07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label பலே பிரபு. Show all posts
Showing posts with label பலே பிரபு. Show all posts

Sunday, July 22, 2012

பேசும் புகைப்படங்கள்

எனக்கு மூன்று விஷயங்கள் அலுக்கவே அலுக்காது. ஒன்று வீடியோ எடிட்டிங், இரண்டு ராஜா பாடல்கள், மூன்றாவது புகைப்படங்கள். இதில் மூன்றாவதை பற்றி எழுதும் தளங்களை இன்று பார்ப்போம்.

ஆயிரம் வார்த்தைகள் பேச வேண்டிய இடத்தில் ஒரே ஒரு புகைப்படம் அவற்றை பேசிவிடும். 



நிறைய தளங்கள் இருந்தாலும் நான் அடிக்கடி ரசிக்கும் மூன்றை மட்டும் இங்கே பகிர்கிறேன்.





PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை 







சின்ன கேமரா... பெரிய்ய்ய்ய படம். என்ற ஒரு பதிவில் ஆரம்பிக்கிறேன், அருமையான புகைப்படங்களை இந்த தளத்தில் காணலாம். ஒவ்வொன்றும் கொள்ளை அழகு. மாதா மாதம் குறிப்பிட்ட தலைப்பில் புகைப்பட போட்டியும் நடைபெறும்



Renys Click 






ரெனால்ட் ஆல்வின் அவர்களின் வலைப்பூ. வலையுலகிற்கு புதியவர்.என் மூன்றாவது கண்ணின் பார்வை என்று இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் ரசிக்கும் வகை. EmotionsBangalore Roads , Madiwala Lake போன்றவை அதற்கு சாட்சி.  அடிக்கடி முகப்புத்தகத்தில் என்னுடைய புகைப்படங்கள் அழகாக இவர் தான் காரணம். 


Jayaraj Photography







ஜெயராஜ் பாண்டியன் அவர்களின் பக்கம் இது. முகப்புத்தகத்தில் மட்டும் தன் படங்களை பகிர்கிறார் இவர். சும்மா என்று பகிரும் படங்களை சும்மா.. பாத்துகிட்டே இருக்கலாம். Reflections ஆல்பத்தில் அனைத்தும் அசத்தல். 




இன்றுடன் என் பணி முடிவடைகிறது. இரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று என்னால் முடிந்த வரை நிறைய பதிவர்களையும், அவர்களின் அருமையான பதிவுகளையும் அடையாளம் காட்டி உள்ளேன் என்று நினைக்கிறேன். 

சீனா ஐயா இந்த முறை பொறுப்பேற்க சொன்ன போது போன முறை அறிமுகம் தலைப்புகள் எதையும் திரும்ப பயன்படுத்தக் கூடாது என்று நினைத்தேன், அதே போல புதியதாக ஆறு வகையான தலைப்புகளில் பதிவர்களை அறிமுகம் செய்து விட்டேன். என் பதிவுகளை வலைச்சரத்தில் படிக்க - பிரபு கிருஷ்ணா

அநேகமாக இது எனக்கு அரியர்ஸ் என்று நினைக்கிறேன். சென்ற முறை சரியாக எழுதாததால் இரண்டாம் முறை வாய்ப்பு. இரண்டாம் முறை நல்ல படியாகவே செய்துள்ளேன் என்று நினைக்கிறேன். 

தொடர்ந்து இணைப்பில் இருப்போம் கற்போம் தளத்திலும், பலேபிரபு ப்ளாக் மூலமும். 

படித்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. 
மேலும் வாசிக்க...

Saturday, July 21, 2012

பேஸ்புக் பெரியவர்கள்

பதிவுலகில் நிறைய பேர் பதிவுகளை படித்து இருப்போம். ஆனால் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் மட்டும் எழுதும் நண்பர்களை இன்று பார்ப்போம். எனக்கு பிடித்த நண்பர்களை இங்கே அறிமுகப் படுத்துகிறேன். இவர்களை நீங்கள் முன்னமே கூட அறிந்திருக்கலாம். 


ரவி நாக்






அமெரிக்காவில் வசிக்கும் இவர் எழுதும் நிலைத் தகவல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். நிறைய புதிய தகவல்களை இவர் வாயிலாக நாம் அறியலாம். மேல போறதுக்கு டிக்கட்உங்கள் போன் திருட்டு பொருளா? போன்றவை சமீபத்திய சாம்பிள்கள். 


சசி தரன்


வலது ஓரம் இருப்பவர் சசி










பேஸ்புக் எல்லாம் சும்மா, பொழுது போகாதவர்கள் போகும் வேலை என்று நினைத்தால் அதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். சசி தரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் உள்ள மகாதேவர் கோவிலை புரணமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். முழுக்க முழுக்க பேஸ்புக் நண்பர்கள் முயற்சி செய்து இன்று எம்.எல்.ஏ வந்து பார்வையிடும் அளவுக்கு வந்துள்ளது. உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் இதை செய்து வருகின்றனர்.


கார்ட்டூனிஸ்ட் பாலா 






குமுதம் வாசகர்கள் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. அவரின் பேஸ் புக் முகவரி இது. அரசியல் பற்றிய இவரது கார்ட்டூன் ஒவ்வொன்றும் அசத்தல்.  தன் கார்ட்டூன்களை தனியே ஒரு வலைப்பூவில் தொகுத்தால் இன்னும் அருமையாக இருக்கும். 


டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி






மனம் விட்டு சிரிக்கும் படியாக தகவல்களை பேஸ்புக்கில் படிக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் இவரை தான் நண்பராக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் இடிச் சிரிப்பு உத்திரவாதம். 


மோனி கோயம்புத்தூர்






அருமையான கவிதைகளை படிக்க வேண்டுமா? இவர்  தான் படித்த, ரசித்த கவிதைகளை அதற்கு தகுந்த அருமையான படத்துடன் பகிர்வார். ஒவ்வொன்றும அருமையாக இருக்கும். அத்தோடு அடிக்கடி போடும் நக்கல், நையாண்டி நிலை தகவல்கள் வாய் விட்டு சிரிக்கும் ரகம்.


இன்னும் நிறைய பேர் இருந்தாலும் நான் ரசிக்கும் ஐந்து பேரின் பக்கங்களை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

கற்போம் தளத்தில் - இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற
மேலும் வாசிக்க...

Friday, July 20, 2012

இசையில் தொடங்குதம்மா


இசை, நம் பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மை ஆட்டுவிப்பது. வாழும் ஒவ்வொரும் நொடியும் ஏதோ ஒரு இசை நம்மை சுற்றிலும் உள்ளது. இசையே இல்லாத இடங்களில் மௌனம் கூட இசையாகிவிடுகிறது. 

பதிவுலகிலும் இசை சம்பந்தப்பட்ட, அதை எழுதும் பலர் இருக்கிறார்கள், அவர்களின் இசை பாடுவதே இந்தப் பதிவு. 



பாடுகிறேன் தினம் ஒரு பாடல்





சென்னையை சேர்ந்த கிரி ராமசுப்ரமணியன் அவர்களின் வலைப்பூ முழுக்க பாடல்கள் தான். பிரபல பதிவர் பரிசல்காரன் எழுதி இவர் பாடிய ட்வீட்டொன்று கண்டேன் RT அங்கு இல்லை அருமையான ரீமிக்ஸ், சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா பாடலை இவர் குரலில் கேட்க அருமையாக உள்ளது.ராஜராஜசோழன் நான் பாடல் அசத்தல். 


சிறுமழை





இவரது ஏன் இளையராஜா கடவுள் ? என்ற ஆங்கில பதிவை படித்த உடனேயே என்னைப் போன்ற இளையராஜா ரசிகர்கள் இவர் பதிவுகளை படிக்காமல் விட மாட்டார்கள். அதை தமிழில் போட்டால் இன்னும் நிறைய பேர் பலன் பெறுவார்கள் சார். இசையலைகள் என்று தலைப்பிட்ட இவரின் ஆறு பதிவுகளும் இனி தான் நான் படிக்கணும். ராஜா, ராஜா, ராஜா என்னும் இவர் வலைப்பூவில் இசை குறித்த பதிவுகளில் வாரணம் ஆயிரம் (இசை) மட்டும் விதிவிலக்கு. 


ச்சும்மா… 



சும்மா ஒரு  ப்ளாக்  என்று எழுதுகிறார் கார்த்திக் அருள். இவரை ராஜா ரசிகனாக்கிய கங்கை நீரும் கானல் நீரும் பதிவு புதுமை எனக்கு, இந்தி இளைய நிலா ராஜாவின் புகழ் பாடுகிறது. ஸ்வர்ணலதா – நினைவலைகள் நம்மை அவரின் பாடல்களுக்குள் கொண்டு செல்கிறது.

இவரே பாடல்களை பாடி பதிவேற்றி உள்ளார்  

மனம் போன போக்கில்





எழுத்தாளர் என்.சொக்கன் அவர்களின் வலைப்பூ, நான் தொடர்ந்து படிக்கும் சில வலைப்பூக்களில் ஒன்று. இசை குறித்த இவர் தேடல் எனக்கு மிகவும் பிடிக்கும் மழை என்ற பதிவு மனதில் இசை மழையை பொழிய வைக்கும், பார்வதீப ரமேஸ்வரௌ என்ற பதிவு இளையராஜாவின் பெருமையை பேசுகிறது. செம்பட்டைக்குக் கல்யாணம் ஆரம்ப கால ராஜா பாடலின் அசத்தலை சொல்லுகிறது. 

கமகம்






கர்நாடக இசைப் பிரியர்களுக்கான வலைப்பூ இது. எழுத்தாளரான அண்ணன் லலிதா ராம் இதில் நிறையவே எழுதி உள்ளார். எந்தப் பதிவை குறிப்பிட்டு சொல்ல என்று தெரியவில்லை, அதனால் இசை ரசிகர்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.  



இவ்வளவு தூரம் இசை பற்றி எழுதி விட்டு ஒரு பாட்டு போடாவிட்டால் எப்படி?

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

மேலும் வாசிக்க...

Thursday, July 19, 2012

அறியவே அறிவியல்


அறிவியல்.... இந்த சொல்லுக்குள் தான் எத்தனை அதிசயங்கள் உள்ளன. அறிவியல் செய்திகளை படிக்கும் போது நம்மையும் அறியாமல் வாயை பிளந்து விடுவோம். கலீலியோ முதல் கடவுள் துகள் வரை அத்தனையும் நமக்கு புதுசு தான். உங்கள் வாயை பிளக்க வைக்கும் தகவல்களை தரும் அறிவாளிகளை காண்போமா? 


அவிழ்மடல்




வலைப்பூ பேரிலேயே வாயை பிளக்க வைக்கிறார் நம்ம அருண் பழனியப்பன் , எழுதிய பதிவுகள் அனைத்தும் அருமை.  நம்பாதீங்க என்று இவர் எழுதிய பதிவுகள் பலதை நம்பி படிக்கலாம். சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்றதையும் அவர் அந்த பணத்தை செலவிட முடியாமல் போன கதை இங்கே  , அத்துடன் நியூட்டனின் இயக்க விதிகள் பதிவில் அறிவியலை அவியல் ஆக்கி வைக்கிறார்.



அறிவியல்புரம் 





சிறந்த அறிவியல் எழுத்தாளரான என்.ராமதுரை அவர்களின் வலைப்பூ. வானத்து நட்சத்திரம் போல, வலைப்பூவெங்கும் இருக்கிறது அறிவியல். சனிப் பெயர்ச்சி என்பது என்ன? என்று தெளிவாக எழுதி உள்ளார்,  கடவுள் துகள் பற்றி எழுதிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ’கடவுள் அல்லாத’ துகள் பதிவு அறிவியல் ஆர்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டியது.



கூடல் பாலா





கூடங்குளத்தை சேர்ந்த அண்ணன் பாலா அவர்களின் வலைப்பூவில் உங்கள் உடலைப் பற்றி நீங்கள் இது வரை அறியாத 10 உண்மைகள் ! என்ற பதிவு இப்போது நான் அறிந்த உண்மை, எச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் ! என்ற பதிவை படித்தால் இதுல எல்லாமா கேமரா இருக்கும் என்று கேட்பீர்கள்.


தகவல் துளிகள்




அண்ணன் V.K. மகாதேவன் அவர்களின் வலைப்பூ இது விமானம் பறப்பது எப்படி?நினைப்பதால் தும்மல் வருமா?தலைமுடியின் உன்மையான நிறம் ! என்று பல அறிவியல் தகவல்களை தருகிறார். 



மூலிகைவளம்




இயற்கை அறிவியல் தான் என்றும் திகட்டாது, அத்தோடு ஆச்சர்யங்களை அள்ளித் தரும், அந்த வகையில் குப்புசாமி சார் எழுதும் இந்த வலைப்பூவில் தான் நுணாவின் மூலிகைத் தன்மை பற்றி அறிந்தேன், மைதானங்களில் அதிகம் காணப்படும் நெருஞ்சில் முள் பற்றிய பதிவு காலை குத்தவில்லை. இவரது வலைப்பூவின் ஒவ்வொரு பதிவும் கட்டாயம் படிக்க வேண்டியவை. புத்தகமாக வெளிவரும் அளவுக்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. 



மீண்டும் நாளை சந்திப்போம்

கற்போம் தளத்தில் இன்று - HTML 5 - பயனுள்ள முக்கிய குறிப்புகள் [Infographic]


மேலும் வாசிக்க...

Wednesday, July 18, 2012

கதை கதையாம், காரணமாம்




கதை, இந்த வார்த்தை தான் எத்தனை சுகமானது. நம் வாழ்க்கையே கதைகளால் சூழப்பட்டுள்ளது. சிறிய வயதில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என நம் சொந்தங்கள் முழுவதும் கதை சொல்லியே நம்மை வளர்த்தார்கள். இணையத்தில் வந்த பிறகும் நமக்கு அப்படிப்பட்ட கதை சொல்லிகள் கிடைக்கிறார்கள், அவர்களில் சிலரை பற்றி பார்ப்போம். 



செல்வா கதைகள்



அண்ணன் நேற்றைய பதிவில் வந்திருக்க வேண்டியவர். ஆனால் இவரது கதைகள் இப்படியும் யோசிக்க முடியுமா என்கிற ரகம். லிட்டருக்கு 512 கி.மீ என்ற கதையை படித்தால் சிரிப்பு அதிக மைலேஜ் தரும், குழியைத் தூக்கி கிணற்றுக்குள் வீசிய செல்வா! புத்திசாலித் தனமான கதை. 




Veera



இரண்டு கதைகள் இவரது வலைப்பூவில் உள்ளன. செவ்வந்தி என்ற கதை மனதை பிசைகிறது இன்னும், வாடை சிறுகதை குடிக்காத குடிகாரர்களின் நிலையை சொல்கிறது.





அகல் விளக்கு



காற்றை நேசிப்பவன் என்று சொல்லி கதை எழுதும் இவரின் யாக்கை  , வெயிற்காலம்... என்ற இரண்டு கதைகளையும் நான் படித்துள்ளேன். இரண்டுமே அருமை. இனி தான் மற்ற கதைகளையும்  படிக்க வேண்டும். 




சிந்தனை சிறகுகள்



பதிவுலகத்துக்கு புதியவரான இவர் இதுவரை ஒரு கதை மட்டும் எழுதி [மொழிபெயர்த்து உள்ளார்]  காதலும் காலமும்! .... மொழி பெயர்க்கப் பட்ட கதை! என்ற அது ரசிக்கும் படி உள்ளது. அடுத்து சலனம் என்ற தொடர்கதையை எழுத துவங்கி உள்ளார்.




அழியாச் சுடர்கள்



உங்களுக்கு விருப்பமான எழுத்தாளரின் கதைகளை படிக்க வேண்டுமா? அழியாச் சுடர் தான் அதற்கு சரியான இடம். இங்கே சென்று உங்களுக்கு பிடித்த எழுத்தாளரின் கதைகளை படியுங்கள். அத்தோடு நிறைய பேட்டிகள், கட்டுரைகளும் கிடைக்கும். 




மீண்டும் நாளை சந்திப்போம்.

மேலும் வாசிக்க...

Tuesday, July 17, 2012

சிரிக்காட்டி சுட்டுடுவாங்க



சிரிப்பது எல்லோருக்கும் வரும், ஆனால் சிரிக்க வைக்க எல்லோராலும் முடியாது. பதிவுலகில் பலர் காமெடி ஆக எழுத முயற்சித்தாலும், [என்னையும் சேர்த்து] பலரது பதிவை படித்து முடித்த  பின்பும் சிரிப்பு வராது. 

அந்த பதிவுக்கு வந்துள்ள பின்னூட்டங்களை பார்த்த பின்தான் நமக்கு அது காமெடி பதிவு என்பதே புரியும். அப்படி இல்லாமல் படிக்கும் போதே வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் சிலரைப் பற்றி இன்று பார்ப்போம். 



BLADEPEDIA






சிஸ்டம் அட்மின் பற்றி இவர் எழுதிய சிஸ்அட்மின் - 1 - சொல்லத் தவிர்த்த கதை!சிஸ்அட்மின் - 2 - டெஸ்க்டாப் டெர்ரரிஸம்!சிஸ்அட்மின் - 3 - மே மாசம் ஷூ வாசம்! என்ற மூன்று பதிவுகளையும் ஆபிஸில் படித்து சிரிக்கும் போது சிஸ்டம் அட்மின் வந்துவிட 'ஙே' என்று முழித்தேன். 

சிரிப்பு மட்டுமின்றி மிக முக்கிய புதிய தகவல்களுடன்: IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை! - Ver 2.0 என்ற பதிவு சிரிக்க மட்டுமல்ல, சீரியஸ் ஆனதும் கூட. பதிவுல விளம்பர இடைவேளை எல்லாம் விட்ட முதல் ஆள் இவர் தான்.


ஏழாவது அறிவு-The 7 th Sense


பெங்களூர் வந்து ஒரு வருஷம் ஆச்சு என்று இவர் எழுதிய பெங்களூர் இடிகள்! பதிவு தமிழகத்தில் இருந்து பெங்களூர் வந்த அனைவருக்கும் பொருந்தும், [எனக்கும் விழுந்தன அனைத்து இடிகளும்], அத்தோடு இதாங்க தமிழ் சினிமா! - 1இதாங்க தமிழ் சினிமா! பாகம்-2 அட ஆமாம்ல என்று எண்ண வைக்கின்றன.



மின்மலர்




இவரது வலைப்பூவில் நீங்கள் முதலில் படிக்க வேண்டிய பதிவு சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது இன்று முழுக்க நீங்கள் சிரிக்கலாம். Computerized அரசியல் வாதிகள் என்ற பதிவை படித்து ஆட்டோ எதுவும் வீட்டுக்கு வந்துச்சா எனத் தெரியவில்லை. நல்லதம்பியின் வென்னீர் வைத்தியம் பதிவு ஆறி இருந்தாலும் சிரிப்பாதான் தான் இருக்கு. 



செல்வேந்திரன்


எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களின் வலைப்பூ, டான் என்பவர்... பதிவை படித்தால் டான்னு சிரிப்பு வரும் அதற்கு நான் கேரண்டி, இன்கிரிமென்ட் பெற இனிய வழிகள்! என்ற பதிவை படித்துவிட்டு முயற்சித்து விடாதீர்கள். மனக்காளான் பதிவில் உள்ள அனைத்தும் அருமையான ட்வீட்கள். 






பெயரைப் போலவே சேட்டையானவர் போனமுறை வலைச்சரத்தில் இவரை காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் சொல்லி இருந்தேன். நீண்ட இடைவெளிக்கு பின் எழுதிய ஆடிய ஆட்டமென்ன…? பதிவு அசத்தல் ஆட்டம்,  விஜய் டி.வி.க்கு என்னால் ஒரு கோடி லாபம்!  என்று இவர் எழுதிய மூன்று பதிவுகளும் சூப்பரோ சூப்பர். 



இன்னும் நிறைய பேர் இருந்தாலும் நான் ரசித்த ஐவரை பற்றி மட்டும் சொல்லி உள்ளேன். 
மேலும் வாசிக்க...

Monday, July 16, 2012

பிரபு கிருஷ்ணா வெர்ஷன் - 2.0




ஹாய் ஹாய் ஹாய், 

 எல்லாருக்கும் வணக்கம். என்னைப் பற்றி சீனா ஐயா நேற்றே சொல்லி விட்டார். அதனால் நேரடியாக என் வலைப்பூ பற்றிய தகவல்களுக்கு வந்து விடுகிறேன். இல்லை நான் கண்டிப்பாக என்னைப் பற்றி சொல்லியே ஆகணும் கேக்கறவங்க இவன்தான் பலே பிரபு ன்னு ஏற்கனவே நான் வலைச்சரத்தில் எழுதி இருப்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இப்போது இது எனக்கு வெர்ஷன்-2.  

அடுத்து என் வலைப்பூ, பலே பிரபு  என்ற தளத்தில் என் எண்ணங்களை அவ்வப்போது தெளித்து வருகிறேன்.

அதில் என் மனதை கவர்ந்த படங்களைப் பற்றிய என் பார்வையையும் பதிவு செய்து வருகிறேன், வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமாதோனி - நான் படித்த படம், மற்றும் வழக்கு எண் 18/9 விமர்சனம் போன்றவை நான் எழுதிய விமர்சனங்கள். 

சினிமா குறித்து நான் எழுதிய மற்ற சில பதிவுகள் நண்பன் திரைப்படம் சில தொழில்நுட்ப தவறுகள், மற்றும் நான் ஏன் விஜய் ரசிகன்?

என் வலைப்பூக்களில் கொஞ்சமாக கவிதைகளையும் காண இயலும். ஈகரை கவிதைப் போட்டி -5 இல் நான் எழுதிய பழுது படாத பாசம் என்ற கவிதை இரண்டாம் பரிசை பெற்றுள்ளது. ஆனால் பரிசு கிடைக்காத ஈழம் பாடாத இதயம் என்ற கவிதை என்னைப் பொறுத்தமட்டில் சிறந்ததாய் நினைக்கிறேன். 

என்னுடைய [எங்களுடைய] அடுத்த வலைப்பூ கற்போம். இதை கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கினோம். இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கற்போம் என்ற இணையத்தின் முதல் தொழில்நுட்ப மாத இதழை இலவசமாக வெளியிடுகிறோம். இதுவரை வந்த கற்போம் இதழ்களை தரவிறக்க இங்கே செல்லவும்.  

இதில் நண்பர் சூர்ய பிரகாஷ் என்னுடன் பங்காற்றும் இன்னொரு நிர்வாகி. 

நிறைய பதிவுகளை பரிந்துரைக்க முடியாது என்பதால் 

என்ற மூன்றையும் பரிந்துரைக்கிறேன். 

பதிவர்களுக்கு நான் எழுதிய மிக முக்கியமான பதிவு பதிவர்கள் செய்யும் பத்து தவறுகள்

ஆன்ட்ராய்ட் அலைபேசி பயனர்கள் ஆன்ட்ராய்ட் கற்போம் என்ற தளத்தில் நான் பயன்படுத்தும் பயன்பாடுகள் பற்றி எழுதி வருகிறேன். இதில் முக்கியமான பயன்பாடுகளாக நான் கருதுபவை. 

இனி அடுத்து வரும் ஐந்து நாட்களிலும் என்னால் முடிந்த அளவு புதிய பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கிறேன் நண்பர்களே.

கற்போம் தளத்தில் இன்று 

சட்டரீதியாக இலவச ஆங்கில மின்புத்தகங்கள் டவுன்லோட் செய்ய
மேலும் வாசிக்க...

Sunday, November 27, 2011

சமுதாய சிற்பிகள் நம்முடன் - பெருமைகொள் வலையுலகே

இந்தச் சமுதாயம் என்பது நம்மால் ஆனது. ஆனால் நாம் அதற்கு என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும். சுயநலம் மட்டும் உள்ள சமுதாயம் என்றும் உயராது. நல்லவேளை நாம் அப்படி ஒரு சமுதாயத்தில் இல்லை. இந்த வலைச் சமுதாயத்தில் நான் பார்த்த, பழகும் ,மதிக்கும், வணங்கும் நல்ல உள்ளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். 


இவர்கள் வலைப்பதிவர்கள் என்று நிறைய பேருக்கு தெரியும், இவர்கள் செய்யும் சமூகம் சார்ந்த செயல்களை அறிமுகம் செய்வதே இந்தப் பதிவு 

முதலில் என் அன்பு அக்கா மனதோடு மட்டும் கௌசல்யா. இவர் மற்றும் இவரது கணவர் அஞ்சாநெஞ்சன் ஜோதிராஜ் இருவரும் நடத்தும் EAST TRUST மூலம் சத்தமே இல்லாமல் இவர்கள் செய்யும் சேவைகள் ஆயிரம். அக்காவின் பகிர்ந்து பழகுவோம்...! என்ற ஒரு பதிவே இதற்கு சாட்சி. இந்தப் பதிவில் இவர்கள் அமைப்பு செய்த ஒரு உதவி 

அடுத்து நான் அப்பா என்று பாசமுடன் அழைக்கும், உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள். பதிவுலகில் பலரும் அறிந்தவர்.திருநெல்வேலியில் உணவுப்பாதுகாப்பு துறையில், உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிகிறார். அதே பணியை வலைப்பூவில் செய்வதுதான் சிறப்பு. கலப்படம் பற்றி செய்திகளை சொல்வதிலும் சரி, உடல்நலம் பற்றிய செய்திகளை  சொல்வதிலும் சரி விழிப்புணர்வுதான்.


அடுத்து அன்பு அண்ணன் "வாரியர்" தேவா. பெயருக்கேற்ற கம்பீரம் செயலிலும். கல் சும்மா கிடக்கும் வரை கல்தான். சிற்பியின் கை பட்டால் தான் அது பலரும் வணங்கும் சில சிலை.   அத்தகைய சிற்பி இவர். கழுகு தளம் மூலம் சமூகம் சார்ந்த விசயங்களை பேசுகிறார்(கள்), அத்தோடு அதனை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கும் இவரது முயற்சி பாராட்டத்தக்கது.

இதே கழுகில் கொக்கரக்கோ சௌம்யன், சேலம் தேவா, நிகழ்காலத்தில் சிவா, ஆனந்தி, மகேஸ், நக்கீரன், வலைச்சரம் சீனா ஐயா, ரசிகன் சௌந்தர், கல்பனா ராஜேந்திரன், மஹா, சைதை அஜீஸ், ஜீவன் பென்னி, மற்றும் என்னையும் சேர்த்து பல தன்னார்வ உறுப்பினர்கள் உள்ளனர். கழுகைப் பற்றி அறிய இங்கே படிக்கவும் 


அடுத்து நண்பன் 4 ரோடு சூர்யபிரகாஷ் இப்போது நெட் பேங்கிங் சந்தேகங்கள், மற்றும் ஆதார் என உதவிகரமான கட்டுரைகளை எழுதுபவரின் சமுதாயம் சார்ந்த எண்ணங்கள் கூடவே இருப்பவன் என்ற முறையில் நான் நன்கறிந்தவன்.


பல வலைப்பூக்களில் எழுதி இப்போது மௌனத்தின் பின் என்ற வலைப்பூவில் எழுதும் தம்பி கூர்மதியன் கட்டுரைகளை வெறும் கணினியின் முன் இருந்து மட்டும் எழுதாமல் சாமான்ய மக்கள் நம் இந்தியச் சுதந்திரம் பற்றி அறிந்தது என்ன என்று நேரடி விசிட் செய்து எழுதியது. சமூக மாற்றத்தின் மீது அக்கறை கொண்டவர்.


பூவுலகின் நண்பர்கள் பகிரும் கட்டுரைகள் அனைத்தும் அருமை. எந்த ஒரு விஷயத்தையும் வெறும் பரபரப்புக்கு எழுதாமல் எழுதுவதை நன்றாக ஆராய்ந்து எழுதுகிறார்கள். பூமியின் மீது நாம் எவ்வளவு அலட்சியமாய் இருக்கிறோம் என்பது தெரிகிறது இவர்கள் மூலம். அணு மின்சாரம் - ஊருக்கு உபதேசம்! என்ற கட்டுரை அதை ஆதரிப்பவர்கள் கன்னத்தில் அறைகிறது. மற்ற தளங்களில் உள்ள விழிப்புணர்வு கட்டுரைகளையும் பகிர்கிறார்கள்.


கசியும் மௌனம் வழியே பேசும் ஈரோடு கதிர் தான் சமூக சேவையில் உள்ளதோடு மட்டும் இன்றி அதை செய்பவர்களையும் அடையாளம் காட்டுவது இவரின் சிறப்பு. அதில் கோடியில் இருவர் படிக்கும் போது நாம் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் உறைக்கிறது. கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் பின்பற்றினால் எப்படி இருக்கும் என்று மனம் ஏங்குகிறது.


மண், மரம், மழை, மனிதன். என்று அனைத்தையும் அலசும் வலைப்பூவில் படிக்க வேண்டியது நிறைய  தமிழக கடற்கரை கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். என்ற பதிவு நாம் பயன்படுத்தாத வளத்தை சொல்கிறது. மூங்கில் தினம் என்று ஒன்று கொண்டாடப்படுவதே இவர்கள் பதிவு மூலம் தான் அறிந்தேன்.




அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில் உதவிக்கு என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்துக் கொள்ளும் ஐயா ரத்னவேல் நடராஜன் அவர்கள் வலைப்பூவில் பகிரப்படும் பல கட்டுரைகள் பயனுள்ளது. ஆஸ்த்மா நோயைப் பற்றிய பதிவுஆண்களுக்கும் மார்பக புற்று நோய்! போன்றவை எல்லோரும் படிக்க வேண்டியது.


இது மட்டும் இன்றி,முல்லைப் பெரியாறு அணை குறித்த உண்மையை நமக்குச் சொல்லும் காணொளியை பகிர்ந்த அன்பர் செய்த பணி மிகப்பெரியது.  அழியாச் சுடர்கள் மூலம் கிடைப்பதற்கு அரிய சிறுகதைகள் கிடைக்கிறது.  எம்.ஏ.சுசீலா அவர்களின் வலைப்பூ இலக்கியம், பெண்ணியம் என எல்லாவற்றையும் பேசுகிறது. பதிவு எழுதாமல் எல்லா பதிவுகளையும் படிக்கும் திருச்சி சந்திரகாந்த் பாலா அவர்களின் சமூக அக்கறை மிகப் பெரியது, பயிர் அமைப்பின் மூலம் பின்தங்கிய மக்களை முன்னேற்ற முயற்சி எடுக்கும் செந்தில்குமார், "கனவுக்கு செயல் கொடுப்போம்" என்ற அமைப்பின் சபரி சங்கர்,  என பலர் உள்ளனர்.


எனக்கு தெரிந்தவர்களை மட்டுமே நான் இங்கே பகிர்ந்து உள்ளேன். இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் இங்கே எல்லோரையும் அறிய ஆசையும் உள்ளது. நாம் வாழ்வது மட்டும் வாழ்க்கை அல்ல, நம்மை சுற்றி உள்ளவர்களையும் வாழ வைப்பதே வாழ்க்கை என்பதை புரிய வைத்த இவர்கள்  மத்தியில் நானும் இருக்கிறேன் என்று பெருமை கொள்கிறேன் நான்.

வெறும் பிச்சை போடுவதோ, சமுதாய தவறுகளை பற்றி வெற்று அரட்டை அடிப்பது மட்டும் மாற்றத்துக்கு வழி வகுக்காது. மனதில் இருக்கும் எண்ணம், செயலில் வர வேண்டும். முந்திய இரவு மது அருந்தியதையோ, ஒரு திரைப்படம் பார்த்ததையோ நண்பர்களுடன் பேசும் நாம், ஏன் நாம் செய்த சமூக அக்கறை சார்ந்த விஷயங்களை நண்பர்கள் உடன் பேசக்கூடாது? மாறுவோம், அத்தோடு சமுதாயத்தையும் மாற்றுவோம்.


பெருமை மிக்க அறிமுகங்கள் உடன் வலைச்சர தொகுத்தலில் இருந்து விடை பெறுகிறேன். எல்லோருக்கும் நன்றி.

"நடந்தால் நாடெல்லாம் உறவு, 
படுத்தால் பாயும் பகை"

தொகுத்தது,
பலே பிரபு (எ) பிரபு கிருஷ்ணா 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது