேன்.. முடிந்தவுடன் தனியாக தெரிவிக்கிறேன்

  ReplyDelete
 8. என்னது சேட்டைக்காரன் ப்லாக் நீக்கப் பட்டு விட்டதா?அடக் கடவுளே!

  @suryajeeva

  கட்டாயம் செய்யுங்க சார்!முடிஞ்சதும் உங்க ப்லாக் ல ஒரு பதிவா போடுங்க

  ReplyDelete
 9. மிக்க நன்றி பிரபு,இவர்களையெல்லாம் நாம ரொம்ப மிஸ் பண்றோம்.

  ReplyDelete
 10. ஐயோ....சேட்டைக்காரன் சார் ..என்னாச்சு?;-(((( ...

  ReplyDelete
 11. //பாசக்கார மதுரையில் இருக்கீங்க, அன்போடு கேட்கிறோம் எழுதுங்க, இல்லாட்டி அருவாளோடு ஆளுங்க வருவாங்க.//
  :-))))))

  ReplyDelete
 12. இதுல நிறைய பேரோட எழுத்த நானும் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன் பிரபு.. வருவாங்கன்னு நம்பலாம் :))

  ReplyDelete
 13. மிக்க நன்றி பிரபு,இவர்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி ..

  ReplyDelete
 14. சேட்டை காணாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. வேறு ரூபத்தில் வருவாரென நம்புகிறேன்.

  ReplyDelete
 15. சேட்டை காணாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. வேறு ரூபத்தில் வருவாரென நம்புகிறேன்.

  ReplyDelete
 16. I too miss settaikkaran! He used to give very useful advice in comments foum! His blog make us laugh as well us think!

  ReplyDelete
 17. ஆனந்தி அக்கா, செட்டைக்காரன் இன்னும் மற்றவர்களும் திரும்ப பதிவுலகில் வலம் வர வேண்டும்.

  ReplyDelete
 18. ஒரு நாலஞ்சு நாளா பலேபிரபு வலைப்பூ அப்டேட் ஆகாம இருக்கு. அதோட ஓனர் எங்க போயிட்டார்னு தெரியல...


  நம்ம தளத்தில்:
  மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

  ReplyDelete
 19. ha ha ha.. sariyana talaipu thaan vaichu irukinga..

  Seekaram eluthalmnu thaan iruken..

  Thanks Prabhu..

  ReplyDelete
 20. ha ha ha.. sariyana talaipu thaan vaichu irukinga..

  Seekaram eluthalmnu thaan iruken..

  Thanks Prabhu..

  ReplyDelete
 21. சேட்டைக்காரன் அவர்களுக்கு என்ன சிக்கலோ தெரியவில்லை. அவ்ர் தன் வலைப்பூவில் இனி எழுதப்போவதில்லை என்றதும், நான் நிஜமாகவே கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

  அவர் மிகச்சிறந்த எழுத்தாளர்; அதுவும் எனக்கு ரொம்ப ரொம்பப்பிடித்த நகைச்சுவை எழுத்தாளர்.

  அவர் எங்கிருந்தாலும் வாழ்க! அவர் மீண்டும் வந்து நம்மை மகிழ்வுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  அவரை இன்று வலைச்ச்ரத்தில் நினைவு கூர்ந்ததற்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  அவரைப்பற்றிய ஏதாவது விபரங்கள் யாருக்காவது தெரியுமானால் தயவுசெய்து எனக்கும் தெரிவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

  எனது மெயில் விலாசம்:
  valambal@gmail.com

  அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். அன்புடன் vgk

  ReplyDelete
 22. சேட்டைக்காரன் கடைசியாக எழுதியிருந்த பதிவு ரொம்பவே
  மனதை கஷ்டப்படுத்தியது.
  அவர் மீண்டும் விரைவில் வரவேண்டும்.

  ReplyDelete
 23. நல்ல பகிர்வு நண்பரே... சேட்டைக்காரன் எதற்கு திடீரென இப்படி எழுதுவதை நிறுத்தி விட்டார் என்பதே புரியவில்லை....

  ReplyDelete
 24. நானும் முன்பெல்லாம் பிலாக்கில் இதே போல் தான் காணா போனவர்களை தேடி தேடிபதிவு போடுவேன்.
  நல்ல பதிவர்கள் மீண்டும் வந்தால் ரொம்ப சந்தோஷம்.
  வித்தியாசமான அறிமுகம்,இதன் மூலம் எல்ல்லோரும் திரும்ப வரட்டும்

  ReplyDelete
 25. Malarum ninaivugal pola irukku Sago. Mayil thogai varudal.
  TM 8.

  ReplyDelete
 26. இப்படி பலரைஅழைத்து வரவழைங்க ...2004ல் பலர் இருந்தாங்க அட்டகாசமா எழுதுவாங்க...இளவஞ்சி என்பவரெல்லாம் எழுதறாரேன்னே தெரியல பிரமாதமா நகைச்சுவையா எழுதுவார்.. கெபி சேட்டை மற்றும் நீங்க அழைச்ச அனைவரும் வரணும்//நல்ல சிந்தனை உங்களுக்கு.வலைச்சரத்தில் இப்படியும் வளைய வருகிறது இனிமையானது

  ReplyDelete
 27. அனைத்துப் பதிவர்களையும் அறிந்திருந்தாலும் அவர்களை நீண்ட காலம் காணாத ஏக்கம் எப்போதும் இருக்கின்றது...

  ReplyDelete
 28. சகோ தொப்பி தொப்பி பதிவுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். எப்ப வருவார்ன்னு தெரியல

  ReplyDelete
 29. பிரபு, உங்கள் அன்பு வார்த்தைகளுக்கு நன்றி. நினைவு கூர்ந்த ஷைலஜாவுக்கும் நன்றி.

  எப்ப வருவேன்னு தெரியாது, ஆனா ஏன் வந்தேன்னு- யாராச்சும் கேட்டுராதீங்க! நாந் திரும்பி வந்தால் தம்பி பிரபு தான் காரணம்னு இப்போ உலகத்துக்கே தெரியும்:-)) (இது இது இது தான் கெக்கே-பிக்கே!)

  நீங்கள் அழைக்கும் மற்ற பதிவர்களும் விரைவில் மீண்டும் எழுதவும் அழைக்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 30. //பாசக்கார மதுரையில் இருக்கீங்க, அன்போடு கேட்கிறோம் எழுதுங்க, இல்லாட்டி அருவாளோடு ஆளுங்க வருவாங்க.//
  நானும் அதை வழிமொழிகிறேன்.விரைவில் எழுத வாங்க பாசக்கார சகோ.

  ReplyDelete
 31. @ ஜீ...

  நன்றி சகோ

  ReplyDelete
 32. @ Abdul Basith

  நன்றி சகோ

  ReplyDelete
 33. @ மோகன் குமார்

  ஆம் அண்ணா. அதுவே அனைவரது விருப்பம்.

  ReplyDelete
 34. @ Lakshmi

  நன்றி அம்மா.

  ReplyDelete
 35. @ சேலம் தேவா

  நானும் அண்ணா கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 36. @ suryajeeva

  நல்ல முயற்சி சகோ.

  ReplyDelete
 37. @ raji

  ஆம் சகோ.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 38. @ கோகுல்

  கருத்துக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 39. @ ஆனந்தி.

  நிஜமா நடக்குதா இல்லையானு பாருங்க அக்கா.

  ReplyDelete
 40. @ வைகை

  கண்டிப்பாக அண்ணா.

  ReplyDelete
 41. @ எஸ்.கே

  வாங்க அண்ணா. அதற்குதான் இந்தப் பதிவே.

  காத்திருக்கிறோம்

  ReplyDelete
 42. @ இராஜராஜேஸ்வரி

  கருத்துக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 43. @ ! சிவகுமார் !

  அதே ரூபத்தில் வந்தாலே சேட்டைதான்.

  கருத்துக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 44. @ "என் ராஜபாட்டை"- ராஜா

  நன்றி சகோ.

  ReplyDelete
 45. @ middleclassmadhavi
  ஆம் அக்கா. மிக அருமையான பதிவர் அவர்.

  ReplyDelete
 46. @ தமிழ்வாசி பிரகாஷ்

  //ஆனந்தி அக்கா, செட்டைக்காரன் இன்னும் மற்றவர்களும் திரும்ப பதிவுலகில் வலம் வர வேண்டும்.//

  கண்டிப்பாக அண்ணா.

  ReplyDelete
 47. @ தமிழ்வாசி பிரகாஷ்

  ஒரு நாலஞ்சு நாளா பலேபிரபு வலைப்பூ அப்டேட் ஆகாம இருக்கு. அதோட ஓனர் எங்க போயிட்டார்னு தெரியல...//

  ஹி ஹி ஹி அவர பற்றி வேற யாராச்சும் போடணும்.

  ReplyDelete
 48. @ பதிவுலகில் பாபு

  உங்களை எதிர்பார்க்கிறேன் அண்ணா.

  ReplyDelete
 49. @ வை.கோபாலகிருஷ்ணன்

  கண்டிப்பாக ஐயா. அவரின் வலைப்பூவில் நீங்கள் இடும் கருத்துக்களே அதை சொல்லியது.

  ReplyDelete
 50. @ Minmalar

  அவர் வருகைக்கு எல்லோரும் விரும்புகிறோம்.

  ReplyDelete
 51. @ Minmalar

  கருத்துக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 52. @ வெங்கட் நாகராஜ்

  ஆம் சகோ. என்னவென்றே தெரியவில்லை.

  கருத்துக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 53. @ Jaleela Kamal

  //நானும் முன்பெல்லாம் பிலாக்கில் இதே போல் தான் காணா போனவர்களை தேடி தேடிபதிவு போடுவேன்.//

  நல்ல முயற்சி சகோ.

  //வித்தியாசமான அறிமுகம்,இதன் மூலம் எல்ல்லோரும் திரும்ப வரட்டும்//

  நன்றி சகோ.

  ReplyDelete
 54. @ துரைடேனியல்

  நன்றி சகோ.

  ReplyDelete
 55. @ ஷைலஜா

  மிக்க நன்றிங்க.என் சிந்தனை அவர்களை வாசிப்பது. அது எல்லோரின் விருப்பமும் கூட.

  கருத்துக்கு நன்றிக்கு

  ReplyDelete
 56. @ ♔ம.தி.சுதா♔
  ஆம் சகோ.

  ReplyDelete
 57. @ ஆமினா

  காத்திருப்போம் அக்கா.

  ReplyDelete
 58. @ கெக்கே பிக்குணி

  //நாந் திரும்பி வந்தால் தம்பி பிரபு தான் காரணம்னு இப்போ உலகத்துக்கே தெரியும்:-//

  இது எனக்கு பெருமையே.

  கருத்துக்கு நன்றி அக்கா.

  ReplyDelete
 59. @ FOOD

  வருவார் என்றே நம்புவோம். கருத்துக்கு நன்றி அப்பா.

  @ ஆனந்தி..

  பாத்துக்கோங்க அக்கா. இன்னும் ஆள் திரட்டுவேன் நான்.

  ReplyDelete
 60. பின் தொடர இது.

  ReplyDelete
 61. மிக்க நன்றி தம்பி பிரபு.

  உங்கள் அனைவரின் கருத்துக்கு மதிப்பளித்து மீண்டும் தொடர்கின்றேன்.

  ReplyDelete
 62. @ மகாதேவன்-V.K

  நன்றி அண்ணா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது