07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, July 21, 2012

பேஸ்புக் பெரியவர்கள்

பதிவுலகில் நிறைய பேர் பதிவுகளை படித்து இருப்போம். ஆனால் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் மட்டும் எழுதும் நண்பர்களை இன்று பார்ப்போம். எனக்கு பிடித்த நண்பர்களை இங்கே அறிமுகப் படுத்துகிறேன். இவர்களை நீங்கள் முன்னமே கூட அறிந்திருக்கலாம். 


ரவி நாக்


அமெரிக்காவில் வசிக்கும் இவர் எழுதும் நிலைத் தகவல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். நிறைய புதிய தகவல்களை இவர் வாயிலாக நாம் அறியலாம். மேல போறதுக்கு டிக்கட்உங்கள் போன் திருட்டு பொருளா? போன்றவை சமீபத்திய சாம்பிள்கள். 


சசி தரன்


வலது ஓரம் இருப்பவர் சசி


பேஸ்புக் எல்லாம் சும்மா, பொழுது போகாதவர்கள் போகும் வேலை என்று நினைத்தால் அதை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். சசி தரன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் உள்ள மகாதேவர் கோவிலை புரணமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். முழுக்க முழுக்க பேஸ்புக் நண்பர்கள் முயற்சி செய்து இன்று எம்.எல்.ஏ வந்து பார்வையிடும் அளவுக்கு வந்துள்ளது. உள்ளூர் மக்கள் ஒத்துழைப்புடன் இதை செய்து வருகின்றனர்.


கார்ட்டூனிஸ்ட் பாலா 


குமுதம் வாசகர்கள் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் கார்ட்டூனிஸ்ட் பாலா. அவரின் பேஸ் புக் முகவரி இது. அரசியல் பற்றிய இவரது கார்ட்டூன் ஒவ்வொன்றும் அசத்தல்.  தன் கார்ட்டூன்களை தனியே ஒரு வலைப்பூவில் தொகுத்தால் இன்னும் அருமையாக இருக்கும். 


டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி


மனம் விட்டு சிரிக்கும் படியாக தகவல்களை பேஸ்புக்கில் படிக்க வேண்டுமா? அப்படி என்றால் நீங்கள் இவரை தான் நண்பராக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றுக்கும் இடிச் சிரிப்பு உத்திரவாதம். 


மோனி கோயம்புத்தூர்


அருமையான கவிதைகளை படிக்க வேண்டுமா? இவர்  தான் படித்த, ரசித்த கவிதைகளை அதற்கு தகுந்த அருமையான படத்துடன் பகிர்வார். ஒவ்வொன்றும அருமையாக இருக்கும். அத்தோடு அடிக்கடி போடும் நக்கல், நையாண்டி நிலை தகவல்கள் வாய் விட்டு சிரிக்கும் ரகம்.


இன்னும் நிறைய பேர் இருந்தாலும் நான் ரசிக்கும் ஐந்து பேரின் பக்கங்களை மட்டும் இங்கே பகிர்ந்துள்ளேன்.

கற்போம் தளத்தில் - இணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற

13 comments:

 1. வித்தியாசமான முயற்சி.., சிந்தனை!

  ReplyDelete
 2. எல்லாமுமே புதிய அறிமுகங்கள்.
  ஏனென்றால் முகநூல் பக்கம் அதிகம் செல்வதில்லை.
  அனைத்தும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் ! (த.ம. 1)

  ReplyDelete
 3. அருமை... உங்கள் சேவை தொடரட்டும்!

  ReplyDelete
 4. புதுமையான அறிமுகம் நண்பா! புதிய முயற்சி. நன்றி நண்பா!

  ReplyDelete
 5. வலைசரம் - முகநூல்?

  ங்ஞே

  ReplyDelete
 6. அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 7. நண்பர் ரவி நாக் தரும் தகவல்கள் ஒவ்வொன்றும் புதுமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்,வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. சிறப்பான பதிவர் அறிமுகம்! பகிர்வுக்கும் அறிமுகத்திற்கும் நன்றி!

  ReplyDelete
 9. இது உங்கள் தனிப்பட்ட பார்வை என்றே வைத்துக் கொள்கிறேன்...நடுநிலைமையோடு நோக்கினால் இவர்களும் அந்த லிஸ்டில் வருவார்கள்..

  Siddhan Cbe,Erode Kathir,Vijaya Lakshmi,Boopathy Murugesh,Manushya Puthiran,Surya Born To Win,Yuva Krishna,Athisha Vino,Tamil selvi,SURESH PERUMAL........

  ReplyDelete
 10. இதில் உள்ள ஐவருமே என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள்தான்.இவர்கள் மட்டுமல்ல இவர்களை போல் இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர்.குறிப்பிட்டு சொன்னால் பூபதி முருகேஷ்,பிரேம் குமார்,நா.மாதவன் மணவை,இன்னும் பலர்

  ReplyDelete
 11. நடுநிலைமை?? from these guys???

  Surya Born To Win,Yuva Krishna,Siddhan Cbe,

  good joke good joke, haha

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது