07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 20, 2012

இசையில் தொடங்குதம்மா


இசை, நம் பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மை ஆட்டுவிப்பது. வாழும் ஒவ்வொரும் நொடியும் ஏதோ ஒரு இசை நம்மை சுற்றிலும் உள்ளது. இசையே இல்லாத இடங்களில் மௌனம் கூட இசையாகிவிடுகிறது. 

பதிவுலகிலும் இசை சம்பந்தப்பட்ட, அதை எழுதும் பலர் இருக்கிறார்கள், அவர்களின் இசை பாடுவதே இந்தப் பதிவு. பாடுகிறேன் தினம் ஒரு பாடல்

சென்னையை சேர்ந்த கிரி ராமசுப்ரமணியன் அவர்களின் வலைப்பூ முழுக்க பாடல்கள் தான். பிரபல பதிவர் பரிசல்காரன் எழுதி இவர் பாடிய ட்வீட்டொன்று கண்டேன் RT அங்கு இல்லை அருமையான ரீமிக்ஸ், சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா பாடலை இவர் குரலில் கேட்க அருமையாக உள்ளது.ராஜராஜசோழன் நான் பாடல் அசத்தல். 


சிறுமழை

இவரது ஏன் இளையராஜா கடவுள் ? என்ற ஆங்கில பதிவை படித்த உடனேயே என்னைப் போன்ற இளையராஜா ரசிகர்கள் இவர் பதிவுகளை படிக்காமல் விட மாட்டார்கள். அதை தமிழில் போட்டால் இன்னும் நிறைய பேர் பலன் பெறுவார்கள் சார். இசையலைகள் என்று தலைப்பிட்ட இவரின் ஆறு பதிவுகளும் இனி தான் நான் படிக்கணும். ராஜா, ராஜா, ராஜா என்னும் இவர் வலைப்பூவில் இசை குறித்த பதிவுகளில் வாரணம் ஆயிரம் (இசை) மட்டும் விதிவிலக்கு. 


ச்சும்மா… சும்மா ஒரு  ப்ளாக்  என்று எழுதுகிறார் கார்த்திக் அருள். இவரை ராஜா ரசிகனாக்கிய கங்கை நீரும் கானல் நீரும் பதிவு புதுமை எனக்கு, இந்தி இளைய நிலா ராஜாவின் புகழ் பாடுகிறது. ஸ்வர்ணலதா – நினைவலைகள் நம்மை அவரின் பாடல்களுக்குள் கொண்டு செல்கிறது.

இவரே பாடல்களை பாடி பதிவேற்றி உள்ளார்  

மனம் போன போக்கில்

எழுத்தாளர் என்.சொக்கன் அவர்களின் வலைப்பூ, நான் தொடர்ந்து படிக்கும் சில வலைப்பூக்களில் ஒன்று. இசை குறித்த இவர் தேடல் எனக்கு மிகவும் பிடிக்கும் மழை என்ற பதிவு மனதில் இசை மழையை பொழிய வைக்கும், பார்வதீப ரமேஸ்வரௌ என்ற பதிவு இளையராஜாவின் பெருமையை பேசுகிறது. செம்பட்டைக்குக் கல்யாணம் ஆரம்ப கால ராஜா பாடலின் அசத்தலை சொல்லுகிறது. 

கமகம்


கர்நாடக இசைப் பிரியர்களுக்கான வலைப்பூ இது. எழுத்தாளரான அண்ணன் லலிதா ராம் இதில் நிறையவே எழுதி உள்ளார். எந்தப் பதிவை குறிப்பிட்டு சொல்ல என்று தெரியவில்லை, அதனால் இசை ரசிகர்களின் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.  இவ்வளவு தூரம் இசை பற்றி எழுதி விட்டு ஒரு பாட்டு போடாவிட்டால் எப்படி?

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

13 comments:

 1. இந்த பாட்டு எனக்கும் பிடிச்ச பாட்டு.

  ReplyDelete
 2. ஐந்து அறிமுகங்களிற்கு, நல்வாழ்த்து. தங்களிற்கும்நன்றியும் நல்வாழ்த்தும்.மிக அருமையான பாடல். எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காதது.மீண்டும் சந்திப்போம்.
  வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete
 3. அறிமுகத்திற்கு மிக்க நன்றி பிரபு

  ReplyDelete
 4. சங்கீதப் பகிர்வுகளை சிறப்புடன் அறிமுகப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
  நல்ல பாடல்... பகிர்வுக்கு நன்றி !வாழ்த்துக்கள்...(த.ம. 5)

  ReplyDelete
 6. அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் தம்பி.

  ReplyDelete
 7. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அறிமுகத்திற்கு மிக்க நன்றி. வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்

  சில காலம் எழுதாமளிருக்கலாம் என்ற என் எண்ணத்தைக் கைவிட்டு மீண்டும் பதிவெழுத தூண்டுகிறீர்கள் :-)

  ReplyDelete
 10. இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ!
  அறிமுகங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
  பாடல்கள் அருமை.

  ReplyDelete
 11. நல்ல தொகுப்பு. இந்த வரிசையில் என்னுடைய வலைப்பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.

  : என். சொக்கன்,
  பெங்களூரு.

  ReplyDelete
 12. http://nithyavani.blogspot.com/

  இந்த வலைப்பதிவையும் வலம் வாருங்கள்.... தமிழிசையைப் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும் பதிவுச் செய்யப்பட்டது... முழுக்க முழுக்க இசைக்காகவும் தமிழுக்காகவும் இந்த வலைப்பதிவு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது